அத்தியாயம் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மனம் - 8

நிகழ்காலம்,

மணமகனின் அறையில் சுதனுடன் குருவும் அபிலாஷும் இருந்தனர். அன்று காலையில் தான் சுதனின் நிச்சயம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“டேய் டேய் போதும் டா. பொங்கலுக்கு வெள்ளை அடிக்குற மாதிரி பவுடரை அடிக்காத அப்புறம் கல்யாண பொண்ணுக்கே உன்னை அடையாளம் தெரியாம இருக்க போய்ட போகுது.” என அபிலாஷ் கிண்டலடிக்க,

“அதான நீ வாரத்துல ஒருநாள் தான் குளிப்பேன்னு எங்களுக்கு மட்டும் தான தெரியும்.” என சிரித்தபடி குருசொல்ல, அவர்களை முறைத்தப்படி வாசனை திறவியத்தை
மேலே தெளித்துக் கொண்டிருந்தான் சுதன்.

“கல்யாணமும் சென்னையா இல்ல உங்க ஊர் கோவைலயா டா? கோவைனா லீவு சொல்லணும்..” என அபிலாஷ் புலம்ப,

“ரொம்ப பண்ணாத டா. முகூர்த்த நாள் ஞாயிறு தான்.” என சுதன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மாப்பிள்ளையை அழைத்தனர்.

சுதன் மேடையேறியவுடன் நண்பர்கள் இருவரும் கீழே அமர்ந்திருந்த ஜெசிந்தாவுடன் அமர்ந்துக்கொண்டனர். எதோ தோன்ற குருபிரசாத் வலப்பக்கம் திரும்பி பார்த்தான். பின், அபிலாஷிடம் கண்காட்டிவிட்டு அங்கு அமர்ந்திருந்தவர்களை நோக்கி சென்றான்.

இப்படி அவன் தங்களை நோக்கி வருவான் என எதிர்பார்க்காதலால் அதிர்ச்சியாகினர் அட்சயாவின் வீட்டினர். ஊரில் இருந்து பரிமளமும், ஆவுடையப்பனும் சபாபதியுடன் சுதனின் நிச்சய விழாவிற்கு வந்திருந்தனர்.

மரியாதை நிமித்தம் அவர்கள் அருகில் வந்து அமர்ந்த குருபிரசாத் அவர்களை நலம் விசாரித்தான். சபாபதியின் பார்வை முழுக்க குருவின் மேலே தான் இருந்தது.

அட்சயா ஊருக்கு வந்திருந்த பொழுதே அவளிடம் குருபிரசாத்தை பற்றி விசாரிக்க தான் செய்தான். “அவரும் என்கிட்ட பேசலை. நானும் அவர்கிட்ட பேசலண்ணா..” என மழுப்பியிருந்தாள்.

“வேலைலாம் எப்படி போகுது தம்பி?” என்ற ஆவுடையப்பனின் கேள்விக்கு தலையை மட்டும் அசைத்தான் குரு. குருவை அவருக்கு பிடித்து தான் திருமணத்திற்கு கேட்டார். திருமணம் முடிந்து அவரது மகள் மொத்தமாக அவனிடமிருந்து பிரிந்துவிட அவரால் மேற்கொண்டு வேறேதும் குருவிடம் கேட்க முடியவில்லை. குருவும் அங்கிருந்து சிறிது நேரத்திலேயே எழுந்து சென்றுவிட்டான்.

சாப்பாடு பந்தியில் எதிரெதிரே தான் அமர்ந்தனர். அவர்களுடன் ஒன்றாக படித்த சிலர் குருவிடம் வந்து, “உன்கூட சுத்துனதுல ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒருத்தன் என்கேஜ்ட். உனக்கு எப்ப குரு கல்யாணம்?” என விளையாட்டாக கேட்டான். எதிரில் அமர்ந்திருந்தவர்களும் குருவின் முகம் பார்க்க, “நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்கடா பண்ணிக்கலாம்.” என்றான் குரு சிரிப்புடன்.

திருமணத்தின் பொழுது இருபத்தி ஐந்து வயதில் இருந்த குரு இன்று முழு ஆண்மகனாக வளர்ந்திருந்தான். அவனை பார்க்கும் பொழுது ஆவுடையப்பனின் மனதே பாரமாகி போனது. அவர்கள் மகள் அட்சயாவை மீறி அவர்களால் எதுவும் செய்யவும் முடியவில்லை. எல்லாம் சரியாக இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ என மனதளவில் நினைத்துக்கொண்டார்.

அதன்பின், அவர்கள் மூவரும் அட்சயாவை அவளின் விடுதியில் சென்று பார்த்துவிட்டு அன்று முழுவதும் அவளுடன் தான் இருந்தனர்.

திருமண பேச்சை எடுத்த பெற்றவர்களையும் மறுத்து பேசி அனுப்பிவிட்டாள். “காலம் முழுக்க கல்யாணம் செய்யாமையே இருக்க போறீயா அச்சு?” என அவர்களும் அவளை கடிந்துக் கொண்டு தான் கிளம்பினர்.

எப்பொழுதும் போல் திருமணம் என்றதும் அவளின் ஆழ்மனதில் இருக்கும் வலிகள் முன்னே வர அதனின் நினைப்பை விரட்டியவளுக்கு, ‘அவங்க ஏன் இன்னும் கல்யாணம் செய்யல..’ என குருவை பற்றிய சிந்தனை வந்தது.

அட்சயாவின் மனநிலைபோல் சென்னையின் வானிலையும் அன்று நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருந்தது. நேற்றுவரை வெளுத்து வாங்கிய சூரியனுக்கு ஓய்வளித்த மழையரசி சென்னையை ஆள வந்திருந்தாள் .

மழையை கவனித்த அபிலாஷ் அன்று வீட்டிலிருந்தே பணிபுரிந்தான். குருபிரசாத் காலையிலேயே அலுவலகம் வந்திருக்க, மழையின் காரணமாக அன்று ஏராளமானோர் வீட்டில் இருந்து தான் பணிபுரிந்தனர். அட்சயாவும், பவ்யாவும் இப்பொழுது தான் வேலையில் சேர்ந்திருந்ததால் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் வரவேண்டிய கட்டாயம்.

மாலையில் விரைவாகவே பவ்யா கிளம்பிவிட்டாள். அட்சயாவையும் உடன் அழைக்க மறுத்துவிட்டாள். ‘ஹாஸ்டல் போய் என்ன செய்ய போறோம்? மழைவிடட்டும்..’ என அட்சயா காத்திருந்தாள். ஆனால் நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரம் அதிகரித்தது. அலுவலகத்தில் பாதிக்கும் மேல் ஆட்கள் கிளம்பியிருந்தனர்.

வீட்டிற்கு கிளம்பலாம் என அனைத்தையும் எடுத்துவைத்த குருபிரசாத் அப்பொழுது தான் அங்கு அட்சயா இருப்பதை கவனித்தான்.

என்னதான் அலுவலகத்தில் ஆட்கள் இருந்தாலும் அவளின் குழுவில் யாருமில்லாமல் அவளை தனியாக விட்டுச்செல்ல மனம் வரவில்லை. பையை அப்படியே மேசைமேல் வைத்துவிட்டு சூடான காஃபியுடன் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலின் அருகில் சென்று நின்றுக்கொண்டான்.

ஒருகையை பேண்ட் பாக்கெட்டில் விட்டிருந்தவன், சூடான பாணத்தை ஒருவொரு மிடறாக விழுங்கினான். அங்கிருந்த கண்ணாடியின் வழியே சாரலாய் தூறிக்கொண்டிருந்த மழையை அவனின் கண்கள் ரசித்தன. அவன் எழுந்து சென்றது; அங்கு கண்ணாடி கதவின் அருகே சென்று நிற்பது என அனைத்தையும் அட்சயா கவனிக்க தான் செய்தாள்.

சென்னையின் பல மென்பொருள் அலுவலகங்களை மழைநீர் நனைத்துக் கொண்டிருப்பது அந்த இருள் சூழ்ந்த வேளையிழும் அங்கே ஒளிரும் விளக்குகளின் உதவியால் நன்கு தெரிந்தது.

சிறுவயதில் இருந்தே இப்படி ஒரு கண்ணாடி அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது குருவின் கனவாகவே இருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்ததும் கோயம்பத்தூரில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் மென்பொருள் பொறியியல் படிப்பை தேர்வு செய்தான்.

“அவ்வளவு தூரம் போய் என்னத்துக்கு அந்த படிப்பை படிக்கணும்? எப்படியும் நம்ம தீப்பெட்டி தொழிலை நீதானா ராசா பார்க்கணும்?” என அவனுடைய அம்மாச்சி கலைவாணி சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனின் அன்னை பாக்கியலட்சுமியும், “ஆமா டா கண்ணா. ஏதாவது பிசினஸ் க்ரூப் எடுத்து படிச்சாதான நாளைக்கு நம்ம தொழிலை மேல கொண்டு போக உதவியா இருக்கும்.” என்றிட, எரிச்சலாக வந்தது அவனுக்கு.

“ம்மா எனக்கு பிடிச்ச படிப்பை கூட நான் படிக்க கூடாதா?” என கேட்டான். சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டரின் மேல் அலாதி பிரியம் உள்ளதால் அதனைப்பற்றிய படிப்பை படிக்கவே விரும்பினான்.

ஆனால், அதற்காக தொழிலை பார்க்கவில்லை என்றில்லை. பதின்ம வயதின் தொடக்கத்தில் இருந்தே அவனுடைய தந்தை குணசீலனுடன் சேர்ந்து தொழிலை கவனிக்க தான் செய்கிறான்.

அவனின் எந்த ஒரு ஆசைக்கும் தடைசொல்லாத பாக்கியலட்சுமி முதல் முறை அவனை எதிர்த்தது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், அன்னையை கெஞ்சிக்கொஞ்சி சமாதானப்படுத்திதான் கல்லூரியில் சேர்ந்தான்.

“படிப்பு மட்டும் தான் உனக்கு பிடிச்சது குரு. ஆனா படிச்சு முடிச்சதும் நம்ம தோட்டம், தொழில்னு எல்லாத்தையும் நீதான் பார்க்கணும்.” என்ற கண்டிப்புடன் பாக்கியலட்சுமி ஒத்துக்கொண்டார்.

கோவையில் படிக்கும் பொழுது தான் சுதன் மற்றும் அபிலாஷுடன் நட்பு மலர்ந்தது. சுதனின் சொந்த ஊர் கோவையாக இருக்க நான்கு வருட படிப்பில் மொத்த கோயம்புத்தூரையே சுற்றிவிட்டனர்.

விடுமுறை நாட்களில் குருவின் ஊரான விருதுநகருக்கும் அபிலாஷின் ஊரான கன்னியாகுமரிக்கும் பயணிப்பார்கள். அதனால் அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் வீட்டினருக்கும் அனைவருமே பழக்கம் தான்.

நான்கு வருடம் படிப்பை முடித்தவுடனே அவனின் திறமைக்கு வேலையும் கிடைத்தது. “மூணு வருஷம் மட்டும் வேலை பார்க்கிறேன் ம்மா. எனக்கும் ஒரு எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கும்ல..” என பாக்கியத்தை சரிக்கட்டி வேலையிலும் சேர்ந்துவிட்டான்.

மூன்றுவருடம் என முடிவுடன் இருந்த குருபிரசாத்து அவ்வப்பொழுது ஊருக்கு சென்று தொழிலையும் பார்த்துக்கொண்டு, அவனுக்கு பிடித்த இந்த வேலையையும் தொடர்ந்தான்.

இடையில் அவனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வந்தது. ஆனால் அவனுக்கு அதில் நாட்டமில்லாமல் இருக்க அந்த வாய்ப்பை தேவைப்படுவோருக்கு மாற்றிவிட்டான்.

அவனின் சம்பாத்தியத்தை கூட வீட்டினர் எதிர்பார்க்கவில்லை. அவனே அதனை முதலீட்டில் போட்டு பெருக்கிக்கொண்டிருந்தான்.

சரி திருமணத்திலாவது தன் பேச்சை கேட்பான் என தனக்கு பிடித்த மருமகளை வீட்டிற்கு கொண்டுவர ஆசைப்பட்டார், பாக்யலட்சுமி. அனால், விதியின் கணக்கோ வேறாகிவிட மொத்தமாக அந்த கோபத்தை அட்சயாவிடமும் அவளின் குடும்பத்தினிடமும் அன்று காட்டிவிட்டார்.

இடியின் முழக்கத்தில் நிகழ்வுக்கு வந்த குருபிரசாத் அப்பொழுது தான் கோப்பையில் காஃபி காலியாகியிருப்பதை பார்த்தான். வெளியே மழையும் சற்று மட்டுப்பட்டிருந்தது. தலையை உலுக்கி சரி செய்தவன் காஃபி கப்பை அதனின் இடத்தில் வைத்துவிட்டு அட்சயாவிடம் சென்றான்.

“இன்னும் கிளம்பாம என்ன செய்யுற?” என்ற குரல் தீடீரென்று கேட்கவும் அதிர்ந்து திரும்பினாள் அட்சயா.

“கிளம்பலையா?” என வாட்சை திரும்பி நேரத்தை பார்த்தான். அதுவோ ஏழை கடந்து சென்றிருந்தது.

“மழையா இருக்குனு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றவள் வேகவேகமாக பேகை அணிந்துக்கொண்டு வெளியே சென்றாள்.

குருபிரசாத்தும் பேகை எடுத்துக்கொண்டு அவளின் பின்னே சென்றவன் லிஃட்டின் உள்ளே நுழைந்ததும், “நான் ட்ராப் பண்ணவா?” என்றான் அவளை பார்த்து.

“இல்ல இல்ல வேணாம். நானே போய்டுவேன்.” என்றவள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஆட்டோவை புக் செய்ய முயன்றாள். மழைநேரம் என்பதால் அதுவோ சதி செய்தது. பஸ்ஸில் சென்றுவிடலாம் என பேருந்து நிலையம் சென்று நின்றாள். அவளின் நேரம் ஒரு பேருந்து கூட அந்நேரம் வரவில்லை.

பார்க்கிங்கில் இருந்து வெளியே வந்த குருபிரசாத் நேராக அவளின் முன்னே சென்று வண்டியை நிறுத்தினான். அவளை பார்த்துக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

அருகில் யாருமில்லாததால் ஏற்கனவே பதட்டத்தில் இருந்த அட்சயா அவன் வந்து வாகனத்தை நிறுத்தியவுடன் தான் சற்று நிம்மதியாக உணர்ந்தாள். அவளை பார்த்துவிட்டு பின்னிருக்கையை குருபிரசாத் பார்க்க, அவன் அழைக்காமலே அதில் எற சென்றாள் அட்சயா.

அவனின் வாகனத்தில் பின்னிருக்கையோ சற்று மேடாக இருக்க அவனின் தோளை பிடித்து தான் ஏறினாள். வலுவான தோளை பிடித்து ஏறியவளிற்கு சற்று கூச்சமாக இருக்க வண்டியில் அமர்ந்தவுடநீயே கையை எடுத்துவிட்டாள்.

குளிர்காற்று இருவரின் முகத்திலும் மோதி அந்த நேரத்தை இனிமையாக்கியது. விடுதிக்கு வழி சொல்ல அட்சயா வாயைதிறக்க, “தெரியும்.” என ஒருவார்த்தையில் அவளை வாயடைக்க செய்ந்திருந்தான்.

பத்தே நிமிடத்தில் விடுதியின் முன் வாகனத்தை நிறுத்தியிருந்தான். அதிலிருந்து அவனின் தோளை பிடித்து மெல்ல இறங்கியவள், அவனின் முன்னே வந்து தயங்கி தயங்கி அவனின் முகத்தை பார்த்தாள். எதோ கேட்க போகிறாள் என அவளின் தவிப்பை வைத்தே கண்டுகொண்ட குரு கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.

“அது..நீங்க ஏன் இன்னும் வேற கல்யாணம் பண்ணிக்கல?” என அவனிடமே கேட்டாள்.

அவளை கூர்ந்து நோக்கியவனுக்கு இவளால் எப்படி இந்த கேள்வியை கேட்க முடியுது என கோபமாக வந்தது. “அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றவன் சட்டென்று வண்டியை யூட்டர்ன் எடுத்தான். அவன் அப்படி சொல்லியதை கேட்டவளின் முகமே தொங்கிவிட்டது.

வண்டியை திருப்பிக் கொண்டு வந்து
அவளின் அருகில் மீண்டும் நிறுத்தியவன், “நீ தான வேணாம்னு போன. நீயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து சொல்லேன். பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குறேன்.” என்றவன் அவளின் முகத்தில் தோன்றிய உனர்வுகளை உள்வாங்கியபடி வாகனத்தை கிளப்பியிருந்தான்.

அவன் சொல்லிவிட்டு சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தவளின் தோளில் தட்டினாள் அவளின் அறை தோழி ஷீலா. “யாரது?” என குருவை மரியாதை இல்லாமல் அவள் கேட்டது அட்சயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“அவங்க என்கூட வர்க் பண்ணுறவங்க..” என விடுதியின் உள்ளே சென்றாள். அவளின் கூடவே நடந்தபடி வந்த ஷீலா, “பரவாலையே! சென்னைக்கு வந்ததுமே ஆளை பிடிச்சிட்ட போல. ஆள் பார்க்கவும் அழகா இருக்கான். அவன்கிட்ட இருக்க பைக்கே அவன் பெரிய இடம்னு சொல்லுதே..” என மேலும் அவள் சொல்லும் முன்,

“வாய மூடுங்க. என்ன பேசுறீங்க? என்கூட ஒரே ரூம்ல தங்கியிருக்கீங்க. அவ்ளோ தான். என்னை பத்தி வேற எதுவும் பேச உங்களுக்கு உரிமை இல்லை.” என்றவள் குளிக்க சென்றுவிட்டாள்.

குளித்துவிட்டு வந்தாலும் அவள் சொன்னது காதுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. பவ்யாவிற்கு உடனே அழைத்தவள் அவளின் விடுதியில் இடம் இருக்கா என்பதை பற்றிய விசாரனையில் இறங்கினாள்.

“இப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியமா சபா? வேலைக்குனு சென்னைக்கு போய்ட்டு, ஹாஸ்டல் சரில்ல வேற மாறணும்னு உன் தங்கச்சி சொன்னான்னு நீயும் அவளுக்கு வேற ஹாஸ்டல் பார்த்துட்டு இருக்க..?” என்ற பரிமளம் உணவை பரிமாறியபடியே சபாபதியிடம் கேட்டார்.

“அவளுக்கு சாப்பாடு சரில்லனா என்னமா பண்ணுறது?”

“இதுக்கு தான் அவ்ளோ தூரம் வேலைக்கு போக வேணாம்னு சொன்னது.”

“அப்ப கடைசி வரைக்கும் அவ இப்படியே இருக்கட்டுமா?” என சபாபதியும் குரலை உயாத்தியிருந்தான்.

“போனவாரம் கூட நாங்க ஜோசியரை போய் பார்த்தோம் டா. இப்ப தான் அவளுக்கு குருபார்வை வந்திருக்காம்.” என அவர் சொன்னதும்,

“என்ன சொன்னீங்க?” என அவன் அதிர,

“என்ன சொல்லிட்டேன். உன்னோட தங்கச்சிக்கு இப்ப தான் குருபலன் வந்திருக்காம். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிவாகிடும்னு சொல்லிருக்கார்.” என அவர் முடித்ததும்,

“ஓ குருபெயர்ச்சியை சொன்னீங்களா? நா வேற ஏதோ நினைச்சுட்டேன்.” என்றவன் சிரித்துவிட்டான்.

“என்னடா நினைச்ச..” என பரிமளம் விழிக்க,

“இல்ல மா அவங்க பெரு கூட குருபிரசாத் தான. அதான் அவங்களை சொல்லுறீங்களோன்னு கன்பூஸ் ஆகிட்டேன்.” என மேலும் சிரித்தான்.

“ஹ்ம்ம். அந்த தம்பியும் நல்ல பையன் தான். சுதனோட நிச்சயத்துல மறுபடி பார்த்தோமே, நல்லா வாட்டசாட்டமா இப்ப வளந்துட்டாங்க. ஆனா உன்னோட தங்கச்சி ராங்கி காரி இருக்காளே..” என பரிமளம் அங்கலாய்த்தார்.

“இப்ப அவர் தான் வேணும்னு நம்ம அச்சு சொன்னா. அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா மா?” என சபாபதி ஆழம் பார்த்தான்.

“அப்படி ஒன்னு நடந்தா சந்தோசப்படுறதுல முதல் ஆள் நானா தான் இருப்பேன் சபா. ஆனா அது அவ்ளோ சுளுவா நடக்காது. அதுவும் அந்த தம்பியோட அம்மா இருக்காங்களே..” என எதோ கூற வந்தவர்,

“வேணாம் சபா. அந்த தம்பியும் நல்லாருக்கட்டும். நீ உன்னோட ஹோட்டலுக்கு கிளம்பு. நாளைக்கு மறுபடி உன் தங்கச்சியை சீராட சென்னை கிளம்பனும்” என்றவரை பார்த்தவன்,

“அம்மா உங்களுக்கு மட்டும் ஒன்னு சொல்லவா. நம்ம அச்சு வேலை பார்க்குற கம்பெனில தான் அவங்களும் வேலை பார்க்குறாங்க.”

“என்ன சபா சொல்லுற?” என ஆவுடையப்பன் உள்ளே வர அவரின் குரலில் அதிர்ந்தான் சபாபதி.

“அது அப்பா.. அச்சு வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.” என அனைத்தையும் சொன்னான்.

“இந்த சின்னது நம்மகிட்ட கொஞ்சமாவது வாயை திறந்தாளா? இன்னும் என்னத்தை டா அண்ணனும் தங்கச்சியும் மறைச்சிருக்கீங்க? இந்த விஷயம் அந்த அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ..” என்று புலம்பிய பரிமளம் வழக்கம் போல் அவரின் மகள் கங்காவிடம் விஷயத்தை சொல்ல சென்றுவிட்டார்.

ஆவுடையப்பன் யோசனையாக அமர்ந்திருக்க சத்தமில்லாமல் சபாபாதியும் இடத்தை காலி செய்துவிட்டான்.

சனிக்கிழமை காலை ஏழுமணியளவில் குருபிரசத்திற்கு ஆழைப்பு வந்தது. காலையிலே யார் என கண்ணை கசக்கி பார்க்க அட்சயாவின் பெயர் அதில் ஒளிர்ந்தது.

அவன் அதனை எடுத்து காதில் வைத்தவுடன், “உங்களால ஹாஸ்டல் வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா?” என அட்சயாவின் குரல் கலக்கத்துடன் வந்தது.

நொடியில் வேலை செய்த அவனின் மூளை, “ரோ..ரோஷன் ஏதாவது பிரச்சனை பண்ணுறானா?” என்றான்.

“இல்ல..அதெல்லாம் இல்லை. இது.. வேற. ப்ளீஸ் இப்ப வர முடியுமா?” என பதைபதைக்கும் குரலில் அட்சயா கேட்டாள். அவளின் குரலிலே அவள் அழுகையை அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.


“சரி வரேன்.” என்ற குரு லேடீஸ் ஹாஸ்டல் என்பதால் ஜெசிந்தாவையும் அழைத்துக் கொண்டு அபிலாஷுடன் காரில் புறப்பட்டுவிட்டான்.
 

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
என்னவாம் இப்ப இவளுக்கு?????
ஓ நோ....நா அச்சு ஃபேமிலியா தப்பா நினைச்சிட்டேன்..... sorry guys😒😒😒😒
குரு கூட போக மாட்டேன்னு சொல்றது இவ தான் போலவே????
யூ சீ அச்சு.....உலகத்தில் எந்த மாமியார் தான் மருமகளுக்கு நல்லவங்களா இருக்காங்க????
ஒன்னு ரெண்டு rare piece இருக்கும்....சரி அதை விடு.....
பாக்கி தான் ப்ராப்ளம் நா.....அது எல்லாம் left hand la deal பண்ண வேணாமா நீனு.....என்ன போ.....
குரு தான் உன் மேல லவாங்கியா இருக்கான் இல்ல....

அப்பறம் என்ன தான் ப்ராப்ளம் உனக்கு?????
 
  • Love
Reactions: STN - 92

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
பாக்கி தான் ஏதோ பேசியிருப்பாள் அது தான் அச்சு வேண்டாம் என்கிறாள் போல. பாக்கியால் எல்லோரும் பயப்படுகிறாங்க . பாக்கி வந்துடுச்சோ.
 
  • Love
Reactions: STN - 92

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
பாக்கி தான் ஏதோ பேசியிருப்பாள் அது தான் அச்சு வேண்டாம் என்கிறாள் போல.
 
  • Love
Reactions: STN - 92

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
என்னவாம் இப்ப இவளுக்கு?????
ஓ நோ....நா அச்சு ஃபேமிலியா தப்பா நினைச்சிட்டேன்..... sorry guys😒😒😒😒
குரு கூட போக மாட்டேன்னு சொல்றது இவ தான் போலவே????
யூ சீ அச்சு.....உலகத்தில் எந்த மாமியார் தான் மருமகளுக்கு நல்லவங்களா இருக்காங்க????
ஒன்னு ரெண்டு rare piece இருக்கும்....சரி அதை விடு.....
பாக்கி தான் ப்ராப்ளம் நா.....அது எல்லாம் left hand la deal பண்ண வேணாமா நீனு.....என்ன போ.....
குரு தான் உன் மேல லவாங்கியா இருக்கான் இல்ல....

அப்பறம் என்ன தான் ப்ராப்ளம் உனக்கு?????

ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க
நன்றி நன்றி dear❤️
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
பாக்கி தான் ஏதோ பேசியிருப்பாள் அது தான் அச்சு வேண்டாம் என்கிறாள் போல.

நன்றி அக்கா 🙏 பாக்கியம் என்ன சொன்னாங்கன்னு பாக்குறதுக்கு wait பண்ணுவோம்❤️