செம்புலப் பெயல் நீர் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,540
6,325
113

செம்புலம் 31

தேனூர்:

ஊரே அடங்கிப்போயிருந்த அதிகாலை வேளையில், கயல்விழியின் வீட்டில் மட்டும் அடுப்பு புகையத் தொடங்கியது. இன்று கயலுக்கும் பாரிக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு பதினாறு கும்பிட்டு பெயர் வைக்கும் நாள். வாசலில் பனிப்பொழிவு இன்னும் குறையவில்லை.

வழக்கம் போல எழுந்த பாரி, பெட்டில் பார்க்க அங்கே மகளும் இன்னும் ஓரிரு நாளில் உலகறிய அவனது மனைவியாகப்போகும் கயலும் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவும்
அவர்கள் தூக்கம் கலையாதவாறு கதவை திறந்து வெளியே வர, விக்ரம், கதிர், சேயோன் மற்றும் ராஜவேலுவும் டீ குடித்தபடி ஹாலில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவனைப் பார்த்த விக்ரம் வா மச்சி என்க, வெளிய போயிட்டு வரலாமாடா என்றான். பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டே அந்த ஊரின் எல்லையில் இருக்கும் ஆற்றுக்குச் சென்றனர்.

நண்பன் ஏதோ மனசு விட்டு பேச தான் வந்திருக்கிறான் என்பது விக்ரமுக்கு புரிய சொல்லு அலவா, என்னடா முடிவெடுத்திருக்க என்கவும், கயலை முறைப்படி கல்யாணம் பண்ணிக்க போவதாக சொல்ல, ரொம்ப நல்ல காரியம் டா.

எங்கே உன் வாழ்க்கை இப்படியே போயிடுமோனு பயந்துட்டு இருந்தேன் மச்சி என்று தனது நண்பை அணைத்துக் கொண்டு விக்ரம் சொல்ல புரியுதுடா என்றான்.

மேலும் சிறிது நிமிடங்கள் பொதுவாக இருவரும் பேசிக்கொண்டிருந்தபடியே ஆற்றைப் பார்க்கவும் குளிக்க ஆசை வந்துவிட்டது. பின்னர் குளித்துவிட்டு திரும்பி வர, வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

பதினாறு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கயலுக்கு தலைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதால், தோட்டத்து அடுப்பில் வேப்பிலை கலந்த நீர் சூடாகிக் கொண்டிருந்தது.

கயலு என்றவாறு உள்ளே வந்த கலா, புள்ளைய நான் பார்த்துக்குறேன். குளிச்சிட்டு தலையை காய வை என்கவும் சரிங்கத்தை என்றவளோ மாற்று நைட்டியையும் துண்டையும் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு வர, மகளைப் பார்த்த வள்ளியும் வெந்நீரை பதமாக விளாவி வைக்க, கயலும் குளிக்கப்போனாள்.

உள்ளே வந்த பாரியை பார்த்த கலவோ வேகமாக எழுந்தவர், கயலு குளிக்க போயிருக்கா கண்ணு என்கவும், சரிங்கம்மா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவனோ கதவை தாழிட்டு வேறு துணியை மாற்றிக்கொண்டு பெட்டில் தூங்கும் மகளின் அழகை ரசிக்கலானான்.

அரைமணி நேரம் கடந்திருக்க கதவு திறக்கும் சத்தத்தில் பாரி திரும்ப வெந்நீரில் குளித்துவிட்டு வந்தவளைப் பார்க்கையில், ஒரு தாயின் பூரிப்பு அவளிடம் தெரிந்தது.

மேடம் பளிச்சினு இருக்கீங்களே என்னும் போது அப்பா என்றவாறு அவனின் இரட்டையர்கள் ஓடிவந்து பெட்டில் ஏறியவனுங்கள் இவள் என்ன இன்னும் தூங்குறாள்?.

பேட் கேர்ள்? .பிரஷ் பண்ணமாட்டாளா? நாங்கள் ரெப்ரஷ் ஆகிட்டோம். இப்போது மாமா கூட குளிக்க போறோமே என்கவும், மகன்கள் பேசியதைக்கேட்டு இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

முகி- கபி என்னும் கதிரின் குரல் கேட்கவும், ஓகே பாய்..நாங்கள் மாமா கிட்ட போறோம் என்றவாறு வெளியே ஓட, இரண்டு மருமகன்களை தூக்கிக்கொண்டு வெளியே வந்த கதிர், இருவரையும் தனது புல்லட்டில் உட்கார வைத்து போவதை ஜன்னல் வழியாக பார்த்த பாரிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் வந்தாலும் சந்தோஷத்தில் அவனது கண்கள் கலங்காமலில்லை.

அவனை பார்த்துக்கொண்டே வந்த கயல் என்னாச்சுங்க என்று அவனது தோளை தயக்கத்துடன் தொடவும், அவளது கையைப் பிடித்தவன், விக்ரம் கிட்ட கூட பசங்க இவ்வளவு ஒன்றிப்போய் நான் பார்த்ததில்லைடி.

இது எப்படி சாத்தியம்?

நேற்று பார்த்த கதிர் கூட எப்படி இவங்க ஒட்டிக்கொண்டானுங்க என்கவும், அதெல்லாம் அப்படி தானுங்க. தாய்மாமன் என்றால் சும்மாவா?. தாய்க்கு பிறகு முழு உரிமை தாய்மாமனுக்கு தானே?, ம்ம்..இங்க வீட்டில் இருப்பவர்கள் எப்படி இவர்களை ஏற்றுக்கொள்வார்களோனு மனசில் லேசாக ஒரு பயம் இருந்ததுடி.

இப்போது எனக்கு கன்னத்தில் அறை வாங்கியது போல இருக்கிறது என்று பாரி வருத்தமாக சொல்ல, அவன் மனநிலையை கயலாலும் புரிந்துகொள்ள முடிந்தது.

கயலு என்று இறுக்கி அணைத்தவன் நான் முதன் முதலாக தொட்ட பொண்ணு நீ கிடையாது தான். ஆனால் கடைசிவரை நான் தொட போறவள் நீ மட்டும் தான் டி. எத்தனையோ நாள் உனக்குத் தெரியாமல் திருட்டுத்தனமா நான் உன்னை ரசித்து இருக்கேன் தெரியுமா?.

வயிற்றுப் பிள்ளையோட நீ ஆடி அசைந்து ரோட்டில் வரும்போது பார்க்க ஒரு பக்கம் எனக்கு கஷ்டமா இருந்தாலும் இன்னொரு பக்கம் அவ்வளவு கோபம் வரும்டி.ஒருவேளை பொறாமையில் வந்ததா என்னன்னு சத்தியமா எனக்கு தெரியவில்லை.

உன் மனசை ரொம்ப காயப்படுத்திருக்கேன். அதற்கு மன்னிப்பு கேட்டாலும் தீர்வாகாது ஆனால் கடைசிவரையில் உன்னையும் நம்ம பிள்ளைகளையும் கண்கலங்காமால் பார்த்துப்பேன் என்கவும், தனது அப்பன் வருந்துவது தெரிந்துவிட்டது போல பெட்டில் படுத்திருந்தவள் சிணுங்கவும், என்ன ஆச்சு என் தங்கத்துக்கு என்று பதறி வந்து தூக்கியவன் மகளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, சின்னவளும் அமைதியானாள்.

நேரமும் கடந்து சென்றது...குழந்தையை குளிக்க வைத்துக்கொண்டிருந்த மரகதம் பாட்டி, ஆத்தா பேச்சி, ஏதோ ஒரு கணக்கில் தான் இப்படி விளையாண்டுருக்கனு தெரியுது என்றவாறு குளிப்பாட்டி முடித்தவர் வள்ளி என்கவும், இதோங்கத்தை என்று அழுது கொண்டிருந்த பேத்தியை வாங்கியவர் பெரிய பாட்டி என் தங்கத்தை குளிக்க வைத்தாங்களோ என்றபடி மகளிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

படைக்க எல்லாம் தயாரானதும் கயலு என்று கலா கூப்பிட, மஞ்சள் பூசிய முகமும், லேசாகச் சிவந்த கண்களுடன், கையில் தவழும் சிறு உயிர் என பட்டுப்புடவையில் தாய்மையின் பூரிப்போடு வந்தவளோ பூஜையறைக்கு முன்பு உட்கார, அவளைப்பார்த்த பாரிக்குள் ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சி..

ஆரம்பிங்க அத்தைனு சேகர் சொல்ல, எங்கே கயலு மவனுங்களை காணும் என்கவும், நாங்கள் வந்துவிட்டோம் என்றவாறு கதிரோடு ரூமிலிருந்து வந்தவனுங்களை பார்க்க சந்தோஷம் தாங்கவில்லை.

சின்னவனுங்கள் இருவரும் ஒரேப்போல பட்டு வேஷ்டி சட்டையில் கதிரின் கையை பிடித்துக்கொண்டு வந்தவனுங்கள் கயலின் இரண்டு புறமும் வந்து நிற்க, இருவரையும் அணைத்துக்கொண்டாள்.

பின்னர் சூடத்தை ஏற்றி சாமிக்கு காட்டி முடித்ததும், பெரியவர்கள் அனைவரும் பாரி- கயலுடைய மூன்று பிள்ளைகளின் நெற்றியில் திருநீறு பூசி, "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என மனதார வாழ்த்தியதும் நல்ல நேரத்தில் அங்கிருந்த தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்த கயல், மாமாயென்று சேகரின் கையைப் பிடிக்க, கண்ணு என்று தங்கை மகளின் தலையை தடவி விட்டவர், "ஆர்கலி பாரி அலவன்" என்று மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லியவர் கலா என்கவும், பேத்தியோடு இரண்டு பேரன்களுக்கும் வாங்கி வந்த செயினை போட்டுவிட்டனர்.

மற்றவர்களும் குழந்தைக்கு வாங்கிட்டு வந்த பரிசை கொடுக்கவும் பெயர் சூட்டும் விழாவும் சிறப்பாக முடிந்தது.

நேரமும் கடந்து செல்ல, விக்ரம்- தாரணி தம்பதியினர் அவர்களுடன் சொல்லிக்கொண்டு லண்டனுக்கு புறப்பட்டனர். திருச்சி ஏர்போர்ட் வரைக்கும் போய் பாரி அவர்களை அனுப்பி வைத்து விட்டு வர நள்ளிரவு ஆனது.

மற்றவர்கள் தூங்கிவிட , கதிரும்,கயலும் அவனுக்காக காத்திருந்தனர்.

கார் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தவனை பார்த்த பாரி, இன்னும் தூங்கலையா என்கவும், உங்களுக்காக தான் அத்தான் காத்திருந்தேன்.
நடுஞ்சாமத்தில் வருவீர்கள் புள்ளைங்க இருக்கும் வீடு காத்து கருப்பு எதாவது தவறி வந்துடக்கூடாதே அதான்... ஒரு நிமிஷம் அத்தான் என்றவனோ அவனுக்கு கைகால் கழுவ தண்ணீர் கொடுக்க, என்னை மன்னிச்சிடு கதிர் என்று பாரி கைகூப்ப, அய்யோ அத்தான்...ஏன் இப்படி என்று பதறிப்போய் அவன் கையை இறக்கியவன், போனதை விடுங்கள் என்றான்.

ம்ம் என்றவாறு தன்னை சுத்தம் பண்ணிக்கொண்டு உள்ளே வந்தவனோ குட் நைட் மச்சான் என்கவும், குட் நைட் அத்தான் என்று சிரித்த கதிர், கதவை தாழிட்டு தனது அறைக்குள் போய்விட, பொறுமையா கதவை திறந்து உள்ளே வந்த பாரியோ ஒரு நொடி திகைத்தான்.

ஆர்கலி தொட்டிலில் தூங்க, கபிலன் முகிலன் இருவரும் கயலை அணைத்துக்கொண்டு பெட்டில் படுத்திருப்பதை பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.

நல்லபடியாக பிளைட் ஏறிட்டாங்களா என்றாள். ம்ம்... ஏன் நீ தூங்கலையா என்றவனோ டிரஸை மாற்றிக் கொண்டு கீழே படுக்கையை விரித்தவன் ஹப்பாடா என்றவாறு அதில் படுக்க, தூங்கணும் என்று பொறுமையாக சொல்லியவளோ அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் விடியலும் வர, ஐயா மணி என்று மரகதம் அப்பாயி கூப்பிடவும் எதுக்கு கூப்பிடுறன்னு தெரியுதும்மா. வர தை முதல் முகூர்த்தத்தில் கதிருக்கும் மீனாட்சிக்கும் கல்யாணத்தை முடித்து விடலாம். இன்னைக்கே நானும் வள்ளியும் போய் மச்சான் வீட்டில் பேசிட்டு வரோம் என்றார்.

தான் கேட்க வந்ததை புரிந்து கொண்டு மகன் சொன்னதில் அந்த தாய்க்கு பெருமிதம் தாங்கவில்லை.

அதேபோல் காலை டிபன் முடித்துவிட்டு சேகர் வீட்டிற்கு வந்தனர். மச்சான் கயல் விஷயத்தால் மீனாட்சியைப்பற்றி யோசிக்கவில்லை. என் வீட்டுக்கு மருமகளா வரும்போது எந்த சுனக்கமும் இல்லாமல் மனநிறைவோடு வரணும் அதற்காக தான் இத்தனை நாளும் பொறுமையாக இருந்தேன்.

வர தை மாதத்தில் நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்கவும், தனது தங்கை புருஷனின் கைகளை பிடித்தவர் அந்த பேச்சி புண்ணியத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் மாப்பிள்ளை.

முதலில் கயலை அது புருஷன் வீட்டுல நல்லபடியா வாழ வைக்க வேண்டியதை மட்டும் நாம் பார்ப்போம் என்றார்.

செம்புலம் தொடரும்...

Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ishan

Member
Jul 30, 2026
34
0
6
India

Sundar great uncle 🥰🥰🥰😍😍😍😍🫂🫂🫂🫂🫂🫂🫂