சின்னா - 13
கோபமாக செருப்பை உதறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சிவச்சாமி.
“ஏய், என்ன உங்க அண்ணனுக்கு கிறுக்கு கிறுக்கு எதும் பிடிச்சித் திரியிறாரா?” உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக, திலகவதியிடம் காய்ந்தார்.
“என்னாச்சிங்க"
சிவச்சாமி அவ்வளவு எளிதில் கோபப்பட மாட்டார். அதில் என்னவோ ஏதோவென பதற்றத்துடன் வந்து நின்றார் திலகவதி.
“நம்ம செந்தூர்பாண்டி அவன் பையனுக்கு பொண்ணு கேட்டதுக்கு பார்ப்போம்னு சொன்னாராம் உங்க அண்ணன். கோட்டிக்காரன்… கோட்டிக்காரன்..."
மச்சானைத் திட்டியவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரே நாட்குறிப்பேட்டின் அருகில் போய் நின்றார்.
“யாருங்க நம்ம பட்டணத்து செந்தூர் பாண்டியா? நம்ம அன்பாவையா பொண்ணு கேட்டாராம்!"
"வேற! உள்ளூர்ல எவனும் எம்புள்ளைய மீறி பொண்ணு கேட்ருவானா?” என்றார் திலகவதியிடம் திரும்பி.
‘தாய்மாமனா உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணுமேன்னுதாம்பா உன்னைய தேடி வந்தேன்னு’ என்கிட்டவே சொல்லுறான் என்றவர் அப்படி சொல்லச்சொன்னதே கருணாகரன்தான் என்று அறிந்திருக்கவில்லை.
அன்பாவின் படிப்பு முடியும் தருவாயிலிருக்க திருமணத்தை துரிதப்படுத்தவே, செந்தூர்பாண்டி மூலம் சிவச்சாமியை தூண்டிவிட்டார் கருணாகரன்.
பின், தானே முதலில் திருமணப்பேச்சை ஆரம்பித்தால் அவர் நினைத்தபடி நிபந்தனை விதிக்க முடியாதே! பின் தந்தையும் மகனையும் வளைப்பது எப்படி?
“அன்பா சின்னாவுக்குதான்னு வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசத்தெரியாதா உங்கண்ணனுக்கு" கருணாகரனின் மீதிருந்த கோபத்தை எல்லாம் மனைவியிடம் கொட்டிக்கொண்டிருந்தார்.
“இந்தா இன்னும் பத்துநாளில் பிள்ளை பரீட்சை முடியுதுல்லா. ஒரு நல்ல நாளா பாரு. போய் பரிசம் போட்டு வந்துருவோம்” என்று நாட்குறிப்பேட்டை மனைவியின் கையில் தர, உள்ளே நுழைந்தான் சின்னா.
தந்தையின் முகம் மாறுபட்டிருக்கவும், ‘என்னவாம்’ என்று தாயிடம் புருவத்தை உயர்த்தினான்.
‘சொல்லாதே’ என்ற செய்தி கணவரின் பார்வையில் இருக்க, சொன்னால் அடுத்த நொடி தன் அண்ணனின்முன்தான் நிற்பான் என்று திலகவதிக்கும் நிச்சயம்.
“அன்பா குட்டிய பொண்ணு பார்க்க நாள் பார்த்துட்டு இருக்கோம் டா! அதான் ஜோசியர கேட்கலாம்னா உங்கப்பா அதெல்லாம் நல்லநாள் பாரு போதும்ங்கிறார்" என்று கையிலிருந்த நாட்குறிப்பைக் காட்டி சமாளித்தார் திலகவதி.
நொடிப்பொழுதில் அந்திமச் சூரியனின் அழகை தன் மகனின் முகத்தில் கண்டார் திலகவதி.
வளர்ந்த ஆண்மகனின் வெட்கம் அவருக்குப் புன்னகையை வரவைத்தது.
தானாக எப்படி தந்தையிடம் ஆரம்பிப்பது என்று அவன் தவித்துக்கொண்டிருந்த விசயமாயிற்றே!
உவகையின் மிகுதியில் காதுவரை படர முயன்ற புன்னகையை இழுத்துப் பிடித்தவன், தந்தையைக் காண தடுமாறினான்.
“ம்ம்…சரி!” யாருக்கு வைத்த விருந்தோ என்பதுபோல் நடித்து ஒற்றை வார்த்தையுடன் அவன் உள்ளே செல்ல,
“அப்போ அப்புறம் பார்ப்போமாடா, என்னவோ வேண்டா வெறுப்பா நெளியுற"
சிரிப்புடன் திலகவதி கேட்கவும், "அம்மா” என்று திரும்பிப் பார்த்து முறைத்தான்.
கெஞ்சலாய், “பேசுங்கம்மா!" என்றவன் அதற்கும் மேல் முடியாது ஓடிவிட்டான்.
முகம் புன்னகையால் விரிய இரண்டிரண்டு படிக்கட்டுக்களாய் தாவி தாவிச் சென்றவனின் உல்லாசத்தை இரசித்திருந்தனர் பெற்றோர்.
“அதுக்கென்னங்கய்யா தாராளமா பண்ணிடலாம். எனக்கு இருக்கறது அவ ஒருத்திதான். என் மொத்தச் சொத்தும் என்மருமவனுக்குதான்.
நான் கேட்கிறத மட்டும் எம்மருமவன் செஞ்சிக்குடுத்துப்புட்டா அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் வாயெல்லாம் பல்லாக கருணாகரன்.
மறுநாளே நல்ல நாளாக இருக்க, ஏற்கனவே முடிச்சிப்போட்ட திருமணமாக இருந்தாலும் முறைப்படி மாப்பிள்ளை வீட்டிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும் என்று ஊரில் இரண்டு பெரியவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு பெண்கேட்டு வந்திருந்தார் சிவச்சாமி.
அன்பாவுக்கு தெரியக்கூடாதென இருவீட்டாரிடமும் கண்டிப்புடன் சொல்லியிருந்தான் சின்னா.
மீதமிருக்கும் பரீட்சையை அவள் எந்தவிதச் சலனமுமின்றி எழுதவேண்டுமென விரும்பினான். அவள் வழக்கம்போல் காலையில் அவனிடம் வம்பிழுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றிருந்தாள்.
‘அப்படி என்ன கேட்டுவிடப்போகிறார்’
சின்னாவின் புருவம் கேள்வியுடன் உயர்ந்தது.
மருமகனின் பார்வையை எதிர்கொள்ள துணிவின்றி சிவச்சாமியை பார்த்தார் கருணாகரன்.
“எம்பேர்ல அந்தக் கிணறை மட்டும் எழுதி வைக்கணும்" என்றார் நிறுத்தி நிதானமாக.
சின்னாவுக்குதான் அன்பா என்று அனைவரின் மனதிலும் பதிந்து போயிருக்க வந்திருந்த யாருமே கருணாகரனின் இந்தக் கோரிக்கையை எதிர்பார்க்கவில்லை. ஏன் மரகதமுமே புரியாமல்தான் நின்றிருந்தார்.
துடுக்குற்ற சிவச்சாமி மகனைத்தான் பார்த்தார்.
இருக்கையை விட்டு படக்கென எழுந்திருந்தான் சின்னா. அவன் எழுந்த வேகத்தில் இருக்கை பின்னால் சாய, அதிர்ந்து எழுந்திருந்தார் திலகவதி.
“முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க மாமா?" நேரடியாக தன் மாமனின் முன் வந்து நின்றான்.
அந்த வயலின் முன்னும் கிணற்றின்முன்னும் அவர் வெறித்து நிற்பதை ஏற்கனவே பலமுறை கண்டிருக்கிறான் சின்னா. இருவரின் பகையும்தான் ஊர் பிரசித்தியாயிற்றே. அவரின் எண்ணத்தை சுலபமாய் கணித்துவிட்டான்.
“எம் பொண்ண தர மாட்டேன்" சுவற்றைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.
முகம் கோவத்தில் சிவக்க, “என்ன பேசறோம்னு தெரிஞ்சிதான் பேசறீங்களா மாமா?” பொறுமையை இழுத்துப் பிடித்து நின்றவனை அடக்கி உட்கார வைத்தார் சிவச்சாமி.
வேட்டைக்குச் சென்ற கருப்பன்னசாமி உறுமி அமர்வதுபோல் அமர்ந்திருந்தவனின் ஒரு கை சிவச்சாமியிடம் சிக்கியிருக்க, மெல்ல அதில் அவர் தட்டிக்கொடுத்தார்.
‘பொறுமையா இரு சாமி’ கண்களால் மகனிடம் வேண்டுதல் வைத்தார்.
“ஏம்பா, சொத்தெல்லாம் மருமகனுக்குங்கிற, அப்புறம் அந்தக் கிணத்த வச்சிக்கிட்டு என்ன பண்ண போற? அதுவும் பொண்ணு பேர்ல கேட்டாலும் பரவால்ல உம் பேர்ல எழுதி வாங்கி என்ன பண்ண போற?” சிவச்சாமி சார்பில் வந்திருந்த பெரியவர் கேட்டார்.
மீண்டும் மகளை நம்பி ஏமாற அவர் தயாராகயில்லை. தங்கையைப் போல் மகளும் கணவன் துதி பாடிவிட்டால்! பாடிவிட்டால் என்ன நிச்சயம் அன்பா சின்னாவை மீறமாட்டாள். ஆகவே தன்பெயரில் எழுதிக் கேட்டார் கருணாகரன்.
“அவர் சொத்து எவனுக்கு வேணும்! எம் பொண்டாட்டி பேர்ல ஆயிரம் சொத்து வாங்கவும் எனக்கு தெம்பிருக்கு. பொண்ண முறைப்படி குடுக்க முடியுமா குடுக்க முடியாதா அதை மட்டும் கேளுங்க மாமா” என்றான் உறுமலுடன்.
மருமகனின் கூற்றில், ‘நீ முறைப்படி குடுக்காவிட்டாலும் எங்கள் திருமணம் நடக்கும்” என்ற குறிப்பிருந்ததை புரிந்துகொண்டார் கருணாகரன்.
இத்தனைவருடத்தில் மருமகனை அறியமாட்டாரா! தெரிந்துதானே துணிந்தது.
ஆனால் மறுமகனை நேருக்குநேர் காணும் துணிவில்லை அவரிடம். சிவச்சாமியிடம்தான் அவர் பார்வை இருந்தது. மெதுவாக ஆரம்பித்தார் கருணாகரன்.
“இங்க சொத்து பிரச்சனையில்ல. நாள பின்ன எம் பொண்ணுக்கு பாதுகாப்பு வேணும்" என்று நிதானித்தவர்.
“இந்த ஊருக்கே தெரியும் எனக்கும் குணசேகரனுக்கும் ஆகாதுன்னு. ஆனா எம்மச்சான் குடும்பம் ஒன்னு மண்ணா பழகுறாங்க. நாள பின்ன விருந்து அது இதுன்னு எம்பொண்ணு அங்க போக வர இருந்தா அது சரிப்பட்டு வராது.
அந்தக் கிணறுதான் அவன் வயலுக்கு உசுறு. எம் பொண்ணு தடுத்துப்புடுவாளோன்னு பயந்து சோத்துல எதும் கலந்து குடுத்துட்டா… எனக்கு உத்திரவாதம் வேணும். அதுக்குதான் எம்பேர்ல எழுதிக் கேட்கேன்” என்றார் கருணாகரன் அழகான கதையாக ஜோடித்து.
“என்னண்ணே பேசுறீங்க? அவ அங்க போக வரத்தான்…” என்ற தாயை
"அம்மா" என்று அடக்கினான் சின்னா.
ஒன்றும் பேசவில்லை சிவச்சாமி. இது அவர் ஆரம்பித்த கணக்குக்கான விகுதி என்பது அவருக்கு புரிந்தது. மகனின் கையை மட்டும் விட்டுவிட்டார்.
மற்றொரு நேரமாயிருந்தால், மகனுக்குமுன் குடலை உருவி மாலையாகப் போட்டிருப்பார். ஆனால் இதில் தன் மகனின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறதே! அவன் என்ன நினைக்கிறான் என்பது முதலில் அவருக்கு தெரிந்தாக வேண்டும்.
“இப்போ என்ன சொல்ல வர்றீங்க மாமா. சுத்தி வளைக்காம நேரடியா விசயத்துக்கு வாங்க" என்று எழுந்து நின்றான் சின்னா.
அவர் ஜோடிக்கும் கதைகளை அவன் நம்பத் தயாராகயில்லை.
"சொல்ல என்ன இருக்கு மருமவனே, என் முடிவு இதான்!” என்றார் எங்கோ பார்த்து.
"ஏன் இது, இவதான் உன் பொண்டாட்டின்னு உங்க மவள என் மடியில தூக்கிக்கொண்டு போடையில தெரியலையோ?” என்றான் ஆவேசம் வந்தவனாய்.
“அது சின்னதுல ஊர்ல எல்லாரும் பேசறதுதான்” என்றார் ஒன்றும் அறியாததுபோல்.
“சின்னதுல இருந்தா போலவா இப்போ இருக்காங்க" என்றும் சேர்த்துச் சொல்ல,
“நேரடியா பேசச் சொன்னேன்" என்றவனின் தொணி மாறியிருந்தது. மாமா என்ற விளிப்பைக் கைவிட்டிருந்தான்.
“அன்னைக்கு மனோ புள்ளைய பார்க்க வந்த மாப்பிள்ளைய ஏன் விரட்டிவிட்ட மருமவனே! ஊருக்கே கேட்க மைக்ல ஐ லவ் யூ சொல்லிச்சாமே! அதுக்கா? இதுல யாரை நம்பணும்” என்றார் கருணாகரனும் ஆவேசமாய்.
இந்தச்செய்தி அங்கிருந்த அனைவருக்குமே புதிது. மாப்பிள்ளை வீட்டார் ஏதோ சொல்லி வரவில்லை என்பதை மட்டுமே அறிந்திருந்தனர். ஆனால் அதன் காரணகர்த்தா சின்னாவாக இருப்பான் என எதிர்பாராததில் ஒருவரும் வாய்திறக்கவில்லை. மாமனும் மருமகனுமே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.
“அது என் சொந்த விசயம்" என்றவன் அதைப்பற்றி மூச்சுவிட விரும்பவில்லை. தந்தையை மட்டும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
“எதுப்பா சொந்த விசயம். வயசுப்புள்ளைக்கு வந்த மாப்பிள்ளைய கெடுத்து விட்டுட்டு என் புள்ளைய பொண்ணு கேட்கிறது எப்படி சொந்த விசயமாகும்" என்றார் அவரும்.
“அதுக்கும் இதுக்கும் என்ன மாமா சம்மந்தம்" என்றான் குரலை தழைத்து. அவனின் பொறுமையும் பறந்து கொண்டிருக்க, தன்னை இன்னொரு பெண்ணுடன் பேசுவதையே விரும்பாதவன், கடைசி முயற்சியாக தன் மாமனிடம் சொந்தம் கொண்டாடினான்.
“எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு, அவ வாழ்க்கை எனக்கு முக்கியம். ஊரே உன்ன ரோமியோன்னு கொண்டாடுது. உம் புடி என் கைல இருக்கணும். அதுக்கு இதான் ஒரே வழி.
என் முடிவுல எந்த மாற்றமுமில்ல. முடியாதுன்னா நான் வேற பார்த்துக்கிறேன்” என்றவர் முடிக்கும்முன் கொதித்தெழுந்தான்.
“வேறன்னா… என்ன பார்ப்பீரு!” எகிறிக்கொண்டு சென்றவனை ஊராரும் திலகவதியும் தாவி பிடித்துக்கொண்டனர்
“இன்னுமா’ ண்ணா மனசுல வஞ்சத்த வச்சிருக்கீங்க. அன்னைக்கு நீங்க சொல்லும்போதுகூட நான் பெருசா எடுக்கலையே" என்றார் திலகவதி.
"முடிஞ்சா வேற பாரும்! என்னை மீறி எவன் தாலி கட்டுறான்னு நானும் பார்க்கிறேன்"
மரியாதையை சுத்தமாக கை விட்ட சின்னா, தன் மாமனின் வெகு அருகில் நெருங்கி தன் முகத்தை நேருக்கு நேராய் பார்க்கச் செய்திருந்தான்.
“அடுத்த முகூர்த்தத்துல உன் பொண்ணு கழுத்துல என் தாலி ஏறும்! உம்மால என்ன முடியுமோ பார்த்துக்கிடும்”
வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவர் முகத்திற்கு நேராய் சவால்விட்டான்.
அதுவரை ஒன்றும் பேசாமல் கணவரின் பேச்சில் அரண்டு நின்றிருந்த தன் அத்தையை ஒரு பார்வை பார்த்தவன், “வாங்கம்மா போலாம்" என்று படியிறங்க, சிவச்சாமியும் எழுந்து கொண்டார்.
கருணாகரனிடம் தங்கையின் குரல் எடுபடாதென்று அறிந்தே இருந்தார் சிவச்சாமி. மணமுடித்தது முதல் தாய்வீடென்று இரண்டுநாள்கூட தங்கி சீராட விட்டதில்லை கருணாகரன். கூடவேயிருந்து அழைத்துச் சென்று விடுவார். அதைப் பாசம் என்று மரகதம்தான் அர்த்தம் கொள்வார். சிவச்சாமிக்கு அதில் உறுத்தல் இருந்தாலும் தங்கையைக் குழப்ப விரும்பியதில்லை.
ஆனால் இந்த வஞ்சம்!
"எதை மனசுல வச்சிட்டு இப்படில்லாம் பேசுருறீர்னு தெரியும் மச்சான். எம்புள்ள எப்படிப்பட்டவன்னு எனக்கும் தெரியும் ஏன் உமக்கும் தெரியும். நீரு நினைக்கறது மட்டும் ஒருநாளும் நடக்காது” என்றார் சிவச்சாமி. மகனின் முடிவு உறுதியாய் தெரிந்துவிட்டதில்.
படி இறங்கிய சின்னா திரும்பி வந்து, “இங்க நடந்தது எதுவும் எம் பொஞ்சாதிக்கு தெரிஞ்சுது… இங்க நடக்கறதே வேற!” என்றான் குறிப்பாய் தன் அத்தையைப் பார்த்து.
பொஞ்சாதி என்றதில் வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்து தன் மாமனையும் பரிகாசமாய் பார்த்திருந்தான்.
‘நீ அடிக்கடி என்கிட்ட சொன்ன அதே வார்த்தைதான் மாமா’ என்ற எள்ளல் பார்வை அது.
“அவ எக்ஸாம் முடியிற வரைக்கும் மூச்சு விடக்கூடாது” என்று தன் அத்தை மாமனிடம் மிரட்டி விட்டு இறங்கியவன், அதேப் பார்வையுடன் தந்தைத் தாயையும் எச்சரித்தான்.
சொல்லி எச்சரித்திருக்க வேண்டுமோ! என்று அவன் வருந்திய நாளும் வந்தது.
சின்னா வருவான்...

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.