அத்தியாயம் 14
நிகாரிகா பழைய நினைவுகளைக் கிளறிவிட்டதால், அன்பிற்கினியனின் கண்முன் அவனது பொற்கால நினைவுகள் நிழலாடின.
தென்னவனுக்கோ, ஆரியனைப் பார்த்தது முதல், நிகாரிகாவாக இருந்து சிற்பிகாவாக மாறி, பின் தங்கள் அனைவருக்கும் அழகுவாக உருவெடுத்துத் தன் பயணத்தைத் தொடர்ந்த அவளது கடந்த காலம் கண்முன் வந்து நின்றது.
அன்பிற்கினியனின் எதிர்காலம் எப்படி இருக்குமென அறிந்துகொள்ளும் ஆவலில், அம்புஜம் ஜோதிடரிடம் அவனது ஜாதகத்தைக் காட்டினார். ஆனால், அந்த ஜோதிடரோ, "அன்பிற்கினியனுக்கு அபமிருத்யூ தோஷம் எனும் பலமான ஆயுள் கண்டம் இருக்கிறது" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கி அம்புஜத்தின் தலையில் போட்டார்.
அன்று தொடங்கியது அந்தக் குடும்பத்தின் சோதனைக் காலம்.
அம்புஜம் தொட்டதற்கெல்லாம் ஜோதிடம், கோயில், பரிகாரம் என நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார். தன் மகனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், அவனை எப்போதும் தன் கண்பார்வையிலேயே வைத்துப் பாதுகாத்தார்.
அம்புஜத்தின் அந்த அதீதப் பாசம், அன்பிற்கினியனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. மாறாக, வெளியுலகத்தைப் பராமல், தன் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் ஒரு கைதியின் நிலையைத்தான் அவனுக்கு உணர்த்தியது.
அப்படியே வருடங்கள் இரண்டு முடிய அன்பிற்கினியனுக்குப் பன்னிரண்டு வயதானபோது, கிரக மாற்றங்கள் நிகழ்ந்தன. தன் மகனின் தோஷம் இப்போதாவது விலகிவிட்டதா என அம்புஜம் மீண்டும் அதே ஜோதிடரிடம் வினவினார்.
ஜாதகத்தில் நிலையாக இருக்கும் தோஷம் அவ்வளவு எளிதில் எப்படி விலகும்? இருப்பினும் அம்புஜத்தின் மனத்திருப்திக்காக அந்த ஜோதிடர், "தைப்பூசத்தன்று திருச்செந்தூர் முருகனுக்கு மகனின் முடியைக் காணிக்கை கொடுத்து, ஒரு வெள்ளி வேலும் சாத்துங்கள். அப்புறம் எல்லாம் அந்தக் கடவுள் விட்ட வழி!" என்று சொல்லி முடித்தார்.
ஆனால் மங்கம்மாவின் கணக்கோ வேறாக இருந்தது. அன்பிற்கினியன் பிறந்தபோதே, ஒரு கோயிலில் கைரேகை பார்க்கும் ஜோதிடரை அவர் சந்தித்திருந்தார். அன்பிற்கினியனின் கைரேகையைப் பார்த்த அவர், "இவன் மனைவியாக வரும் பெண்ணால், இவன் செல்வத்தின் உச்சிக்கே போவான்!" என்று சொல்லியிருந்தார். அந்த ஜோதிடரின் வாக்கு மேல் மங்கம்மாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் பேரனின் மனைவியால் தான் கோடிகளில் மிதக்கலாம் என்ற பேராசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது. அதனால் மற்ற ஜோதிடர்களின் எச்சரிக்கையை அவர் துளியும் நம்பவில்லை.
திருச்செந்தூர் பயணத்தின்போது, காரில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதிக நேரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், தன் வயோதிகத்தைக் காரணமாகக் காட்டியும் என மங்கம்மா வீட்டிலேயே தங்கிவிட்டார். மற்றவர்கள் அனைவரும் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கப் புறப்பட்டனர்.
தைப்பூசத் திருநாளில் திருச்செந்தூரில் மொட்டை அடித்து, பொங்கல் வைத்து, முருகனுக்கு வெள்ளி வேல் காணிக்கை கொடுத்து என அனைத்தும் மங்கலமாகவே நடந்து முடிந்தது.
திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, கடும் இருள் சூழ்ந்த காட்டுப் பாதையொன்றில் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நீலகண்டன் நிதானமாக காரை ஓட்டி வர, திடீரென ஏதோ ஒன்று அவர்களின் காரின் குறுக்கே வந்து மோதியது.
எதிர்பாராத அந்த விபத்தில், டயர் தரையை உரசும் பயங்கரமான சத்தத்துடன் 'கிரிச்' என நீலகண்டன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டு வந்த அன்பிற்கினியனும், மாரிமுத்துவும் அந்தச் சத்தத்தில் பயந்து போயினர். காரில் இருந்த அம்புஜமும், பாக்கியமும் கூடப் பதறிப்போய், "என்ன... என்னாச்சு?" என்று ஒருவருக்கொருவர் கேட்டனர்.
"தெரியவில்லை!" என்று சொன்ன நீலகண்டன், தன் பயத்தை மறைத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கினார். அவர் தனியே இறங்கிப் போவதைக் கண்டு அம்புஜமும் இறங்க, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் கீழே இறங்கினர்.
காரின் முன் விழுந்து கிடந்தது ஆறு ஏழு மதிக்கத் தக்க சிறு குழந்தை! நெற்றியில் சிறு காயம் மட்டுமே பட்டிருக்க, காரில் மோதிய வேகத்தில் மயக்கமுற்று இருப்பதை கண்டு, நீலகண்டன் குழந்தையின் கன்னத்தைத் தட்டி எழுப்ப முயல, அன்பிற்கினியனும் மாரிமுத்துவும் "பாப்பா... பாப்பா கண்ணைத் திற!" என்று குழந்தையை மெதுவாக உலுக்கினர். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
பாக்கியம் காரிலிருந்த தண்ணீரை எடுத்துத் தெளித்தும் அசைவில்லாததைக் கண்டு, "அண்ணா... ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்!" என்று பதறினார்.
அம்புஜமோ, தான் நாளிதழ்களில் படிக்கும் செய்திகளால், அந்தக் குழந்தைக்கு ஏதேனும் விபரீதம் நடந்திருக்குமோ எனப் பார்வையால் ஆராய்ந்தார். அப்படி ஏதும் அடையாளங்கள் இல்லாததைக் கண்டு ஒருவாறு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.
சுற்றுமுற்றும் பார்த்த நீலகண்டனுக்கு, அந்த இடம் ஆளரவமற்று மயான அமைதியுடன் காட்சியளித்தது. குழந்தையின் பெற்றோர்கள் யாரையும் காணவில்லை. அங்கேயே நிற்பது தன் குடும்பத்துக்கும் ஆபத்து என எண்ணியவர், "பாக்கியம்... பிள்ளையைத் தூக்கு!" என்றார்.
பிள்ளைகளிடம், "நீங்க முன்னாடி ஏறுங்கப்பா" என்று பணித்தார்.
"அம்மா... இந்தப் பாப்பாக்கு என்னாச்சு?" என்று அன்பிற்கினியன் தன் தாயிடம் வினவ, அன்பிற்கினியனை முன் இருக்கையில் இருக்க உதவி செய்த அம்புஜம் "தெரியவில்லைடா.. ஆசுப்பத்திரியில் தான் கேட்கனும்" என்று பதிலளித்தார் அம்புஜம்.
மாரிமுத்துவோ அந்தக் குழந்தையின் கையைப் பிடித்தபடி அழுதுகொண்டிருக்க, "மாரி... ஒன்னுமில்லை, முதல்ல கார்ல ஏறு!" என்று அவனை அதட்டி ஏற்றினார் நீலகண்டன்.
எல்லோரும் காரில் ஏற, பாக்கியம் அந்தக் குழந்தையைத் தன் மடியில் கிடத்தியபடி அம்புஜத்திடம், "அண்ணி... இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, என் வயிற்றில் எட்டு மாதத்தில் கலைந்து போன பிள்ளை உயிரோடு இருந்தால் இப்படித்தானே இருக்கும் என்று தோனுதே?" என்று தேம்பி அழுதார்.
கணவன் இறந்த துக்கத்தில், ஒயாத அழுகையினால் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறிகொடுத்தவர் பாக்கியம் என்பதால், "பாக்கியம்... நீ எல்லாத்தையும் கடந்து வந்த தைரியசாலி. இப்படி அழலாமா? இந்தப் பாப்பாக்கு ஒன்றும் ஆகாது!" என்று அம்புஜம் அவரைத் தேற்றினார்.
மாரிமுத்துவோ, தன் இறந்துபோன சகோதரியே மீண்டும் தங்களிடம் வந்துவிட்டதாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஆழமாக நம்பினான்.
அருகில் இருந்த கிராமத்து மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அந்தச் சிறுமி சில நிமிடங்கழிலேயே கண்ணை விழித்துக் கொண்டாலும், விழித்தபோது, அவளது உலகமே தலைகீழாக மாறியிருந்தது.
மருத்துவர் அவளை எழுப்பி உட்கார வைத்து, "பாப்பா... உன் பெயர் என்ன?" என்று கேட்க, மொழி தெரியாத காட்டில் விடப்பட்டதைப் போல அந்தச் சிறுமி திருதிருவென விழித்தாள்.
மாரிமுத்து அவளருகே சென்று, "பாப்பா... அண்ணா பக்கத்தில்தான் இருக்கேன், பயப்படக்கூடாது!" என்றான். அந்தக் குழந்தை அவனை ஒரு புதிரான பார்வை பார்த்தாலும், சிறுவர்களின் மென்மையான குணத்தால் அவனைச் சட்டென நம்பி, "அண்ணா!" என்று அவன் கைகளைப் பற்றிக்கொண்டது.
அன்பிற்கினியனோ, தன் மொட்டைத் தலையைப் பார்த்து அந்தச் சிறுமி பயந்துவிடுவாளோ என்று தன் தாயின் சேலை மறைவிலேயே நின்று கொண்டான்.
மருத்துவர் மனம் தளராமல் ஒரு மணிநேரம் போராடிப் பார்த்தும், "எந்த ஊர்? அப்பா பெயர் என்ன?" என்று கேட்டாலும் அவளிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், அவளிடம் உணவைக் கொடுத்தபோது, அவள் மிக அழகாக ஆங்கிலத்தில் 'ஸ்பூன்' என்று கேட்டதுடன், கீழே சிந்தாமல் நேர்த்தியாக உண்பதைக் கண்ட மருத்துவர் எதையோ கண்டு கொண்ட பாவனையில்,
"தலையில் பெரிய அடி ஏதுமில்லை. ஆனால், இந்த விபத்து நடப்பதற்கு முன்னால் ஏதோ ஒரு பெரிய அதிர்ச்சி அவளைப் பாதித்திருக்கிறது. அந்த வலியிலிருந்து தப்பிக்க அவளது மூளையே பழைய நினைவுகளைப் பூட்டி வைத்துவிட்டது. இதற்குப் பெயர் தற்காலிக உணர்வு மரப்பு. அவளுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் பார்க்கும்போது இது குணமாக வாய்ப்பிருக்கிறது" என்று முடித்தார்.
“அதிர்ச்சியா? ஏதும் தப்பா நடந்திருக்குமோ?” என்று நீலகண்டன் பதற்றத்துடன் கேட்க, வைத்தியரோ மெல்லிய புன்னகையுடன் “இல்லை... இது வேறு ஏதோ. வைத்தியராக என்னால் இதற்கு மேல் சொல்ல முடியவில்லை” என்று யோசனையில் ஆழ்ந்தார்.
நடுக்காட்டில் ஒரு குழந்தையை அநாதையாக விட்டுச் சென்றிருப்பதைப் பார்த்த அம்புஜம், “இந்தக் குழந்தையோட உயிருக்கு ஏதும் ஆபத்து விளைவிக்கப் பார்த்திருப்பாங்களோ?” என்று தன் ஐயத்தைக் கேட்டார்.
“ஒன்றும் தெரியவில்லை அம்மா. ஒரு மருத்துவராக உங்களைப் போலீசுக்குக் கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என்ன விபரீதமோ தெரியாமல் தப்பி வந்த பிள்ளையை, மீண்டும் அந்த இடத்திலேயே கொண்டு போய் விடுவது பாவம்” என்றார் வைத்தியர் உருக்கமாக.
மாரிமுத்துவுக்கு அந்தச் சிறுமியை அங்கே விட்டுவிட்டுச் செல்ல மனமே வரவில்லை. “மாமா.. இந்தப் பாப்பாவை நாமே வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என்றான் ஆசையாக. பாக்கியமும் அந்த முடிவிற்குச் சம்மதம் தெரிவித்துத் தலையசைத்தார்.
அம்புஜம் மட்டும் தன் மாமியாரின் கோபத்தை நினைத்துத் தயங்கி, “ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிடலாமே?” என்றார். ஆனால் நீலகண்டன் அதை ஏற்கவில்லை. “அநாதையாக விடுவதோ, ஆசிரமத்தில் சேர்ப்பதோ சரியாக இருக்காது. நாமே அழைத்துச் செல்வோம்” என்று உறுதியாகச் சொன்னார்.
“மாமி சத்தம் போடுவார்களே?” என்று அம்புஜம் இழுக்க, “கடவுள் இந்தப் பிள்ளையை நம் கண்ணில் காட்டியிருக்கிறார் என்றால், நாம் இதைப் பாதுகாக்க வேண்டும் என்றுதானே அர்த்தம்? பார்த்துக்கலாம் விடு...” என்று மனைவியைச் சமாதானப்படுத்தினார் நீலகண்டன்.
காரில் தாய்மார்களுடன் மாரிமுத்துவும் அந்தச் சிறுமியும் ஏறிக்கொள்ள, அன்பிற்கினியன் மட்டும் முன் இருக்கையில் அமர்ந்தான். காரின் உள்ளே, அந்தச் சிறுமியின் மென்மையான கன்னத்தைத் தடவிப் பார்த்த மாரிமுத்து, “அம்மா... இவ பொம்மை மாதிரி, சிற்பம் மாதிரி அழகா இருக்கா. நான் இவளுக்கு சிற்பிகான்னு பெயர் வைக்கட்டுமா?” என்று கேட்டு, அந்த நொடியே அவளைத் தன் தங்கையாகச் சுவீகாரம் எடுத்துக்கொண்டான்.
மருத்துவமனையில் இருந்தபோதே அன்பிற்கினியனைப் பார்த்த அந்தச் சிறுமி, அழுகை முட்டிய நிலையில் உதட்டைப் பிதுக்கினாள். அதைக் கண்ட நீலகண்டன், “டேய் அன்பு... உன் மொட்டைத் தலையைப் பார்த்து அவ பயப்படுறா போலிருக்கு, கொஞ்சம் தள்ளி நில்லுடா” என்று மகனை அதட்டினார்.
“குலம் கோத்திரம் தெரியாத ஒரு பெண்ணை எதற்கு வீட்டுக்குள் கூட்டி வந்தீர்கள்?” என்று வீட்டிற்கு வந்ததும் எதிர்பார்த்தபடியே மங்கம்மாள் குதிக்கத் தொடங்கினார்.
“அம்மத்தா... இவ என் தங்கச்சி! இவ இங்கேதான் இருப்பாள். அவளை வெளியே போகச் சொன்னால், நானும் அவளோடவே வெளியே போயிடுவேன்!” என்று தன் பாட்டியின் வாயை அடைத்தான். நீலகண்டனும் பாக்கியமும் சேர்ந்து ஒருவழியாக மங்கம்மாவைச் சமாளித்து, அந்தச் சிறுமியை வீட்டிற்குள் அனுமதித்தனர்.
ஊருக்குள் அன்பிற்கினியன் வீட்டில் ஒரு பொம்மை போன்ற சிறுமி வந்திருக்கிறாள் என்று பேச்சு கிளம்ப, அந்தச் செய்தி பக்கத்து ஊரிலிருந்த தென்னவனுக்கும் கிட்டியது. அந்தக் குழந்தையைக் காண ஆவலோடு தன் நண்பன் வீட்டுக்கு ஓடி வந்தான். அவன் உள்ளே நுழையும்போது, அந்தச் சிறுமி சோபாவில் அமர்ந்து மருண்ட விழிகளுடன் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சாப்பிடுடா... அப்பத்தானே அண்ணா மாதிரி ஸ்ட்ராங்கா, உயரமா வளர முடியும்?” என மாரிமுத்து அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்,
அன்பிற்கினியனோ சற்றுத் தூரத்தில் இருந்தபடி, நாடியில் கைவைத்து அவளை ஒரு விசித்திரப் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னடா?” என்று தென்னவன் அவனிடம் கேட்க, “இவன் கூட மட்டும் ஒட்டிக்கிறா... என்னைப் பார்த்தால் மட்டும் பயப்படுறா” என்று தன் மொட்டை மண்டையைத் தடவியபடி புலம்பினான் அன்பிற்கினியவன்.
மொட்டை மண்டை மட்டுமல்ல, அவனது கறுத்த உருவத்திற்கு அந்தச் சந்தனம் பூசிய மொட்டைத் தலை உண்மையிலேயே ஒரு குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாகத்தான் இருந்தது. அதைக் கவனித்த தென்னவன், சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அடேய் அன்பு... மொட்டை மண்டையை விடுடா. உன் முகராசியைப் பார்த்தே அந்தப் பிள்ளை பயந்திருக்கும்!” என்று அவனைப் பார்த்து கலாய்த்தான்.
அன்பிற்கினியனுக்கு தன்னுடைய நண்பனும், தன்னுடைய மச்சான் மாரிமுத்து இருவருமே அந்தக் குழந்தைக்கு சப்போட் பண்ண இருவரையும் முடிந்த மட்டும் முறைத்தான்.
அவனின் முறைப்பை சாட்டை செய்யாத தென்னவன் மாரிமுத்துவிடம், “உன் தங்கச்சிக்கு என்னவாம்? சாப்பாடு பிடிக்கவில்லை என்றால், மாலையில் கோயிலுக்குப் போய் சர்பத், பொரி உருண்டை எல்லாம் சாப்பிடுவோம் இல்லை, அவளுக்கு அதைக் கொடுக்க வேண்டாம்” என்று அவன் சொல்ல, அதன் பொருட்களே என்ன என்று தெரியாத அந்தச் சிறுமி, தன் கண்களை உருட்டி “If so?” என்று ஆங்கிலத்தில் மெல்லக் கேட்டாள்.
“அட..” என்று தென்னவன் வியந்துகொள்ள,
“டேய்... அவ வாயில் இங்கிலீஷ் தான் வருது! அதுதான் எனக்குக் காண்டாகுது” என்று எரிச்சலுடன் காலைத் தரையில் உதைத்தான் அன்பிற்கினியன்.
“தமிழ் புரியற மாதிரிதான் இருக்கு... ஏன்மா, நானும் உன் அண்ணாதான். உனக்குத் தமிழ் தெரியுமா?” என்று தென்னவன் கேட்க, அந்தச் சிறுமி எல்லாப் பக்கமும் தலையை அசைத்தாள்.
“அண்ணா... அவளுக்குப் புரியுது, ஆனா பதில் சொல்லத் தெரியலை” என்றான் மாரிமுத்து.
“பெரிய கண்டுபிடிப்பு!” என்று அன்பிற்கினியன் முணுமுணுத்தான்.
படிப்பில் படுசுட்டியாக இருந்தாலும், அன்பிற்கினியனுக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. அவனது அந்த முகச் சுழிப்பைக் கண்டு தென்னவன் சிரித்துக்கொண்டான்.
“டேய்... அவளுக்கு முதல்ல அ ஆவன்னா சொல்லிக் கொடுங்கடா!” என்று மாரிமுத்துவிடமும் தென்னவனிடமும் கட்டளையிட்டான் அன்பிற்கினியன்
வெயிலில் படாத அந்தச் சிறுமியின் வெளிறிய நிறத்தைக் கவனித்த தென்னவன், “டேய்... இந்தப் பிள்ளையைப் பார்த்தால் அப்படியே வெளிநாட்டுப் பிள்ளை மாதிரி இருக்குடா!” என்றான் வியப்புடன்.
“அப்புறம் எப்படி இவளுக்குத் தமிழ் புரியுது?” என்று இடக்காகக் கேட்டான் அன்பிற்கினியன்.
“நீ என்னதான் சொல்ல வர்றன்னு புரியுற மாதிரிச் சொல்லுடா அன்பு...” என்று தென்னவன் சலித்துக்கொள்ள,
“இவங்க அப்பா, அம்மா சும்மா பந்தா பண்றதுக்காக ஏதோ இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல சேர்த்திருப்பாங்க போல... அதுதான் இப்படிப் பிலாவ் விடுறா! என்கிட்ட ஒரு நாலு நாள் பழக விடுங்க... அவளைத் தமிழில் புத்தகமே எழுத வைக்கிறேன் பாரு!” என்று சவால் விட்டான் அன்பிற்கினியன்
“என்னவோ போ... எனக்கு என்னவோ இவ இங்கிலீஷ் காரி மாதிரிதான் தெரியுது!” என்று அவளை உற்றுப் பார்த்துத் தென்னவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெளியே கார்ச் சத்தம் கேட்டது.
“வாம்மா... சூனியக்காரி உள்ள வர்றா! நாம ஓடிப் போயிடலாம்!” என்று மாரிமுத்து, சிற்பிகாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். பாட்டியை அவன் அப்படி அழைத்ததைக் கேட்டு, வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தென்னவன் திணறிப்போய், “என்னடா இவன் இப்படி ஆகிட்டான்?” என்று தென்னவன் கேட்க,
“அப்பத்தா எங்கே அந்தப் பிள்ளையை வெளியே துரத்திவிட்டுடுவாங்களோன்னு நேத்துல இருந்து அவங்க கண்ணுலேயே படாம ஓடி ஒழிஞ்சுக்கிட்டு இருக்கான்!” என்றான் அன்பிற்கினியன் வருத்தத்துடன்.
“சரி... அவளுக்குப் பேர் ஆச்சும் தெரியுமா?” என்று தென்னவன் வினவ,
அன்பிற்கினியன் உதட்டை மடித்து ‘இல்லை’ என்பது போலத் தலையசைத்தவன், “மாரி அவளுக்கு சிற்பிகான்னு பேர் வச்சிருக்கான்...” என்று அன்பிற்கினியன் சொல்ல, “நல்ல பெயர்தான்!” என்று தென்னவனும் ஆமோதித்தான்.