அத்தியாயம்-11
விமலனும் அமலனும் தர்சனின் முன்னால் அமர்ந்திருந்தனர். அவனோ அவர்கள் இருவரையும் கவனியாது எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அவனது அடர்ந்த சிகை கலைந்துகிடக்க, சிவப்பேறிக் கிடந்த விழிகள் ஆத்திரத்திலும் அவமானத்திலும் கொப்பளிக்க முகத்திலோ மூன்று நாள் தாடி வளர்ந்து கிடந்தது.
கைபேசியையும் அணைத்துவிட்டு இந்த மூன்று நாட்களாக வீட்டுப் பக்கமே வராமல் அவர்களது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய தோட்ட வீட்டிலேயே அடைந்து கிடந்தவனைப் பார்க்கையில் வலித்தது அவர்களுக்கு.
எவ்வளவு கம்பீரமானவன்! எப்போதுமே அவனிடம் ஒருவிதப் பிடிவாதம், அழுத்தம், ஆளுமை, நிமிர்வு நிறைந்திருக்கும்!
இன்றோ அனைத்தையும் இழந்து வேரறுந்த மரத்தைப் போன்று வாடி வதங்கிக் கிடந்தான். தங்களின் தம்பியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வெண்பாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது தமையன்களுக்கு.
அமலன் தமையனைப் பார்த்து கண்ணசைக்க, ஆமோதிப்பாகத் தலையை அசைத்த விமலன், “தர்சா..” என்றான் மெல்ல.
அவனிடம் எந்தவித அசைவும் இல்லை.
அமலனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “டேய் தர்சா! இங்கே பார்!” என்று தம்பியின் முகத்தைப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பினான் விமலன்.
“என்னடா கோலம் இது? ஏன்டா இப்படி வீட்டுக்கும் வராமல் இங்கேயே இருக்கிறாய்?” என்று கேட்டவன், அங்கிருந்த மதுபானப் போத்தல்களைக் கையால் கட்டி, “இதையெல்லாம் எப்போதிருந்து பழகினாய் தர்சன்? குடிப்பதற்கு எப்போது சாட்டுக் கிடைக்கும் என்று காத்திருந்தாயா? அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்.” என்று சற்றே கோபத்தோடு கேட்டான்.
ஆரணியின் குடும்பத்தவர்கள் வீட்டில் இருந்ததாலும், தர்சனுக்கும் தனிமை தேவை என்று எண்ணியதாலும் இந்த மூன்று நாட்களும் அவனை இங்கேயே இருக்க விட்டிருந்தான் விமலன். ஆனாலும் அவனைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர் இருவரும். அது மட்டும் அல்லாது, அங்கிருந்த காவலாளியிடம் கூட அவனைப் பார்த்துக்கொள்ளச் சொன்னவர்கள், அவ்வப்போது அவனுக்கு அழைத்து விசாரிக்கவும் தவறவில்லை.
ஆரணியின் பெற்றோர் கிளம்பிச் சென்றதும் அவனை எப்படியாவது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்கிற பிடிவாதத்துடன் வந்துவிட்டார்கள் இருவரும்.
தமையனின் பேச்சைக் கேட்ட தர்சனின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தது. “வீட்டுக்கு வந்து என்ன செய்யச் சொல்கிறாய்? எல்லோர் முன்னாலும் அவமானப்பட்டு, கூனிக் குறுகி நிற்கச் சொல்கிறாயா?” என்று கேட்டான் அவன்.
“அப்படிக் கூனிக்குறுகி நிற்கும் அளவுக்கு நாங்கள் என்ன உனக்கு யாரோவா? அங்கிருப்பது உன்னுடைய அம்மா அப்பாவும் உன் குடும்பமும். உனக்கு ஒன்று என்றால் அது எங்களுக்கும் தான். இதிலே யார் யாருக்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பது? அதோடு, அவமானமும் கேவலமும் அவளுக்குத்தான். உனக்கில்லை! உனக்கு என்னடா? நீ ஆண்பிள்ளை. நீ என்ன பிழை செய்தாய் என்று இப்படி முடங்கிக் கிடக்கிறாய்?” என்று கோபப்பட்டான் அமலன்.
அமலனைத் திரும்பிப் பார்த்தான் தர்சன். “உன்னையும் கட்டிக்கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லைடா.” என்றான் சம்மந்தமே இல்லாமல்.
சகோதரர்கள் இருவரும் இறுகிய முகத்தோடு கேள்வியாக அவனைப் பார்த்தனர்.
“நம் குடும்பத்தையும் என்னையும் பழிவாங்கவே உன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் சொல்லியிருக்கிறாள். மற்றும்படி, அவள் நம் வீட்டிலிருந்து நல்ல பிள்ளைக்கு நடித்திருக்கிறாள். இப்போது மனச்சாட்சியே இல்லாமல் இன்னொருவனுக்கு மனைவியாகிவிட்டாள்.” என்று வெறுப்பும் அருவருப்புமாகச் சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தனர் இருவரும்.
அன்று, “அவள் யாருடனோ ஓடிவிட்டாள்.” என்றும், “எப்படியாவது அமலனின் ரிசப்ஷன் நன்றாக நடந்து முடியவேண்டும். அது உன் பொறுப்பு!” என்றும் மொட்டையாகச் சொல்லிவிட்டு தர்சன் சென்றதும், அடுத்து என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாது கணநேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் விமலன். அடுத்தக் கணமே தான் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை ஒருவித சிரமத்துடன் உணர்ந்துகொண்டான்.
உடனேயே அங்கே உடைந்து சிதறிக் கிடந்த கணினியை அப்புறப் படுத்திவிட்டு, கசக்கி எறியப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து வேறு யாரினதும் கண்ணில் படாத வகையில் தர்சனின் கப்போர்ட்டுக்குள் மறைவாக வைத்தான்.
அது வெண்பா எழுதிய கடிதம் என்பதை ஊகிக்க முடிந்தாலும் பிரித்துப் படிக்க விரும்பவில்லை அவன். என்ன இருந்தாலும் அது தம்பியின் தனிப்பட்ட விஷயம் அல்லவா.
விசயத்தைச் சொன்னபோது ஆத்திரத்தில் வெகுண்ட தந்தையைச் சமாளித்து, கண்ணீரோடு பரிதவித்த அன்னையைத் தேற்றி, அழுது புலம்பிய அத்தையை ஆறுதல்படுத்தி, மேடையில் அமர்ந்திருந்த அமலனின் கேள்விகளுக்குத் திக்கித் திணறிப் பதில் சொல்லி, போதாக்குறைக்கு “எங்கே தர்சன்? அவன் திருமணத்தையும் பதிவதாகச் சொன்னீர்களே?” என்று விசாரித்த உற்றார் உறவினர்களுக்கும் பதில் சொல்லி என்று அமலனின் ரிசப்ஷனை நடத்தி முடிப்பதற்குள் செத்துப் பிழைத்துவிட்டான் விமலன்.
இவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தாலும், நடந்தவை என்ன என்று முற்று முழுதாகத் தெரியாத விமலனுக்கும் அமலனுக்கும் தர்சன் சொன்ன விஷயம், அதுவும் அவள் இப்போது இன்னொருவனின் மனைவி என்ற விஷயம் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“உனக்கு எப்படித் தெரியும்? அவள் கோபத்தில் பொய் சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான் விமலன்.
“அவள் சொன்னதை மட்டும் நம்பிக்கொண்டு தேவதாசாக இருக்க என்னை என்ன அந்தளவுக்குக் கையாலாகதவன் என்று நினைத்தாயா?” என்று சீறினான் தர்சன்.
“என்னடா செய்தாய்?” என்று விமலன் கேட்க, “அவளைக் கண்டுபிடித்து, கொல்லும் ஆத்திரத்துடன் கொழும்புக்கே ஆள் அனுப்பி விசாரித்தேன். அவள் சொன்னது போல, அங்கே ஒரு சிங்களவனுடன் அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்ததுமே அருவருத்துப் போய்விட்டது எனக்கு. அத்தையின் மகள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவளை உயிருடன் விட்டு வைத்திருக்கிறேன். இல்லையானால்..!!” என்றபடி ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவனின் முகத்தில் ஜொலித்த கோபாக்கினியில் சகோதரர்களே சற்று அஞ்சிப்போயினர்.
“உனக்கு எப்படிடா தெரியும் அவள் கொழும்புக்குத்தான் போனாள் என்று?”
“கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தானே!” என்றான் தர்சன்.
“எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னையே ஏமாற்றி இருப்பாள். எவ்வளவு கேவலம்!” என்று சுயவெறுப்பில் கொதித்தவனின் மனதை அறிந்துகொண்டனர் சகோதரர்கள்.
அதோடு, மூன்று நாட்கள் கடந்தும் அவனிடம் ஒரு தெளிவோ அல்லது நடந்தது நடந்து முடிந்துவிட்டது என்கிற எண்ணமோ இல்லை என்பது புலனானது.
எனவே அவனை இப்படியே விடுவது நல்லதில்லை என்று உணர்ந்து, “உன்னைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனவளைப் பற்றி நீயெதற்கு யோசிக்கிறாய். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இதற்காக அவள் வருந்துவாள். அதனால் நீ எழும்பு, எழும்பி வா வீட்டுக்குப் போகலாம். இங்கேயே கிடந்து இப்படிக் குடித்தது எல்லாம் போதும். அங்கே அம்மாவும் அத்தையும் அழுதே கரைகிறார்கள்.” என்றான் அமலன்.
அப்போதும் அசையாமல், மனதின் ஆத்திரம் அடங்காமல் இருந்தவனைப் பார்த்துவிட்டு, “டேய்! அமலன் சொன்னது உன் காதில் விழவில்லை. வா, வீட்டுக்குப் போகலாம்!” என்றான் விமலன்.
“ப்ச்! நான் வரவில்லை!”
“ஏன்?”
அவன் பதில் சொல்லாது இருக்க, “உன்னைத்தான் கேட்கிறேன் தர்சன். ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று அதட்டினான் அண்ணன்.
“எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரச் சொல்கிறாய்? அப்பாவின் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? அன்று அவளுக்காக அவரோடு சண்டைக்கு நின்றேனே.. நினைக்கவே வெறுப்பாக இருக்குடா அண்ணா..” என்றவனின் குரலில் இருந்த வலியில் சகோதரர்கள் இருவருமே துடித்துப் போயினர்.
“டேய் தர்சா! என்னடா இது? அவர் நம் அப்பாடா! உன் மீது இருந்த பாசத்தில் தானே, இப்படிச் செய்துவிட்டாயே என்று அன்று கோபப்பட்டார். அவரிடம் போய் ரோசம் பாராட்டலாமா? வாய்விட்டுக் கேட்காவிட்டாலும் நாங்கள் போனதும் அவரது கண்கள் கேட்கும், நீ எங்கே என்று. நாங்கள் சொல்வதைக் கேள் தர்சன். வீட்டுக்கு வா..” என்றான் அமலன் தர்சனின் அருகில் அமர்ந்து, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தபடி.
தன் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையின் பாசத்தை எண்ணித் துயர் கொண்ட அந்தக் கம்பீரமான ஆண்மகனின் விழிகள் கூட மெலிதாகக் கலங்கின. அவமானம் ஒருபுறம் என்றால் குற்ற உணர்ச்சி மறுபுறம் நின்று அவனைத் தாக்கியது.
“பிறகு வருகிறேன்.” என்றான்.
எவ்வளவு சொல்லியும் வருகிறான் இல்லையே என்கிற கோபத்தில், “உன்னைப் பற்றியே நினைத்துக் கவலைப்படும் எங்கள் எல்லோரையும் விட ஓடிப்போனவள் தான் உனக்குப் பெரிதாகத் தெரிகிறாளோ?” என்றான் அமலன்.
தர்சனோ அவனை முறைத்தான். “உன்னிடம் சொன்னேனா நான் அவளைப் பற்றித்தான் யோசிக்கிறேன் என்று? இனி யாரும் என்னிடம் அவளைப் பற்றிப் பேசக்கூடாது சொல்லிவிட்டேன்! இப்போது என்ன? நான் வீட்டுக்கு வரவேண்டும், அவ்வளவுதானே! இன்று மாலை வருகிறேன்!” என்றவனை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தார்கள் சகோதரர்கள்.
“டேய்! நம்புங்கடா. கட்டாயம் வருவேன். இப்போது என்னைக் கொஞ்சம் தனியாக விட்டுவிட்டுப் போங்கடா!” என்றான் எரிச்சலும் இயலாமையுமாக.
“சரி! உன் பேச்சைக் கேட்டுப் போகிறோம். மாலை நீ வரவில்லை என்றால், என்ன ஆனாலும் சரிதான் என்று அப்பா, அம்மா, அத்தை என்று எல்லோரையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிடுவேன். எல்லோரும் பார்க்கட்டும் நீ இங்கிருந்து என்ன செய்கிறாய் என்று.” என்று, அங்கு நிலத்தில் உருண்டு கிடந்த போத்தல்களைக் காட்டிச் சொல்லிவிட்டு அமலனுடன் வெளியேறினான் விமலன்.
மஞ்சுளா வாசலுக்கு வருவதும், வீதியில் மகனின் கார் தென்படுகிறதா என்று பார்ப்பதும், உள்ளே போவதும் என்று ஓரிடத்தில் நில்லாமல் பரபரப்பும் எதிர்பார்ப்புமாக நடை பயின்றுகொண்டிருந்தார்.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.