மை டியர் ராவணா வித் லவ் சீதா - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 25

"சீதா யாரு இது கொஞ்சம் கூட டீசன்சி இல்லாம இப்படி பிஹேவ் பண்றது?", என்றான் அர்ஜுன்.

"உன்னிடம் தான் கூறிக் கொண்டிருக்கிறேன் அவள் மீதிருக்கும் உன் கைகளை அகற்றவில்லை என்றால் மொத்தமாக உன் கைகளை துண்டு துண்டாக நான் அகற்றி விடுவேன்", என்று மீண்டும் ராவணன் மிரட்டவும் அர்ஜுன் இரண்டு அடி பின்னாடி நகர்ந்தான்.

லேசா மிரட்டியதும் அப்படியே நகர்ந்து போய்விட்டானே பார்க்க தான் ஆள் பல்க்கா இருக்கான் மத்தபடி சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பானோ? என்று யோசித்து சீதாவின் மனம் சிரிக்க தொடங்கியது...!!

"சீதா வாட் இஸ் திஸ்?"

"இவருடைய பெயர் இந்திர ராவணன்..."

"ஓஹோ ஆல்ரெடி உங்க அம்மா சொன்னாங்க இவன்தான் அந்த பைத்தியமா?"

"மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் அர்ஜுன்... அவர் என்னுடைய நண்பர் அவரைப் பற்றி குறை சொல்வதற்கு உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது..."

"வாட்?? வாட் யூ மீன்?? நான் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் இவன் யாரோ ஒருவன் இவனுக்காக என்னை தூக்கி எறிந்து பேசுகிறாயா?"

"நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? எதை வச்சு நீங்க அவ்வளவு உறுதியாக சொல்றீங்க நீங்கதான் என்னுடைய வருங்கால மாப்பிள்ளை என்று"

இவர்கள் பேசிக் கொள்வதை பார்க்கும் பொழுது ராவணனுக்கு சற்று விளங்கியது...

அப்படி என்றால் இவன் சீதாவை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா? இது தெரியாமல் நான் பாட்டுக்கு என்னென்னமோ பேசி விட்டேனே ஏதாவது தவறாக நினைத்திருப்பானோ? என்று மனதிற்குள் யோசித்துக் குழம்பியவன் நேராக அர்ஜுனை நோக்கினான்.

இவன் அவனைப் பார்த்த பார்வையில் எங்கே தன்னை உதைத்து விடுவானோ என்று பயத்தில் அர்ஜுன் கதவருகே சென்றான்.

"நில்லுங்கள்... எதற்காக இப்படி ஓட வேண்டும்? சீதாவை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா நீங்கள்? இதை முதலிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்னை மன்னித்து விடுங்கள் தெரியாமல் அப்படி செய்து விட்டேன்... வந்து அமருங்கள்", என்று அவன் உபசரிப்பதை பார்த்ததும் சீதாவிற்கு கோபமாக வந்தது.

"பைத்தியமா இருந்தாலும் இவனுக்கு கூட ஃபார்மாலிட்டி தெரிந்திருக்கு... பட் உனக்கு தெரியலையே சீதா... இவன் உனக்கு என்ன உறவு அப்படின்னு எனக்கு தெரியாது ஆனால் தேவையில்லாமல் வேறு ஒருத்தனை வீட்டுக்குள் தங்க வைத்திருக்கிறது அவ்வளவு நல்ல விஷயம் இல்லையே... நான் உன்னை சந்தேகப்படல அதே சமயம் இவன் இங்கே இருக்கிறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல"

"இங்க பாருங்க நீங்க என்னை பெண் பார்க்க வந்திருக்கீங்க அவ்வளவுதான் அதை விட்டுட்டு ஓவரா பேசாதீங்க வந்த விஷயத்தை மட்டும் பேசிட்டு போங்க... இப்ப என்ன பெண் பார்க்கும் படலம் தானே? பெண்ணை பார்த்தாயிற்று தானே? தயவு செஞ்சு கிளம்புங்க", என்று கோபமாக மொழிந்தாள் அவள்.

"சீதா... எதற்காக இப்படி கோபமாக பேசுகிறாய் மாப்பிள்ளையிடம் ?", என்றான் ராவணன்.

உடனே அவளுக்கு அவன் மீது ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது...!!

'மாப்பிள்ளையாமே... மாப்பிள்ளை...!

விரும்புகிறாயா?? என்று கேட்டு முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்னை வேற ஒருத்தனுக்கு தாரை வார்க்க இவன் யாரு? ஸ்டுபிட்...!', என்று வைதாள் மனதிற்குள்.

"நான் ஒன்னும் கோவமா பேசல சாதாரணமா தான் பேசுறேன்"

"சரி விஷயத்துக்கு வருவோம் சீதா என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா?", என்று இறுதியாகவும் உறுதியாகவும் கேள்வி கேட்க தொடங்கினான் அர்ஜுன்.

உடனே அவள் எந்த பதிலும் கூறாமல் அங்கு நின்று கொண்டிருந்த ராவணனை ஒரு பார்வை பார்த்தாள் ஆழமாக...!

"எனக்கு சம்மதம்", என்று அவள் சொல்லிவிடவும் ராவணனின் முகத்தில் சோகம் படர்ந்தது...!!

"எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதில் முழு சம்மதம்... இதற்கு மேலேயும் எதிர்பார்த்துட்டு நான் இருந்தால் நான் தான் இந்த உலகத்திலேயே பெரிய முட்டாள் அதனால் நான் சம்மதிக்கிறேன்", என்றாள் விழிகளை ராவணனிடமிருந்து நகர்த்தாமல்.

அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்த ராவணன் முகத்தில் சோகம் அதிகமாகிக் கொண்டே போனது.

ஆனால் அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது போன நிமிடம் வரை நான் எதற்காக உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்ட பெண் திடீரென்று எப்படி சம்மதம் கூறினாள் என யோசித்துக் கொண்டிருந்தாள் ஆச்சரியமாக.

" ரொம்ப யோசிக்காதீங்க அர்ஜுன் போன நிமிஷம் வரைக்கும் வேண்டாம் என்று சொன்னவை இப்ப எப்படி ஓகே சொன்னான்னு நினைக்கிறீங்க அதானே? போன நிமிஷம் வரைக்கும் உறுதியாக தான் இருந்தேன் ஆனால் இப்போ சரின்னு சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்", என்றாள் மீண்டும் ஓரக்கண்ணால் ராவணனை முறைத்துக் கொண்டே...

அவன் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை கண்ணிமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தாள் சீதா...

'ஒரு பொண்ணு மனசு விட்டு ஒரு பையன் கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்றதே பெரிய விஷயம். இந்த லட்சணத்தில் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போட்டுட்டு உன் முன்னாடி வந்து நின்னு என்னை விரும்புகிறாயா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படின்னு கேட்டால் இவனுக்கு பதில் சொல்ல தெரியுதா ? பெரிய இவனாட்டம் வேண்டாம்னு சொல்லிட்டான் இப்ப எதுக்கு மூஞ்சில ஒரு வண்டி சோகம் வழியுது அய்யாவுக்கு?', என்று ராவணனை பார்த்து முறைத்தாள் சீதா.

"நிஜமாவே உனக்கு ஓகேவா சீதா? அப்புறமா பேச்சு மாற மாட்டியே?"

"இல்லை எனக்கு ஓகே தான்"

"தேங்க் காட்... இந்த சந்தோஷத்தை நான் கொண்டாடியே ஆகணும் பேசாம நம்ம ரெண்டு பேரும் வெளியே போகலாமா? இப்போதைக்கு வெளியே போவோம் கல்யாணம் முடிஞ்ச பிறகு வெளிநாடு போவோம் ஓகே தானே? சொல்ல மறந்துட்டேன் உன்னை பார்த்ததுமே எனக்கு அவ்வளவு சந்தோஷம் அதான் எல்லாத்தையுமே மறந்து போயிட்டேன். நான் அப்ரோட்ல சீப் மெக்கானிக்கல் இன்ஜினியரா இருக்கேன்... நல்ல சம்பளம் அது வேணும் இது வேணும்னு நீ வாய்விட்டு கேட்பதற்கு முன்னாடி உன் ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் உனக்கு ஓகே தானே?", என சந்தோஷமாக அவன் கேள்வி கேட்டான் புன்னகையோடு.

"ம்ம்"

" அப்புறம் என்ன லெட்ஸ் கோ... வெளியே போகலாம்.."

"இந்தர், நீயும் எங்க கூட வரியா?"

" ஹே ஸ்வீட்டி... நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறவங்க நமக்குள்ள பேசுறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும் நடுவுல இவன் எதுக்கு?"

" இல்ல அவனுக்கு இங்க தனியா இருக்க முடியாது அவனையும் கூட்டிட்டு போகலாம் ப்ளீஸ்... அவன் நம்மளை எதுவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டான்", என்று அவள் கூறவும் வேறு வழியின்றி அவனையும் அழைத்து கொண்டு செல்ல சம்மதித்தான் அர்ஜுன்.

சில நிமிடங்களில் அந்த வீட்டிற்குள் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவனுக்கு ஆச்சரியம், கோபம் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வரவழைத்திருந்தாலும் சீதாவின் அழகு அவனை மொத்தமாக கட்டி போட்டிருந்தது...

ராவணன் முறுக்கிய கையோடு அவனை அடிக்க வந்த போது கூட அத்தனை கோபப்பட்டவன் இப்பொழுது சம்மதம் என்று சீதா சொன்ன ஒரே வார்த்தையில் பனிக்கட்டியாக உருகிப் போயிருந்தான்...!!

அதனால் இப்பொழுது அவன் கண்களுக்கு ராவணனும் தெரியவில்லை அவனை பற்றிய கவலையும் இருக்கவில்லை.

ஆனால் காரில் போகும் வழி எங்கும் ராவணனுக்கு முகமே சரியில்லை பின்பக்கம் உள்ள சீட்டில் ராவணன் மற்றும் சீதா இருவரும் அமர்ந்து கொண்டனர் முன்பக்கம் அவனுடைய கார் டிரைவர் மற்றும் அர்ஜுனும் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

முன்பக்கத்தில் உள்ள கண்ணாடியின் வழியே சீதாவை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அர்ஜுனனின் கண்களை பார்த்து விட்ட ராவணனுக்கு மனதிற்குள் வலி ஏற்பட்டது...!!

மனதிற்கு பிடித்த பெண்ணை வேறொருவன் தன் கண் முன்னாடியே ரசிப்பதை, இந்த காலம் மட்டுமில்லை அப்பேர்ப்பட்ட கற்காலமாக இருந்தாலுமே எந்த ஒரு ஆணுக்கும் வலிக்க தானே செய்யும்??!!

ராவணனுக்கும் வலிக்கத்தான் செய்தது... அதுவும் தாங்க முடியாத வேதனை.

அளவு கடந்த அன்பை மனம் முழுக்க அவள் மீது சுமந்து கொண்டு எதையும் வெளி காட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவன் நெஞ்சத்தில் மீண்டும் மீண்டும் கத்தியை எடுத்து சொருகுவது போலிருந்தது, அர்ஜுன் ஒவ்வொரு முறையும் சீதாவை பார்த்து பார்த்து ரசிக்கும் பார்வையில்...!

அதைக் காண சகிக்காமல் ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டான் அவன்.

கண்ணாடி வழியே தன்னை ரசித்துக் கொண்டு வருகிறான் அர்ஜுன் என்று நன்றாகவே அறிந்து கொண்டாள் சீதா அதே சமயம் அதை பார்த்து வெறுப்பாகி கடுப்பில் அமர்ந்திருக்கிறான் ராவணன் என்பதையும் அறிந்து கொண்டாள்.

இருந்தும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

உயர்ரக ரெஸ்டாரன்ட் நோக்கி போனார்கள்.

அவரவர்களுக்கு பிடித்தவற்றை எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள் ராவணனுக்கு என்ன பிடிக்கும் என்று சீதாவுக்கு நன்றாகவே தெரியும் அதனால் அவனுக்கு வேண்டியதை அவளே ஆர்டர் செய்தாள்.

சாப்பாடு வரவும் அனைவரும் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இருமல் அதிகமாகிவிட, உடனே சீதாவின் தலையில் தட்டுவதற்காக ராவணன் அருகே போகும் பொழுதே அவனை முந்திக்கொண்டு அர்ஜுன் அவள் தலையில் மெல்ல தட்டினான்.

அதைப் பார்த்ததும் அப்படியே தொட்டாச்சிணுங்கி போல் சுருங்கி போனது ராவணனின் மனம்...!

'இவன் அவளை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறான் அது எனக்கு நன்றாகவே புரிகிறது இருந்தாலும் என் கண் முன்னாடி எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? அதுவும் சாதாரணமாகத்தான் நடந்து கொள்கிறார்கள் ஒன்றும் அப்படி பெரிதாக இல்லை... இருந்தும் என் மனம் வேதனைப்படுகிறது இதை என்னால் தடுக்க முடியவில்லை நான் என்ன செய்வேன்? பேசாமல் இங்கிருந்து ஓடிவிடலாமா? ஆனால் எங்கே போவது? யாருடன் பேசுவது? ஒன்றும் புரியவில்லை எனக்கு. இந்த உலகத்தில் தெரிந்ததெல்லாம் சீதா மட்டுமே அவளை விட்டு விட்டு நான் எங்கே செல்வேன்? ', என்று வருத்தம் கொண்டது அவனுடைய மனம்.

அவன் வருத்தப்படுகிறான் என்பதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்த சீதா அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் அடுத்த நிமிடமே அர்ஜுனிடம் சிரிக்க சிரிக்க பேச தொடங்கி விட்டாள்.

'வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன் அவள் என்னை கண்டு கொள்ளவே இல்லை எப்போது பார்த்தாலும் அர்ஜுனிடமே பேசிக் கொண்டிருக்கிறாள்... பிறகு எதற்காக என்னை அழைத்து வர வேண்டும்? என் மனதை நோகடிப்பதற்காகவே இப்படி செய்கிறாளா?', என்று இன்னொரு பக்கம் ராவணனின் மனம் கேள்வி கேட்டது..!

- தொடரும்...

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அப்படி வாடா வழிக்கு..... அவளா காதல் சொன்னதும் ரொம்ப தான் பண்ற😒😒😒😒😒
அது தான் அந்த ஏட்டில் போட்டு இருக்கு இல்ல....
நீ சீதா ஓட தான் வாழணும்
 
  • Love
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
அப்படி வாடா வழிக்கு..... அவளா காதல் சொன்னதும் ரொம்ப தான் பண்ற😒😒😒😒😒
அது தான் அந்த ஏட்டில் போட்டு இருக்கு இல்ல....
நீ சீதா ஓட தான் வாழணும்
😂😂😂😂 மிக்க நன்றி மா 🥰 🥰 ❤️ ❤️ ❤️ ❤️
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.