என்னைக் களவாட வந்தவளே - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113



என்னைக் களவாட வந்தவளே...

அத்தியாயம் 1:

"செல்லாத்தா செல்ல மாரியாத்தா...
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா...
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா...
இந்த கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா..."

ஒலிபெருக்கியில், ஊர் முழுவதும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஒரு வாரத் திருவிழா. ஊர் மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபடுவர்.

முளைப்பாரியில் 11 வகையான தானியங்கள் - சிறுபயறு, தட்டாம் பயறு, பாசிப்பயறு, மொச்சை, சோளம், கம்பு, பருத்தி போன்ற தானியங்களை கோவிலின் அருகில் குடிசை போட்டு பாரி ஓட்டில் வளர்த்து, ஏழாம் அல்லது எட்டாம் நாள் (வழக்கமாக 8-ம் நாள்) ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

அந்த மாரியம்மன் கோவில் தெருவின் ஒரு வீட்டில், அந்த வீட்டின் தலைவி தனலெட்சுமி, 'பொட்டபுள்ள எவ்ளோ நேரம்டி இழுத்து போர்த்திட்டு தூங்குவ'.

சேவ கூவி பொழுதும் விடிஞ்சிருச்சு. சீக்கிரம் எந்திரி வேல கிடக்கு என தனது அருமை மகளை சுப்ரபாதம் பாடி எழுப்பிக் கொண்டிருந்தார்.

அவளே நம் கதையின் நாயகி "பூங்கொடி" .

கதிரேசன் - தனலெட்சுமி தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் - செந்தூர்பாண்டியன், இளஞ்செழியன், பொற்செழியன்.

அவர்களின் ஊரில் விவசாயம் தான். எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என இருக்கும். முப்போகம் விளையும் பூமி.வீட்டில் அனைத்து மக்களையும் படிக்க வைத்து இருந்தாலும் விவசாயமே பிரதான தொழில்.

பெண் பிள்ளை வேண்டும் என ஆசைப்பட்டு கடைசியாக பிறந்தவள் பூங்கொடி. கடைக்குட்டி, ரொம்ப செல்லம், சரியான அருந்த வாலு.

அம்மா நீ பாட்டுக்க கத்து நான் பாட்டுக்க தூங்குறேன், என கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள்.

அவளது அம்மா பொறுத்து பார்த்தவர் பொறுமை இழந்து முதுகிலேயே ஒரு அடியை போட "அம்மா.... " என அலறி எழுந்து உட்காந்தாள்.

'போய் குளிடி எரும' என திட்டி விட்டு அவர் சமயலறைக்கு சென்றுவிட்டார்.

பூங்கொடி சினுங்கிக் கொண்டே எழுந்து குளித்து உடைமாற்றி கண்ணாடி முன்பு நின்றாள்.

கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் 22 வயது பெண் பாவை. ஐந்து அடி மூன்று அங்குல உயரம், கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகு, கோதுமை நிறம், கிராமத்து அழகி.

தன் முகத்தை பார்த்து தானே ரசித்து விட்டு கிளம்பி அறையை விட்டு வெளியில் வந்தாள்.
அவள் வருவதை பார்த்த தனலெட்சுமி, மகள் அரக்கு நிறத்தில் பாவடை தாவணி அணிந்து வருவதை கண்டு கண் எடுக்காமல் பார்த்தார்.

அம்மா பூ வைக்கனும் என கத்தினால் பூங்கொடி, அதில் கலைந்தவர் அதுக்கு ஏன்டி இப்படி கத்துற என கூறிவிட்டு குளிர்சாதன பெட்டியில் நேற்று அவரின் மகன் வாங்கி வந்த மல்லிகை பூவை எடுத்து தலை நிறைய வைத்து விட்டார்.

பூங்கொடிக்கு நல்ல நீண்ட கூந்தல் தரையை தொட்டுவிடும் அளவு இருக்கும். எல்லாம் அவள் அம்மாவின் பராமரிப்பு.

அம்மா நான் அத்தை வீட்டுக்கு போய்ட்டு வரேன் என நிக்காமல் கூறி கொண்டே ஓடி விட்டாள்.

"பொட்ட கழுத காலைலயே சாப்டாம கூட ஓடிட்டா இருடி வீட்டுக்கு வந்துதானே ஆகனும். அப்போ கவனிச்சுகிறேன்டி" என திட்டிவிட்டு வேலையை கவனிக்க சென்று விட்டார்.

அத்தை வீட்டு வாசலில் பெரிய கோலமிட்டு அதற்கு வண்ணமிட்டு இருந்தனர். பெரிய வீடு, நான்கு அறைகள், சமையலறை, முற்றம் என பழைமை மாறாமல் இருந்த வீடு பார்க்கவே கண்களை கவர்ந்தது.

பின்புறம் தென்னந்தோப்பு, வாழை, மாமரம், பூச்செடி என அழகாக இருந்தது.

மற்றொரு பக்கம் கோழிகள், ஆடுகள், மாடு அனைத்தும் கொட்டகை போட்டு சுத்தமாக வைத்து இருந்தனர். ஜல்லிக்கட்டு காளை "வீரா"-வும் அவர்கள் வீட்டில் ஒருவராக இருக்கிறான்.

பூங்கொடி வீட்டின் உள்ளே நுழையும் போதே கறி குழம்பு வாசனை வாசல் வரை வந்தது. ஆஹா...! எங்க அத்தை வைக்குற குழம்பே ஒரு ருசி.! என சப்புக் கொட்டிக் கொண்டே வந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தார்கள், அவளது அத்தை முருகவள்ளியும், அவரது கணவன் சுப்பிரமணியும்.

முருகவள்ளியும் கதிரேசனும் அண்ணன் தங்கை. அதேபோல் தனலட்சுமியும் சுப்ரமணியும் அண்ணன் தங்கை.

தாய்மாமன் வீட்டில் பெண் எடுத்து, பெண் கொடுத்தனர்.எப்பொழுதும் தோழியைப் போல் முருகவள்ளியும் தனலட்சுமியும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

சுப்பிரமணி - முருகவள்ளி தம்பதியினருக்கு முதல் பெண் அல்லிராணி, கடைசி பெண் ஜெயராணி, நடுவில் நம் கதையின் நாயகன் கருப்பான கலை அழகன் "இளமாறன்" என்று மூன்று மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

பூங்கொடி வருவதை பார்த்த அவளது மாமா சுப்ரமணி, 'வாடா ராசாத்தி ! மாமாவ வந்து பாக்க இவ்ளோ நேரமா? இன்னும் புள்ளைய காணோமேனு சாப்டாம காத்திட்டு இருக்கேன்' என தனது மருமகளை செல்லம் கொஞ்சினார்.

அவளோ சிரித்தபடி வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.
"எங்க அத்த என் அருமை அத்தாச்சிகள் இருவரையும் காணோம்..." என ராகமிழுத்தாள்.

அவள் கேட்கும் போதே இருவரும் சமயலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து உணவு மேசையில் வைத்தனர் அல்லிராணியும், ஜெயராணியும்.

ஜெயராணி, "உனக்கு என்னடி வீட்ல ஒரு வேலையும் பார்க்காம ஓடி வந்துருப்ப உன்ன ஒருத்தரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க,ஆனா இங்க அப்டியா",என பூங்கொடியை பார்த்து நொடித்துக் கொண்டாள்.

சரி அத்தாச்சி விடு..விடு... நமக்குள்ள என்ன? 'வா சாப்டுவோம்' என கை பிடித்து இருவரையும் உணவு மேசைக்கு அழைத்து வந்தாள்.

'என்ன? அல்லி ராணி அத்தாச்சி, உங்க வீட்ல இன்னொரு டிக்கெட் குறையுது' என வம்பு செய்தாள், பூங்கொடி.

அவளை முறைத்து பார்த்து விட்டு பின்னாடி கண்களால் பாரு என சைகை காட்டினாள்.

இவள் வேகமாக திரும்ப, மாடிப் படிகளில் தடதடவென பட்டு வேட்டி சட்டையில் கையில் முருகனின் வேல் காப்பும், கழுத்தில் ஓம் டாலர் போட்டு கழுத்துடன் ஒட்டிய சங்கிலியுடன், கருப்பாக கலையான அழகுடன் மிடுக்கான தோற்றத்துடன் இறங்கி வந்தான் இளமாறன்.

அவனை குறுகுறுவென பார்த்தவள் அவன் அருகில் வரவும் படக்கென குனிந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.அவளை பார்த்த மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

அவன் வந்து அமரவும், அவனின் அன்னை அனைவருக்கும் பூரி, பொங்கல், இடியாப்பம்,சாம்பார், வடைகறி, பாயாசம் என பரிமாறினார்.

என்ன அத்தை இவ்ளோ பண்ணி இருக்கீங்க? என பார்த்தாள் பூங்கொடி. அவளின் பார்வையை உணர்ந்த அவளின் அத்தை 'இன்னைக்கு திருவிழா அதான் இவ்ளோ செஞ்சேன் டா' என கூறி புன்னகைத்தார்.

இளமாறன், அவளை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு "ஏன்மா! உன் அண்ணன் மக ஒன்னுமே சாப்பிட மாட்டாளா? அதான் ரொம்ப ஒல்லியா இருக்கா போல!" என கிண்டலடித்தான்.

அவனை முறைத்து பார்த்த பூங்கொடி, மாமா பாருங்க 'அத்தான் என்னைய கிண்டல் பண்றாரு' என அழ தயாரானாள்.

"அடேய்! அவள ஏன்டா காலைலயே வம்புக்கு இழுக்குற பேசாம சாப்டு கோவில போய் வேலைய கவனிடா!" என அதட்டி விட்டு, மருமகளை சமாதானம் செய்தார்.

உடனே, பூங்கொடி அவனை பார்த்து பழிப்பு காட்டி விட்டு நல்ல பிள்ளையாக அனைத்து ஐட்டத்தையும் ஒரு கட்டு கட்டினாள்.

சாப்பிட்டு முடித்த இளமாறன், பூங்கொடி சாப்பிடுவதை பார்த்து சிரித்து விட்டு, 'குந்தாணி' என கூறிவிட்டு ஓடியே விட்டான்.

"அத்தான் நில்லுங்க வரேன், உங்களுக்கு இருக்கு ஒரு நாள்" என கத்தியது, காற்றில் தான் கரைந்து போனது.

"உன் கண்ணக்குழி
சிரிப்பில்
என்னை கிறங்கடித்தவனே...
உன் கண்களால்...
என்னை களவாடும்
நாளுக்காக காத்திருக்கிறேன்..."
 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.