அத்தியாயம் 18:
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. பூங்கொடியும் ஜெயராணியும் பள்ளிக்கு செல்லும் போது தினமும் வள்ளி என்பவர் அவரின் மகளை பற்றி விசாரிப்பார்.
வள்ளியின் கணவன் திருமணமான சில வருடங்களிலே இறந்து விட்டார். அவரின் ஒரே மகள் நிலா இவர்கள் வேலை செய்யும் பள்ளியில் தன் 12 ஆம் வகுப்பு படிக்கிறாள்.
மிகவும் நல்ல பெண். வகுப்பில் அவள் தான் எப்பொழுதும் முதல் மதிப்பெண் எடுப்பாள். வழக்கம் போல அவரிடம் பேசிவிட்டு இருவரும் பள்ளிக்கு வந்தனர்.
பூங்கொடி வேலை செய்யும் பள்ளியில் அன்றைய தினம் ஒரு புதிய மாற்றம் காத்திருந்தது. விஷ்வா என்ற புதிய ஆசிரியர் கணினி அறிவியல் பிரிவில் பூங்கொடிக்கு உதவியாளராக வந்து சேர்ந்தான்.
பார்ப்பதற்கு நாகரீகமானவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஒரு வக்கிரமான குரூரம் ஒளிந்திருந்தது.
பூங்கொடி அவனை ஒரு சக ஊழியராக மட்டுமே பார்த்தாள், ஆனால் விஷ்வாவின் கண்கள் பள்ளியின் மாணவிகள் மீது அவனின் கண்கள் அத்துமீறி அலைபாய்ந்தன.
குறிப்பாக, 12-ம் வகுப்பில் படிக்கும் அமைதியான மாணவி நிலாவை அவன் குறிவைத்தான். அதற்காக சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வக்ரம் பிடித்த மிருகம்.
அன்று மாலை, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் நிலாவை மட்டும் கணினி அறைக்கு வரச் சொன்னான் விஷ்வா. பள்ளி முடிந்து மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் கிளம்பிவிட, அந்த அறைக்குள் நிலா பயத்துடன் நுழைந்தாள்.
"சார்... எதுக்கு வரச் சொன்னீங்க?" நிலாவின் குரல் நடுங்கியது.
பதிலேதும் சொல்லாமல் விஷ்வா அறையின் கதவைச் சாத்தி தாழிட்டான். அவனது முகம் ஒரு மிருகத்தைப் போல மாறியது.
நிலா அலறத் தொடங்குவதற்குள், அவளது வாயை ஒரு துணியால் பலமாகப் பொத்தினான்.
"சத்தம் போட்டா கொன்னுடுவேன்!" என்று மிரட்டியவன், அவளைத் தள்ளிவிட்டான்.
நிலா தப்பிக்க முயற்சி செய்து மேசையின் ஓரங்களில் மோதித் தவித்தாள். ஆனால், அந்த வக்கிர மிருகம் அவளை விடவில்லை. அவளது பலவீனமான கைகளைத் முறுக்கி மேசையோடு சேர்த்து அழுத்தினான்.
அவள் துடிப்பதையும், அவளது கண்களில் இருந்து வழியும் மரண பயத்தையும் பார்த்து அவன் ரசித்தான்.
அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையே ஒரு நரகமானது. அவளது ஆடைகளைக் கிழித்து, அவளது மென்மையான உடலில் தன் நகங்களால் கீறி வதைத்தான்.
நிலாவின் கதறல் அந்தத் துணிக்குள் அடங்கிப்போனது. அவளது உடலை ஒரு காகிதத்தைப் போலக் கசக்கி எறிந்தான்.
வலியால் துடித்த அந்தப் பெண்ணின் உணர்வுகளைச் சிதைத்து, அவளது பெண்மையைச் சூறையாடினான்.
அந்தப் பிஞ்சு உடலைத் தன் காமப் பசிக்கு இரையாக்கிவிட்டு, எதுவும் நடக்காதது போல அவளை அங்கேயே போட்டுவிட்டு வெளியேறினான்.
பூங்கொடி சிறிது நேரத்தில் தேர்வுத்தாளை மறந்து வைத்து விட்டதால் ஜெயராணியை அனுப்பிவிட்டு அவள் மட்டும் பள்ளிக்கு திரும்பி வந்தாள்.
பள்ளி வளாகமே நிசப்தத்தில் மூழ்கியிருக்க, கணினி அறையிலிருந்து கசிந்த அந்த மெல்லிய விம்மல் சத்தம் பூங்கொடியின் இதயத்தை ஏதோ செய்தது.
உள்ளே நுழைந்தவள் கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது.
அங்கே நிலா... தரையில் சுருண்டு கிடந்தாள். அவளது சீருடை சிதைக்கப்பட்டு, கிழிந்து தொங்கியது. தன் மானத்தை மறைக்க வழி தெரியாமல், நடுங்கும் கைகளால் சிதைந்த ஆடையை இழுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைக்கப் போராடிக்கொண்டிருந்தாள்.
அவளது வெளுத்த கரங்களில் ரத்தக் கறைகளும், நகக் கீறல்களும் ஆழமாகப் பதிந்திருந்தன.
"நிலா...!" என அலறியபடி பூங்கொடி ஓடிச் சென்று அவளைத் தூக்கினாள்.
"நிலா... நிலா... என்னாச்சு?" என அங்கு கிடந்த நிலாவின் ஷாலை எடுத்து அவளைப் போர்த்தினாள்.
பூங்கொடியைப் பார்த்ததும் நிலா இன்னும் அதிகமாக நடுங்கினாள். பயத்தில் அவளுக்குப் பேச்சு வரவில்லை.
தன் மார்பை மறைக்கப் போராடிய அவளது விரல்கள் ரத்தத்தில் நனைந்து விறைத்துப் போயிருந்தன.
"யார் நிலா? யார் இந்த காரியத்தைப் பண்ணது?" பூங்கொடியின் குரல் ஆத்திரத்தில் நடுங்கியது.
நிலா தட்டுத்தடுமாறி, "அந்த... அந்தப் புது சார்... விஷ்வா... சார் தான்..." எனச் சொல்லிவிட்டு விம்மினாள்.
"ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லி... கூப்பிட்டு... கதவை மூடிட்டாரு மேம். நான் வேணாம்னு கெஞ்சினேன்... காலைப் பிடிச்சு அழுதேன். ஆனா அவரு... அவரு ஒரு மிருகம் மேம். என் உடம்பை பிச்சி எடுத்துட்டாரு...
என்னை வதைச்சதை சொல்லக்கூட முடியல மேம்... என்னை ஏன் உயிரோட விட்டாங்க? என்னை ஏன் சாகடிக்கல?" எனப் பூங்கொடியின் மடியில் முகம் புதைத்துக் கதறினாள்.
நிலாவின் உடல் முழுவதும் அந்த மிருகத்தின் வக்கிரத் தழும்புகள் தெரிந்தன. ஒரு பிஞ்சுப் பெண்ணை இவ்வளவு கொடூரமாகச் சிதைத்த விஷ்வாவின் மேல் பூங்கொடிக்குக் கொலைவெறி வந்தது.
என்ன செய்வது என தெரியாமல் அழுது கரைந்தவள் உடனடியாக இளமாறனுக்கு அழைத்தாள்.
"அத்தான்... சீக்கிரம் ஸ்கூலுக்கு வாங்க! அந்தப் புது டீச்சர் விஷ்வா... நம்ம நிலாவைச் சீரழிச்சுட்டான் அத்தான்.
அவளைப் பார்க்கவே முடியல... ரத்த வெள்ளத்துல கிடக்குறா. அந்த நாயை உயிரோட விடாதீங்க அத்தான்... துண்டு துண்டா வெட்டணும் அவனை!" என ஆவேசமாகக் கத்தினாள்.
மறுமுனையில் இளமாறனின் கண்கள் சிவந்தன. "கொடி... நிலாவை பத்திரமாப் பார்த்துக்கோ. நான் இப்பவே வரேன் என 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.
நிலாவை கண்டவனது கண்களில் கண்ணீர் வடிந்தது. உடனே அவளைத் தூக்கி வண்டியில் மருத்துவமனையை அடைந்தான்.
மருத்துவமனையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பூங்கொடி நிலாவின் அம்மாவிற்கு விஷயத்தை கூறி மருத்துவமனைக்கு வர சொன்னாள்.
அவரும் அடித்து பிடித்து வந்து சேர்ந்தார். அவரின் கதறலை கேட்ட அனைவருக்கும் மனது மிகவும் பாரமானது.
பூங்கொடியிடம் திரும்பிய இளமாறன், "அந்தப் பரதேசி விஷ்வா இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சு. அவனை நரகத்துக்கே அனுப்பிட்டு வர்றேன்! கொடி, நீ! இங்க பாத்துக்கோ நான் கொஞ்ச நேரத்துல வரேன்" என கிளம்பினான்.
இளமாறனின் ஜீப் டயர்கள் தரையை உரசித் தீப்பொறி பறக்க, விஷ்வாவைத் தேடிப் புயலெனக் கிளம்பியது...
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.