என்னைக் களவாட வந்தவளே - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113




அத்தியாயம் 16:


அதிகாலையில் 'கீச்... கீச்...' என்ற குருவிகளின் ரீங்காரத்தில் இளஞ்செழியனின் மார்பில் துயில் கொண்டிருந்த தீபிகா கண் விழித்தாள். அவளின் அசைவால் அவனும் கண் திறந்தான்.

அப்பொழுதுதான் இரவு நடந்தது அனைத்தும் அவளுக்கு ஞாபகம் வர, வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகத்தைப் புதைத்தாள்.

அவளின் செயலால் சிரித்தவன், "ஓய்! எந்திரிடி, ஓவரா வெட்கப்படாதே... நீயே போய் குளிக்கிறியா? இல்லை நானும் நீயும் சேர்ந்து குளிப்போமா?" எனக் கேட்டு அவளின் கழுத்தில் கடித்தான்.

"ஆ...! போங்க செழியன்..." என அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் எழுந்து குளியல் அறைக்குள் ஓடிவிட்டாள்.



அனைவரின் வாழ்க்கையும் வழக்கத்திற்குத் திரும்பியிருந்தது. இப்பொழுது ஜெயராணியும் பூங்கொடியும் அவர்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றனர்.

ஜெயராணி கணித ஆசிரியராகவும், பூங்கொடி கணினி அறிவியல் ஆசிரியராகவும் இருக்கின்றனர்.

பூங்கொடி 12 ஆம் வகுப்பிற்கு வகுப்பு ஆசிரியராகவும் இருக்கிறாள். அது பெண்கள் மட்டும் பயிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. ஆசிரியர்கள் , வேலை செய்பவர்கள் மட்டுமே சில பேர் ஆண்கள் உள்ளனர்.


ஒரு மாலை வேளையில் பள்ளி முடிந்து பூங்கொடியும், ஜெயராணியும் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது பொற்செழியன் தன் பைக்கில் வந்தான் அவனைப் பார்த்து சிரித்த பூங்கொடி, "என்ன அண்ணே இந்தப் பக்கம்? இப்பலாம் ஓவரா காத்தடிக்குது?" என கிண்டல் செய்தாள்.

"ஓய்! வாயாடி! ரோடு இந்தப் பக்கம் தான் இருக்கு, வேற எங்கே போறது?" எனப் பேச்சு பூங்கொடியிடம் இருக்கப் பார்வை ஜெயராணியைத் தொட்டு தழுவியது.

அதைக் கண்ட பூங்கொடி, "அடியே ஜெயா, கால் வலிக்குதுன்னு சொன்னியே, அண்ணன் கூட பைக்ல போ, வீட்ல விடுவாங்க" எனக் கூறினாள்.


அதில் பதறிய ஜெயராணி, "அடியேய் பூவு! நான் எப்போ கால் வலிக்குதுன்னு சொன்னேன், சும்மா இருடி" என அவளின் கையை பிடித்துக் கிள்ளினாள்.


"அய்யோ...! அம்மா...! அண்ணா இங்க பாரு உன் வருங்கால பொண்டாட்டிய, நீன்னு நெனச்சு என்னைக் கிள்ளுறா" என அவனிடம் மாட்டிவிட்டாள்.

இவளின் செயலால் பூங்கொடியின் முதுகுப் பக்கம் மறைந்தாள் ஜெயராணி.

அதில் வாய்விட்டுச் சிரித்த பொற்செழியன், "பூங்கொடி, அண்ணிய ரொம்பப் படுத்தாத இப்பவே" என கூறிவிட்டு, ஜெயாவை பார்த்து கண்ணடித்துவிட்டு பைக்கை கிளப்பி சென்று விட்டான்.


அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருந்த ஜெயராணியைப் பார்த்துச் சிரித்த பூங்கொடி, "அய்யோ...! வட போச்சே...!" என வடிவேலு பாணியில் அவளைக் கலாய்த்தாள்.


"போடி! இவளே..." என கையில் வைத்திருந்த புத்தகத்தால் ஒரு அடியைப் போட்டு அவளை இழுத்துச் சென்றாள் ஜெயராணி.


சிறிது நேரம் தான் நடந்து சென்றிருப்பர், அதற்குள் பின்புறம் ஹார்ன் ஒலி கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்க்க கறுப்பு நிற ஜீப்பில் அமர்ந்திருந்த இளமாறன் இவர்களை வரச் சொல்லிச் சைகை செய்தான்.

அதில் பூங்கொடியைப் பார்த்து நமட்டு சிரிப்புச் சிரித்த ஜெயராணி, அவளை இழுத்துக் கொண்டு ஜீப்பின் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.

இளமாறன் கண்ணாடி வழியே அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த பாடலை மாற்றினான்.


"ஐ.ஆர் எட்டு நெல்லப் போலே
அவசரமா ஆசப் பட்டு
அயித்த மக மஞ்சத்துக்கு
ஆதாரமா அமைஞ்ச


குட்டிப் போட்ட பூன போல
காலச் சுத்தி குழைஞ்ச
பாவம்மின்னு நீவி விட்டா
பல்லு போட துணிஞ்ச

சொந்தகாரன் நான் தானே
தொட்டுப் பார்க்க கூடாதா

கண்ண தொடும் கை
ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா

இந்த நாட்டில் தீண்டாமை
தான் இன்னும் உள்ளதா???

வயசுக்கு வந்த பூ
ஓஹோ ஆசைய பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஓஹோ
சண்டையா சத்தமா...

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல...

மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல...!"



அந்தப் பாடலில் மெய்மறந்து அமர்ந்து அவளும் அவனைப் பார்க்க இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன.

இதைக் கவனித்த ஜெயராணி, தொண்டையை செருமி, "ஹலோ, ப்ரோ, நானும் இங்கே தான் இருக்கேன்.

கொஞ்சம் ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டுங்க. அஞ்சு நிமிஷத்துல போற வீட்டுக்கு அரை மணி நேரமா ஓட்டிட்டு வர்றீங்க. எப்போ தான் வீட்ல போய் விடுவ?" என அவன் தலையில் தட்டினாள்.


அதில் அசடு வழியே சிரித்தவன், முதலில் ஜெயராணியை அவர்களின் வீட்டில் கொண்டு போய் விட்டான்.


"சே...! இதுங்க ரொமான்ஸ் பண்றத பாக்கிறதுக்கு அத்தான் கூட ஜாலியா பைக்லயே வந்து இருக்கலாம்" என புலம்பிக் கொண்டே இறங்கி சென்றாள்.

அவளைப் பார்த்து சிரித்த இளமாறன் பின்னால் இருந்தவளிடம் கண்ணாலேயே முன் இருக்கையைக் காட்டினான்.

அவளும் புரிந்தது போல் இறங்கி வந்து அவனின் அருகில் அமர்ந்தாள்.

ஜீப் அவளின் வீட்டை நோக்கிச் செல்லாமல் வேறு எங்கோ சென்றது. அதை கவனித்தவள் எதுவும் பேசாமல் சாலையில் பார்வையை பதித்தாள்.


ஊரை விட்டுத் தள்ளி இருந்த ஆற்றங்கரை ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான்.

அவளும் இறங்க சிறிது தூரம் அப்படியே நடந்தனர்.
சிறிது நேரத்தில் அவனின் கை அவளின் கை விரல்களைத் தன்னுள் சேர்த்துப் பிடித்துக் கொண்டது.


அவளும் அவன் தோளில் மெல்லத் தலை சாய்த்துக் கொண்டாள்...
இருவருக்கும் அந்த அமைதியான சூழல் பிடித்திருந்தது.

அவளின் முகத்தை மறைத்த கூந்தலை எடுத்து விட்டவன், "என்னம்மா, ஸ்கூல்ல வேலை எல்லாம் எப்படிப் போகுது? ஒன்றும் பிரச்சனை இல்லையே?" என விசாரித்தான்.


"அத்தான்...! என ராகம் இழுத்தவள் அங்கே எதுவும் பிரச்சனை இல்ல... நீங்க சரக்கு எதுவும் அடிச்சு இருக்கீங்களா? அக்கறை ரொம்ப ஓவரா இருக்கே" என அவனை வாறினாள்.


"அடிப்பாவி! அக்கறையா விசாரிச்சா சரக்கு அடிச்சியான்னா கேக்குற உன்ன" என அவன் கூறவும், இவள் ஓடவும் சரியாக இருந்தது.

அவளை அவன் தூரத்த அந்த இடமே அவர்களின் சிரிப்பால் நிறைந்திருந்தது..."

 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty