அத்தியாயம்-15
அன்று மதிய உணவை முடித்துவிட்டு, அமலனின் மகள் அமிர்தாவை மடியில் இருத்திக்கொண்டு, தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருந்த தர்சனிடம், “உனக்குத் திருமணத்தை நடத்திவிடலாம் என்றிருக்கிறேன்!” என்று அறிவித்தார் மஞ்சுளா.
முகத்தைச் சுளித்தபடி தாயைத் திரும்பிப் பார்த்தான் தர்சன்.
“இதைத் தவிர உங்கள் வாயிலிருந்து வேறு பேச்சே வராதா? எப்போ பார் திருமணம் திருமணம் திருமணம்!” என்றான் எரிச்சலும் சலிப்புமாக.
அதைக்கேட்டு அவனுக்கு மேலால் கோபப்பட்டார் அன்னை. “இந்த ஆறுமாதமாக எப்போது இதைப்பற்றி உன்னிடம் நான் பேசினேன்? நீதான் பொய்க்கு மேலே பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறாய். முதலில் ஒரு வருடம் போகட்டும் என்றாய். சரி என்று விட்டேன். பிறகு ஒரு ஆறுமாதம் என்றாய். அதற்கும் விட்டேன். திரும்பவும் ஆறுமாதம் என்றாய். அதற்கும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தேன். இனி என்னால் பொறுக்க முடியாது!”
“இன்னும் ஒரு இரண்டு வருடம் போகட்டும்..” என்றான் அவன்.
“இரண்டு வருடமா? இனி இரண்டு நாள் கூட நான் பொறுக்கமாட்டேன்.”
“என்னாலும் திருமணத்துக்குச் சம்மதிக்க முடியாது!” என்றான் அவனும் அழுத்தமான குரலில்.
“ஏன்? இன்னும் ஓடிப்போனவளை உன்னால் மறக்க முடியவில்லையா?” மகேஸ்வரி இன்னும் பள்ளிக்கூடத்தால் வரவில்லை என்பதால் வெளிப்படையாகவே கேட்டார் மஞ்சுளா.
“அம்மா!!” கிட்டத்தட்டக் கோபத்தோடு இரைந்தான் தர்சன்.
“எவளையும் நான் நினைக்கவில்லை. தேவை இல்லாமல் எதையும் பேசி என் கோபத்தைக் கிளப்பாதீர்கள்!” என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில்.
“பிறகு என்னடா? இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படித் தனியாகவே இருக்கப் போகிறாய்? உனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டாமா?”
“வேண்டாம்! இந்த வாழ்க்கையே எனக்கு நிறைவாகத்தான் இருக்கிறது!”
“எனக்கு நிறைவாக இல்லையே! என் மகன் தனித்து நிற்கிறானே என்று தினமும் நான் படும் கவலை எனக்கு மட்டும்தானே தெரியும். இந்தக் கவலையிலேயே நான் நேரத்துக்குப் போய்ச் சேருகிறேனோ தெரியாது.” என்ற அன்னையை முறைத்தான் தர்சன்.
“உங்களை யார் கவலைப்பட்டு உடம்பைக் கெடுக்கச் சொன்னது?”
“நானாக ஆசைப்பட்டுத்தான் என் உடம்பைக் கெடுத்துக்கொள்கிறேன் பார்!” என்று நொடித்த மஞ்சுளா, “அவ்வளவு அக்கறை இருக்கிறவன் ஒரு கல்யாணத்துக்குச் சம்மதி. அதைவிட்டுவிட்டு என் மேல் பாசமாக இருக்கிறவன் மாதிரி நடிக்காதே!” என்றார் காட்டமாக.
தன்னை அன்னை புரிந்துகொள்கிறார் இல்லையே என்கிற இயலாமையுடன் விழிகளை இறுக மூடித் திறந்தான் தர்சன்.
“இன்னொரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அம்மா. ஒரே வெறுப்பாக இருக்கிறது. அதனால் என்னை விட்டுவிடுங்கள்.” என்றான் நொந்த குரலில்.
அதைக் கேட்ட மஞ்சுளாவின் பெற்ற வயிறு கலங்கியது. கட்டிய மனைவி கணவனை விட்டுவிட்டு வீட்டுப்படியைத் தாண்டிப் போனால் அந்த ஆண்மகனுக்கு அது எவ்வளவு பெரிய இழுக்கு என்பது அவருக்குப் புரியாமல் இல்லை. என்றுமே அதை மறக்கவும் முடியாது மாற்றவும் முடியாது என்பதையும் அறிவார். அதற்காக அவனை அப்படியே விடமுடியுமா?
அங்கே, இலக்கியாவின் வீட்டில் சென்று பெண்ணும் கேட்டுவிட்டாரே. இனி பின்வாங்கத்தான் முடியுமா?
கலங்கிய மனதைப் பெரும் பாடுபட்டு அடக்கிக்கொண்டார்.
தான் பலகீனப் பட்டுவிட்டதை மகன் கண்டுகொண்டால் தன்னை ஏய்த்து விடுவான் என்பதை அறிந்திருந்தவர், “எக்கேடோ கெட்டுப்போ என்று என் பிள்ளையை என்னால் அப்படியே விட்டுவிட முடியாது. அதனால் உனக்காக ஒரு பெண்ணை நான் பார்த்துவிட்டேன். அவள்தான் உன் மனைவி.” என்றார் கறார் குரலில்.
“என்னது?” அதிர்ந்தே போனான் தர்சன்.
எப்போதும்போல் அன்னை கேட்கிறார், இந்த முறையும் எதையாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று அவன் நினைக்க, அவரோ பெண்ணையே பார்த்துவிட்டதாகச் சொல்கிறாரே!
“யாரைக்கேட்டுப் பெண் பார்த்தீர்கள்?” என்று எகிறினான் அவன்.
“நான் யாரையடா கேட்கவேண்டும்?” என்று அவனுக்கு மேலால் நின்றார் அன்னை.
“எப்போதும் போல அம்மா சும்மா கத்துவார். எதையாவது சொல்லி வாயை அடைக்கலாம் என்று நினைத்தாய் போல. இனி அதெல்லாம் முடியாது!” என்று அவனை அறிந்தவராக மஞ்சுளா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, விமலனும் அமலனும் வந்து சேர்ந்தனர்.
“என்னம்மா சத்தம்? அங்கே வாசல் வரைக்கும் கேட்கிறது.” என்றான் விமலன்.
“சத்தம் போடாமல் வேறு என்னடா செய்யச் சொல்கிறாய்? உன் தம்பியை மரியாதையாகத் திருமணத்துக்குச் சம்மதிக்கச் சொல்லு. நான் பெண்ணும் பார்த்துவிட்டேன்.” என்று அவனிடமும் கோபப்பட்டார் அவர்.
“இது எப்போதம்மா நடந்தது? யார் பெண்?” என்று விசாரித்தான் அமலன்.
“இப்போ இருக்கிற பிரச்சினையில் உனக்கு அதுதான் முக்கியமா?” என்று அவனிடமும் எரிந்து விழுந்தார் அவர்.
“பின்னே? பெண் யார் என்பது முக்கியம் இல்லையா? இந்த வீட்டுக் கடைசி இளவரசனுக்கு மனைவியாக வரப்போகிறவள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?” என்று இலகுவாகவே பேசி அன்னையைச் சமாதானப்படுத்த முயன்றான் அமலன்.
“என்னடா? எதையாவது சொல்லி அம்மாவை ஏமாற்றலாம் என்று நினைத்தாயா? வாயை மூடிக்கொண்டு மரியாதையாக உள்ளே போ. இன்றைக்கு இரண்டில் ஒரு முடிவு தெரியாமல் நான் விடமாட்டேன்.” என்றவரை, அதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்பதை மூன்று பிள்ளைகளுமே புரிந்துகொண்டனர்.
திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் தர்சன் மறுப்பதும் மஞ்சுளா கோபப்படுவதும் அந்த வீட்டில் நடக்கும் வழமையான ஒன்றுதான். ஆனால், இன்று அவரின் முகத்தில் தெரிந்த பிடிவாதமும், பேச்சில் இருந்த உறுதியும் புதிது! அவர் சொன்னது போலவே ஒரு முடிவு காணாமல் இன்று தர்சனை விடமாட்டார் என்பது நன்றாகவே துலங்கியது.
அதோடு, இனியும் தம்பியை இப்படியே தனியே விட்டுவைக்கப் பிரியப்படாத சகோதரர்கள் இருவரும் இதற்கு மேல் உன்னைக் காப்பாற்ற முடியாது என்பதாகத் தர்சனை ஒருபார்வை பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டனர்.
மூன்று பிள்ளைகளினதும் அந்த அமைதி கூட மஞ்சுளாவுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.
“இவ்வளவு நேரமாகக் கிடந்து கத்துகிறேன், சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்கிறானா என்று பாருங்கள். அம்மா மேல் பாசம் இருந்தால், என் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருந்தால் இப்படி இருப்பானா?” என்று மூத்த மக்களிடம் கடைசி மகனைப் பற்றிச் சொன்னவருக்கு ஆற்றாமையில் விழிகள் கலங்கின.
“அவனுக்கே அவ்வளவு பிடிவாதம் என்றால், அவனைப் பெற்றவள் எனக்கு எவ்வளவு இருக்கும்!” என்றார் இப்போது ஆத்திரத்தோடு.
தாயின் வேதனை புரிய, “ப்ச்! தர்சன். எதற்கும் ஒரு அளவு உண்டு. சும்மா எப்போதோ நடந்ததையே பிடித்துக்கொண்டு தொங்காதே! அம்மாதான் இவ்வளவு தூரம் கேட்கிறாரே, சம்மதம் என்று சொல்லுடா!” என்றான் விமலன்.
தர்சன் அவனை முறைக்க, “அவன் சொல்லமாட்டான். அவ்வளவு பிடிவாதம் அவனுக்கு. ஆனால், அவன் சம்மதம் சொல்லாமல் இனி நான் இந்த வீட்டில் ஒருவாய் சோறு சாப்பிட மாட்டேன். பட்டினி கிடந்தே சாகிறேன். அதன் பிறகு அவன் நிம்மதியாக இருக்கட்டும்!” என்றார் அன்னை.
அதைக்கேட்டு ஆத்திரத்தோடு எழுந்த தர்சன், “தினமும் உங்கள் கண்ணில் நான் படுவதால் தானே என்னைப்போட்டு இந்தப்பாடு படுத்துகிறீர்கள். நான் வவுனியாவுக்கே போகிறேன். அங்கிருக்கும் கடையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே இருக்கிறேன். போதுமா? உங்கள் கண்ணிலேயே படவில்லை. இனியாவது பட்டினி கிடக்கிறேன், சாகிறேன் என்று எதையாவது உளறாமல் நிம்மதியாக இருங்கள்!” என்றுவிட்டு, ஆத்திரத்தோடு அங்கிருந்து வெளியேறினான்.
“கொஞ்சம் நில்லு தர்சன்!” என்றான் விமலன், கண்டிப்பான குரலில்.
முற்றத்தில் இறங்கிவிட்டவன் நின்று திரும்பிப் பார்க்க, விமலனும் அமலனும் அவனருகில் சென்றனர்.
“அப்பா அம்மா, அண்ணன் அண்ணிகள், பிள்ளைகள், இந்த வீடு என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு வவுனியாவுக்குப் போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு உனக்கு உன் பிடிவாதம் பெரிதாகப் போய்விட்டதா?” என்றவனை இடைமறித்தான் தர்சன்.
“நீயும் புரியாமல் பேசாதே அண்ணா. ஆசைப்பட்டுக் கட்டியவள் என்னை விட்டுவிட்டு ஓடியதும் அல்லாமல் இன்னொருவனைக் கட்டி வாழ்கிறாள் என்று நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது. என்னை ஆண்பிள்ளை இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள் ஒருத்தி. அவளை வெட்டிப்போட்டுவிட்டு ஜெயிலுக்குப் போனால் என்ன என்றுகூட எத்தனையோ தடவைகள் நினைத்திருக்கிறேன். அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணமே நீங்கள் எல்லோரும் என்னால் இனியும் கஷ்டப்படக் கூடாது என்பதால் தான். அப்படிக் கையாலாகாதவனாக இருக்கும் என்னை எனக்கே பிடிக்கவில்லை. இன்னொரு பெண்ணைப் பற்றியோ திருமணத்தைப் பற்றியோ நினைத்தாலே ஆத்திரமும் ஆவேசமும்தான் வருகிறது. என்னைக் காட்டினால் வருகிறவளும் சந்தோசமாக இருக்கமாட்டாள். இது தேவையா? அதனால் என்னை விட்டுவிடுங்கள். இனி எனக்கு இதுதான் வாழ்க்கை.” என்றவனின் பேச்சில் சகோதரர்கள் இருவருமே மிகவுமே அதிர்ந்துதான் போயினர்.
அவன் பட்ட காயம் காலத்தால் ஆறிவிடும் என்று அவர்கள் காத்திருக்க, அதுவோ புரையோடிப்போய் அவனை மிருக நிலைக்குக் கொண்டு செல்கிறதோ என்று ஐயம் கொண்டனர்.
இப்படியே போனால் தம்பி மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளானாலும் உள்ளாவான் என்று எண்ணிய அமலன், இனியும் அவனை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.
“இல்லை தர்சன்! இனி நீ என்ன சொன்னாலும் நாங்களும் கேட்பதாக இல்லை! ஒன்றில் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையானால் எங்கள் மனைவி பிள்ளைகளை அவர்களின் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாங்களும் உன்னைப்போலத் தனியாட்களாக இந்த வீட்டில் இருக்கிறோம்.” என்றான் உறுதியான குரலில்.
தன்னுடைய சகோதரர்கள் அந்தளவுக்குப் பொறுப்பற்றவர்கள் அல்லவே! தமையன்களை நம்பாத பார்வை அவன் பார்க்க, “நடக்காது என்று நினைக்காதே! உனக்காக என்னவும் செய்வோம்!” என்றான் அமலன் அப்போதும் உறுதியான குரலில்.
அது மெய்தானே! அவனுடைய சகோதரர்கள் அவனுக்காக எதுவும் செய்வார்களே! அந்தப் பாசம் கூட இப்போது ஆத்திரத்தைக் கிளப்பியது அவனுக்கு.
“உனக்கென்ன பைத்தியமாடா? நீங்கள் எதற்கு அண்ணிகளை அவர்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும்? நீயும் என்ன அண்ணா அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறாய்?” என்று கோபமாக அமலனிடம் ஆரம்பித்து விமலனிடம் முடித்தான் தர்சன்.
“நீ சம்மதிக்காவிட்டால் அவன் சொன்னதுதான் நடக்கும்!” என்றான் விமலன்.
அதற்கும் தர்சன் என்னவோ சொல்ல வரவும், ஒரு கையை நீட்டி மறித்தான் அமலன். “இதுவரை பேசியதே போதும் தர்சன்! ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவதில் அர்த்தமில்லை. முடிவு உன் கையில். ஆனால், நாங்களும் எடுத்த முடிவிலிருந்து மாறமாட்டோம்!” என்றவன், “வாண்ணா சாப்பிடலாம். பசிக்கிறது..” என்று விமலனையும் அழைத்துக்கொண்டு திரும்ப வீட்டுக்குள் சென்றான்.
செயலற்ற ஆத்திரத்துடன் அவர்களின் முதுகை முறைத்தவன் எரிச்சலுடன் அங்கிருந்து கிளம்பினான்.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.