வீட்டுக்கு வந்தபின்னும் அன்பிற்கினியவனின் கோபம் குறையவில்லை. நிகாரிகா தன் தந்தையைக் குற்றம் சாட்டிப் பேசியதை அவனால் ஜீரணிக்க முடியாமல், “நான் அங்க வேலைக்கு வரமாட்டேன். நீ மட்டும் போறதுன்னா போ!" என்று தென்னவனிடம் மறுத்துப் பேசிக்கொண்டிருந்தான்.
கூட்டத்தின் முடிவில், ஊர்க்காரர்கள் பலரும் அன்பிற்கினியனிடமும் தென்னவனிடமும், "மேடையில அந்தப் பொண்ணு உங்ககிட்ட தனியா என்ன பேசிச்சு?" என்று ஆவலாகக் கேட்டிருந்தார்கள். "எங்களை வேலைக்குக் கூப்பிட்டிருக்காங்க" என்று அவர்கள் சொன்னதுமே, "அப்ப நீங்க போறீங்களாப்பா?" என்று ஊர் மக்கள் ஆவலுடன் கேட்டார்கள்.
நீலகண்டனுக்கும் ஒரு நப்பாசை. தன் மகனும் தென்னவனும் அங்கே வேலைக்குச் சேர்ந்தால், நம்ம ஆளுங்க உள்ள இருக்காங்க என்ற தைரியத்தில் மக்கள் நிகாரிகாவை நம்புவார்கள். ஊரும் முன்னேறும். ஆனால், மகன் போகமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதைக்கண்டு, அவனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
தென்னவனோ பேச்சை இடையில் விடாமல், "டேய்... அவங்க நம்மளைப் பத்தி எல்லாத் தகவலையும் திரட்டிட்டுதான் வந்திருக்காங்க. அப்படிப்பட்டவங்ககிட்ட நீ பார்த்துப் பேசியிருக்கணும். அதை விட்டுட்டு, அந்தப் பொண்ணு பார்க்கச் சின்னப் பிள்ளை மாதிரி இருக்குன்னு உன் தெனவெட்டைக் காட்டினாய்... அவங்களும் சந்தர்ப்பம் பார்த்து உன்னைத் திருப்பித் தாக்கிட்டாங்க" என்று தென்னவன் சமாதானம் பேசியவன் தொடர்ந்து,
"அவங்க எவ்வளவு பெரிய பணக்காரங்க! உன்னை மாதிரி எத்தனை பேரை டீல் பண்ணியிருப்பாங்க? யார்கிட்ட எப்படிப் பேசணும்னு அவங்களுக்கு கிளாசே எடுத்திருப்பாங்க, அப்படிப்பட்டவங்களிட்ட நீ உன் திமிரைக் காட்டினால்.." என்று கிண்டலாகச் சொன்னான்.
"அதுக்காக என் அப்பாவைப் பத்திப் பேசுவாங்களா?" என்று தென்னவனிடம் அன்பிற்கினியவன் எகிறிக்கொண்டு வர,
நீலகண்டன் அவர்களுக்கு இடையில் குறிக்கிட்டு, "அன்பு... நான் உன் அப்பான்றதை விட்டுட்டு, ஒரு தனிமனிதனா என்னை யோசிச்சுப் பார். அந்த மில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துட்டு இருந்துச்சு? என் ஒருத்தால எல்லாரும் வேலையை விட்டு நிக்க வேண்டிய நிலைமை வந்திருச்சு. மில்லை மூடினதுக்கு அப்புறம் எல்லாரும் வயலுக்குக் கூலி வேலைக்குத்தான் போனாங்க. ‘எனக்கு நீயும் பார்க்காட்டி எதுக்கு எனக்குச் சொத்து, நான் எதுக்கு உழைக்கணும்?'னு நானும் அசால்ட்டா விட்டுட்டேன். என் மேலயும் தப்பு இருக்கு. அதை அந்தப் பொண்ணு சொல்லிக்காட்டினதுல பிழையில்லையே... அந்தப் பொண்ணு உண்மையைத் தான் சொல்லியிருக்கு" என்று நிகாரிகாவிற்குச் சார்பாகவே நீலகண்டன் பேசினார்.
"எனக்கு விருப்பமில்லை, நான் வரமாட்டேன்!" என்று அன்பிற்கினியவன் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருக்க,
நிகாரிகாவின் பேச்சைக் கேட்டு அப்படியே மயங்கிப்போன தென்னவன், “டேய், நம்ம ஊர் முன்னேற இது ஒரு நல்ல சான்ஸ்... நாமளும் அவங்க கூடச் சேர்ந்து அடி எடுத்து வைக்கிறதுல தப்பு இல்லையே” என்று அன்பிற்கினியனை வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.
ஒரு கட்டத்தில் தென்னவனின் நச்சரிப்புத் தாங்காமல், “சரி சரி... என்னமோ பண்ணு! நாளைக்கு காலையில அவ முன்னாடி கைகட்டி நின்னு ஓகே சொல்லிட்டு வருவோம்” என்று அன்பிற்கினியன் ஒருவழியாக இறங்கி வந்தான்.
அந்த நேரத்தில், அனல் தெறிக்கும் கோபத்துடன் அவர்களுக்கு முன்னால் வந்து நின்ற மங்கம்மா, 'ஏண்டா... எவளோ ஒரு சிறுக்கி என் மில்லை இடிச்சுத் தரைமட்டம் ஆக்கிட்டாளாம்! அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம, நீ என்னடான்னா இங்க இருந்து உன் மகனை மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்கியா?' என்று தன் மகனைப் பார்த்து ஆத்திரத்தில் வார்த்தைகளை உமிழ்ந்தார்.
மங்கம்மாவின் வாய்க்குப் பயந்து ஊரில் யாருமே அவரிடம் அவ்வளவு எளிதில் பேசவிடமாட்டார்கள். மங்கம்மா வீட்டிற்குச் சமையல் வேலைக்காகக் காலையும், மாலையும் வரும் சாவித்திரி, இரவுச் சமையல் செய்ய என மாலை வந்தபொழுதுதான் இந்த விஷயத்தை அவரிடம் பயந்தபடியே சொல்லியிருந்தாள்.
அதைக் கேட்டதுமே மங்கம்மாவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவர் வீட்டிலிருந்து இங்கிருக்கும் நீலகண்டன் வீட்டுக்கு வரப் பத்து நிமிடங்கள்தான் ஆகும் என்பதால், ஆத்திரத்தோடு நடந்தே வந்துவிட்டார்.
"உங்களோட மில்லா அது? சாகுறதுக்கு முன்னாடியே என் அப்பர் அதை எனக்கு எழுதி வச்சுட்டாரு. அது என் சொத்து மட்டும்தான்!" என்று நீலகண்டனும் பதிலுக்கு நிதானத்துடன் சொன்னார்.
"அதுக்காக இப்படி உடைச்சுத் தரைமட்டம் ஆக்கட்டும்னு பேசாம இருப்பியா?" என்று மங்கம்மா கோபமாகக் கேட்க,
"எனக்கும் என் பையனுக்கும் வேண்டாம்னு தோணுனது, இப்ப யாருக்கும் வேண்டாம். அது எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன?" என்று தன் இயலாமை கலந்த கோபத்தைக் கொட்டினார் நீலகண்டன்.
தென்னவனோ குறுக்கிட்டு, "ஒரு சொத்துப் போயிருச்சுன்னு கொதிக்கிறியே கிழவி... இங்க உன் பேரனோட வாழ்க்கை அந்தரத்துல தொங்கிட்டு இருக்கே, அதைப்பத்தி எப்பவாவது கவலைப்பட்டிருக்கியா?" என்று சுடச் சுடக் கேட்டான்.
"அவங்களுக்குத் தன்னட்ட இருக்கிற சொத்துப்பத்தை எப்படிப் பெருக்கலாம், அதை எப்படி ஆளலாம்னு மட்டும்தான் தெரியும்ண்ணா... மனுஷ மனசைப் பத்தி என்ன தெரியும்?" என்று கேட்டபடி, கையில் பையுடன் தன் தாயைக் கூட்டிக்கொண்டு வந்தான் மாரிமுத்து.
மாரிமுத்து இப்பொழுது வேலையிலிருக்கும் ஊரிலிருந்து விடிய மட்டுமே இந்த ஊருக்கு பஸ் வரும். அவர்கள் இப்படி மாலை மங்கிய நேரத்தில் வந்திருக்க, நீலகண்டன் பதற்றத்துடன், "என்னடா... அந்தி சாயுற நேரத்துல வந்திருக்க? ஏதும் பிரச்சனையா?" என்று விசாரித்தார்.
மாரிமுத்து தன் மாமாவைப் பார்த்து, "அம்மாதான் உங்க பழைய மில்லை இடிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் அண்ணா மனசு கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார். அவரோட நாலைஞ்சு நாள் இருந்துட்டு வருவோம்னு அடம்பிடிச்சாங்க. நான் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் காரில் கூட்டிட்டு வந்தேன்" என்றான்.
தன் அண்ணன் கவலையோடு இருப்பானே என்று தங்கை கார் பிடித்து ஓடி வந்திருக்கிறாள். ஆனால், தான் உடல்நிலை சரியில்லாமல் ஐந்து நாட்கள் ஆஸ்பத்திரியில் அனாதையாகக் கிடந்தபோது, மகள் என்ற முறையில் பாக்கியம் ஒருமுறை கூட எட்டிப் பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகும்தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கவில்லை.
அந்தத் தீராத கோபம் அவர் கண்களைச் சிவக்கச் செய்ய, “உனக்கு பெத்த அம்மாவைப் பார்க்க ஒருநாள் கூட நேரம் கிடைக்கலை... ஆனா, இவன் கவலையா இருப்பான் அப்படின்னு மட்டும் கார் பிடிச்சு ஓடி வரத் தெரியுது! பெத்தவளை விட உனக்கு உன் அண்ணன் தான் பெருசாப் போயிட்டானா? உங்களை வளர்த்து ஆளாக்கினதுக்கு எனக்கு நல்லாவே செஞ்சிட்டீங்கடி!” என்று தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு ஆத்திரமும் வேதனையுமாகப் புலம்பினார் மங்கம்மா.
தாயை மறைத்துக் கொண்ட மாரிமுத்துவோ, “நான் தான் உங்க வீட்டுப் போன் நம்பரை பிளாக்கில் போட்டுவிட்டேன்” என்றான் சதாரணமாய்.
மங்கம்மா தன் பேரனைத் திகைப்பாகப் பார்த்து, “எண்டா? நான் உனக்கு அப்படி என்ன தீங்கு செய்திட்டன்” என்று அவனிடம் குரல் தேய கேட்க,
"என் வாழ்க்கையையாவது நான் உருப்படியா மாத்திக்கணும்னு பார்க்கிறேன். ஆனா, என் மாமி மாதிரி உங்களுக்கெல்லாம் பயந்துட்டு, அமைதியா இருந்து பெத்த மகனோட வாழ்க்கையையே கருவருக்க என் அம்மாவையும் நீங்க உங்க கூடச் சேர்த்திட்டிங்கன்னா என்னவாகும்.. அதுதான் நான் உஷாராகிட்டேன்!" என்றான் மாரிமுத்து.
“டேய் நல்ல முடிவுடா.. மாமா உனக்குத் தான் சப்போட் பண்ணுவன்” என்று அவ்வளவு நேரமும் அமைதியாகவிருந்த நீலகண்டனும் மருமகனுக்கு ஆதரவுவழங்க,
மகனையும் மகளையும் ஆதங்கத்தோடு ஒரு பார்வை பார்த்த மங்கம்மா, “நீங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்துக்கிட்டு, கடைசியில இந்த வயசான காலத்துல என்னைத் தனியா விட்டுட்டீங்களேடா!” என்று மனமுடைந்து புலம்பினார்.
"நாங்க உங்களை எங்கே தனியா விட்டோம்? சொத்து, சொத்துன்னு அலைஞ்சீங்களே... அந்தச் சொத்தோடதானே உங்களை விட்டுட்டு வந்தோம்! அதுல இருந்து ஒரு செங்கல்லைக் கூட நாங்க எடுத்துட்டு வரலையே... அப்புறம் என்ன? அதையே வைச்சுக்கிட்டு நீங்க சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே!" என்று மாரிமுத்து வெடித்தான்.
மங்கம்மாவிடம் இருக்கும் சொத்துக்களில் எதுவுமே அவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தவை அல்ல. அனைத்தும் அவரது கணவர் சிவராமும், முன்னோர்களும் சிறுகச் சிறுகச் சேர்த்தவை. அந்தச் சொத்துக்கள் கணவர் மறைவுக்குப் பிறகு மங்கம்மாவின் கைக்கு வர, கூடவே தலைக்கனமும் வந்து ஒட்டிக்கொண்டது.
ஆரம்பத்தில் வேலையாட்களிடம் மட்டும் அதிகாரம் காட்டிய மங்கம்மா, சொத்துக்கள் கைக்கு வந்ததும் ஒட்டுமொத்தமாகவே மாறிப்போனார். திமிரும் அலட்டலும் கூடிப்போக, யாரையுமே மதிக்காமல் தான் வைத்ததே சட்டம் என்று ஆட்டம் போட்டார். கணவர் இறந்த பிறகு சொத்துக்களைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் ஒரு நொடி கூட நினைத்ததில்லை. பணம் இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நம்பிய அவர், எல்லாச் சொத்துக்களையும் தன் பிடிக்குள்ளேயே வைத்திருந்தார்.
பிள்ளைகள் வீட்டை விட்டுப் போன பின்பும், 'என் பணம் என்கிட்டத்தானே இருக்கு... இதை வச்சு என்னால வாழ முடியாதா என்ன?' என்கிற திமிரும் கர்வமும் மங்கம்மாவிடம் இன்னும் குறையவே இல்லை. ஆனால், இன்று மாரிமுத்து முகத்துக்கு நேரே சுளீரென்று கேட்ட கேள்வியால், அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேச முடியாமல் அப்படியே வாயடைத்துப் போய் நின்றார்.
"டேய்... என்ன சொன்னாலும் உறைக்காதவங்களுக்கு எடுத்துச் சொல்றது வேஸ்ட். துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்ற பழமொழிக்கு ஏத்த மாதிரி, இவங்க தலையைக் கண்டதுமே என் ஃப்ரெண்ட் எஸ்கேப் ஆயிட்டான் பாரு! அவனை மாதிரி இருக்கப் பழகு" என்று தென்னவன் நக்கலாக மாரிமுத்துவுக்கு அட்வைஸ் பண்ணினான்.
மாரிமுத்து வீட்டின் படலைக்குள் நுழையும் பொழுது அன்பிற்கினியவன் தலை தெரிந்ததைக் கண்டவன் சுற்று முற்றும் பார்த்து"அன்பு அத்தான் எங்கே போயிட்டார்?" என்று மாரிமுத்து அவனைத் தேட,
"அவனுக்கு கேட் திறந்து இவங்க தலை தெரிஞ்சதுமே எஸ் ஆயிட்டான்" என்று மென்னகையுடன் சொன்னான் தென்னவன்.
“அவர் புத்திசாலி!" என்று மெச்சிக்கொண்ட மாரிமுத்து, "அண்ணா... பள்ளிக்கூடத்தில இருந்து அப்படியே வர்றேன். இந்த அம்மா இன்னைக்குச் சமைக்கக்கூட இல்லை, பசியில் உயிர் போகுது. இந்த நேரத்துல சாப்பிட ஒன்னும் இல்லாட்டியும் பரவாயில்லை, ஒரு டீயாவது கொடுங்க... ரொம்ப டயர்டா இருக்கு," என்று சோம்பல் முறித்தபடி சொன்னவன், அப்படியே பேசியபடி தன் மாமனுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான்.
அன்று நடந்த விவசாயக் கூட்டத்திற்குச் சென்றிருந்ததால், மூவருமே கடையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வீடு திரும்பியிருந்தனர். அதனால் வீட்டில் சமைத்து வைத்தது என்று எதுவுமே இல்லை. இன்னைக்கு நைட்டுக்கு நான் சமைக்கிறேன் என்று அன்பிற்கினியவன் காலையிலேயே சொல்லியிருந்தான். ஆனால், எதிர்பாராத விதமாக மங்கம்மாவைக் கண்டதால், அவனுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் கிளர்ந்து எழுந்திருக்கும்.
'இப்ப எந்தக் காட்டாந்தரையில படுத்திட்டு வானத்தைப் பார்த்துப் புலம்பிக்கிட்டு இருக்கானோ?' என்று கவலையோடு நினைத்துக் கொண்டான் தென்னவன். அதே சமயம், பசியோடு வந்திருக்கும் மாரிமுத்துவிற்கு ஒரு தேநீராவது போட்டுக் கொடுக்கலாம் என்று எண்ணியபடி அவன் எழ முயன்றான்.
வீட்டில் பெண்ணில்லாமல் தாங்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் பாக்கியத்துக்கும் மனம் கிடந்து தவிக்கும் எனினும் மகன் அங்கே சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான் என்று தான் அவனுடன் கிளப்பிப் போயிருந்தார். இப்பொழுது தான் திரும்ப வந்திருக்கும் பொழுது, ஆம்பிளைப்பிள்ளையை வேலை வேண்ட விருப்பமில்லாத பாக்கியம் "நீ இருப்பா... நான் போறேன்" சமையல்கட்டுக்கு விரைந்தார்.
நீலகண்டன், தன் தாய் மங்கம்மாவை 'எப்போது இடத்தை காலி செய்விங்க?' என்பது போன்ற ஒரு பார்வையில் பார்த்துக் கொண்டிருக்க, அந்த வீட்டில் வேண்டாத விருந்தாளியாக நிற்க விரும்பாத மங்கம்மா, உடல் குறுகித் தலைகுனிந்தபடி அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே செல்லும் தன் தாயை ஒரு பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்.
"என்ன அண்ணா சங்கதி?" என்று மங்கம்மா போவதைப் பொருட்படுத்தாமல், மாரிமுத்து தென்னவனிடம் விசாரிக்கத் தொடங்கினான்.
தென்னவனும் அன்று கல்யாண மண்டபத்தில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சொன்னான்.
அன்பிற்கினியவனுக்குப் பிடிச்ச மாதுளை ஜூஸ், எனக்குப் பிடிச்ச ஆரஞ்சு ஜூஸ்னு எல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சிருக்குடா! நிவாஸ் குடும்பம்னாலே கோபத்துக்குப் பேரு போனவங்க, அவங்களைப் பார்க்கவே சிம்ம சொர்ப்பனம்னு பில்டப் பண்ணித்தான் கேள்விப்பட்டிருக்கேன்.
ஆனா நாங்க பார்த்த பொண்ணே வேறடா. பாக்குறதுக்குச் சின்னப் பிள்ளை மாதிரி அமைதியா இருந்தாலும், நல்ல விவரமான பொண்ணுன்னு பார்த்தாலே தெரியுது. நம்ம அன்புதான் அந்தப் பொண்ணுக்கிட்ட எட்டிக்குப் போட்டியா நின்னான். அவங்க அப்பாவைப் பத்தி அந்தப் பொண்ணு தப்பாச் சொல்லவும், இவனுக்குச் சுள்ளுன்னு கோபம் ஏறிடுச்சு. மத்தபடி அந்தப் பொண்ணு ரொம்பப் பொறுமையாத்தான் பேசுச்சு" என்று தென்னவன் சொல்ல, மாரிமுத்து யோசனையில் ஆழ்ந்தான்.
பணக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டார்களே... இவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்திருந்தாலும், அவர்களின் திறமையைக் கண்கூடாகப் பார்க்காமல் உடனடியாக வேலையில் அமர்த்த முன்வருவது மாரிமுத்துவுக்கும் ஒரு நெருடலாகவே இருந்தது.
"அன்பு அத்தான் என்ன சொல்றாரு?" என்று மாரிமுத்து கேட்க,
"அவன் என்கூட வர்றேன்னு வேண்டா வெறுப்பாச் சொன்னாலும், அவனுக்கு ஏதோ இடிக்குதுன்னு சொன்னாண்டா" என்றான் தென்னவன்.
மாரிமுத்துவிற்கும் அன்பிற்கினியவனிடத்திலும், தென்னவனிடத்திலும் காட்டிய நட்புக் கூட நம்பமுடியாமல் இடித்தது அதனால் அவனுமே "என்னவாயிருக்கும்?" என்று யோசனையுடன் கேட்க,
"அவங்க உலக மகா பணக்காரங்க... அவங்க எதுக்கு நமக்கு இப்படி உதவி செய்யணும்னு நினைக்குறப்போ வித்தியாசமாத்தான் இருக்கு. பார்ப்போம்..." என்றான் தென்னவன்.
பாக்கியம் தேநீரைத் தன் தாய்க்கும் சேர்த்தே போட்டுக்கொண்டு வந்தவர், அங்கே மங்கம்மாவைக் காணாமல் யாரிடமும் கேட்கத் தோன்றாமல், அவர் அவருக்கு தேநீரைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய தேநீரையும் எடுத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார்.
வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து தன் தாயிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமலிருந்த பாக்கியத்தைப் பார்த்து, "என்னடா... உன் அம்மாவுக்கு நல்லா வேப்பிலை அடிச்சிருக்க போலிருக்கு?" என்று தென்னவன் மாரிமுத்துவின் காதில் முணுமுணுத்தான்.
"ம்.. உங்க அம்மாவோட பேசினா நீங்களும் பையனை மறந்திட வேண்டியதுதான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்." என்றான் மாரிமுத்து.
"நல்ல முடிவு... தனிமை ஆட்களைத் திருத்தும்னு சொல்லுவாங்க, பார்ப்போம்!" என்றான் தென்னவனும்.
நீலகண்டன் அவர்கள் இருவரின் பேச்சைக்கேட்டு “நீ அப்படி நடக்கும் என்று நம்புறீயா? அப்ப தண்ணியில எழுதிவை நடக்கும் போது பார்ப்போம்” என்றார்.
“எனக்கும் இவ்வளவு காலம் கூடவே இருந்திட்டு, கடைசிக் காலத்துல அவங்களை இப்படித் தனியா விட்டுட்டோமேன்னு மனசுக்குள்ள ஒரு குற்றக் குறுகுறுப்பாத்தான் இருக்கு. ஆனா, அன்பு அத்தானுக்கு இனிமேலாவது நல்லது நடக்கணும். மாமாக்கு அவங்கம்மா திருந்தணும். இத்தனை காலமாப் பெத்த மகனைப் பிரிஞ்சு, பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் இடையில அல்லாடிப் போயிட்டார். இனிமேயும் தன் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில அவர் அல்லாடுற நிலைமை வரக்கூடாது. அதுக்காகத்தான் இப்போ பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுமையா இருக்கேன்...” என்றான் மாரிமுத்து.
சிறுது நேரம் செல்ல மாரிமுத்துவும் தென்னவனும் ஒருபக்கமிருந்து பேச பாக்கியமும் நீலகண்டனும் சேர்ந்து இன்னொருபக்கம் கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
சில மணி நேரங்களுக்குப் பின் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த அன்பிற்கினியவனின் முகம் வேதனையிலும், குழப்பத்திலும் வாடியிருக்கக் கண்டு “என்னடா” என்று எல்லோரும் ஒருமித்துக் கேட்கவும் “அம்மா ஞாபகம்” என்று சமாளித்துவிட்டான்.