அத்தியாயம் 22
சிலை நகரும் ஓசை கேட்டு டக்கென்று திரும்பி பார்த்தான் அந்த பையன்.
"என்ன பண்றீங்க?? அந்த சிலையை எதற்காக நகர்த்துறீங்க?? அதெல்லாம் பண்ண கூடாது ஐயாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க"
" இல்லை இல்லை நான் தெரியாமல் தான் கை வைத்தேன் ஆனால் அது திரும்புறது எனக்கே தெரியல"
" ஆமாம் இந்த நந்தி சிலைக்கு கீழே ஒரு கல் இருக்கிறது அதை திருப்பும்போது இந்த சிலையும் சேர்ந்து திரும்பும்.. ஆனால் இதுவரைக்கும் இதை யாரும் திருப்பியது கிடையாது அடியில் என்ன இருக்கிறது என்று யாரும் பார்த்ததும் கிடையாது பார்க்க கூடாது என்று உத்தரவு.. அதனால் இந்த கோவில் பூசாரிகள் கூட இதை திறந்து பார்த்தது கிடையாது.."
'அப்படின்னா கண்டிப்பா ஏடு இதுக்குள்ள தான் இருக்கணும் அதனால்தான் இதை யாரும் தொடாமல் இருக்காங்க போல', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளின் பார்வை என்னவோ அந்த நந்தி சிலை மீது தான் இருந்தது..
" சரி சரி நான் இதை திருப்பவில்லை நீங்கள் கொஞ்சம் அந்த பக்கமாக வந்து அங்கே இருக்கும் சிலையை பற்றி சொல்லுங்க", என்று கூறி அவனை வேறு பக்கம் அழைத்துச் சென்றாள்.
அங்கே உள்ள சிலையை பற்றி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே குறுக்கே புகுந்து பேச தொடங்கினாள் சீதா.
" தம்பி..நான் என்னுடைய ஆடையை சரி செய்ய வேண்டும் இங்கே மறைவாக ஏதாவது இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் ஆடையை சரி செய்து விட்டு வருகிறேன்..", என்றாள் தயக்கத்தோடு.
அவள் அணிந்திருந்த சேலையின் மடிப்புகள் அவிழ்ந்து விட்டதோ என்னவோ பாவம் அதனால் தான் கேட்கிறார்களோ என்று யோசித்துக் கொண்டே அந்த பையன் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு.
"அந்தப் பக்கமாக ஒரு அறை இருக்கு அங்கே போய் உடைமாற்றி கொள்ளுங்கள் ஆனால் சீக்கிரம் வெளியே வந்துடுங்க.. அது கோவிலில் அன்னதானம் செய்வதற்காக காய்கறிகளை போட்டு வைக்கும் இடம்.."
"நான் சீக்கிரம் வந்துடுவேன் ரொம்ப நன்றி தம்பி", என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை நோக்கி அவள் ஓடினாள்.
அவள் போவதை பார்த்து உறுதி செய்து கொண்டவன் மேலும் தகவல்களை சொல்ல சொல்ல ராவணன் கையில் இருந்த மொபைல் அதை ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தது..
'இங்கே என்ன நடக்கிறது ? இவள் என்னவோ கேட்கிறாள் இவன் என்னவோ சொல்கிறான் கையில் இந்த பொருளை கொடுத்துவிட்டு அவள் போய்விட்டாள். இந்த சிறிய கல்லை எத்தனை நேரமாக கையில் வைத்துக் கொண்டு நிற்பது இந்த கல்லை பார்த்து இவனும் ஏதேதோ விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறான். இந்த விசித்திரமான உலகத்தில் இருந்து என்னை காப்பாற்று தெய்வமே", என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராவணன்.
இன்னொரு பக்கம் இவர்கள் கவனிக்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றவள் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் வேறு எதையோ பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு மிக வேகமாக ஓடி போனாள் அந்த நந்தி சிலையின் அருகில்..!!
சிலைக்கு அடியில் இருந்த அந்த வட்ட வடிவ கல்லை அவள் கஷ்டப்பட்டு மீண்டும் திருப்பவும் அது மெதுவாக திரும்பியது..
எப்படியோ சிலை திரும்பிவிட்டது அடியில் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம் என ஆவலுடன் அந்த சிலை அடியில் உள்ள இடத்தை அவள் எட்டிப் பார்க்க..
அங்கே பட்டு துணியால் சுற்றப்பட்டு சில ஏடுகள் கிடந்தது தூசியோடு..!!
அதைக் கண்டதும் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அசைக்காமல்..!!
இதுவரை யாரும் அந்த ஏடுகளை எடுத்துக் கூட பார்க்கவில்லை என்பதற்கு அதன் மீது இருந்த தூசி படலமே சாட்சி..!!
மீண்டும் அந்தப் பையன் இந்த இடத்திற்கு வரும் முன் வேகமாக அந்த ஏடுகளை எடுத்து தன் கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள்..
மறுபடியும் அதே போல் அந்த நந்தி சிலையை திருப்பி வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவள் போல் ஓடிச் சென்று ராவணன் அருகே நின்று கொண்டாள்.
" ரொம்ப நேரம் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன் போல அந்த சிலையை பற்றி மட்டும் சொல்லிடுங்க அதுக்கு பிறகு நான் இங்கிருந்து கிளம்பறேன்", என்று பெயருக்கு ஏதோ ஒரு சிலையை கைகாட்டி அதை பற்றி விவரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
வந்தவுடன், சரி எல்லாம் முடிந்தது நாங்கள் கிளம்புகிறோம்...என்று சொன்னால் சந்தேகம் வந்து விடுமோ என்ற காரணத்தினால் பேருக்கு ஏதோ ஒரு சிலையை காட்டி விவரம் கூறுங்கள் என்று அவள் கேட்டுக் கொள்ளவும் அவனும் எந்த சந்தேகமும் வராமல் எதார்த்தமாக அனைத்தையும் விவரித்துக் கொண்டிருந்தான்.
எண்ணி பத்து நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் சீதா ராவணனை அழைத்துக் கொண்டு.
" நீங்க சொன்ன தகவல்களுக்கு ரொம்பவே நன்றி இதை நான் மறக்கவே மாட்டேன் என்னுடைய ப்ராஜெக்ட்டுக்கு இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்"
" சரிங்க நீங்க பாத்து கிளம்புங்க நானும் கோவிலை பூட்டிட்டு கிளம்புறேன் நேரம் ஆயிடுச்சு", என்று சொல்லிவிட்டு அந்த பையனும் கோவில் நடை சாற்றி பூட்டிவிட்டு கிளம்பினான்.
பிறகு அவனை அழைத்துக்கொண்டு மீண்டும் ஒரு டாக்சி பிடித்து கிளம்பி ஊருக்கு சென்றாள்..
" சீதா என்னாயிற்று உனக்கு?? எதற்காக இந்த கோவிலுக்கு வந்தாய்?? வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன் நீ பரபரப்பாக இருந்தாய் ஒரு முறை கூட நீ அந்த சிவனை தரிசனம் செய்து கையெடுத்து கும்பிட்டு நான் பார்க்கவே இல்லை உன்னுடைய கண்கள் எல்லாம் அந்த நந்தி சிலையின் மீது மட்டுமே இருந்தது.. மற்றபடி நீ அந்த கோவிலுக்கு தரிசனம் செய்யப் போனது போல் எனக்கு தெரியவில்லை என்னவாயிற்று உனக்கு??", நேரம் பார்த்து இப்படி கேள்வி கேட்கிறானே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா.
பின்னே... அவனிடமே சென்று உன்னை பற்றி தான் தெரிந்து கொள்வதற்காக அந்த கோவிலுக்கு சென்றேன் என்று கூறவா முடியும்? காரணம் அவனிடம் எதையும் சொல்லவும் முடியாத நிலையில் அவள் இருக்கிறாள்... மீறி அவனுக்கு அவனுடைய கடந்த கால நினைவுகள் வந்தால் அவனுடைய உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று அந்த முனிவர் ஏற்கனவே கூறி இருக்கிறார் அதனால் அவனிடம் வாய் திறக்காமல் அமைதியாக நின்றாள் சீதா.
" உன்னிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்னாயிற்று பெண்ணே??"
" நான் சாமி கும்பிடவில்லை என்று உனக்கு தெரியுமா ? நான் சாமி கும்பிட்டேன் சும்மா என்கிட்ட நிறைய கேள்வி கேட்காதே எனக்கு ஏற்கனவே ரொம்ப அசதியா இருக்கு.. நான் போய் படுக்கணும் நீ போய் சாப்பிட்டு தூங்கு", என்று அவனிடம் கையில் சாப்பாடு பொட்டலத்தை கொடுத்து அனுப்பி வைத்தாள் அறைக்கு..
அவனும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே அந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்..
அவன் உள்ளே சென்று விட்டான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் அந்த ஏடுகளைப் எடுத்துக்கொண்டு மற்றொரு அறைக்கு ஓடினாள்..
எச்சரிக்கையாக கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்..
பின் அந்த ஏடுகளை பிரித்து படிக்க தொடங்கினாள் சீதா..
அதில்..
'பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனான இந்திர ராவணன் சாபம் பெற்று 2026 ஆம் ஆண்டுக்கு செல்வான்..
அவனுடைய சாபம் நீங்க வேண்டும் என்றால் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான்..
2026 ஆம் ஆண்டில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த குறுநில மன்னன் ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும் அந்த உலகத்தில்..
தான் யார் தன்னுடைய பின்புலம் என்ன என்பதை அறியாமலே அவன் வாழ வேண்டும்.. இதெல்லாம் நடக்காமல் இயற்கைக்கு மாறாக அவன் வேறு ஏதாவது முடிவு எடுத்தாலோ அல்லது அவனுடைய கடந்த கால நினைவுகளை அவன் மீட்டெடுக்க முயற்சி செய்தாலோ அவனுக்கு மரணம் நிச்சயம்.. அதன் பிறகு அவனால் மீண்டும் அவனுடைய உலகத்திற்கு திரும்ப முடியாது..
அதனால் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒரு சாதாரண மனிதனாக அவன் வாழ வேண்டும்... என்று, அவன் இயற்கை எய்துகிறானோ.. அன்று அவனின் பூத உடல் இவ்வுலகை விட்டு மறைந்து பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பழைய நினைவுகளோடு அதே இளமையுடன் இந்திர ராவணன் தன்னுடைய உலகத்திற்கு மீண்டு வருவான்..!!
18ம் நூற்றாண்டிற்கு சாப விமோசனம் பெற்று அவன் மீண்டும் வருகையில் அவனுக்கு 2026 ஆம் ஆண்டில் நடந்த எந்தவித சம்பவமும் நினைவில் இருக்காது...', என்று அதில் எழுதப்பட்டிருக்க.
அதை படித்துப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள் சீதா..!!
'ராவணன் இந்த 2026 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண மனிதனாக வாழ வேண்டும் அதுவும் அவனுடைய வாழ்க்கையை இந்த உலகத்தில் கழித்தே ஆக வேண்டும் இல்லையா??
அதுவும் எந்தவித பழைய நினைவுகளும் இல்லாமல்..!!
அதுவும் சாதாரண மனிதனாக வாழ்ந்தே தீர வேண்டும் இயற்கையான மரணம் அவனை தழுவ வேண்டும் அதன் பிறகு தான் அவன் இந்த உலகத்தை விட்டு மறைந்து பதினெட்டாம் நூற்றாண்டிற்கு மீண்டும் அதே இளமையுடன் பழைய நினைவுகளோடு அவன் போவான் போல.. !!
கடவுளே, அப்படின்னா இவன் என் கூடவே இருப்பானா காலம் முழுக்க?? இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை... எப்படியோ காலம் முழுக்க அவன் இந்த உலகத்தில் தானே வாழ வேண்டும் அது என்னுடனே வாழ்ந்து விட்டு போகட்டுமே..
அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது தான் ஆனால் இப்பொழுது அவன் இந்திர ராவணனாக இங்கே இல்லையே அவன் தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விட்டு தானே இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறான்..
என்னை பொறுத்த வரைக்கும் அவன் எப்பொழுதும் என்னுடைய இந்தர் தான்.. அதில் எந்தவித மாற்றமும் இல்லை..!!
அதற்கு இயற்கையும் எனக்கு உதவி புரிகிறது அதனால் தான் அவன் இந்த உலகத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று இருக்கிறது அப்பொழுதுதான் அவனுக்கும் சாப மோசனம் கிடைக்கும் என்னாலும் அவனுடன் காலம் முழுக்க இருக்க முடியும். எங்கே இவனை பிரிந்து விடுவேனோ என்று பயந்துவிட்டேன்..
நல்ல வேளை இவனை பிரியும் சூழ்நிலை எனக்கு எப்போதும் வராது சாகுற வரைக்கும் நான் இவன் கூடவே இருப்பேன்.. இவனை விட்டு எங்கேயும் நான் போக முடியாது ... இந்த ஜென்மத்தில் அவன் மட்டும் தான் என் காதலன் , என் கணவன் எல்லாமே.!!
அவன் இந்த உலகத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்றால் முதலில் இந்த உலகத்தில் அவன் வாழப் பழகனும் இந்த ஊர் மொழியை அவனுக்கு கற்றுக் கொடுக்க முடியா விட்டாலும் பரவாயில்லை ஆனால் இங்கு எப்படி பிழைக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தே தீர வேண்டும். அவன் நல்லவன் நேர்மையானவன் கம்பீரமானவன் எந்தவித சூதுவாதும் தெரியாதவன்.. இந்தக் கலியுகத்தில் ஏகப்பட்ட கெட்டவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அப்படிப்பட்டவர்களின் கையில் நிச்சயமாக இவன் அகப்படவே கூடாது..', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சீதா உறுதியாக..!!
- தொடரும்..

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.