என்னைக் களவாட வந்தவளே - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் 2:

கோவிலுக்கு சென்ற இளமாறன் தன் மாமன் மகன்களுடன் கலந்து கோவில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில், அனைவரும் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். பூங்கொடியும் அவளது அம்மாவுடன் சேர்ந்து நல்ல பிள்ளையாக உதவிக் கொண்டிருந்தாள்.

அவளை தூரத்தில் இருந்தே பார்த்தும் பார்க்காதது போல் ரசித்துக் கொண்டிருந்தான், இளமாறன்.

அதை கவனித்த பூங்கொடியின் மூன்றாவது அண்ணன் பொற்செழியன் தொண்டையை செரிமினான்.

அதைக் கண்ட இளமாறன் அவனை முறைத்து பார்த்தான். சரிடா மாப்ள, விடு விடு சும்மா தான் பார்த்தேன். நான் உனக்கு முறைப்பையன் தான்டா! அதுக்குன்னு ஓவரா முறைக்காத என கிண்டல் செய்தான்.

அவர்கள் இருவரும் ஒரே வயது, நெருங்கிய நண்பர்களை போல பழகுவர்.

அப்பொழுது இளமாறனின் அம்மா முருகவள்ளி தனது இரு பெண்களுடன் பொங்கல் வைக்க வந்தார்.

பொற்செழியன், அத்தையை பார்த்து 'என்ன அத்தை இவ்ளோ நேரம் லேட்டா வரீங்க?' என கேட்க, அதற்கு அவனது அத்தையோ, இவளுங்க இரண்டு பேரும் கிளம்ப தான்பா இவ்ளோ நேரம், என கூறினார்.

உடனே, பொற்செழியனின் பார்வை ஜெயராணியின் மேல் ரசனையுடன் படிந்தது. அதைப் பார்த்த அவளின் தலை தானாக தரையை நோக்கி கவிழிந்தது.

இவனோ மனதுக்குள், "இவ ஒருத்தி, அஞ்சு நிமிஷம் பாக்க விடமாட்டா? உடனே தலையை குனிச்சுறுவா" என முறைத்தான்..

அதைப் பார்த்த இளமாறன் அவனின் முதுகில் ஒரு தட்டு தட்ட அதில் கலைந்தவன், சரித்த போய் பொங்கலை வைங்க என அனுப்பி வைத்தான்.

அவர்கள் சென்ற பின்பு, இளமாறன் பொற்செழியனிடம் யாரோ கொஞ்ச நேரம் முன்னாடி ஏதோ சொன்னாங்க உனக்கு தெரியுமாடா?அது யாருன்னு? என நக்கலாக கேட்டான்.

"அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா" என கூறிவிட்டு சிரித்தான், பொற்செழியன்.

ஊர் மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
சிறிது நேரத்தில் ஒயிலாட்டம் தொடங்கியது.

செந்தூர் பாண்டியன், இளஞ்செழியன், பொற்செழியன், இளமாறன் என அனைவரும் ஒயிலாட ஆரம்பித்தனர்.
வஸ்தாபி (ஒயில் பாட்டு பாடி ஒயிலாட வைப்பவர்) ஒயிலை ஆரம்பித்தார்!.

"ஓம் ஜெய ஜெய கணபதியே
ஓம் ஜெய ஜெய கணபதியே..."

என பாட்டை தொடங்க அதற்கு ஏற்ப மேளம் வாசிக்க, ஆண்கள் அனைவரும் கையில் சிறிய துண்டை சுற்றி, கால்களை முன்பும் பின்பும் அசைத்து அழகாக ஆடத் தொடங்கினர்.

அதைப் பார்த்த கன்னி பெண்கள் தனக்கு படித்த இளவட்டத்தை கண்களால் களவாடிக் கொண்டிருந்தனர்.

அடுத்து, பெண்கள் அனைவரும் ஒரே நிறத்தில் தாவணி (அல்லது) சேலை அணிந்து கும்மி கொட்ட தொடங்கினர்.

பின்பு முளைப்பாரியை தலையில் சுமந்து வரிசையாக நடக்க தொடங்கினர். அவர்களுக்கு முன்பு, கதிரேசன் கரகம் எடுத்து சென்று கொண்டிருந்தார்.

அந்த முளைப்பாரி ஒரே உயரத்தில் இருந்தது. அனைவரும் ஒன்று போல் நடந்து செல்வது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

மேள தாள இசைகேற்ப நடனமாடி ஆண்கள் சந்தோஷ ஆர்பரித்து, அங்குள்ள ஆற்றில் முளைப்பாரியை கரைத்து விட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

சீறும் சிறப்புமாக எல்லா வருடமும் போல் அந்த வருடமும் முளைப்பாரி திருவிழா நல்ல படியாக நடந்து முடிந்தது.

அடுத்த மாதம், அல்லிராணிக்கும் செந்தூர் பாண்டியனுக்கும் திருமண ஏற்பாடு பெரியவர்களால் பேசி தேதி குறித்தனர்.

ஏற்கனவே சிறு வயதிலே பேசி வைத்தது தான். திருவிழா முடிந்ததும் திருமணத்தை நடந்துவோம் என்றிருந்தனர்.

இரு வீட்டிலும் கல்யாண களை கட்டியது..

பூங்கொடியை கையிலே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு பிசியாக இரண்டு வீட்டுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தாள்.

இரு வீட்டிலும் இது முதல் திருமணம். பணத்திற்கு குறையும் இல்லை. எனவே, மிகவும் ஆடம்பரமாக திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பத்திரிக்கை கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர்.

பூங்கொடி, வெளியில் சென்று திருமண ஷாப்பிங் செய்யலாம் என நினைத்து கொண்டிருந்தாள்.

இவள் அவளது மூன்று அண்ணன்களிடம் மாற்றி மாற்றி கேட்டு விட்டாள். யாரும் அழைத்து போவது போல் தெரியவில்லை.

அவளுக்கு கடுப்பாகி விட்டது, அப்பாவிடம் சென்று நின்றாள். முகத்தை பார்த்து விட்டே என்ன? என்று கணித்து விட்டார்.

இளமாறனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்.
அவனும் பாவம் கல்யாண வேளையாக அலைந்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால், இப்பிடி ஒரு வாய்ப்பை தவற விட அவன் தயாராக இல்லை.

அதனால், அவன் மாமனிடம், "சரி மாமா ஒரு அரை மணி நேரத்தில் வரேன், அவள ரெடியா இருக்க சொல்லுங்க" என கூறிவிட்டு வைத்து விட்டான். அதைக் கேட்ட பூங்கொடி உற்சாகத்துடன் கிளம்ப சென்றாள்.

இளமாறனும் சொன்னது போலவே தனது, "ராயல் என்பீல்ட்" புல்லட்டை அவளது வீட்டின் முன்பு கொண்டு வந்து நிறுத்தி ஹாரனை எழுப்பினான்.

அவள் ஒரு வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்கள் போட்ட சுடிதாரில் தயாராகி வந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவன் "ஷப்பா எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகா இருந்து மனுசன கொல்றாளே" என பெருமூச்சு விட்டான்.

அதை கவனித்து விட்டு, மௌனமாக சிரித்த பூங்கொடி அமைதியாக வந்து பைக்கின் இரு பக்கமும் கால்களை போட்டு, அவன் தோள் பட்டை மீது கையை வைத்து 'ஓகே! அத்தான் போகலாம்' என கூறினாள்.

அவனோ, மனதுக்குள், "சத்ய சோதனடா! ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவனு தான் பைக்ல வருவா, அப்போலாம் ஒரு பக்கமா கால் போட்டு உட்காந்து பைக்ல இருக்க கம்பிய புடிச்சுட்டே வருவா? இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு? பார்வையே சரி இல்லையே" என கண்ணாடி வழியே அவளை பார்த்தான்.

அதை பார்த்த பூங்கொடி புருவத்தை உயர்த்தி என்ன? என கேட்டு வைத்தாள்.

'ஒன்னுமில்லை' என தலையை கோதி விட்டு கண்களால் சிரித்தபடி பைக்கை கிளப்பினான், மாறன்.

சாலையின் இருபுறமும் பசுமை நிறமாக இருக்க சாலையின் நடுவே ஒரு இனிமையான பைக் பயணம். இருவர் மனதும் சிறகில்லாமல் வானத்தில் பறந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், சற்று முன் நோக்கி அமர்ந்து 'அத்தான்' என காதில் மெதுவாக முனுமுனுத்தாள்.

அவனுக்கு கையில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்த்து அடங்கியது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், என்ன? 'கொடி' என லேசாக கண்ணாடி வழியே தெரிந்த அவளின் பால் முகத்தை ரசித்து கொண்டே கேட்டான்.

அத்தான், பேசாம நம்ம வேணும்னா ஒரு மாட்டு வண்டி வாங்கலாமா? என சிரிக்காமல் கேட்டாள்.

அடியேய்! என்ன கொழுப்பா நீ வரியேனு மெதுவா போனா என்னையவே கலாய்க்கிறியா? என வண்டியின் வேகத்தை கூட்டினான்.

அய்யோ! அம்மா! என அலறியவள் அவனின் இடுப்பை சுற்றி கை போட்டு கட்டி பிடித்துக் கொண்டாள்.

அவனோ மனதுக்குள் 'அடிப்பாவி மனுஷன ரொம்ப சோதிக்கிறாளே' என புலம்பிய படியே, பைக்கை கொண்டு வந்து அவர்கள் எப்போதும் வரும் துணிக்கடை முன்பு நிறுத்தினான்.

"எரிமலையும்
பனிமலையாய் மாறும்...
அவள் இதழ் சிந்தும்
புன்னகையை கண்டு...
அவள் வருவாளா?
என்னவளாக...!"
 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thanga then mozhi

Active member
May 6, 2026
160
131
43
Cheyyar
அப்பறம் என்ன அடுத்த கல்யாணம் உனக்கு பண்ண சொல்லு பொண்ணு தான் ரெடி யே
 
  • Love
Reactions: STN -18