செம்புலம் 29
தேனூர்:
சேகரின் முகம் இன்று தாமரை மலராய் விரிந்திருந்தது. காரணம், அவன் உயிர் மூச்சாய் வளர்த்த அவனது தங்கையின் மகள் கயல், இன்று தன் கணவனுடனும், கைக்குழந்தையுடனும் கிராமத்திற்கு வருகிறாள்.
சேகர் தனது தங்கையின் வீட்டை சும்மா விடவில்லை. வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி, வண்ண வண்ண மின் விளக்குகளால் வீட்டை ஜெகஜோதியாக அலங்கரித்திருந்தான்.
நேற்றிலிருந்து ஊர் மக்களும் எதுக்கு இப்படி அலங்காரப் பண்ற சேகரு, கதிருக்கு கல்யாணமா இல்ல கயலுக்கு கல்யாணமா என்று கேட்க அவர்களுக்கு ஒரு சிரிப்பை மட்டுமே சேகரும் பதிலாக கொடுத்தார்.
மேள சத்தம் கேட்டு கிராமத்து மக்கள் அனைவரும் மணியின் வீட்டு வாசலில் கூடினர். அப்போது ஒரு கார் வந்து நிற்க,குழந்தையைத் தூக்கிக்கொண்டு கயல் இறங்கினாள். அவளுக்குப் பின்னால் சிரித்த முகத்துடன் பாரி இறங்கி வந்தான்.
இதைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது. ஊர் மக்களின் கண்களில் ஆச்சரியம் கலந்த அதிர்சியும்!,"என்னது? கயலுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?.
"அதுக்குள்ள குழந்தையே பிறந்துடுச்சா?”.
நமக்கு ஒரு வார்த்தை சொல்லலையே?" என ஆளாளுக்கு மெல்லிய குரலில் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
ஊர் மக்களின் பார்வையை சேகர் கவனிக்காமல் இல்லை.
சிரித்துக்கொண்டே முன்னே வந்தவர், "வாங்கம்மா வாங்க... என் செல்லமே வா!" என்றவர் கலா என்கவும், இதோ மாமாயென்று முகம் கொள்ளா புன்னகையோடு ஆரத்தி தட்டை எடுத்து வந்தவர் குடும்பமாய் நிற்பவர்களுக்கு மூன்று சுற்று சுற்றி நெற்றியில் பொட்டு வைக்கவும் கலாவுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
பின்னர் தங்கள் ஊர் மக்களின் அதிர்ச்சியைப் பார்த்த சேகர், " தவிர்க்க முடியாத சூழலில் கயலுடைய கல்யாணம் சிம்பிளா முடிஞ்சுவிட்டது. ஊருக்கே பெரிய விருந்து வைக்கணும்னுதான் இப்போ குழந்தையோட வரவழைச்சிருக்கேன். எல்லாருக்கும் நம்ம வீட்டுலதான் சாப்பாடு!" என்று உரக்கச் சொன்னான்.
தன் அண்ணன் சேகர் செய்திருந்த அந்த வரவேற்பைப் பார்த்த வள்ளிக்கு இதயம் கனத்தது. கயலும் தன் கையில் இருந்த குழந்தையை அணைத்தபடி விம்மி அழுதாள்.
அவர்கள் அழுவதைக் கண்டதும் சேகரின் நெஞ்சு பதற,தனது ஒரு தோளில் தன் தங்கை வள்ளியையும், மறுதோளில் தங்கை மகள் கயலையும் அப்படியே பாசத்தோடு அணைத்துக்கொண்டவன் "ஏன் அழுறீங்க? இது சந்தோஷப்பட வேண்டிய நேரம் இல்லையா? இதோ பாரு வள்ளி, நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உன் கண்ணுல ஒரு துளி கண்ணீர் வர நான் விடமாட்டேன். நம்ம வீட்டுப் பொண்ணு கயல், குடும்பமாக வந்திருக்கா. இந்த சந்தோஷத்துல எதுக்கு அந்தப் பழைய நினைப்பு?" என்று தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, கயலின் தலையை வருடிக்கொடுத்தான்.
"சேகர் மாதிரி ஒரு அண்ணன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்" என்று அந்தப் பாசத்தைக் கண்டு மற்றவர்கள் நெகிழ்ந்து நின்றனர்.
கலா என்ன வேடிக்கை பார்த்துட்டே இருக்க சம்மந்தி வீட்டினரை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போ என்றவர் வாங்க என்று ராஜவேலு பானுமதியை பார்த்து கையைக்கூப்ப அவர்களும் கைகூப்பி வணக்கம் சொல்லிக்கொண்டு அந்த பெரிய வீட்டிற்குள் போனார்கள்.
ஊர் மக்கள் அனைவருக்கும் பந்தலில் வாழை இலை போட்டு கமகமக்கும் கிராமத்து விருந்து பரிமாறப்பட்டது. சேகர் ஓடி ஓடி எல்லாருக்கும் பரிமாற, தனது ரூமில் இருக்கும் ஜன்னல் வழியாக இதை பார்த்து கயல், தனது மாமனின் அன்பில் பெருமிதம் கொண்டாள்.
கடைசியாக தங்கையின் அருகில் வந்து உட்கார்ந்த சேகர் "வள்ளி, இப்போ சந்தோஷமா? இந்த ஊரே நம்ம கயலையும் அவள் குழந்தையையும் வாழ்த்துறதைப் பார்க்கும்போது என் மனசு நிறைஞ்சிடுச்சு" என்கவும், “நீ இருக்குற வரைக்கும் எங்களுக்கு ஒரு குறையும் இல்லைண்ணே" என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்“.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாரி வீட்டினருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தவறை சரி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டனர்.
எல்லாரும் இங்கு இருக்கும்போது எங்கு அத்தையை காணோம் என்று வள்ளியை கேட்க காலையிலிருந்து அத்தை பேச்சிக்கோயில் தான் இருக்கு. கயல் வந்த பிறகுதான் வருவேன்னு அவ்வளவு பிடிவாதம். மாறனை அனுப்பி இருக்கிறேன் என்று சேகர் சொல்லும் வெளியே கார் சத்தம் கேட்டது.
ஆத்தா என்றவாறு உள்ளே வந்த மரகதம் பாட்டி தனது பேத்தியை தேட, கயல் அவர் ரூம்ல தான் இருக்கிறா சித்தி என்று கலா சொல்லவும் தாயி என்றவாறு வந்தவர் தனது பேத்தியை கட்டிக்கொண்டு அழுதார்.
அவளும் அப்பாயி என்று அழுக, நீ கண்ணீர் வடித்தது போதும். அந்த ஆத்தா புண்ணியத்துல எல்லாம் நல்லதே நடக்கும் என்று தனது முந்தானையில் சொருவி இருந்த விபூதி குங்குமத்தை எடுத்து தனது பேத்தி நெற்றியில் பூசி விட்டவர் எங்கே என் பேரப்பிள்ளை காட்டு என்கவும், அங்கே குழந்தை பெட்டில் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்து கிட்ட போய் பார்த்தவர் என் சாமி உங்களால தான் என் பேத்தி வாழ்க்கை சிறக்கணும் போல...அதுக்கு தான் அந்த பேச்சி உங்களை அனுப்பி வெச்சாங்களா என்று குழந்தையை அள்ளி தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தோடியது.
நேரமும் கடந்து செல்ல நாங்கள் வரோம் சம்பந்தி என்று ராஜவேலு பானுமதி அங்கிருந்து புறப்பட்டனர். பாரியோ தன் மனைவி குழந்தையுடன் தான் வருவேன் என்று சொல்லிவிட்டான்.
அவனும் போய் விட்டான் என்று கயல் இருக்கவும், கதவை திறந்து உள்ளே வந்தவனைப் பார்த்தவள், யாரைக் கேட்டு என்னுடைய ரூமிற்கு வந்த?,வெளியே போடா என்று கத்தவும், செவிடன் காதில் சங்கு விழுந்தால் எப்படி இருக்குமோ அதே போல அமைதியாக ரெஸ்ட் ரூமிற்குள் போனவனோ இரவு உடையை மாற்றி வந்து குழந்தையின் பக்கத்தில் படுத்து விட்டான்.
இதைப் பார்த்தவளுக்கு ஆத்திரம் வர, டேய் உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா? மரியாதையா எந்திருச்சு வெளிய போடா என்கவும், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதுபோல பாரியும் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.
அவனின் இந்த அமைதியோ கயலுக்கு இன்னும் வேகத்தை கொடுக்க எவன் பிள்ளைக்கோ இனிஷியல் அப்பனா இருக்கனும்ன்னு ஆசைப்படுறியே அப்போ நீ ஆம்பளை இல்லையா என்று வாயை மூடுவதற்குள் வேகமாக எழுந்து வந்தவனோ கயலின் தொண்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த சுவற்றில் சாய்த்தவன் என்னை கேவலமாக பேசுவதாக நினைச்சு உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காதடி.
கண்டவன் புள்ளைக்கு நான் ஏண்டி
அப்பனா இருக்கணும்? என் பிள்ளைகளுக்கு தாண்டி நான் அப்பனா இருப்பேன். அதோ படுத்து தூங்கிட்டு இருக்காங்களே என்வீட்டின் மகாலட்சுமி அவங்க உருவமே சொல்லலையா யாரோட பிள்ளை?..
ஒன்றுக்கு மூன்று பிள்ளை பெத்தவன்டி, ஒரே ராத்திரியில் உன்னை தாயாக்கியிருக்கேனே அதிலே தெரியலை இந்த ஆம்பளை எப்படியாப்பட்டவன் என்றவாறு தனது இடது பக்கம் மீசையை முறுக்கிக் கொண்டு பாரி சொல்லவும், அவனின் இந்த அதிரடியில் முதல் முறையாக கயல் தான் பயந்து போனாள்.
விரிந்த கண்களும் பயத்தில் அவளது உதடுகள் துடிப்பதையும் பார்த்து அந்த நேரத்திலும் அவளை ரசித்தவன், எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த தப்பும் என் வாழ்க்கையில் நான் பண்ணியதில்லை பண்ணவும் மாட்டேன்.
அன்று நான் சுய நினைவில் இருந்திருந்தால் நிச்சயமா என் மூச்சுக் காத்துக் கூட உன் மேல பட்டிருக்காது. என் நினைவு இல்லாத நேரத்தில் தான் அன்று நடந்ததுடி.
நடந்த விஷயத்திற்கு யாரு காரணமோ அவங்க மூலமாக கேள்விப்பட்ட அப்ப என் மனசு என்ன பாடுபட்டது என்று எனக்கு தான் தெரியும்.
நீ அழுதுகிட்டு என் வீட்ல நியாயம் கேட்டு இருந்தியே அது தாண்டி என் கண்ணு முன்னால ஓடுச்சு. இப்ப என்ன உன் காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்கணுமா சொல்லு கேட்கிறேன். இதுல ஒன்னும் என் கௌரவம் குறைந்து போயிடாது.
இல்ல வழக்கம்போல நான் பிளான் பண்ணி உன்னை ஏமாற்றி விட்டேன் இல்ல அன்னைக்கு நான் பேசினதெல்லாம் சொல்லி காட்டிட்டே இருக்கணும்னு உனக்கு ஆசை இருந்தா தாராளமா சொல்லிக்காட்டு.
கோர்ட்டுக்கு போவேண்டி புள்ளைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பேன் என் புள்ள தான்னு சட்டப்படி நிறுபனமாகும் அப்ப நீ என்னடி பண்ணுவ? .
செஞ்ச தப்புக்கு பிரயாசித்தம் தேடணும்னு நினைக்கிறேன். ஆனா நீ மேல மேல என்னை உசுப்பேத்தி பாக்குற. குழந்தை பிறந்து ஒரு வாரம் கூட ஆகல அடுத்தது நான் ஆம்பளை தான்னு நிருபிக்க ரெடி பண்ணனுமா என்கவும், அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் இல்லை என்று தலையசைக்க, அந்த பயம் இருக்கட்டும்.
வாய மூடிக்கிட்டு ஒழுங்கு மரியாதையா இருக்கணும். எதா இருந்தாலும் நாலு சுவருக்குள்ள தான் நம்மளோட பிரச்சனை இருக்கும்.அதை விட்டு வெளியில போனது நடக்கிறதே வேற என்றவனோ அமைதியாக போய் படுத்து விட்டான்.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.