காதல் ராஜ வீதியில் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
15

“ஓக்கேய்..அன்னிக்கு நான் வண்டியை விட்டு இறங்கும் போதே அண்ணன் என்னை பார்த்திட்டான். ஆச்சர்யபட்டு சிரிக்கவும் செஞ்சான். நான் தான் கவனிக்கலை. அண்ணி கவனிச்சு இருக்காங்க போல. அதான் இத்தனை கன்பியூசன். அட லூசு அண்ணி, நேரே என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியது தானே?”

“அட லூசு! இதை என்கிட்ட முதல்லயே கேட்டு இருந்தா நானும் சொல்லி இருப்பேன்ல?”

“யாரு? நான் லூசா?”

அவள் முறைக்க எலுமிச்சை ஜூஸ் வந்து விட்டது.

“தாகமாதான் இருக்கு “ என்றபடி ஜூசை எடுத்து அருந்த ஆரம்பித்தாள் வனி.

இவனுக்கும் ஒரு ஜூஸில் இரண்டு ஸ்ட்ரா போட்டு அவளுடன் குடிக்க ஆசைதான். ஆனால்…இவளும் விடுவாளா? ம்ஹ்ம்!

அவள் ஜூஸ் குடிப்பதையே பார்த்தான். அவன் இளமைக்கு சோதனையாக இருந்தது. பொறு! பொறு! என்று அவனுக்கு அவனே சொல்லி தேற்றப் பார்த்தான். முடிய வேண்டுமே?

அவன் அவளுடைனான இனிய கற்பனைக்குள் சுழன்று கொண்டு இருக்கும் போது ஏதோ ஒரு மாற்றம். அந்த உதடுகள் பதறின. அவசரமாக ‘ஹலோ பாஸ்! ஹலோ!’ என்றன.

பாஸா?

மொழி முன்னே பின்னே திரும்பி திரும்பி பார்த்தான். யார் அந்த பாஸ்?

“ஹலோ உங்களைதான். ஹலோ பாஸ்”
வனி அவன் முகத்தின் முன் கை ஆட்டினாள்.

‘நாம தானா அது?’

“என்னாச்சு வனிமா?” கற்பனை கலைந்ததில் அவன் முகம் சுணங்கினாலும் நிஜத்திலும் அவள் தானே இருக்கிறாள்? என்பதில் தேறிக் கொண்டது.

“சொல்லு வனிமா”

“இன்னொரு ஜூஸ் சொல்லுவோமா? தாகமா இருக்கு”

இம்புட்டு பேசினா?

நினைத்ததை சொல்லவில்லை அவன். அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கிறதே! அவளுக்கு அவனைப் புரிய வைப்பது.


“உனக்கு பைன் ஆப்பிள் ஜூஸ் சொல்லவா?”

“அதுவும் ஒன் பை டு தான் தருவான். நீங்க குடிப்பீங்களா? ஜூசை சொன்னேன்”

யோசிடா மடையா!

“ஆமா இல்ல? எனக்கு குடிக்க முடியாது. பரவாயில்லை ரிட்டர்ன் குடுத்துக்கலாம். இல்லை புல் அமவுண்ட் கொடுத்து ஒரு கப் மட்டும் வாங்கிக்கலாம்”

“அது எதுக்கு? காசுக்கு பிடிச்ச கேடு. இதுக்குதான் இங்கேல்லாம் நான் வர்றதில்ல”

அதெல்லாம் வருவாள். ஆனால் அடிக்கடி இல்லை. அதனால் தான் இங்கே உள்ள கடைகளின் சில விதிமுறைகள் தெரிகிறது, சில விதிமுறைகள் தெரியவில்லை.

“சரி விடுங்க. என் கடைக்குப் போய் பக்கத்துல இருக்கற கடையில கரும்பு ஜூஸ் வாங்கி குடிச்சுக்கறேன்”

“மேம்” என்று வந்து ஆஜர் ஆனான் அதே சிப்பந்தி. உற்று நோக்கியதில் சீருடையில் பெயர் பதக்கம் இருந்ததும் அதில் ஜனா என்று எழுதி இருந்ததும் தெரிந்தது.

“ஜனா சார், எங்களுக்கு ஒரு பைன் ஆப்பில் ஜூஸ் வேணும். ஒன்னு போதும். என்ன பண்றது? வேணா இந்த லெமன் ஜூசை எடுத்துக்கிட்டு அதை தர்றேங்களா?” என்று கண்ணை கண்ணை காட்டினான்.

சரி என்று எடுத்துக் கொண்டால் இவன் மீது அவளுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தாலும் வருமே? இன்னொன்றும் நடக்கலாம். அதுதான் அந்த ஸ்ட்ரா!

‘முடியாது. இதை என்ன வேணா செய்யுங்க. நெக்ஸ்ட் பைன் ஆப்பில் ரெண்டு டம்ளர் தரேன். அதையும் என்ன வேணா பண்ணுங்க’ என ஒப்பிக்க வாயைத் திறந்த ஜனா இவன் கண் ஜாடையில் குழம்பி,

“ஓகே. இதை எடுத்துக்கறேன். வேணா பார்சல் பண்ணவா? வேண்டாமா? ரெண்டு பைன் ஆப்பில் ஜூஸ் கொண்டு வர்றேன் சார். ரெண்டு ஜூசுக்கும் பில் போட்டுறவா சார்?” என்றான் தெளிவாக.

வேறு வழியின்றி “ஓகே. ஸ்யூர்” என மணிமொழி கூறி விட, “எவ்வளவு?” என்று கேட்டாள் வனி.

“நீ சும்மா இருமா” என்றபடி மொழி ஜனாவை பார்க்க அவன் கிளம்பி விட்டான்.

“இங்க பாரு வனி. கயல் அவங்க மேலே இருந்த கோபம், சந்தேகம் எல்லாம் போச்சா?”

“ம்”

“உன் அப்பா மேலே பயம் இல்லியே?”

“சே சே”

“அப்போ என் மேலே வருத்தம் ஒன்னும் இல்லியே?”

“அது எப்படி இல்லாம போகும்? ஸ்கூல்ல பின்னாடியே சுத்துனீங்க. அதை நானும் கண்டுக்கல. அதே மாதிரி அப்புறமும் பின்னே வரவும் உங்களைப் பார்த்தது உண்மை தான். அதுக்காக நான் தான் முதல்ல லவ் பண்ணேன்னு சொல்லக் கூடாது!”

அவன் முகத்தில் அத்தனை ஒளி வெள்ளம்!

“இல்லை இல்லை. அப்டிலாம் சொல்லவே மாட்டேன். சரியா? நான் தான் முதல்ல லவ் பண்ணேன். எப்பவும் பண்ணுவேன்” உளமார சொன்னான் மொழி.

அதில் அவன் முகத்தையே பார்த்தவள் பின்பு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கொஞ்சம் யோசனை பண்ணிவிட்டு,

“ம். ஓகே” என சிரித்த போது ஜூஸ் வந்து இருந்தது.

“அந்த லெமன் ஜூஸ் ஏன் குடிக்கலை?”

“அது அப்படித்தான். இல்லத்துல அதிகமா அது தான் குடிச்சு இருக்கேன். சோ அதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்திருச்சு. அப்போ லெமன் கிடைக்கும். சுகர் கிடைக்காது. அதனால் உப்பு போட்டு குடிப்போம். அப்படியே பழகிருச்சு” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் வனி.

அவள் பார்வையை உணர்ந்து,

“அதை விடு. நான் ஒரு டம்ளர் தான் ஜூஸ் வரும், ரெண்டு பேரும் அதுல ஒண்ணா குடிக்கலாம்னு பார்த்தா…”
என சிரித்தான்.

“ஆசைதான்”

இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகியபடி குடிக்க, ஒரு கட்டத்தில் “என்னால முடியல” என மீதி வைத்தாள் அவள்.

“எதுக்கு வேஸ்ட் பன்ற?” என்று அதை எடுத்து அதே ஸ்ட்ரா வைத்து அவன் குடிக்க வெட்கத்தில் கோபம் வந்து எழுந்து போய் அவனை மொத்தினாள் வனி.

சிரித்துக் கொண்டே அடி வாங்கியவன் அத்தனை நிறைவுடன் எழுந்தான்.

“நியாபக சின்னமாலாம் இதை தூக்கிட்டு போக மாட்டேன். நீ தான் என் கூடவே இருப்பியே?” என்றபடி அவளுடன் கை கோர்த்துக் கொண்டு பில் போடும் இடத்திற்கு நடக்க, ஜனா பில் புக்குடன் வந்தான்.

‘ஏன்டா? இங்கே வச்சு குடுத்தா நான் குடுக்கறேன்னு வம்பு பண்ணுவா. கவுண்டர்லனா கொஞ்சம் யோசிப்பா. திடீர்னு நெட் ஒர்க் ஆகலைன்னா இல்ல அக்கவுண்ட்ல பேலன்ஸ் இல்லைன்னா என்ன பண்றதுன்னு. அது போக அங்கே வரை அவ கையைப் பிடிச்சுக்குவேன். குறிப்பறியா நன் மரமே! உனக்கும் இப்படி ஒரு சிச்சுவேசன் வரும் டா. ஒருவேளை ஏற்கனவே இவனுக்குக் கல்யாணம் ஆகி இருக்குமோ? இவனைப் பத்தி நமக்கு என்ன?’

மொழி யோசித்துக் கொண்டு வர வரவே ஜனா அவர்களை சமீபித்து இருந்தான்.

“சார், மேம் கேட்ட ஜூஸ் இல்லாததால இந்த ஜூஸ் உங்களுக்கு ஹன்றட் பெர்ஸன்ட் டிஸ்கவுண்ட்” என பில் புக்கை விரிக்க, காரணம் எழுதி டிஸ்கவுண்ட் போட்டு இருந்தார்கள்.

மொழி சத்தமாக சிரித்துவிட, “அப்போ ஆப்பில் ஜூஸ் வாங்கி இருக்கலாம்” என முணுமுணுத்தாள்.

“ரேட் சார்ட் பார்த்தேன். மீதியை டிப்ஸா வச்சுக்கோங்க” சொன்னவன் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு அவளைப் பார்க்க அவளும்,

“ஆமா அண்ணா. வாங்கிக்கோங்க ப்ளீஸ்” எனவும் இவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.

பின்னே? அவளும் தானும் ஒருவரே என உணர்த்தி விட்டாளே?

திருப்தியான இவன் முகத்தை பார்த்த ஜனா புன்னகையுடன் பணத்தை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

அதிகம் அதைப் பற்றி யோசிக்காத இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பிவிட,

“உங்க டர்ன் முடிஞ்சுது சார். ஒரு கஸ்டமருக்கு சர்வ் பண்ண சொல்லி ஐயா கொடுத்த டார்கெட்டை முடிச்சிட்டீங்க” என்றார் ஜனாவின் மேனேஜர்.

ஜனா-

இந்த நிலா பார்க் ஓனரின் ஓனர். அதாவது ஒரே மகன்.

சிரித்துக் கொண்டே “இன்டெரெஸ்ட்டிங்” என்றான் அவன்.

ஜூஸ் கார்னர் வெளியே-

“ஆமா, ஸ்கூல்ல எதுக்கு என்னை பாலோ பண்ணீங்க?”

உருப்படியான கேள்வியைக் கேட்டாள் வனி.

“இது உனக்கு தெரிஞ்சு இருக்கணும்” எனத் தொடங்கி அவளை சில ஆண்கள் பின் தொடர்ந்ததை சொன்னவன் “அவங்க உன் காலேஜ்க்கும் வந்தாங்க. அதுல ஒருத்தன் உன் முன்னே வந்தப்போ நானும் வந்து அவனைத் தொரத்தினேனே? நினைவிருக்கா?” என்க,

“அப்போ அதுக்குதான் பின்னே வந்தீங்களா?” என்றாள்.

“அதுவும் தான்டி. செல்லம்ல. கோவப்படாம கேளு. அத்தனை வருசமா உன்னை எதுக்கு அவங்க பாலோ பண்ணனும்?”

“எதுக்கு?”

“அதுக்கு தான் நானும் உன்னை பாலோ பண்ணேன். அவனுங்களையும். அதுல எனக்குக் கிடைச்ச தகவல் படி யாரோ ஒரு மட சாமியார் ஏதோ ஒரு தப்பான பூஜைக்காக உன்னை கடத்த பிளான் பண்ணி இருக்கார்னு தெரிஞ்சுது. அது யார்? எதுக்குன்னு தெரியலை. திடீர்னு அவனுங்களை காணலை. விசாரிச்சப்போ ஆக்சிடென்ட், ஹார்ட் அட்டாக், அது இதுன்னு போய் சேர்ந்துட்டானுங்க.

நீயும் படிச்சு முடிச்சிட்ட. வேற எங்கேயும் வேலைக்கு போனா கூட உன்னை பாலோ பண்ண எனக்கு சிரமம். சொந்த கடையா? நிம்மதியா இருந்தேன். எனக்கும் தொழில் டெவெலப் ஆச்சு.

சரின்னு உன் அப்பாகிட்ட உன்னை பொண்ணு கேட்டேன். அவர் முடியாதுன்னுட்டார். நான் குலம் கோத்திரம் தெரியாதவனாம். அதுக்கு மேல் அரேஞ்ட் மேரேஜ் நமக்கு செட் ஆகாதுன்னு உன்கிட்ட நேரே பேச வெயிட் பண்ணேன். இன்னிக்குதான் செட் ஆச்சு”

அவள் அவன் சொன்ன எல்லாவற்றையும் காற்றில் விட்டாள்.

“இன்னிக்கு எப்படி செட் ஆச்சு”

“உன் அப்பா இருந்தா உன்னை பார்க்க விட மாட்டார். பார்த்தாலும் பேச விட மாட்டார். அதான்…”

“அப்பா வீட்ல இல்லைன்னு எப்படித் தெரியும்?”

“மதி சொன்னான்”

“டாக்டர் தொழிலை தவிர மத்ததை சிறப்பா செய்றான். கூடவே அப்பா வர ஒரு வாரம் ஆகும்னு நான் சொல்லி இருக்கேன். உங்களுக்கு அது தொக்கா போச்சு என்ன?” என்று பல்லைக் கடித்து முறைத்தாள் வனி.

“அப்படி இல்லடி. நானும் எப்பதான் வாழ்றது?”

“அப்டின்னா?”

“கல்யாணம் மத்தது மத்தது எல்லாம்”

“இல்லியே? உங்களைப் பார்த்தா சந்தேகமா இருக்கே? நம்ம கல்யாணம் பத்தி கனவு எதுவும் கண்டு வச்சு இருக்கீங்களோ?” என யோசனையாகக் கேட்டாள்.

“ஆமா பின்னே? நமக்கு ஒண்ணுமே தெரியலியேன்னு கல்யாணம் நிச்சயம் காதுகுத்து எல்லாம் எப்படி செய்யணும்னு நாலு பேர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்”

“நல்லா தெரிஞ்சுக்கிட்டீங்க. நிச்சயத்துக்கு அப்புறம் தான் கல்யாணம். அது இருக்கட்டும். அண்ணனுக்கு ஒரு வழி சொல்லுங்க. அண்ணி பத்தி சொல்லுங்க “

“ரொம்ப முக்கியம்! அவனுக்குத் தேவைன்னா அவன்தான் ஸ்டேப் எடுக்கணும்”

“அவன் தான் அதுக்கு லாயக்கு இல்லியே?”

“நீ பார்த்த? அவன் லெவலே வேற”

“என்ன சொல்றீங்க?”

“அது இருக்கட்டும். உனக்கு இந்த கல்யாண கனவெல்லாம் வருமா? அதுல நான் வருவனா?”

“இப்பதான் பேசி இருக்கோம். இதுக்குள்ள கனவுக்குப் போயிட்டீங்க? ஏன் உங்களுக்கு வருமா?”

கேட்டுக் கொண்டே ஸ்கூட்டி இருக்குமிடம் வந்து வண்டியை எடுத்து ஸ்டார்ட் செய்ய, பின்னாடியே ஏறிக் கொண்டவன், “ம்” என்றான் கரகரப்பாக.

“என்ன என்ன வரும்?”

“நிறைய வரும். ஆனா ஒரே ஒரு விஷயம் வராது. அது பத்தி எனக்குத் தெரியாது” என்றான் அவசரமாக திருட்டு முழி முழித்து.

“என்ன? அறுபதாம் கல்யாணமா?”

தலையை நாலா பக்கமும் ஆட்டிக் கொண்டே தயக்கமின்றி அவளை நெருங்கி அமர்ந்தான் மொழி.

வண்டி கிளம்ப, உச்சி வெயிலில் ஜில்லேன்று பறந்தான் அவன்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
டேய்....மொழி...உன் முழியே சரி இல்ல....அப்படி என்னடா வராது🤭🤭🤭🤭🤭
ஜனா....இவன் என்ன புது ட்ராக்🤔🤔🤔🤔🤔
அப்ப மதியும் கயலை லவ்வுதா??????