அத்தியாயம்-9
“அம்மா, எனக்குத் தங்கச்சி பாப்பா வேணும்மா..”
“டேய்! இதையே திரும்பத் திரும்பச் சொல்லதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். ஓடு.. ஓடிப்போய்த் தோட்டத்தில் விளையாடு!” என்று கடுப்புடன் மகனைத் துரத்தினாள் ராகினி.
நேற்றிலிருந்து அர்ஜூனின் பேச்சு இதுவாகவே இருந்தது. முதலில் கேட்கையில் அதிர்ந்துதான் போனாள் ராகினி.
“என்னடா சொல்கிறாய்? தங்கச்சி பாப்பாவா? இதெல்லாம் உனக்கு யாரடா சொல்லித் தந்தது?” என்று அவள் அதிர்ச்சியோடு கேட்டபோது,
“தர்சன் சித்தப்பா தான்மா சொன்னார். அவரிடம் இன்னொரு அர்ஜூன் வேண்டும் என்று நான் கேட்டதற்கு உன் அப்பாவிடம் போய்த் தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேளுடா என்று சொன்னார்மா..” என்றான் அவள் மகன்.
சிறு பிள்ளையிடம் பேசும் பேச்சா இது என்று கோபம் வந்தபோதும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்தவள், மகனின் வாயிலிருந்து நடந்ததை முடிந்தவரை பிடுங்கிக்கொண்டாள்.
ஆக, தர்சன் வெண்பாவுக்குள் இன்னும் ஒன்றும் சரியாகவில்லை என்பதும், சோபா வந்ததற்கான அவளது ஊகமும் சரி என்பதைக் கணித்தவள், முதலில் மகனைச் சமாதானப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து, “இப்படியெல்லாம் கேட்கக் கூடாது கண்ணா..” என்றாள் அவனிடம்.
“ஏன்மா?”
“அது.. தங்கச்சி பாப்பா வரும்போதுதான் வரும். நீயாக இப்படிக் கேட்கக் கூடாது. அதுவும் வேறு யாரும் நிற்கும்போது நீ இப்படிப் பேசவே கூடாது. பேசினால் உன் பழக்கவழக்கம் சரியில்லை என்று எல்லோரும் சொல்வார்கள்.” என்று, எதையெதையோ சொல்லி மகனைச் சமாளித்தாள் ராகினி.
ஆனால், அந்தச் சமாளிப்பு அவன் தன்னை மறந்து விளையாடும் பொழுதுகளில் மட்டுமே வேலை செய்தது.
தனியே விளையாடி அலுத்துக் களைப்பவன், சேர்ந்து விளையாட இன்னொருவர் தேவை என்று வருகையில் தாயிடம் மீண்டும் அதே பாட்டை ஆரம்பித்தான்.
அப்படித்தான் இன்றும் அவர்களின் அறையில் இருந்து துவைத்துக் காயவைத்து எடுத்துவந்த உடைகளை மடித்துக்கொண்டிருந்த தாயிடம் கேட்டான் அர்ஜூன்.
“நான் தனியா எப்படிம்மா விளையாடுவது? அமலன் சித்தப்பாவும் வரமாட்டாராம். தர்சன் சித்தப்பாவும் வரமாட்டாராம். எனக்குத் தங்கச்சி பாப்பா இப்போவே வேணும்.” என்றான் அடமாக.
‘அப்படியே அவன் சித்தப்பா மாதிரியே எல்லாத்துக்கும் அடம்!’ என்று பல்லைக் கடித்தாள் ராகினி.
“அம்மா..!” விடாமல் அவளின் சட்டையைப் பிடித்து இழுத்தான் மகன்.
“அர்ஜூன்! அம்மாவை வேலை செய்ய விடு! நீ போய் டிவியைப் பார். போ!” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.
“மாட்டேன்! எனக்கு இப்போவே தங்கச்சி வேணும்!” என்றான் அவனும் பிடிவாத குரலில்.
ராகினியின் பொறுமை பறக்க, “நீ வாயால் சொன்னால் கேட்கமாட்டாய். எங்கே அந்தக் குச்சி. உனக்கு இரண்டு போட்டால்தான்டா சரி..” என்றபடி அவள் அங்கிருந்த குச்சியைத் தூக்க, அடிக்குப் பயத்தில் அறையை விட்டே ஓடினான் அர்ஜூன்.
ஓடியவன் சென்று மோதியது வீட்டுக்குள் விமலனோடு வந்துகொண்டிருந்த தர்சனில்.
“டேய் அர்ஜூன்! பார்த்துடா..” என்றபடி, அண்ணன் மகனைத் தூக்கியவனின் விழிகளில் குச்சியுடன் வந்துகொண்டிருந்த ராகினி பட்டாள்.
“ஏன் அண்ணி இவன் இப்படித் தலைதெறிக்க ஓடிவருகிறான்?” என்று அவன் கேட்டதற்கு,
“அம்மா அடிக்க வராங்க சித்தப்பா..” என்று, முறையீடு செய்தான் அர்ஜூன்.
“பிள்ளைக்கு அடிக்காதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் ராகினி. அவன் பயப்படுகிறான் பார்!” என்றான் விமலன் அதட்டலாக.
அங்கு நின்ற மூவரையுமே முறைத்தாள் ராகினி.
“அவன் பேசும் பேச்சுக்கு அடிக்காமல் கொஞ்சுவார்களா? எல்லாம் உங்களின் அருமைத் தம்பியால் வந்தது!” என்றாள் தர்சனை முறைத்தபடி.
புருவங்கள் சுருங்க மனைவியைப் பார்த்த விமலனுக்கு, இரவு மகனின் பேச்சைப் பற்றி மனைவி சொன்னது நினைவில் வரவே அவன் விழிகளில் விசமத்துடன் கூடிய கேலி படர்ந்தது.
தர்சனோ, “நான் என்ன செய்தேன் அண்ணி?” என்று புரியாமல் கேட்டான்.
அதை வாய்விட்டுச் சொல்லமுடியாமல் கூச்சம் தடுக்க, “உங்களை மாதிரியே வந்திருக்கிறான் அவனும். செய்வதை எல்லாம் செய்வது. பிறகு நல்லபிள்ளைக்கு நடிப்பது!” என்றாள் அப்போதும் கோபத்தோடு.
குறும்புச் சிரிப்புடன் விமலன் தம்பியைப் பார்க்க, “டேய் அண்ணா! விஷயத்தைச் சொல்லிவிட்டுச் சிரிடா!” என்றான் தர்சன்.
அதற்குப் பதில் சொல்லாத விமலன் தம்பியிடம் இருந்து மகனைக் கையில் வாங்கியவன், “இப்போது என்ன? அர்ஜூனுக்குத் தங்கச்சிப் பாப்பா வேண்டுமா?” என்று கேட்டான் அடக்கப்பட்ட புன்னகையோடு.
அவன் தலை பெரிதாக ஆம் என்பதாக ஆட, முறைத்துக்கொண்டு நிற்கும் மனைவியைக் கீழ்கண்ணால் பார்த்துவிட்டு, “சரி, நீ இன்னும் ஒரு பத்து மாதம் பொறுத்துக்கொள். பிறகு உனக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா வருமாம். பிறகு அந்தத் தங்கச்சிப் பாப்பா விளையாட இன்னொரு தம்பி பாப்பா வருமாம். பிறகு அந்தத் தம்பி விளையாட இன்னொரு தங்கச்சி வருமாம்…” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க அர்ஜூன் சந்தோசத்தில், “ஹை! ஜாலி ஜாலி!” என்று துள்ளிக் குதிக்கத் தொடங்கினான்.
அதுபோதாமல், “சித்தப்பா, எனக்கு நிறையத் தங்கச்சிப் பாப்பாவும் தம்பி பாப்பாவும் வரப்போகுதே!” என்று தர்சனிடமும் தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டான் மகன்.
அந்தச் சித்தப்பாவோ வெட்கத்திலும் கோபத்திலும் சிவந்துவிட்ட முகத்தோடு கணவனைக் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்த அண்ணியாரைப் பார்த்து வெடித்த சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
“ஆமான்டா கண்ணா! உனக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை தம்பியும் தங்கையும் கிடைக்குமாம். நீ கவலைப் படாதே சரியா!” என்ற கணவனை, அதற்குமேலும் பொறுக்க முடியாமல்,
“என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது உங்களுக்கு? பிள்ளை பெற்றுப்போடும் மெஷின் மாதிரியா? விவஸ்தையே இல்லாமல் உளறும் உங்களுக்குத்தான் முதலில் நான்கு போடவேண்டும்.” என்றவள், கையிலிருந்த குச்சியால் கணவனை அடிக்கத் தொடங்கினாள்.
அந்த அடிகள் கையிலிருந்த மகன்மேல் பட்டுவிடாமல் அவனைப் பாதுகாத்துக் கொண்டே, “ஹேய் விடுடி! வலிக்குது. கட்டின புருஷனை அடிக்கலாமா ராகி? யாராவது பார்த்தால் உன் புருசனைத்தான் கேலி செய்வார்கள். விடுடி, அர்ஜூன்மேல் பட்டுவிடப் போகிறது.” என்று பொய்யாக அலறினான் விமலன்.
“வலிக்கட்டும்! நன்றாக வலிக்கட்டும். யார் பார்த்தாலும் எனக்குக் கவலையில்லை..” என்றபடி, அடித்துக் கொண்டிருந்தவளையும், தமையனையும் பார்த்த தர்சன் அதற்குமேலும் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.
ஒரு கட்டத்துக்கு மேலே, அடிவாங்கும் தந்தையைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் மகனின் சிரிப்பை ரசிப்பதற்காகவே ராகினி பொய்யாக அடிப்பதும், விமலன் வலி தாங்கமாட்டாமல் அலறுவதைப் போன்று நடிப்பதையும் பார்த்த தர்சனின் விழிகளில் ஏக்கம் படர்ந்தது.
எவ்வளவு அழகான சின்னக் குடும்பம் அது. என்னதான் வெளியில் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் அந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்யோன்யத்தை அவன் அறிவானே!
அதை அறிந்தவன், தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே என்று ஏங்கினான்.
மனைவி, மகன் என்று சந்தோசமாக வாழ அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லையோ?
இதழ்களில் புன்னகையும் விழிகளில் ஏக்கமுமாக நின்றவனைப் பார்த்தபடி வந்த மஞ்சுளாவுக்கு நெஞ்சுக்குள் வலித்தது. வயது முதிர்ந்த இந்தக் காலத்திலும் பாசத்தோடும் புரிந்துணர்வோடும் தானும் கணவனும் வாழ, மகனோ வாழவேண்டிய வயதில் தனித்துப்போய் நிற்கிறானே என்று தவித்தது அவரது தாயுள்ளம்.
அந்தப் பக்கம் விமலனை ராகினி அடிப்பதைக் கண்டுவிட்டு, “ராகினி, என்ன இது? எதற்கு அவனை அடிக்கிறாய்?” என்று அதட்டினார்.
சட்டென அடிப்பதை நிறுத்திவிட்டு, “அது சும்மா அத்தை...” என்றாள், ராகினி தடுமாற்றத்துடன்.
பின்னே, கணவனின் வெட்கம் கெட்ட பேச்சை மாமியாரிடமும் கடை பரப்ப முடியுமா என்ன?
ஆனால், அந்தக் குறும்புக்காரக் கணவனோ, “அதுவாம்மா..” என்று ஆரம்பிக்க, சட்டென அவனின் வாயை தன் கைகொண்டு பொத்தியவள், “எதையாவது உளறினீர்கள் என்றால் கொன்றுவிடுவேன்!” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
ஏதோ கணவன் மனைவிக்குள் என்னவோ என்று நினைத்து அதை ஒதுக்கிய மஞ்சுளா, “தர்சா, உன் திருமணத்தைப் பதியவேண்டுமே. எப்போது பதியலாம்?” என்று கேட்டார். அதன் பிறகாவது அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்புடன்...
அதுவரை அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது. திருமணத்தைப் பதிந்தால் மட்டும் உள்ள நிலைமை மாறியா விடப்போகிறது என்று விரக்தியோடு எண்ணியவனின் மனம், அப்படி மாறிவிடாதா என்றும் ஏங்கியது.
“அது.. கொஞ்சநாள் போகட்டும்மா..” என்றான்.
“என்னடா கொஞ்ச நாள் போகட்டும்? அதெல்லாம் முடியாது. அமலனின் திருமணத்தின்போது அவனோடு சேர்த்து உன்னுடைய திருமணத்தையும் பதியப் போகிறோம். அவ்வளவுதான்!” என்று அறிவித்தவர், அதற்குமேல் அதைப்பற்றி மகனிடம் பேச விளையவில்லை.
அவர்களின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மஞ்சுளாவோ அங்கு வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தவர்களுக்கு ஒவ்வொரு வேலைகளை ஏவியபடி பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார்.

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.