காலிங்கனின் காவியம் - Teaser

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
மக்களே,

இது முற்று முழுதான ஒரு கற்பனைக் கதைதான். நிறைய நாளா எழுத ஆசை. பொருந்தி வருமா, என்னால முடியுமா என்று தயங்கி தயங்கி வச்சிருந்தேன்.

இன்னும் சொல்லப்போனா ஆட்டநாயகன் எழுதின பிறகுதான் இன்னும் கொஞ்சம் திடம் வந்தது. நமக்குத் தெரியாத ஏரியால காலை வச்சு, ஏன் இருக்கிற பெயரையும் கெடுக்க எண்டு பேசாம இருந்தேன்.

ஆனாலும் ஆசை யாரை விட்டது. கதை ஒண்டும் புதுசு இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கதையை எழுதி, அது எப்படி வரப்போகுது, என்னால் எந்தளவில் இந்த ஏரியாவில் எழுத முடிகிறது என்று நானுமே பார்க்க ஆவலா இருக்கிறேன்.

சுமதி , அகல் ரெண்டு பேரும் கேட்ட நேரம் டீசர் இல்லை எண்டு சொல்லிட்டேன். ஆனா அப்பிடிச் சொன்னது எனக்கே மனம் சரியில்ல. எழுதி வச்சிருக்காட்டி பேசாம இருந்திருப்பேன். எத்தனையோ வருசமா சேர்த்த நோட்ஸ். அவ்வளவு வச்சுக்கொண்டு இல்லை எண்டு சொல்லுவியா எண்டு என்ர மூளையே என்னை பிராண்டுது. அதான் அங்கங்க எடுத்துக் போட்டிருக்கிறேன்.

தலைப்பு: கலிங்கனின் காவியம்

நாயகன் கலிங்கராயன்

நாயகி பெயர் இன்னும் முடிவாகேல்ல. ஆனா, காவியா இல்லை. அது அவன் காவியம். அதாவது அவன் வாழ்க்கைப் பயணம். முதல் கலிங்கனின் கவிதையே எண்டு யோசிச்சன். பிறகு தேடியபோது கவிதை என்பது சிறிதாக இருக்குமாம். காவியம் என்பது முழுமையாக இருக்குமாம். சோ கவிதையை விட காவியம் பொருந்தி வந்தது. அதான் அந்தத் தலைப்பு.

நாயகி பெயர் இன்னும் முடிவு ஆகாததால் அவள் எண்டு மட்டுமே போட்டு இருக்கிறன்.

அதேபோல எப்பவும் சொல்லுறதுதான். டீசர் எண்டு போட்டதாலேயே இதுல வாறது எல்லாம் கதைல வரும் எண்டுறதுக்கு எந்த கேரண்டியும் இல்லை.

எழுதும்போது பொருந்தி வந்தால் சேர்ப்பேன். ஓகேதானே?

Teaser:

கலிங்கராயனின் கைப்பேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தான். ஆதி என்று காட்டியது. அவன் அழைப்பை ஏற்றபோது மறுமுனையில் குளப்பமான பல சத்தங்கள். அழைப்பும் நின்றுபோயிற்று. இங்கேதானே இருந்தான் என்றபடி மக்களுக்கிடையே அவன் விழிகளை சுழற்ற, ராயனின் கைபேசிக்கு அடுத்தடுத்துக் குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன.

அண்ணா

என்னை காப்பாத்துங்க

ஓடி வாங்க… என்று பதற்றமான தகவல்கள் திரையில் ஒளிர்ந்தன.

அவன் புருவங்கள் சுருங்கின. புத்தி கூர்மையாயிற்று. எங்கே நிற்கிறாய் என்று கேட்டு அந்த மெசேஜ்க்குப் பதில் அளிக்க முயன்றபோதுதான் ராயனின் மூளைக்குள் திடீரென்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.

'ஆதி ஒரு நாளும் இப்படிப் பதறிப் பேச மாட்டான்! தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் அதைத் தனித்து நின்று கையாளுபவன் ஆயிற்றே! அந்தச் சந்தேகம் மின்னலாய் அவனது மூளையில் வெடித்த கணமே நிமிர்ந்து பார்த்தான்!

நொடியில் அரங்கேற முயன்ற கோரக் காட்சியில் ஒரு கணம் அவன் உயிர்த்துடிப்பு அப்படியே நின்றுபோயிற்று.

கோயில் திருவிழாக் கூட்டத்திற்குள் மறைந்திருந்த ஒரு பெண், கூர்மையான கத்தியை ஓங்கிக்கொண்டு அவளை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்துகொண்டிருந்தாள்!

அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று, அவளுக்குச் சிறு கீறலும் விழுந்துவிடாமலிருக்க, தன் அகன்ற மார்பையும் கைகளையும் விரித்து நின்று, கேடயமாகத் தடுத்தான் ராயன்! அந்தப் பெண் ஓங்கிய வாள், நேராகப் பாய்ந்து வந்து ராயனின் முதுகைக் கிழித்துக்கொண்டு இறங்கியது.

சுற்றியிருந்தவர்களின், “ஐயோ ஐயோ!” என்ற பதறலான அலறல் சத்தத்தைக் கேட்டு, பொங்கல் பானையிலிருந்து கவனத்தைத் திருப்பி நிமிர்ந்தாள் அவள்.

“ஒண்டுமில்ல ஒண்டுமில்ல!” என்று அவளைத் தன் சிறகுகளுக்குள் ராயன் பொத்திக்கொள்ள, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்ன, ஏன் சனமெல்லாம் கத்தினம்?” என்று பதறியவளுக்கு என்னவோ ஏதோ என்று தவிப்பு. அவர்களுக்குப் பின்னால் கேட்ட பதற்றமான சத்தம் வேறு என்னவோ என்று சொல்லிற்று. அவள் எட்டிப் பார்க்க முயல அவன் விடவில்லை. அவளைத் தனக்குள் பொத்திக்கொண்டான்.

அதற்குள் சுதாரித்துக்கொண்ட ராயனின் ஆட்கள் அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்து அடிக்கப் போக, “தம்பி காப்பாத்துங்க தம்பி!” என்ற அந்தப் பெண்ணின் அலறலில் தன்னை மறந்து திரும்பினான் அவன்.

அப்போதுதான் அவனது முதுகிலிருந்து தாரை தாரையாகப் பீறிட்டுக் கொட்டிய இரத்தத்தைக் கண்டாள் அவள். சுவாசம் தொண்டைக் குழிக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. கால்கள் நடுங்கின. உலகமே சுழல்வது போல இருக்க, “ர்…ரெத்தம்” அப்படியே மயங்கி பொங்கல் பானையின் மேலேயே விழப்போனாள்.

“ஏய்! விழுந்திடாத!” என்று அவளை அள்ளி அனைத்துக்கொண்டவன் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை ஒன்றும் செய்யாமல் கொண்டுபோகும்படி பார்வையாலேயே தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

*****

துரைமுகத்தின் பெருவெளியைக் கடந்து நள்ளிரவில் வெளியேறிய ராயனின் சரக்கு லொறி, அமைதியான நெடுஞ்சாலையில் உறுமிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. திடீரென இருளைக் கீறிக்கொண்டு பாய்ந்து வந்த இரு பெரிய ட்ரக்குகள், லொறியை முன்பின்னாக மறித்துச் சுற்றி வளைத்தன. அருளின் ஆட்கள்தான் அவர்கள். படபடவென்று பாய்ந்து இறங்கி ஓடி வந்தவர்கள் கைகளில் இரும்புத் தடிகளுடனும், கூர்மையான ஆயுதங்களுடனும் லொறியைத் தாக்கத் தொடங்கினர்.

அந்தச் சமயம், ராயனுக்குத் தகவல் பறந்து வந்தது. தன்னுடைய புறவியைப் போன்ற கருப்பு நிற ‘ரேஞ்ச் ரோவர்’ ரில் மின்னல் வேகத்தில் அங்கே வந்து சேர்ந்தான் ராயன்! காரை பிரேக் போட்டு நிறுத்தக் கூடச் செய்யாமல், ஓடும்போதே கதவைத் திறந்து குதித்தான். அவனது கண்கள் கோபத்தில் தகித்தன. கையில் கிடைக்கிறவர்களைத் துவம்சம் செய்யும் ஆவேசத்தில் அவன் நெஞ்சுத் தசைகள் துடித்தன.

கையில் மின்னிய இரும்பு ராடினால் எதிர்ப்பட்ட முதல் ஆளின் தலையில் ஓங்கி அடித்தான். ஒற்றை அடித்தான். பம்பரம்போல் சுழன்றி அந்த இடத்திலேயே மூர்ச்சையாகி விழுந்தான் அவன்.

அதன் பிறகும் அவன் ஓயவில்லை. ஆதியும் ஆட்களோடு வந்துவிட அவன் அடிகள் ஒவ்வொன்றும் இடிகளென எதிரிகள் மீது இறங்கிற்று. அவன் காட்டிய வேகத்தில் எதிரிகள் நிலைகுலைந்தனர். யாராலும் அவனின் புயல் போன்ற வேகத்தின் முன்னே சமாளிக்க முடியவில்லை. யாரோ ஒருவன் அவனைப் பின்னிருந்து தாக்க முயல, அவன் கையைப் பிடித்து முறித்துவிட்டுத் தன் காலால் நெஞ்சில் எட்டி மிதித்தான்.

ராயனின் ஒவ்வொரு அடியும் எதிரிகளின் எலும்புகளை முறித்தது. தார்ச்சாலை முழுவதும் இரத்தம் தெறிக்கத் தொடங்கியது. அவனது ஆக்ரோஷத்தைக் கண்டு மிரண்டுபோன அருளின் ஆட்கள், அடிவாங்கிக்கொண்டு திசைக்கு ஒருவராக ஓடத் தொடங்கினர்.

“விடக்கூடாது அண்ணா. இனியும் விடவே கூடாது!” இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று தம்மைச் சுற்றி ஆராய்ந்துவிட்டு வந்த ஆதி சொன்னான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல், லொறியின் டிரைவர் கேபின் சென்று பார்த்தான். ஓட்டுநர் மயங்கி கிடந்தார். அவரைக் கவனிக்கச் சொல்லி ஆதிக்குகே காட்டிவிட்டு, லொறி சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சுற்றிவந்து ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டான்.

ஓட்டுநர் இப்போதைக்கு வாகனம் செலுத்தும் நிலையில் இல்லை என்றதும் அவரை ஆதியோடு அனுப்பிவிட்டுத் தானே ஏறி அமர்ந்தான்.

சற்றுமுன் அப்படியொரு கோரத்தாண்டவம் நடந்ததா என்று நம்ப முடியாத அளவிற்கு அந்தத் துரைமுகச் சாலை மீண்டும் அமைதியானது. அந்த நடுநிசியில் ரத்தக் கறையுடன் லொறியை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்த ராயனின் மூச்சின் சூடு மட்டும் அடங்குவதாக இல்லை. அந்த லொறியின் கண்களை போலவே அவன் விழிகளும் ஆத்திரத்தில் ஆவேசத்திலும் பளபளத்தன.

*****

அவளுக்கு மனம் கொதித்தது. பொறுக்கவே முடியவில்லை. தன்னை ஒரு துரோகியைப் போலப் பார்த்த அந்தப் பார்வையும், இரண்டு விரல்களைக் காட்டி அவளை வெளியே போகச் சொன்ன அந்தச் சைகையும் அவளைக் கொதிப்படையச் செய்தன.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவளை பற்றி? அவள் செய்த தவறு என்ன? அவளை அவன் சந்தேகிக்கிறானா?
ஒரு காலமும் இல்லாத வழக்கமாக, அன்றைக்குத் தானாக ராயனின் அறைக்கு அவனைத் தேடிக்கொண்டு போனாள்.

அறைக்குள் நுழைந்தவளுக்கு அங்கே நிலவிய சூழல் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. மேசையில் ஒரு மதுப் போத்தலும் காலியான கிளாசும் கிடக்க, அவன் தன் வேற்று முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தான். அவனது விரல்களுக்கிடையே எப்போதும் எரியும் அந்தச் சுருட்டு புகைந்துகொண்டிருந்தது.

பின்னால் அவள் நிற்பதை அவன் உணராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும், அவளைத் திரும்பிப் பார்க்கவோ, உள்ளே வா என்று அழைக்கவோ இல்லை. முதன் முறையாக வருகிறாள் என்று அவனுக்கும் தெரியும்தானே.

கை கால்கள் நடுங்கினாலும் தன் பயத்தை மறைத்துக்கொண்டு அடிமேல் அடி வைத்து உள்ளே நுழைந்து, பின்னால் கதவைச் சாத்தினாள். அப்படியே நடந்து வந்து அவன் எதிரே நின்றாள்.

அப்போதும் ராயன் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவனது புறக்கணிப்பைக் காட்டிலும் அவளை வேஹனையுற செய்தது, அவனது தோள் பட்டையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பெரிய கட்டுத்தான்.

அதைக் கண்டதும் அவள் இதழ்கள் அழுகையில் துடித்தன. சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொள்ள, அப்படியே அவனுக்கு முன் முழங்காலிட்டு அமர்ந்தாள்.

நடுங்கும் விரல்களால் அவனது காயம்பட்ட அந்த இடத்தை மென்மையாகத் தடவிப் பார்த்தாள். அவளது நெஞ்செல்லாம் புண்ணாகி வலித்தது. அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும்?

ஒரு மருத்துவராக எத்தனையோ காயங்களைப் பார்த்தவள் அவள். இதற்கு முன்பு இதே அவன் ஒன்றுக்கு இரண்டாக்க கத்திக் குத்து வாங்கி வந்து படுத்திருந்தபோதுகூட, எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி, மிகத் தெளிவாக அவனுக்கு வைத்தியம் பார்த்தவள்.

அதோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒரு காயமே இல்லை. ஆனாலும், அவன் வலியில் துடிப்பானே என்ற எண்ணமே இவளைத் துடிக்கச் செய்தது. கண்ணீர் அவளது கன்னங்களில் வழிந்தோடியது.

நடுங்கும் தன் விரல்களால் அவன் தோளை வருடினாள். தான் என்ன தவறு செய்தோம் என்றே அறியாதபோதும், அவனிடம் மன்னிப்புக் கேட்பவளைப் போல, தன் தலையை அவனது காயம்பட்ட கையில் லேசாக முட்டி விக்கி விக்கி அழுதாள்.

அவளால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. அவனது கோபமும், அவளைப் புறக்கணித்து அமர்ந்திருக்கும் அவன் இறுக்கமும், இத்தனை அழுதும் உடையாத அவனது மௌனமும் அவளைக் கொன்றன.
சண்டை பிடிக்க வேண்டும், அவனிடம் கத்தி நியாயம் கேட்க வேண்டும் என்றுதான் அந்த அறைக்குள் நுழைந்தாள். ஆனால், இப்போது அவள் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.

கன்னத்தில் வழிந்த கண்ணீரும், கண்ணீரில் நனைந்த விழிகளும், துடிக்கும் இதழ்களுமாக ஒரு பரிதவிப்போடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனும் இமைக்கக் கூட மறந்து அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிவந்து பளபளத்த விழிகளும், இறுக்கமான உதடுகளும், விடைத்த நாசியும், கோபமும் வெறுப்பும் கொப்பளித்த அவனது முகத்தோற்றமும் அவள் உயிரை அறுத்தன.

“நான்... நான் என்ன பிழை செய்தனான்? எனக்குத் தெரியலையே!” என்றாள் தவிப்பாய்.

அதற்கு எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், தன் இறுக்கமான இதழ்களைப் பிரித்து ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான்.

“வரதன்!”

அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

*****

அவனது முத்தத்தின் சூடு தணிந்து, அவளது இதழ்கள் லேசாகச் சிவந்து நடுங்கிய நேரத்தில், அவளது காதோரம் லேசாகக் குனிந்து, குரலைத் தாழ்த்தி, “மேல போவோமா?” என்று கிசுகிசுத்தான் ராயன்.

அதைக் கேட்டதும் அவளுக்குக் கோபமும் வெட்கமும் ஒருசேரப் பொத்துக்கொண்டு வந்தன. என்ன நிலையில் என்ன கேட்கிறான் என்று அவள் முறைக்க, தன் உதட்டோரம் புன்னகையை மறைத்தபடியே, அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வசதியான தன் கட்டிலைக் கண்களாலேயே காட்டி, அங்கு வருமாறு அழைத்தான்.

அவள் முகம் தக்காளிப் பழம் போலச் சிவந்துபோனது. அந்த அறைக்குள் என்ன மனநிலையோடு வந்தாள். இப்போது எந்த மனநிலையில் அவளை மாற்றிவைத்திருக்கிறான் என்று உணர்ந்தவள், விழிகளைத் தாழ்த்திக் கொண்டு அவனது மடியை விட்டு எழுந்தாள்.

*****
அவளைத் தன் கைகளில் இலகுவாக அள்ளியபடியே நடந்தான் ராயன். நொடியிலேயே எங்கு அழைத்துச் செல்கிறான் என்பதை உணர்ந்தவளின் தேகம் ஒரு நொடி தடுமாறிப்போனது.

தன்னை முழுமையாக வசியம் செய்யப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டவளின் மனத்துக்குள் தவிப்பும் படபடப்பும் ஒருசேர ஓடின.

அவளது அந்தப் பயத்தையும் திகைப்பையும் கண்ட ராயன், வாய்விட்டுச் சிரித்தான். அவளது எந்தத் தயக்கமும் தனக்கு முன்பாக எடுபடாது என்பதை அவளது கண்களைப் பார்த்தே உணர்த்தினான்.

அடுத்த கணமே வார்த்தைகளுக்கு இடமின்றி அவளது இதழ்களில் தன் ஆசைகளை ஆழமாகப் புதைத்துக்கொண்டான். அந்த இரவின் அமைதியில் அவனது முத்தம் அவளது அத்தனை எதிர்ப்புகளையும் சூறையாடியது.

d72e608d-bbc9-4b31-974d-9e14bccd35a1.jpeg
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: காலிங்கனின் காவியம் - Teaser
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

View attachment 1340
டீஸர் செம்ம அதிரடி Sis 🔥🔥🔥🔥 டைட்டில அதை விட சூப்பர்👌🏻👌🏻👌🏻🥰😘அதன் விளக்கமும் அடி பொலி Sis 🥰😘😍❤️🫶