மை டியர் ராவணா வித் லவ் சீதா - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,555
6,417
113
அத்தியாயம் 26

சீதா சம்மதம் சொன்ன காரணத்தினால் அவளுக்கும் அர்ஜுனுக்கும் திருமணத்திற்கு நாள் குறித்தார்கள்...

எப்படியாவது ராவணன் தன் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தி விடுவான் என்ற நம்பிக்கையில் சீதாவும் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருந்தாள் ஆனால் அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல அமைதியாகவே இருந்தான்.

விருப்பமில்லாதவரிடம் திரும்பத் திரும்ப போய் என்னை காதலிக்கிறாயா? என்னை விரும்ப மாட்டாயா ? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாயா? என்று கேட்டு வருத்தப்பட வைக்க கூடாது என்று தான் அவள் ஒதுங்கிப் போய்விட்டாள்.

அவனும் அவளை விரும்புகிறான் என்ற நினைப்பில் தான் அவள் மெத்தனமாக இருந்தாள் ஆனால் கடைசி வரைக்கும் அவன் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்த பிறகுதான் அவன் தன்னை விரும்பவே இல்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

அவன் அமைதியை பார்க்க பார்க்க இவளுக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் அர்ஜுன் அவளை தேடி வந்து ஒவ்வொரு நாளும் பேசுவதை பார்க்கும் பொழுது ராவணன் மனதிற்குள் மிகவும் வேதனையாக இருந்தது , அது வெளியே யாருக்கும் தெரிய வில்லை.

இருவரும் ஒருவரின் மனதில் உள்ள வேதனையை இன்னொருவரிடம் வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர்... அதுதான் பிழையாகி போனது...!!

இன்று தன் காதலை வெளிப்படுத்துவான் நாளை சொல்லுவான் இல்லை அடுத்த நாள் சொல்லுவான் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அவள் காத்துக் கொண்டிருந்தாள் ஆவலாக.

ஆனால் நடக்கும் அனைத்தையும் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த ராவணன் வாய் விட்டு ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
முன்பு போல் அதிகமாக இப்பொழுதெல்லாம் ராவணனிடம் அவள் பேசுவது கிடையாது அதேபோல் அவனும் எதுவும் கேட்பது கிடையாது பேசுவதையும் சிரிப்பதையும் நிப்பாட்டியே விட்டான் என்று கூட கூறலாம்.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது இரண்டு வார்த்தைகள் காலையில் சில வார்த்தை மாலையில் இரண்டு வார்த்தை என்று கடமைக்காக பேசிக் கொண்டிருந்தார்கள், அதுவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே பேசினார்கள்.

ஆனால் இருவர் மத்தியில் இருந்த அந்த காதல், ஏக்கப் பார்வை இது மட்டும் ஒரு துளி கூட குறையவில்லை...!

ஒருவரை ஒருவர் கன்னிமைக்காமல் பார்த்துக் கொண்டனர் மற்றொருவர் பாக்காத நேரமாக பார்த்து.

விட்டு விலகி சென்று விடுவாயோ சீதா என்று மனதிற்குள் அவன் ஏங்கினான்.

'திருமணம் வேண்டாம் நான் உன்னை விரும்புகிறேன் என்னை விட்டு எங்கேயும் நீங்கி சென்று விடாதே என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா இந்தர் ', என்று மனதிற்குள் அவள் இன்னொரு பக்கம் ஏங்கினாள்...!

வழக்கமாக அர்ஜுன் காலையில் வந்து அவளை பார்த்து பேசி விட்டு மாலையில் தான் செல்வான் அதே போல் அன்றும் அர்ஜுன் வந்திருந்தான்.

அவன் வரவும் அவனை வரவேற்று அவனுக்கு காபி தயாரிக்க உள்ளே சென்று விட்டாள் சீதா.

அவள் திருமணத்திற்கு சம்மதித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள்.

அதனால் திருமணத்திற்கான வேலைகளை பரபரப்பாக அவர்கள் ஊரில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

" சீதா, யூ நோ சம்திங்... நான் உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் பார்த்து பார்த்து செலக்ட் பண்ண ஒரு விஷயம். சொல்லப்போனால் இது நம்ம வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணமாக இருக்க போகுது...", என்று பயங்கர பில்டப்பாக அவன் பேசவும் என்னவாக இருக்கும் என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சீதா.

முக்கியமான விஷயம் ஏதோ பேசுகிறார்கள் இந்த இடத்தில் நாம் தேவையில்லாத பொருளாக இருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் ராவணன்.

முகத்தை தொங்க போட்டு கொண்டு அறைக்குள் செல்லும் ராவணனை ஓரக் கண்ணால் கவனிக்க தவறவில்லை சீதா.

உள்ளே சென்றவன் வேதனையில் குப்புறப் படுத்துக் கொண்டான் கட்டிலில்.

உள்ளத்தின் வேதனையில் கண்ணீர் வடித்தவன் ஒரு கட்டத்தில் துக்கம் தாங்காமல் அப்படியே கண் மூடி உறங்க தொடங்கி விட்டான்.

அவன் அறைக்குள் சென்ற சில நிமிடங்கள் கழித்து மெதுவாக அறையை எட்டிப் பார்த்தாள் சீதா.

அங்கே அவன் குப்புற படுத்து கொண்டு நன்றாக உறங்குவதை பார்க்கவும் அவளுக்கு கோபம் அதிகமாகியது...

கவலைப்பட்டுக் கொண்டு உள்ளே சென்றவன் கோபத்தில் எதையாவது போட்டு உடைப்பான் இல்லையென்றால் தன்னந்தனியாக பிதற்றிக் கொண்டிருப்பான் என்று எதிர்பார்த்து வந்தால் இவன் என்னவோ சந்தோஷமாக அதுவும் நல்ல நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறானே என்று மனதிற்குள் நினைத்து கடுப்பானாள்.

" சீதா என்ன ஆச்சு நான் உன்கிட்ட தான் பேசிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு எழுந்து உள்ளே போயிட்டியே..."

" இல்ல இவன் கொஞ்சம் இப்போ சரியில்ல அப்செட்டா இருக்கான் அதனாலதான் கண்காணித்துக்கொண்டே இருந்தேன் நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம் சொல்ல வந்தத சொல்லுங்க", கடமைக்கு ஏதோ சொல்ல வேண்டுமே என்று கூறி வைத்தாள் அவள்.

" எத்தனை நாளைக்கு இவனை வீட்டிலேயே வைத்திருக்க போற சீதா நமக்கு இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம். அப்படி இருக்கும் பொழுது எவனோ ஒருத்தனை கூட்டிட்டு வந்து நீ வீட்டில் தங்க வைத்திருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நீ தான் ரொம்ப பரிதாபப்பட்டு அவனுக்கு யாரும் இல்ல அவனுக்கு எதுவும் தெரியல அவன் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கான் அப்படின்னு அவனுக்காக ரொம்பவே யோசிச்சு நீ செயல்படுற ஆனா நம்ம வாழ்க்கையை பற்றியும் நீ யோசிக்கணும்"

பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள் அவள்.

" ஓகே... சொல்றதை சொல்லிட்டேன் உன்னுடைய இஷ்டம். அதுவுமில்லாமல் அவன் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறதா சொல்ற அதனால நான் இதை பெருசா எடுத்துக்கல. சரி நான் விஷயத்துக்கு வந்துடுறேன் நம்ம கல்யாணத்திற்கு அம்மா கடைக்கு போய் தேடி தேடி உனக்கு புடிச்ச கலர்ல சேலை எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்ல இங்கே பார் இந்த மோதிரமும் உனக்குத்தான் , பிடிச்சிருக்கா?", என்று ஆசையாக அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான் அர்ஜுன்.

அவன் காட்டிய மோதிரமும் கையில் பளபளத்த மயில் வண்ண பட்டுப்புடவையும் பார்த்ததும் அவளுக்கு கண்களில் கண்ணீர் துளிர்த்தது...!

'அவ்வளவுதானா? எல்லாம் முடிந்து விட்டதா ? ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நான் பாட்டுக்கு அர்ஜனை திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிட்டேனே எப்படியாவது இந்தரின் மனதில் இருக்கும் காதல் வெளிப்படும் அவனுக்கு பொசசிவ்னஸ் வரும் என்ற நம்பிக்கையில் தானே நான் இதையெல்லாம் செஞ்சேன்...?

ஆனா கடைசியில அவன் மனசுல இருக்குற எந்த விஷயமும் வெளியே வரல எனக்கு தான் கல்யாணம் நடந்துடும் போலருக்கு இந்த அர்ஜுன் கூட பிடிக்காத வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு எப்படி வாழ்வது ?

கடவுளே... என்னை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்று தெரியாமல் நான் இதில் வந்து சிக்கிக் கொண்டேனே', என்று தன்னை தானே நொந்து கொண்டாள் சீதா மனதிற்குள்...!

அதன் பிறகு அர்ஜுன் சில நிமிடங்கள் இருந்து பேசி விட்டு சென்று விட்டான்.

நாட்காட்டியில் தேதிகள் வேகமாக கிழிக்க பட்டது...

அன்று , அதிகாலை 4 மணி...

தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று ஏகப்பட்ட கூட்டம் அங்கே அந்த மண்டபத்தில் குவிந்து கிடந்தது.

சின்ன பிள்ளைகள் எல்லோரும் ஓடி விளையாடி கொண்டிருந்தார்கள் வாசலில்.

வருவோரை வரவேற்று பன்னீர் தெளித்து புன்னகை புரிந்தார்கள் அந்த இளம் பெண்கள்.

நாதஸ்வரம் கெட்டிமேளம் முழங்க அங்கே மண்டபம் மங்களகரமாக காட்சியளித்தது அலங்கார தோரணைகளோடு...!!

தூரத்தில் நின்று இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராவணனுக்கு புரிந்தது இங்கு ஏதோ விழா நடக்கப்போகிறது போல அதனால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து இருக்கிறார்கள் என்று.

அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்ந்து வந்தவன் கண்களில், மணமேடையில் அமர்ந்திருக்கும் சீதா அகப்பட்டாள்.

'என்ன இது சீதா இங்கே அமர்ந்திருக்கிறாளே ?',என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே.

மாப்பிள்ளை கோலத்தில் மாலையோடு அங்கு நடந்து வந்து கொண்டிருந்தான் அர்ஜுன்...

சீதா முகத்தில் சந்தோஷம் இல்லை மாறாக சோகம் தான் இருந்தது கண்களில் கண்ணீர் கூட வைரத்துளிகளாக பளபளத்தது...!

அர்ஜுன் முகத்தில் சந்தோஷம் பொங்கி வழிந்தது... அவளை திருமணம் செய்யப் போகிறான் அல்லவா இருக்காதா பின்னே?

எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராவணனுக்கு இது நிஜமாகவே கனவா அல்லது நனவா என்று புரியவில்லை.

மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் ஓதி அய்யர் தாலியை எடுத்துக் கொடுக்க அர்ஜுன் அதை வாங்கி சீதா கழுத்தில் தாலி கட்டினான்...!!

கெட்டி மேளம் கெட்டி மேளம்... என்றதும் நாதஸ்வரம் முழங்க, சீதாவின் சங்கு கழுத்தில் தாலி ஏறியது...!

சீதா மற்றும் ராவணன் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது கங்கையாறு போல.

'அவ்வளவுதான் மொத்தமா எல்லாம் முடிஞ்சு போய்டுச்சு. இவன் மனசுல இருக்குற காதலை வெளிப்படுத்துவான் என்று பார்த்தால் கடைசி வரைக்கும் இவன் பயத்தால் என்னை இழந்து விட்டானே? ',என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சீதா கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்...!

'நிச்சயமாக நீ என்னை விட்டு போக மாட்டாய் சும்மா பெயருக்கு அவனை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறாய் என்று தானே நான் நினைத்தேன்.

கடைசியில் நிஜமாகவே நீ அவனிடம் தாலி வாங்கி கொண்டாயா ? அவனை திருமணம் செய்து கொண்டாயா சீதா? ', என்று மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள் தோன்றினாலும் கண் முன்னே தோன்றிய காட்சிகள் அனைத்தும் நிஜம்தான் என்பது போல அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கையில் பட்டு தெறித்ததும் உணர்ந்து கொண்டான்...!

'சீதா என்னை விட்டு போகாதே சீதா... இனி ,நீ எனக்கு சொந்தம் கிடையாதா? இனி என்னிடம் பேச மாட்டாயா? எனக்காக கோபப்படவும், எனக்காக அழவும், எனக்காக சிரிக்கவும், என்னைப்பற்றி யோசிக்கவும் , என்னை நினைக்கவும் இவ்வுலகத்தில் உன்னை தவிர வேறு யாரும் இல்லையே...?

இனி நான் என்ன செய்வேன் ? என் வாழ்வே சூனியமாகி போய்விட்டதே பெண்ணே... நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகம் தான்', என்று கண்ணீர் வடித்தபடி அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினான் ராவணன்...!

கண்ணீர் மல்க அவன் திரும்பி பார்க்கும் பொழுது சீதாவின் கைப்பற்றி அர்ஜுன் யாக குண்டத்தை வலம் வந்து கொண்டிருந்தான்.

கண்களில் உள்ள கண்ணீர் அந்த காட்சியை மறைக்க...அப்படியே அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தான் ராவணன்...!

அங்கே கண்மூடியவன் பிறகு கண் விழித்து பார்த்த போது கட்டிலில் தான் கிடந்தான்...

விழுந்தடித்துக் கொண்டு எழுந்தமர்ந்த ராவணனுக்கு இதயம் படபடவென்று அடித்து கொண்டது.

இதயம் முரசு கொட்டுவது போல் துடிப்பதை அவனால் உணர முடிந்தது.

அப்படி என்றால் இத்தனை நேரம் தான் கண்டது வெறும் கனவா? என்று நிம்மதி பெருமூச்சை வெளியிட்டான்.

'இப்போதைக்கு இது கனவாக இருக்கலாம் ஆனால் நாளை நிச்சயம் இது நிறைவேறும் அல்லவா ? சீதாவை இந்த அர்ஜுன் மணம் முடிக்கத்தான் போகிறான் அப்போது இவள் எனக்கு யாரோவாக மாறத்தான் போகிறாள் அதுவரை தான் இவள் என்னுடைய சீதா... ஆனால், அதற்குப் பிறகு??'

பலதையும் யோசித்து அவனுக்கு மண்டை வெடிப்பது போலாகிவிட்டது அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக உயிர் ஒழுகி உள்ளங்கையிலிருந்து வழிந்து ஓடுவது போலிருந்தது ராவணனின் கதி...!

மனம் முழுக்க நிறைந்திருந்த சீதாவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவனும் உணராமல் இல்லை.

இருந்தும் தான் அவளுக்கு தகுதியானவன் கிடையாது என்கிற எண்ணம் அவன் ஆழ் மனதில் அழுத்தமாக தோன்றி விட, விலகி நின்றான் அவன்.

சீதாவின் எதிர்காலமா அல்லது அவள் மீது தான் வைத்திருக்கும் காதலா என்று பார்க்கும் பொழுது, அவனுக்கு சீதாவின் எதிர்காலம் தான் முக்கியமாகப் பட்டது... அதனால்தான் அமைதியாக இருந்தான்.

ஆனால் நாளுக்கு நாள் சீதா அவனிடமிருந்து ஒதுங்கி போவதும் அர்ஜுனிடம் அதிகமாக பேசுவதையும் பார்க்கும் பொழுது அவன் மனதிற்குள் பொறாமை எழுத்தான் செய்தது.

சில நேரங்களில் கோபம் கூட எழுந்தது அர்ஜுன் மீது அவனுக்கு.

'எதற்காக எங்கள் வாழ்வில் குறுக்கே வந்தாய்? நீ வந்த பிறகு தானே என்னுடைய சீதா என்னை விட்டு விலகி செல்கிறாள்?. சோலை வனமாக இருந்த என் உள்ளத்தை இப்பொழுது பாலைவனமாக மாற்றி விட்டார்களே எல்லோரும் சேர்ந்து.

எதற்காக நான் சீதாவை சந்திக்க வேண்டும்? சீதா என்னுடையவள் இல்லை என்றால் எதற்காக இந்த சந்திப்பு? ஏன் நாங்கள் சந்தித்து பிறகு இப்படி பிரிய வேண்டும்?

நீ என்னை விரும்புகிறாயா என்று கேட்டபோது ஆமாம் நான் உன்னை தான் விரும்புகிறேன், என் மனதில் நீ மட்டும் தான் இருக்கிறாய் நீ தான் என்னுடைய மொத்த வாழ்க்கையும் நீதான் என்னுடைய உயிர் என்று சொல்லி அவளிடம் சரணாகதி அடைந்திருக்க வேண்டாமா அப்பொழுது விட்டுவிட்டு இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்?முட்டாளே...

நகர்ந்து சென்ற நாட்களை மீட்க முடியுமா ? அல்லது கடந்து செல்லும் நொடிகளை தான் நிப்பாட்டி வைக்க முடியுமா ? எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி சென்று கொண்டிருக்கிறது இனி என்ன செய்வது ?', என்ற பதட்டத்தோடு ஒவ்வொரு நொடிகளையும் எண்ணிக்கொண்டிருந்தான் ராவணன்...!

விடிந்தால், சீதாவின் திருமண வைபோகம்...!!

- தொடரும்...

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
யோவ் ரைட்டர்! என்னையா பண்ணி வெச்சி இருக்கீங்க🥺🥺🥺🥺
எப்படியும் சீதாவை ராவன் கூட சேர்த்தி தான் நீங்க வைக்கணும் சொல்லிட்டேன்
 
  • Love
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
யோவ் ரைட்டர்! என்னையா பண்ணி வெச்சி இருக்கீங்க🥺🥺🥺🥺
எப்படியும் சீதாவை ராவன் கூட சேர்த்தி தான் நீங்க வைக்கணும் சொல்லிட்டேன்
😂😂😂😂 சீதாவை விட அதிகமா நீங்க தான் அழிவுறீங்க போல😜😜

மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️
 
  • Haha
Reactions: Gowri Karthikeyan