அத்தியாயம் 24
"நீ என்னை விரும்புகிறாயா", என்று அவள் கேட்கவும் வெட்கம் கலந்த கம்பீரத்தோடு சீதாவையே பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரராவணன்...!
அவனால் ஆம் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை... இல்லை என்று சொல்லி மறுக்கவும் முடியவில்லை காரணம் என்றோ அவன் மனதில் அவள் குடியேறிவிட்டாள் ஆனால் இன்னமும் அவனால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவளை ஏற்றுக் கொள்வதில் அவனுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை ஒரு நொடி போதும் அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டு நீதான் என் உலகம் என்று கூறுவதற்கு.
ஆனால் அவன் அப்படி எதுவும் செய்யவில்லை மாறாக விலகி நின்றான்.
'உன்னை பார்த்த முதல் பார்வையிலே எனக்கு உன்னை மிகவும் பிடித்து போய்விட்டது சீதா... சிறுபிள்ளைத்தனமாக நீ செய்யும் சில குறும்புகள், உன்னுடைய அதட்டல் பேச்சு எல்லாமே என்னை கவர்ந்து விட்டது என்றோ... வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக இருப்பது போல் இருக்கிறேன் ஆனால் மனதிற்குள் உன்னை நினைத்து உருகாத நொடிகள் இல்லை... என்னை விசித்திரமாக பார்த்து ஒதுக்கி விட்டு கடந்து செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் நீ ஒருவள் மட்டும் தான் நெருங்கி வந்து கை பிடித்து அழைத்து வந்தாய் ஆதரவாக...
ஒரு நாட்டின் குறுநில மன்னனாக வாழ்ந்தவன் நான், ஆனால் என்னுடைய பழைய கால நினைவுகள் எதுவும் என் மனதில் இல்லை எந்த இடத்தில் வாழ்ந்தேன்? யார் என்னுடைய சொந்தங்கள்? இப்படி எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை ஆனால் எப்போது இந்த உலகத்தில் நுழைந்தேனோ அப்போது முதல் இந்த நொடி வரை ஏன் எப்போதுமே என் மனதில் நீங்கா இடம் பெற்றவள் நீ மட்டுமே..
இப்போது வந்து என்னை காதலிக்கிறாயா ? என்று கேள்வி கேட்கிறாய். இந்த கேள்விக்கு ஆம் என்று என்னால் ஒரு நொடியில் பதில் சொல்ல முடியும் ஆனால் உனக்கோ அல்லது இந்த உலகத்திற்கோ நான் ஏற்றவன் கிடையாது... நான் பேசும் மொழியிலிருந்து உடுத்தும் உடை வரை எல்லாமே வேறுபாடாகத்தான் இருக்கிறது... உன்னோடு ஒற்று போகாத என்னை திருமணம் செய்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் பெண்ணே?
உன் அழகிற்கும், உன்னுடைய அன்பான குணத்திற்கும் நல்ல மணமகன் உனக்கு கிடைப்பான்... கிடைக்க வேண்டும்... எப்போதும் நீ மகிழ்வாய் வாழ வேண்டும்... என்னால் உன்னை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை அதனால் இப்போது என்னால் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்னை மன்னித்துவிடு சீதா', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் உறுதியாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் கேட்ட கேள்விக்கு இல்லை என்பதாக மறுப்பாக தலையைசைத்தான்..
அதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள் சீதா...!!
"ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய் இந்தர்? என்னை உனக்கு பிடிக்கவில்லையா? இல்லையென்றால்...", என்று எதையோ கேட்க வந்தவள் சட்டென்று வாயை மூடிக்கொண்டாள்.
'ஒருவேளை அவனுக்கு அவனுடைய மனைவியின் நினைவு வந்து விட்டதோ? அதனால்தான் என்னை ஏற்க மறுக்கிறானா? அவனுக்குத்தான் எதுவும் நினைவில் இல்லையே அப்புறம் ஏன் இப்படி? எப்படியும் இந்த உலகத்தில் அவன் சாதாரண மனிதனாக வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது அவன் என்னை திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு? ஏன் என்னை பிடிக்கவில்லை என்கிறான்?', என்று சிறுபிள்ளைத்தனமாக அவள் மனம் யோசித்துக் குழம்பி வருத்தப்பட்டது...!!
"என்ன பேசுற எதனால இப்படி சொல்ற?"
"காரணம் எல்லாம் எனக்கு தெரியாது சீதா ஆனால் என்னுடைய பதில் இதுதான் என்னுடைய முடிவும் இதுதான்...", என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்று விட்டான்.
அவன் கூறிய பதிலில் மொத்தமாக உடைந்து போய் விட்டாள் அவள்.
இப்படி ஒரு பதிலை இவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவன் தன்னிடம் காட்டிய அக்கறையும் அன்பும் என்னதான் நட்பு ரீதியாக இருந்தாலும் அவன் கண்களில் தென்பட்ட அந்த காதல் உணர்வை இவளும் தானே உணர்ந்தாள் எப்படி அவளுடைய உள்ளுணர்வு பொய் சொல்லும் என்று அவளுடைய மனசாட்சி கேள்வி எழுப்பியது...
'எத்தனை முறை அவன் அருகில் நான் நின்றிருப்பேன் என் கைகளைப் பற்றியிருக்கிறான் அப்போதெல்லாம் அவன் கண்களில் தென்பட்ட உணர்வு அந்த அதிர்வு அதையெல்லாம் என்னால் இப்போதும் கூட மறக்க முடியவில்லை. நிச்சயமாக அந்த கண்களில் நான் பார்த்தது காதல் தான் அலாதியான அன்பும் ஈர்ப்பும் அந்த கண்களில் தென்பட்டதே அதை எப்படி இல்லை என்று கூற முடியும்? இதோ இப்போது கூட சில நிமிடங்களுக்கு முன்பாக அவன் என்னை அணைத்திருந்தபோது அவன் கண்களில் தென்பட்ட பரவசம், அது பொய் இல்லையே...
அப்படியிருக்கும் பொழுது எதற்காக அவன் இப்படி கூற வேண்டும்? இல்லை இல்லை... அவன் வேண்டுமென்றே தான் இப்படி சொல்கிறான்... அதற்கு காரணம் தான் தெரியவில்லை. ஏன் அவன் என்னை மறுக்க வேண்டும்? என்ன காரணமாக இருக்கும்?', என்று யோசித்து யோசித்து அவளுக்கு மனம் குழம்பியது கண்களில் கண்ணீர் வழிவதை கூட அறியாமல் பல மணி நேரங்கள் யோசித்தபடி சோஃபாவில் அமர்ந்து விட்டாள் சிலையென...!!
அதன் பிறகு வாசல் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்கவும் தான் சுய நினைவுக்கு மீண்டும் வந்தாள்..
எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தவள் அதிர்ச்சியானாள்...!
போனில் கோபமாக பேசி விட்டு வைத்த அம்மா எப்படி வீட்டுக்கு வந்தார் அத்தனை கோபத்திலா இருக்கிறார்? என்று யோசித்தபடி நின்றிருந்தாள் அவள்.
" என்னடி வீட்டுக்கு வந்தவளை வான்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி நின்னுட்டிருக்க? போன்ல அம்புட்டு பேச்சு பேசுற... இங்க பாரு நான் ஒன்னும் இங்க வந்து உன் கூட உட்கார்ந்து பேச வரல சாப்பிட வரல... ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு முடிவும் பண்ணியாச்சு இதில் எந்தவித மாற்றமும் கிடையாது இப்பவே சொல்லிட்டேன் இதுக்கு மேலேயும் நீ எதுவும் சொல்லி மறுக்கக்கூடாது... இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை இங்கே வருவார் அவர்கிட்ட நல்ல மாதிரியா பேசு. பையன் ரொம்பவே நல்ல பையன் இந்த இடத்தை இப்ப விட்டால் பிறகு அமையாது அதனால்தான் முடிவு பண்ணிட்டோம்"
" அம்மா நான் சொல்றத கொஞ்சம் தயவு செஞ்சு கேளுங்க நீங்க பாட்டுக்கு முடிவு பண்ணாதீங்க அவசர அவசரமா... என்னுடைய மனசு இப்ப வரைக்கும் திருமணத்திற்கு தயாராக இல்ல"
" அப்போ தயார்படுத்திக்க", என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி சென்றார் அவர்.
" நில்லுமா நில்லு... நீ பாட்டுக்கு என்னமோ கொரியர்க்காரன் மாதிரி வந்து விஷயத்தை சொல்லிட்டு போற... இப்ப நிக்க போறியா இல்லையா?", என்று கத்தி கொண்டே தன் தாயின் பின்னாடியே ஓடினாள் சீதா ஆனால் எதற்கும் அவர் அசையவில்லை...
அவள் கூப்பிட கூப்பிட வேகமாக வெளியே சென்றவர் வந்த காரிலேயே திரும்பி ஏறி போய்விட்டார்.
'ஒரு பக்கம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி இவங்க கஷ்டப்படுத்துறாங்க... இன்னொரு பக்கம் என் காதலயே ஏத்துக்காமல் என்னை அவன் கஷ்டப்படுத்துகிறான்... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிட்டு நான்தான் முழிக்கிறேன். என்ன பண்ண போறேன்னு தெரியல இப்ப புதுசா எவனோ ஒருத்தன் வர்றான். அவன்கிட்ட நான் என்ன பதில் சொல்றது பேசாம உண்மையை சொல்லிடலாமா?', என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இவளிடம் பேசி விட்டு சென்ற ராவணன் அறைக்குள் போய் படுத்து விட்டான். அதன் பிறகு எழவே இல்லை.
தூங்கிக் கொண்டிருக்கிறானோ என்னவோ என்று நினைத்துக் கொண்டு அவளும் அமைதியாகி விட்டாள்.
மீண்டும் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் மறுபடியும் போய் கதவை திறந்து பார்த்தாள்...
அங்கே...
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்...!
"யார் நீங்க?"
"ஹலோ ஐ ஆம் அர்ஜுன். உங்க அம்மா உங்க கிட்ட விஷயத்தை சொல்லிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் தான் உங்களுடைய வருங்கால கணவன். இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்", வசீகரமாக புன்னகைத்து அவன் கூறவும் இவளுக்கு தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது...!
'என்னடா இது இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி டக்கு டக்குனு எல்லாரும் வந்து என் தலையில் இப்படி குண்டை தூக்கி போட்டு போறீங்களே??!!
அம்மா இப்பதான் வந்து எனக்கு டென்ஷன் பண்ணிட்டு போனாங்க, அடுத்து இவனா? கடவுளே... இவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்க போறேன்னு தெரியல இப்ப எதுக்காக இவன் வீடு தேடி வந்திருக்கான்?', என்று மனதிற்குள் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் அவன் பேசத் தொடங்கினான்.
"வந்தவங்கள இப்படி வாசலிலேயே நிற்க வைத்து பேசக்கூடாது மிஸ் சீதா... நான் உள்ளே வரலாம் இல்லையா?"
'வேண்டாம்னு சொன்னா மட்டும் அப்படியே போய்டவா போற வந்து தொலை', என்று மனதிற்குள் தான் நினைத்துக் கொள்ள முடிந்தது அவளால்...
வாய்விட்டு சொல்ல முடியவில்லை...!!
"வாங்க"
உள்ளே வந்தவன் சோபாவில் கம்பீரமாக அமர்ந்து கொண்டான் ஏதோ உரிமையாக தன்னுடைய வீட்டில் அமர்வது போல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
அவனுடைய பேச்சும் செயலும் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தான். பர்சனாலிட்டியில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் என்னவோ தெரியவில்லை அவள் மனதிற்கு பிடிக்கவில்லை.
இந்திர ராவணனை நேசித்த மனதால் வேறு ஒருவனை நினைத்து பார்க்க கூட முடியவில்லை அவளால்.
நேருக்கு நேராக கண்களை பார்த்து பேசும் ராவணனின் கண்ணியம் எங்கே? என் கண்களைத் தவிர மற்ற இடங்களை கண்களால் மொய்த்துக் கொண்டிருக்கும் இவன் எங்கே? என்று இருவரையும் ஒப்பிட்டு பார்த்தது அவளின் மனம்.
அங்குலம் அங்குலமாக அவளை அளவிட்டுக் கொண்டிருந்த அவனுடைய பார்வையிலிருந்து தப்புவதற்காக பேச்சை ஆரம்பித்தாள் சீதா.
"உங்களுக்கு சாப்பிட காபி போட்டு எடுத்துட்டு வரேன் இருங்க", என்று சொல்லிக்கொண்டே அவள் நகர முற்பட.
"அதெல்லாம் எதுவும் வேண்டாம் சீதா நான் உங்களைப் பார்த்து பேச தான் வந்தேன்", என்று சொன்னவன் ஒரே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.
அவன் குரல் கேட்டு எதேச்சையாக அவள் திரும்பவும் அவன் மீது மோதி நின்றாள் அவள்.
ஏதோ பாறையின் மீது மோதியது போன்ற உணர்வு ஏற்பட்டு விட தடுமாறி கீழே விட போனவளை தாங்கி பிடித்தது அவனுடைய கரம்...!!
'அடக்கடவுளே... கீழே கூட விழுந்திருக்கலாம் போலருக்கு இவன் எதற்காக என்னை தாங்கி பிடித்தான்? இவனை தூரத்தில் இருந்து பார்க்கவே நம்மலால முடியல இந்த லட்சணத்தில் குளோசப்பில் வேறு வந்து நிற்கிறான் அதுவும் 32 பல்லையும் காட்டிட்டு நிற்கிறான் படுபாவி', என்று மனதிற்குள் அவனை அவள் கடிந்து கொண்டாள்.
"சீதா... சீதா...", என்று அழைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளிவந்தான் ராவணன்.
தூக்க கலக்கத்தில் மெதுவாக கண்களை திறந்து பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வையில் முதலில் விழுந்தது அர்ஜுன் சீதாவை தாங்கி பிடித்தபடி நிற்கும் காட்சி தான்...!!
அதைக் கண்டதும் அதிர்ச்சியானவனின் கண்களில் ,இப்போது ஆவேசம் பொங்கியது...!!
"ஏய்... யாரடா நீ? எதற்காக உள்ளே வந்து என் சீதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறாய்?", கேட்டுக்கொண்டே வேகமாக அவர்களை நெருங்கியவன் ஒரே எட்டில் அர்ஜுனை நெருங்கி அவனுடைய கைகளை பற்றினான் இறுக்கமாக...!
- தொடரும்...

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.