சிறுமி வேடத்தில் சிரிக்கும் தண்டனை
உச்சிப் பொழுது!
கடும் வெயில். கால்கள் உடலைத் தாங்க இயலாது வளைந்து தள்ளாடித் தளர்ந்தன. உடல் ஓய்வை யாசித்தது. கூடவே, பசியில் காந்திய வயிரோ, ‘கெதியாப் போய் இரை எதையாவது தேடேன்.’ என்று கட்டளை இட்டது.
மிகவும் முயன்று மெல்ல மெல்ல முன்னேறியது, அந்த ஓநாய்...