சின்னா - 10
வெற்றிபெற இன்னமும் மூன்று பாயிண்ட்டுகளே தேவையிருக்க, தன் சிம்மக் குரலில், “கபடி.. கபடி" என்று பாடியபடி களமிறங்கினான் சின்னா.
சின்னாவின் ஆட்டத்துக்கென்றே பல்லிமிட்டாய் பொடிசுமுதல் பல்லுபோன கிழவன், கிழவிவரை ஆண்பெண் பேதமில்லா இரசிகர் வட்டம் உண்டு.
சுற்றிநின்று, " சின்னா… சின்னா…" என்று ஆர்ப்பரித்தது இளைஞர் பட்டாளம். அதில் பாவாடை தாவணிக் கட்டிய பைங்கிளிகளும் அடக்கம்.
செதுக்கியது போன்ற கிரேக்கத்து போர்வீரனுக்குரிய உடல்வாகும், தென் இந்தியனுக்கென்றே உரித்தாகிய செந்நிறத்தையும் சொந்தமாக்கிக் கொண்டவனின் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கும் கன்னியர்கள் சுற்று வட்டாரத்தில் ஏராளம்.
எந்தக் கூச்சல்களும் சலனப்படுத்தவில்லை அவனை. கூர்தீட்டியாய் அவன் விழிகள் எதிராளிகளை களவெடுக்க,
“விட்ராதீங்கடே இன்னைக்கு. முத்துக்குளிக்கிறவனைவிட மூச்சடக்குவான் நம்மபய” என்றார் ஒலிவாங்கியில் ஒருவர். அவர் எதிரணியின் ஆதரவாளர் போலும்.
“மீச வச்ச ஆம்பளையாயிருந்தா அவங் கிட்டபோய் தொட்டுப் பாருங்கடேய்” என்றார் அவருக்கெதிராய் இன்னொருவர்.
கபடி களத்தின் கோடுகளுக்கு அந்தப்பக்கம் மேஜை நாற்காலி வீதம் நடுவர்குழு அமர்ந்திருந்தது. அவர்கள்தான் மாறி மாறி வீரர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
விசில் சத்தம் அந்த இடத்தையே இரணகளமாக்கிக்கொண்டிருக்க, கண்ணிமைக்கும் நொடியில் மின்னலென ஊடுருவி கையால் இருவரையும் காலால் ஒருவனையும் தொட்டுவிட்டு விலாங்கு மீனாய் நழுவியிருந்தான் சின்னா என்கிற சிவநேசன்.
கூச்சல் அந்த ஆடுகளத்தை ஆக்கிரமிக்க,
என்ன நடந்ததென எதிராளிகள் உள்வாங்கும்முன்னரே வெற்றிக்கோட்டைத் தொட்டிருந்தான் சின்னா.
“புயல் வேகம் பார்த்திருப்ப, பதுங்கிப் பாயும் சிறுத்தைப்புலி வேகம் பார்த்திருக்கியா. இந்தா பாருங்கடே” ஒலிவாங்கியில் கூச்சலிட்டார் இரண்டாமவர்.
புளுதிப்புயல் ஒன்று அவர்களைக் கடந்ததை மட்டுமே எதிரணியினர் உணர்ந்திருந்தனர்.
பின்னே! “ஒரு பய உம்மேல கைய வைக்கக் கூடாது மாமா. நான் அந்த மண்ணுகுட்டிகிட்ட பந்தயம் கட்டியிருக்கேன்" என்று காலையிலேயே கட்டளையிட்டபின்தான் அவனை களமிறங்கவே அனுமதித்தாள் அவனின் அத்தை பெற்றெடுத்த அல்லிராணி. அவனின் செல்ல அரக்கி.
அவள் சொல்லி என்று மீறி இருக்கிறான் அவன்!
“இந்த வருடமும் வெற்றிக் கோப்பை நம்ம சின்னா கபடி குழுவுக்குதான்" என்று ஒலிவாங்கியில் அலறவிட்ட நொடி,
"மாமா ஐ லவ் யூ” என்று விசில் சத்தம் பறக்க பறக்க கீழிருந்து கத்தியது பச்சைக் கிளியொன்று.
அதில் அதுவரை கம்பீரம் காத்துநின்ற அந்த ஆறடி இளைஞனின் முகத்தில் சட்டென்று வெட்கப் பூக்கள் மலர்ந்துவிட, தன்னை மீறிய புன்னகையை மீசைக்குள் ஒளித்து குரல் வந்த திசைப்பக்கம் திரும்பினான்.
இளம் எலுமிச்சை நிற தாவணி அவளின் அடர்பச்சை நிற பாவாடைச் சட்டைக்கு எடுப்பாய் இருக்க, பறக்கும் தட்டுக்களாய் முத்தங்களை பறக்கவிட்டு நின்றிருந்தது அவனது பட்டாம் பூச்சி.
“பார்ரா என் நண்பனுக்கு வெட்கத்த" என்று அருகில் வந்த எதிரணியின் கேப்டன் பாண்டி, மேடையின் பக்கம் திரும்பி,
"சின்னா தி ரோமியோ கபடி குழு சொல்லு மாமா. அங்கப்பாரு என் நண்பணுக்கு பொண்ணுங்களோட விசில் சத்தத்த” என்று சின்னாவை தோளில் தூக்கிச் சுற்றினான்.
மீண்டும் “ஐ லவ் யூ மாமா" என்று நடுவர் ஒருவரின் கையிலிருந்த ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கத்தியது ஒரு பெண் குரல்.
சின்னா நண்பனின் தோளிலிருந்து குதித்து இறங்க, இரு இளைஞர்களும் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
இந்தமுறைக் கேட்டது வேறொரு பெண்ணின் குரலாயிற்றே!
“அச்சச்சோ" என்று இருவரும் தலையில் கைவைத்து அசந்து நின்றிருந்த சில நொடிகளில் நிலமை கை மீறி இருந்தது.
“ஏய் நில்லுடி! எவ்ளோ தைரியமிருந்தா என் முன்னாடியே என் மாமனுக்கு லவ் யூ சொல்லுவ” என்று சின்னாவின் பச்சைக்கிளி பாய்ந்து துரத்த, ஒலிவாங்கியைப் போட்டுவிட்டு அருகிலிருந்த மாந்தோப்புக்குள் ஓடினாள் முன்னவள்.
மாந்தோப்புக்குள் இருவரும் கட்டிப் புரண்டு உருள, “ஏய் மண்ணுக்குட்டி! என் மாமனுக்கு லவ் யூ சொல்வியா? இந்த வாய்தான" என்று அந்தப் பெண்ணின் வயிற்றில் அமர்ந்தபடி முகத்தில் குத்தப்போன அன்பிலரசியை ஒருகரம் வளைத்துப் பிடித்துத் தூக்கியது.
அப்படியே பின்புறமாய் அலேக்காகத் தூக்கி தன் முதுகில் போட்டுக்கொண்டு நடக்க,
"என்னை விடு மாமா...
இன்னைக்கு அவளை கொல்லாம விடமாட்டேன்" என்று எகிறினாள் அன்பிலரசி.
"பேசாம வாடி இராட்சசி” என்றவனோ, தன் மாமன் மகளை அவர்களுக்கேயான பிரத்யேக இடத்தினருகே வந்தபிறகே இறக்கினான்.
கிணற்றுக்குள் இறங்கிய படிக்கட்டின் கடைசி அகல திண்டில் இறங்கியதும் அவளை இறக்கி விட, அப்போதும் அடங்கினாள் இல்லை.
கைக்கால்களை உதறி திமிறியவளை, “அடங்குடி என் செல்லக்கிறுக்கி” என்று அடக்கி உட்காரவைத்தான்.
நீருக்குள் காலை விட்டு திண்டில் டங்கென அமர்ந்தாள். அதில் அவன் சிரிக்கவும்,
"சிரிக்காத மாமா! கொன்றுருவேன்" என முகத்தைச் சுருக்கி, "அவ வாய உடைச்சிருக்கனும் மாமா. என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே உனக்கு ஐ லவ் யூ சொல்வா?" என்றாள் அணையாத கோபத்துடன்.
கிணற்று நீரில் பட்ட சூரிய ஒளி, செங்காந்தள் அவளின் கோப முகத்தில் பட்டு இன்னும் தகதகக்க,
பார்வையால் பகல் நிலவை இரசித்து முடித்தவனில் மென்னகை.
ஆணோ பெண்ணோ தன்னவன் தனக்கே சொந்தம் என்பதில்தானே காதல் கர்வம் கொள்கிறது. ஆணாய் சிறு கர்வம்கொண்டான் ஊர் போற்றும் நாயகனும்.
"எத்தனை பேர் எனக்கு ஐ லவ் யூ சொன்னா என்னடி? உன் மாமன் உன்கிட்ட மட்டும்தானே சொல்றேன். அடங்குடி!" என்றான் அவளை அரவணைத்தபடி அதற்கும் மேல் படிக்கட்டில் அமர்ந்து.
"ஏன் சொல்லித்தான் பாரேன்" என்றாள் மிடுக்காக.
"சொன்னா என்ன பண்ணுவியாம்"
"இதோ இந்தக் கிணத்துல குதிச்சிடுவேன்"
பாவமாக முகத்தை வைத்துச் சொன்னவளில் கடகடவெனச் சிரித்தான் அவன்.
"உனக்கு மூக்கொழுகற வயசுலயே இதே கிணத்துல நீச்சல் கத்துக் குடுத்தவன் டி நானு"
"கல்ல கட்டிக்கிட்டு குதிச்சிடுறேன் இரு மாமா" என்றவள் முடிக்கும்முன் நறுக்கென்று மண்டையில் கொட்டு வாங்க,
" ஆ..." என்று வலியில் கத்தினாள்.
"எத்தனை சினிமால பார்த்திருக்க காதலி ஏடாகூடமா பேசும்போது இப்படியா தலையில கொட்டி பேச்ச நிறுத்துவாங்க” என்று தோரணையாய்க் கேட்டு வைத்தாள்.
“ஆஹான்… வேற எப்படி நிறுத்தனுமாம். சொல்லு கிறுக்கச்சி அதையும்தான் பண்ணிடுவோம்” என்றவன் உள்ளச் சிரிப்பை மறைத்துக் கொண்டு பெண்ணவளை இரசனையுடன் காண,
“அப்படியே லிப் டு லிப் வைக்க வேணாம்…” என்றாள் அவள்.
மீண்டும் நறுக்கென்று கொட்டினான்.
“நீ லவ் பண்ணவே லாயக்கில்ல மாமா" என்றாள் தலையைத் தடவிக் கொண்டே.
"நீங்க சொல்லித் தாங்க மேடம். அடியேன் கத்துக்கறேன்” என்றான் அவனும் சிரிப்பினூடே உதட்டைக் கடித்து…
“அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட மாமா. போ போய் உன் நெல்லுக்கு வைத்தியம் பாரு! எப்போதும் அதுகூடவேதான குடும்பம் நடத்துற” என்றாள் முறுக்கியபடி.
“என் காலேஜ் பசங்க எல்லாம் எங்கல்லாம் சுத்துறாளுங்க, என்னெல்லாம் சொல்றாங்க தெரியுமா?" என்றாள்.
“ம்ம்… என்னெல்லாம் சொல்றாங்க. சொல்லு கேட்போம்?" என்று இழுத்துச் சொன்னவனின் குரல் பேதத்தில்தான் தான் பேச்சு சுவாரஷ்யத்தில் உளறிவைப்பது புரிந்தது. திரும்பி தன் மாமனை பாவமாகப் பார்த்தாள்.
ஏற்கனவே இவள் சரியாகப் படிப்பதில்லை என்று எகிறிக்கொண்டிருக்கிறான். இதில் இது வேறா. நாக்கைக் கடித்தாள்.
“என்ன சொல்றாங்கன்னு கேட்டேன்" என்றவன் ‘சொல்லு’ என்பதாய் பார்த்தான்.
கையைப் பிசைந்தபடி, பள்ளிப் பிள்ளையாய் மெதுவே எழுந்து நின்றாள்.
“அது வந்து மாமா… அது வந்து” என்று அவன் காதருகே சென்றவள், “அது சொன்னாலும் உனக்குப் புரியாது மாமா! நீ ஒரு அம்மாஞ்சி!" என்றவள் நீருக்குள் அவனைத் தள்ளிவிட்டு ஓட நினைக்க, எத்தனுக்கு எத்தன் அவன்.
தான் வளர்த்த பச்சைக்கிளியின் பாசாங்கு புரியாமல் போகுமா! அவளையும் இழுத்துக்கொண்டே நீருக்குள் விழுந்தான்.
“அச்சோ மாமா! மண்ணுக்குட்டிய மாப்பிள்ளை வீட்ல பார்க்க வராங்கன்னு கிளம்பி இருந்தா.. போ மாமா!”
நீருக்குள்ளிருந்து வெளிவந்தவள் சிணுங்கிக்கொண்டே படிக்கட்டில் ஏறி அமர்ந்தாள்.
சற்றுமுன் அவள் வாயைத்தான் உடைப்பேன் என்று எகிறிக்கொண்டு திரிந்தாள் என நினைத்தவனுக்குச் சிரிப்பு.
“மாப்பிள்ளையெல்லாம் வரமாட்டான்" என்றவன் தானும் அவளருகில் ஏறி அமர, “ஏன் மாமா" என்றாள் படபடப்பாக.
“அது அப்படித்தான் அன்புக்குட்டி" என்றவன் அவள் தாவணியில் இயல்பாய் ஈரத்தலையை துவட்ட, சிதறிய பூந்தூறல்களை அண்ணாந்து கண்மூடி இரசித்து உள்வாங்கியது அவனது பைங்கிளி.
மீண்டும் நறுக்கென்று கொட்டினான்.
“காலேஜ் போய் ரொம்ப கெட்டுப்போய்ட்ட சில்வண்டு. இதுக்குதான் ஒழுங்கா படி. சென்னைல கொண்டு சேர்த்து விடுறேன்னு சொன்னேன். கேட்டியா?” என்றான் கோபமாக.
"உன் மூச்சுக்காத்து சுத்தாத இடத்துல நான் எப்படி மாமா சுத்துவேன்?”
முகத்தைச் சாய்த்து கண்களைச் சுருக்கி அவள் கேட்டத்தோரணையில் அப்படியே அள்ளிக்கொள்ளத் தோன்றியது அந்த ஆண்மகனுக்கு.
நன்றாக படிக்கும்பெண்தான். அதிக மார்க் வாங்கினால் மாமன் குண்டுக்கட்டாகவேணும் தூக்கிக்கொண்டு எங்கேணும் வேறு கல்லூரியில் சேர்த்துவிடுவான் என்றே படிப்பில் கோட்டை விட்டாள்.
ஊருக்கு அருகிலேயே இருந்த கலைக்கல்லூரியில் பி எஸ் ஸி பாட்டணி எடுத்துக் கொண்டாள். அதுவுமே அவள் மாமன் எம் எஸ் ஸி அக்ரியில் கோல்ட் மெடலிஸ்ட். அவனுடனே ஒட்டித்திரிய அவள் எடுத்துக்கொண்ட படிப்புதான் தாவரவியல்.
அவளது மூச்சு, பேச்சு, செயல் அனைத்திலும் அவளது மாமன் இருப்பான்.
மாமன் என்றால் உயிர். அவளது மாமனுக்கு அவளது உணர்வுகள்தான் உயிர்.
மாமனின் அள்ளிக்கொள்ளத் துடிக்கும் காந்தப் பார்வைப் புரிந்ததோ! “சின்னு" என்றாள் சினுங்கும் குரலில்.
அவள் பார்வை ஒன்றுக்கே இந்தப் பாருலகை அடிமையாக்குபவன் அவள் மாமன். அவள் சினுங்கலில் சிரசையும் அடிமையாக்க சித்தம் கொண்டான்.
கிணற்றின் குளிர்நீர் உரைக்கவில்லை. பாவையின் பனியில் நனைந்த குரலோ பச்சை நரம்பை பன்னீரில் நனைத்தது.
இருந்தும் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் ஆளாயிற்றே அவனது செல்லக் கிறுக்கி.
“சின்னுவுக்கு என்னவாம்" என்றான் அவளின் கண்களுக்குள் ஊடுருவி…
இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம். ஆனாலும் அவளது சின்னு அவனை அசத்தி வீழ்த்தும் ஆயுதம். தெரிந்தே பிரயோகிப்பாள் இராட்சசியும்.
"ஒரே ஒரு உம்மா தர்றீயா ப்ளீஸ்!” என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட கெத்தா நானும் சொல்லணும்" என்றாள் அவனது முகத்தைப் பார்த்துக் கெஞ்சும் குரலில்.
உள்ளெழுந்த சிரிப்பை உதட்டைக் கடித்து அடக்கினான்.
“உன் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்றதுக்காக இந்தச் சின்னுவோட முத்தம் வேணும். இல்லையா?” என்றான் அதட்டும் குரலில்.
மாமன் கோபப்படும்போது மட்டுமே ஒலிக்கும் தொணியில், பாவமாகப் பார்த்தாள்.
நனைந்த கோழிக்குஞ்சொன்று தாய்ப்பறவையை உடல் சூட்டுக்காய் தேடுவது போலிருந்தது அவளது பாவனை.
‘இராட்சசி… இராட்சசி’ மனதில் செல்லமாய் முனுமுனுத்தவன் மேல் படிக்கட்டில் அமர்ந்து தன் அரவணைப்புக்குள் மீண்டும் கொண்டு வந்தான்.
அவளது தலையில் தன் நாடியைக் குற்றி, “இப்போ சொல்லு! உன் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்றதுக்காக இந்த சின்னுவோட முத்தம் வேணுமா? இல்ல உன் மாமனோட உம்மா வேணுமா?" என்றான் அவளை அரவணைப்பில் வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டியபடி…
பேதைக்கு அவன் பொடிவைத்துப் பேசுகிறான் எனப் புரிந்தால் அல்லவோ! ஃப்ரண்ட்ஸ்க்காக என்று கேட்டால் கண்டிப்பாக உதை விழும்.
“என் மாமனோட உம்மாதான் வேணும்" என்றாள் அவசரம் அவசரமாக…
சத்தமிட்டுச் சிரித்தான்.
தாய் அறியாத சூலா? அவன் கைகளில் தவழ்ந்து, வளர்ந்து, மொட்டுவிட்டபோதுங்கூட அச்சத்துடன் மாமனைத்தேடி மார்பில் புகுந்தவளை அவன் அறியமாட்டானா!
அந்தச் செல்லக்கிறுக்கி என்ன சொல்வாள் எனத் தெரிந்தேதானே அவன் அப்படிக் கேட்டதும்…
கோவிலுக்கு என்று நேர்ந்துவிட்டதுபோல் அவனுக்கெனவே நேர்ந்துவிட்டவள் அவனது பைங்கிளி. பிறந்ததுமுதல் அவனுக்கென்றெச் சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டவள்.
கொழுகொம்பில் கொடிபடர தடையேதும் இல்லைதான். இருந்தும் கட்டுப்பாட்டுக்குள் தான் நின்று தன்னவளையும் காத்துநின்றான் அவளது மெய்க்காப்பான்.
உச்சி நெற்றியில் தன் இதழ் ஒற்றி எடுத்தான்.
“போ மாமா! என்னை ஏமாத்திட்ட!
இதைத்தான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து ஏன் உனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து குடுக்கறீயே" மறுத்துச் சிணுங்கினாள்.
"நீ தானடி மாமனோட உம்மா வேணும்ன! உன்னை மீறி நான் என்னைக்காவது செஞ்சிருக்கேனா.
நீ உன் சின்னுவோட முத்தம் கேட்டிருந்தா குடுத்துருப்பேன்" என்று அப்பாவியாய்ச் சிரித்தவனை தன் தளிர் கரங்களால் மொத்தி எடுத்தாள்.
வெண்டைப்பிஞ்சு விரல்கள், வைரம்பாய்ந்த அவனது ஆளுகைக்குள் அடங்கிப்போக, மீண்டும் தன் அரவணைப்புக்குள் கொண்டுவந்தான்.
முன்புபோலவே அவள் தலைமீது தன் நாடிக்குற்றி, சாய்வுநாற்காலியாய் அவள் தோள்மீது படர்ந்து ஆட்டி வைக்க, மோனம் பூசியது அவனின் பொன் மஞ்சள் நிலா.
“அன்பா… அன்புக்குட்டி” என்றான் கிறங்கடிக்கும் குரலில்.
"ம்..ம்..சொல்லு மாமா” என்றாள் இமைகள் மூடி.
மகுடிக்கு மயங்கிய அங்கதமாய் அவள்.
மீண்டும் “அன்பா குட்டி" என்றான். பதில் வரவில்லை. மெல்லச் சிரித்தான்.
அவள் காதோரம் குனிந்து,
“உன் பச்சைத்தாவணிமேல இந்த மாமனோட மஞ்சள் தாலி ஏறட்டும் அன்புக்குட்டி. அப்புறம் பாரு இந்த மாமன் குடுக்கற முத்தத்தை நீ வெளிய சொல்லவே முடியாது" என்றவள் காதில் கிசுகிசுக்க, அதிர்ந்து மோனம் கலைந்தாள்.
அதன் பிறகே அவன் சொன்னதின் உள்ளர்த்தம் விளங்க, “போ மாமா" என வெட்கிச் சிரித்தவள், அவனது நெஞ்சுக்குள்ளவே தன்னைப் பதுக்கிக் கொள்ள, கிணற்றின் இரம்மியத்தை பூபாளமாக்கியது ஆணவனின் சிரிப்புச் சத்தம்.
சின்னா வருவான்...

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.