சின்னா - 16
தான் மகள் வாழ்வில் ஏற்படுத்திவிட்ட அநர்த்தங்களைக் கேட்டதும், இதயம் தற்காலிகமாய் செயலிழந்திருக்க, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் நேராக மகளின் காலடியில்தான் விழுந்திருந்தார் கருணாகரன். திரும்பியும் பார்க்கவில்லை அவள்.
அவர் ஆபத்துகட்டத்தை தாண்டிவிட்டதை மட்டும் தன் மாமனிடம் கேட்டு அறிந்துகொண்டாளே தவிர நேரில் செல்லவில்லை. அதிலேயே அவர் உடைந்திருந்தார்.
“அப்பா என்ன செஞ்சிடா உன் வாழ்க்கைய திருத்தப்போறேன்…” முதல்முறை மகளின் பாராமுகம் வலிக்க அடிக்க, பொறுக்க மாட்டாமல் கதறினார். சின்னாவும் அங்குதான் இருந்தான்.
தந்தையின் கேள்விக்கு தன் மாமனிடம் திரும்பினாள்.
“மாமா, எனக்கு டைவர்ஸ் வாங்கி தர்றீயா! அவன் பொண்டாட்டிங்கிற அடையாளத்தோட இருக்கறதே எனக்கு அருவெறுப்பா இருக்கு" என்றாள்.
சின்னா அர்த்தமாய் தன் நண்பன் பாண்டியை பார்க்க, நண்பனை இறக்கிவிட வந்தவனின் கைகளில் புல்லட் உறுமியது.
அடுத்த ஒருமணிநேரத்தில் கையெழுத்திட்ட விவாகரத்து பத்திரத்துடன் வந்தான் பாண்டி.
“கவலை படாதடா. நடக்கவே ஆறுமாசமாகும், கோர்ட்டுக்கு கூட அவனால எந்திரிச்சி வரமுடியாது. விசாரணைக்கும்கூட நம்ம பாப்பா அவன் முகத்துல முழிக்க வேண்டி வராது” என்றான் சின்னாவின் தோள் தட்டி.
சொல்லாமலே புரிந்துகொண்டு செய்துகாட்டிய நண்பனை நன்றியுடன் பார்த்தான் சின்னா.
பின், அவள்தான் தந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்தவனிடம், “அந்த சாக்கடைமேல உன் கை படக்கூடாது மாமா" என்று சத்தியம் வாங்கியிருந்தாளே! அவன் கை வைத்தால் உயிரும்கூட மிஞ்சுமா என்று பயம் கொண்டாள்.
மரகதம்தான், நாட்கள் கடக்க, “ஆம்பிள்ளைன்னா அப்படி இப்படித்தான்" என்று ஆரம்பித்தவர் சின்னாவின் கோபப்பார்வையில் அடுத்துப் பேசவில்லை.
“இப்பவாச்சும் அவ விருப்பத்தை கேட்டு முடிவு பண்ணுங்க புரிஞ்சிதா!” என்று கண்டிப்புப் பார்வை பார்த்தான்.
“அவ விருப்பப்பட்டா போகட்…”
அதற்குமேல் வார்த்தை வராமல் தடுமாறினான்.
இந்த சமூகத்துக்கு பயந்து அப்படி கேடுகெட்டவனுடன் அவள் வாழ்ந்துதான் தீர வேண்டுமா? அப்படியா முதுகெலும்பற்று வளர்த்தேன்? மனம் கனத்தது.
தன் அத்தை மகளைப் பார்த்தான். அந்த கண்கள் ஒளியற்று எங்கோ வெறித்திருந்தது.
கடந்த நாட்களில் சின்னாவை தவிர்த்து யாரிடமும் பேசுவதில்லை அவள். கருணாகரன் அவள் முகம் பார்த்து பார்த்து நிற்பார். மரகதத்திற்காவது பத்து கேள்விகளில் ஒரு கேள்விக்கு ‘ம்ம்’ என தலையசைப்பவள் கருணாகரனின் முகத்தைக்கூட பார்ப்பதில்லை.
ஒரு பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “அப்படி அவ விருப்பப் பட்டா இனி அவ வாழ்க்கையில் என் தலையீடு இருக்கும். அவன் கால உடைச்சின்னாலும் அவ காலடியில போட்டு இரண்டுபேருக்கும் சேர்த்தே கஞ்சி ஊத்திட்டுப் போறேன்" என்றவன் திரும்பிப் பாராமல் நடந்தான்.
“அவ்ளோ சோரம்போயா என்னை வளர்த்து வச்சிருக்க மாமா” என்று கேட்டவளில் அவன் கால்கள் தானாக நிற்க, மெலிதாகப் புன்னகைத்தான்.
"அவனோட வாழவைக்கிறதுக்கு பதிலா என் சோத்துல நீயே விஷத்தை கலந்து குடுத்திடு மாமா" என்றாள் அவள்.
அதற்குமேல் சற்றும் தாமதிக்கவில்லை அவன். சொன்னதுபோலவே இரண்டு தரப்பு வக்கீல்கள் மூலமாகவே பேசிமுடித்து அடுத்த ஆறுமாதங்களில் சட்டப்படியும் அவளை விடுதலைச் செய்துவிட்டே ஓய்ந்தான் சின்னா!
யாரிடமும் எந்த மாற்றமுமின்றி நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடியது.
சின்னா வீட்டிற்குள் நுழைந்தபோது இருட்டாய் இருந்தது.
‘விளக்குகூட வைக்காம எங்க போய்ட்டாங்க’ என்று மரகதத்தை தேடியவனும் அவரை அத்தை என்றழைத்து ஒன்னரை வருடங்கள் கடந்திருந்தது.
வீட்டின் ஒரு மூலையில் அன்பிலரசி சுருண்டிருக்க மற்றொரு மூலையில் கருணாகரன் சுருண்டிருந்தார். கிணறு சொத்து என்று அடித்துக்கொண்டவருக்கு தன் சொந்த நிலங்கூட நினைவில் இல்லை. அதையும் சின்னாதான் பார்த்துக் கொள்கிறான்.
மகளின் பாராமுகம் அவரை மௌனமாக்கியிருக்க அதற்கு நேர்மாறாக மாறியிருந்தார் மரகதம். கணவன் வாக்கே வேத வாக்கென்றிருந்தவர் கணவரை வார்த்தையால் வதைத்தெடுப்பதையே வரமாகக் கொண்டார்.
பெற்ற மகள் வீட்டிலிருந்தும் கணவர் அருகிலிருந்தும் மனசு விட்டுப்பேச ஆளில்லாமல் ஆதங்கத்தை தனக்குத்தானே புலம்பி புலம்பி ஒரு கட்டத்தில் அதன் காரணகர்த்தாவான கருணாகரனிடத்தில் முடிந்திருந்தது.
“என்ன அன்பாகுட்டி விளக்குகூட வைக்காம" என்றவன், அவளிருந்த கோலத்தில், “ஐய்ய…குளிக்கக்கூட இல்லை புளிமூட்ட புளிமூட்ட” என்று அவளது மூக்கைக் கிள்ளவும்தான் சிணுங்கிக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.
“இந்த வீட்ல ஒருநாள் நான் இல்லைன்னாதான் எழவுவீடாயிருமே! விதிய நொந்து கோவிலுக்கு போய்ட்டு வரமுடியுதா!" உள்நுழைந்த மரகதம் திட்டிக்கொண்டே விளக்கைப் போட்டார்.
இவனிருப்பதைக் கண்டதும், “நேரமாச்சேன்னு கொதிக்க வச்ச தண்ணிய விளாவி வைக்க மறந்துட்டேன். குளிக்காம கிடக்கா" என்றவரை கண்டுகொள்ளவில்லை அவன்.
வெளி அடுப்பின் தணலில் இன்னும் நீர் கதகதவென்றே இருக்க, அதை அவள் குளிக்க ஏதுவாக ஊத்திவைத்தவன் அவளை திட்டி அனுப்பி வைத்தான்.
தன்னைத்தானே கவனித்து கொள்வதில்லை என ஒருநாள் அவன் அதட்டியிருக்க ‘நான் குளிச்சிட்டு பளிச்சின்னு இருந்தாலே அவனுக்கு பொறுக்காது மாமா’ என்று தன்னிலை மறந்து உளறியிருந்தாள்.
அந்த பயம் இன்னும் அவள் மனதிலிருப்பதை புரிந்துகொண்டவன் என்னென்னவோ தேற்றி பார்த்துவிட்டான்தான். ஆனால் அவள் தேறுவதாக இல்லை.
எந்நேரமும் சூன்யத்தில் மூழ்கிக்கிடப்பவளை தேற்றும் வழிதெரியாது திகைத்துக் கொண்டிருக்கிறான்.
மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். மாற்றம் தேவை என்றார். உள்ளே நீர் விழும் சத்தம் கேட்டது. அங்கேயேதான் அமர்ந்திருந்தான்.
அது எழுதப்படாதச் சட்டம்.
அவள் பின்னங்கட்டில் குளித்து வரும்வரை அவனோ இல்லை தாயோ அங்கேயே இருக்க வேண்டும், இல்லையெனில் குளிக்கச் செல்ல மாட்டாள்.
தனிமையில் இருக்கவே பயங்கொண்டாள். மகளுக்காகவே, கருணாகரன் தன் இருப்பை வீட்டோடு முடக்கிக்கொண்டாரோ என்றும் தோன்றும்.
‘கண்ணை விற்றபின் கதிரவனின் காட்சியைத் தேடி என்ன பயன்’ விரக்தியாய் சிரித்தான்.
அவனும் எங்கெங்கோ அழைத்துப் பார்த்துவிட்டான். படியைத் தாண்டி வரமாட்டேனென்று நின்றாள்.
மரகதத்தோடு கோவிலுக்காவது போ என்றான். அதற்கும் இசைய மறுத்தாள். அவர்கள் காதலில் மூழ்கித்திளைத்த ஒருகாலத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த கிணற்றடியில் குளித்து வரலாம் வா என்றான். கையெடுத்துக் கும்பிட்டாள்.
அவளின் ஒவ்வொரு தருணத்திலும் கூட நின்றவன், அன்று மட்டும் ஏன் கூட நில்லாது போனேன் என்று அவன் துடிக்காத நாளே இல்லை. அன்று எப்படியெல்லாம் என்னைத் தேடி தவித்தாளோ என் கண்மணி! தைரியமாய் துள்ளித் திரிந்தவளை இந்த நிலையில் பார்க்கவா! இதயம் கனக்க அமர்ந்திருந்தான்.
அவனது தோட்டத்துடன் சேர்த்து மாமனது தோட்டத்தையும் இல்லையில்லை அது இப்போது அவனது அன்பிலரசியின் தோட்டம். திருமணத்தின்போது அவள் பெயரில் மாற்றியிருந்தார். இரண்டையும் சேர்த்து பார்த்துக்கொள்வதால் வேலைப்பளுவேறு கூடியிருக்க, இங்கே அவ்வப்போது வந்துபோகவும் முடியவில்லை.
இவன் வந்தால் மட்டுமே உயிர்ப்புடன் நடமாடுபவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? மாற்றம் எங்கிருந்து வரும்! இருட்டோடு இருட்டாய் ஒருநாள் கரைந்தே போவாள்.
நீர்விழும் ஓசை நின்றிருக்க, ஒரு முடிவுடன் எழுந்து கூடத்திற்குச் சென்றான்.
“அன்பா இனி என்கூடதான் இருப்பா, என் மனைவியா" என்றான் அறிவிப்பாய்.
எழுந்தமர்ந்த கருணாகரன்
வெகுநாட்கள் கடந்து தன் மருமகனை நேருக்கு நேராய் கண்டார். துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டவர் மாதங்கள் கடந்து வீட்டைவிட்டு வெளியேற, அவரது கால்கள் கோவிலிருக்கும் திசைப்பக்கம் எட்டி நடையைப் போட்டது.
மரகதம் கண்களில் ஒளி தெரிந்தாலும், ஊர் என்ன சொல்லுமோ என்ற பயமும் அவரில் அப்பட்டமாய்.
உடைமாற்றி வெளிவந்திருந்தவளின் காதிலும் சின்னா சொன்னது விழுந்திருந்தது. விழட்டும் என்றுதானே அவள் வெளிவரும் நொடியில் சொல்லியிருந்தான்.
எந்த மாற்றமுமின்றி, “ஏன் மாமா எழுந்து வந்த?” என்று கடிந்தவள், “பசிக்குது மாமா” என்றாள்.
மரகதம் தட்டில் இட்லியும் சொம்பில் தண்ணீரும் கொண்டு வைத்தார். அவள் சாப்பிடத் தொடங்க,
“இதுக்காகத்தான் இவ புருஷன விட்டுட்டு வந்தான்னு ஊர் பேசவா” என்று மரகதம் முடிக்கும்முன் அன்பாவின் அருகிலிந்த சொம்புத் தண்ணீர் சுவற்றில் பட்டு தரையில் உருண்டது. ருத்ரனே உருவாய் நின்றிருந்தான் சின்னா.
“ஊரா வந்து இவ வாழ்ந்து பார்த்த வாழ்க்கைய வாழ்ந்துச்சி! என்னைப் பத்தி அவளுக்கு தெரியும். அவளைப் பத்தி எனக்கு தெரியும். அது போதும்! வேறயாருக்கும் இங்க கருத்து சொல்ல உரிமையில்லை" என்றான் எச்சரித்து. அப்போதும் அவள் ஒன்றும் பேசவில்லை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் செய்கை வித்தியாசமாகப் பட, “அன்பா" என்றான் கேள்வியாக.
“சொல்லு மாமா" என்றாள்.
“மாமா, நம்ம கல்யாணத்தப் பத்தி…”
"உன் முடிவச் சொன்ன" அவனுக்கு முன்பே முடித்து வைத்தாள்.
விரல்கள் தட்டில் மீதமிருந்த சட்னியில் அலைந்து கொண்டிருந்தது.
“விருப்பத்த கேட்டு செய்ங்கன்னு சொன்ன நீயே என் விருப்பத்த கேட்கலையே மாமா” என்றாள். அதிர்ந்தான்.
தன் அன்பாவுக்கு தன்னைத் தவிர வேறு விருப்பம் இருக்க முடியுமா? அவளுக்கு அவன்தானே உலகம். அந்த தைரியத்தில்தானே அவன் முடிவெடுத்தது. தன் அன்பாகுட்டி தன்னை மறுக்குமா? அவளை காதலிக்க ஆரம்பித்த இத்தனை வருடங்களில் இல்லாத படபடப்பு அவனிடம்.
“சரி! இப்போ கேட்கிறேன் சொல்லு" என்றான், இதயத்தை இறுக்கிப் பிடித்து.
“என்னைய இப்படியே விட்ரு மாமா. எனக்கு இதுதான் புடிச்சிருக்கு" கையைக் கழுவியவள், அவனை அருகில் இழுத்து அவன் சட்டையின் கைப்பகுதியில் வாயை துடைத்தாள்.
அவளின் செய்கையில் இதயம் மீண்டது. மென்னகையும் கூட! பழைய பழக்கங்கள் எதுவும் மாறிவிடாதபோது தன் அன்பா மட்டும் எப்படி மாறிவிடுவாள்?
“இப்படியேன்னா எப்படி? உன்னையே கவனிச்சிக்காம, இருக்கவங்களையும் கஷ்டப்படுத்தி நீயும் கஷ்டப்படுறதா”
“அப்படித்தான்" என்றவள், "தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனைன்னு வேண்டாமா” என்றவள் மரகதத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து செல்ல பார்க்க இழுத்து நிறுத்தினான்.
“மாமாவ மறுக்க வேற எதாவது காரணம் இருக்கா?" நேருக்கு நேர் விழியூடுறுவினான். அவனது பார்வையை தவிர்த்தாள்.
“ஒரு கதை சொல்லட்டா மாமா" என்றவள் அவன் பதிலை எதிர்பாரவில்லை.
"கோவில் வளாகத்துல சாமிக்கு படைக்கன்னே ஒருத்தன் பார்த்து பார்த்து பூச்செடி வளர்த்து வந்தானாம். அது பூக்கற நேரம் கோவில்ல திருடவந்த ஒருத்தன் அந்த பூக்களையும் சேர்த்து திருடிட்டு போய்ட்டானாம்…
திருடு போன பூ திரும்ப திருவடியை சேராது மாமா” என்றவள் விலகிச் செல்ல,
“என்ன சொல்ல வர்ற நேரா சொல்லு" என்றவனில் ஆதவனின் அக்னி ஆதிக்கம்.
"எச்சில் இலையில் சாப்பிட ஆசைப்படாத மாமா”என்ற நொடி அவள் கன்னம் திசை திரும்பியது. செம்பிழம்பாய் நின்றிருந்தான்.
விட்டால் மரகதத்திற்கே விவாகரத்து வாங்கித்தந்து மறுவிவாகம் செய்து வைப்பான். அவனிடம் போய்.. அதுவும் அவள் பேசலாமா! நன்றாக வாங்கி கட்டிக்கொண்டாள்.
விவரம் தெரிந்து முதல் முறை கைநீட்டி அறைந்திருக்கிறான்.
கண்ணீர் கரை தாண்ட, “உனக்கு பொண்ணு பார்க்க கூப்புடுறீயா சொல்லு! சீவி சிங்காரிச்சு கூட வர்றேன்! இல்ல என்னை இப்படியே விட்ரு" என்றவளும் அசராது நின்றாள்.
"வேற காரணம் இல்லையே?" என்றதும் தன் மாமன் அடிப்பானா என்ற அதிர்வில் நின்றவளின் தலை தானாக மறுத்து ஆட,
அடித்துவிட்டோமே என்ற ஆதங்கத்திலிருந்தவனில் புன்னகை மலர துடித்தது. அடக்கி மீண்டும் கோப அரிதாரம் தரித்தான்.
“பொண்ணு பார்க்கதான.. சீவி முடிச்சி தயாரா இரு நாளைக்கு வர்றேன்" என்று எரித்துவிட்டுப் போனவன் மறுநாள் தாய்தந்தையுடன் வந்து திருமண தேதியை நிச்சயித்துவிட்டே சென்றான்.
இடைப்பட்ட நாட்களில் அதே சொல்லில் மாறாமல் நின்றாள் அவள். அவனும் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி என அவளின் அந்த எண்ணத்தை விரட்டியடிக்க முயன்றான்.
“இங்க பாரு அன்பாகுட்டி! நீ சொன்ன கதையே தப்பு தெரியுமா!" என்றவனை அவள் புதிராய் பார்க்க,
“அந்த ஆண்டவனே சூடிக்கொடுத்த மலர்மாலையைத்தான் விரும்பி ஏத்துக்கிட்டான் டி” என்று சிரித்தவனை " போ மாமா”என முதுகில் அடித்தாள்.
"தெய்வமும் மனுஷங்களும் ஒன்னா?” என்றாள். "திருமாலை மணக்கவே மனுஷனா பிறப்பெடுத்தாள் கோதை நாச்சியார்" என்றாள் விடாமல்.
"உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக என்னால இன்னொரு ஜென்மம்லாம் எடுக்க முடியாது டி!” என்றவனோ,
"நீதான் எனக்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து திரும்ப என்கிட்ட வந்திருக்க” என்று அவளின் வாயை அடைத்தான்.
திருமணநாளும் வந்தது. மறுநாள் திருமணம் என்றிருக்க வயிற்று வலியால் அவதிப்பட்டாள். இரண்டு முறை கருக்கலைந்ததில் இருந்தே மாதவிடாய் காலங்களில் அதிக அவதிப்பட்டாள். கூட்டிக்கொண்டு காட்டினான். தவறான மருந்தின் விளைவு என்றார் மருத்துவர்.
கடந்தவாரம்தான் அவளது மாதவிடாயின் போது முழுபரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தார் மருத்துவர். திரும்பவும் வயிறுவலி எனவும் திருமணவேலை நெட்டித்தள்ள, அவளைக் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி மரகதத்துடன் அனுப்பிவைத்தான்.
அன்றுதான் அவன் அவளை கடைசியாகக் கண்டது.
“திரும்ப அவங்க வரவே இல்லையா” கேட்டது மணிகண்டன்தான்.
அரவிந்தன் பெரியாத்தா அனைவரும் அதே கேள்வியுடன் பார்க்க, உதடுபிதுக்கினார் சண்முகவேல்.
“விடிஞ்சா கல்யாணம்! ‘என்னைத் தேடாதே மாமா! தேட முயற்சி பண்ணினாகூட உலகத்தை விட்டே போய்டுவேன்னு’ எழுதி வச்சிருந்தா என்று பெருமூச்சு விட்டவரோ,
“கூடவே, ‘கவலைப்படாத மாமா, உன் அன்பா சாகமாட்டேன் இந்த அன்பாவோட உயிர் என் சின்னு மடியிலதான்’னும் எழுதி வச்சிருந்தா.
அந்தக் கடைசிவரிதான் அவன் உயிர புடிச்சி நிறுத்தி நடமாட வைக்கும்னு தெரிஞ்சிதான் எழுதினாளோ என்னவோ” என்றவர் மனைவியை அழைத்துக்கொண்டு வீடு திரும்ப, அனைவரின் உள்ளமும் கனத்துக் கிடந்தது.
சின்னா வருவான்...

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.