என்னைக் களவாட வந்தவளே - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113



அத்தியாயம் 22:


தீபிகாவிற்குச் செய்த விசேஷத்தின் களைப்பு இன்னும் அந்த வீட்டை விட்டு நீங்கவில்லை. எஞ்சியிருந்த இனிப்புகளும், பூக்களின் வாசனையும் வீடெங்கும் நிறைந்திருக்க, அன்று மாலை ஒரு புதிய வரவாக வந்து இறங்கினாள் தீபிகாவின் அத்தை மகள் பவித்ரா.


நகரத்து நாகரீகம் குறையாத உடையில், கையில் ஒரு சிறிய சூட்கேஸுடன் உள்ளே நுழைந்தவளை அல்லிராணியும், தனலட்சுமியும் வரவேற்றனர். "வாம்மா பவித்ரா, விசேஷத்துக்கு வராம இவ்ளோ நேரம் கழிச்சு வர்றமா..." என நலம் விசாரித்தாள் அல்லிராணி.


"எனக்கு கொஞ்சம் வேலை அதான் காலைல வர முடியலன்னு அம்மா இப்போ அனுப்பி வச்சாங்க," எனப் புன்னகைத்த பவித்ரா, தீபிகாவை காண அவளின் அறைக்குள் சென்றாள்.

அவளை கண்ட தீபிகா அவளை கண்டதும் மகிழ்ச்சியாக காலையில் இருந்து நடந்ததை எல்லாம் கூற ஆரம்பித்தாள்.

மறுநாள், "தூரிகா குட்டி... எங்க இருக்கீங்க?" என்ற சத்தத்துடன் இளமாறன் உள்ளே நுழைந்தான்.
அவன் கையில் தூரிகாவிற்காக ஒரு பெரிய சாக்லேட் பாக்ஸ் இருந்தது. பூங்கொடியின் வீட்டு ஹாலில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்த பவித்ரா, நிமிர்ந்து பார்த்தாள்.


வியர்வையில் நனைந்த நெற்றி முடியைச் சரி செய்தபடி, சட்டைப் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சிரித்த முகமாக நின்ற இளமாறனைப் பார்த்த நொடி, அவளுக்குள் ஏதோ மின்னல் வெட்டியது.



அவன் தூரிகாவைத் தூக்கிச் சுழற்றுவதும், அவளோடு தரைமண்ணில் அமர்ந்து விளையாடுவதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது அந்த இயல்பான சிரிப்பும், கம்பீரமான தோற்றமும் அவளைக் கட்டிப்போட்டது.

இவளை கண்ட இளமாறன் சிரித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினான்.

இரவு தீபிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மெல்லத் தொடங்கினாள் பவித்ரா. "தீபி... அந்த இளமாறன்... உனக்கு தம்பி முறைதானே?"
"ஆமா பவி, ஏன் கேட்குற?" எனத் தீபிகா சந்தேகமாகப் பார்த்தாள்.


"எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு தீபி. எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது. நீ கொஞ்சம் உங்க அத்தை கிட்டயும் மாமா கிட்டயும் பேசிப் பாரேன். அவர் கிட்டயும் என் விருப்பத்தைச் சொல்லிடு," என ஒரே போடாகப் போட்டாள்.


தீபிகா அதிர்ச்சியில் உறைந்தாள். "ஏய் பவி! என்ன விளையாடுறியா? இளமாறனும் பூங்கொடியும் அவங்க பார்வையே எனக்கு அவங்க காதலிக்கிறாங்கன்னு தோணுது? அவங்க சண்டை போடுறதைப் பார்த்துட்டு நீ தப்பா கணக்கு போட்டுட்ட போல..."


"சண்டைதானே போடுறாங்க? காதல்னு அவங்க சொல்லிக்கவே இல்லையே! எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு. நீ பேசுவன்னு நம்புறேன்," எனப் பவித்ரா பிடிவாதமாகக் கூறிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.


மறுநாள் காலை, இந்த விஷயம் எப்படியோ பூங்கொடியின் காதுக்கு எட்டியது. தீபிகா தயங்கித் தயங்கிச் சொன்னதைக் கேட்டதும் பூங்கொடிக்குத் தலைக்கேறியது கோபம்.



"என்னது? அந்த. கோயம்புத்தூர் காரி, என் அத்தானை வேணும்னு சொல்லுதா? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவளைப் பார்த்து இளிச்சிருப்பான்?" எனப் பொங்கியவள், நேராக இளமாறனைத் தேடிச் சென்றாள் அவனின் வீட்டிற்கு...


இளமாறன் தோட்டத்தில் பைக்கைச் சரி செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் இன்னும் அதிகரித்தது.
"ஏன்டா கருவாயா! உனக்கு அவ்வளவு கொழுப்பு இருந்தா, வர்றவ போறவளுக்கெல்லாம் பல்லைக் காட்டுவ?" என இடுப்பில் கை வைத்துத் இடிமுழக்கமிட்டாள்.



இளமாறன் திகைத்து நிமிர்ந்தான். "என்னடி ஆச்சு உனக்கு? காலங்காத்தால பத்ரகாளி மாதிரி வந்து நிக்குற?"
"பத்ரகாளியா? ஆமாடா! அந்தப் பவித்ரா கிட்ட அப்படி என்னதான் பேசுன? அவ என்னவோ உன்னைத் தான் கட்டிக்கப் போறேன்னு தீபி கிட்ட சொல்லிட்டு இருக்கா... உனக்கும் அதே ஆசை தானா?"
இளமாறனுக்கு விஷயம் புரிந்தது.



ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், பூங்கொடியின் பொறாமையை ரசிக்கத் தொடங்கினான். "ஓ... பவித்ராவா? அவ நல்லாத் தான் இருக்கா... படிச்ச பொண்ணு, அமைதியா இருக்கா... உன்ன மாதிரி சண்டை போடத் தெரியல அவளுக்கு!" என வேணுமென்றே வம்புக்கு இழுத்தான்.



"அப்போ அவளே வேணும்னு சொல்லு! நான் யாருன்னு இப்போ காட்டுறேன்!" என அருகில் இருந்த தண்ணீர் குழாயைத் திருப்பி அவன் மேல் அடிக்கப் போனாள்.


"ஏய் குந்தாணி! நில்லுடி..." என அவன் ஓட, பூங்கொடி விடாமல் அவனைத் துரத்தினாள்.
இருவருக்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால், தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் கண்களில் மட்டும் ஒருவிதமான எரிச்சல் தெரிந்தது.


பூங்கொடியுடன் சண்டை போட்டுவிட்டு அவள் கிளம்ப இளமாறன் எரிச்சலுடன் தோட்டத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மாந்தோப்பிற்குச் சென்றான். அங்கே ஒரு மரத்தடியில் யோசித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் மெல்லிய சத்தம் கேட்டது.



திரும்பிப் பார்த்தவன் திகைத்து நின்றான். அங்கே பவித்ரா மிக அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"என்ன இளமாறன்... இங்கே தனியா வந்து உக்காந்துட்டீங்க?" என மிக மென்மையாகக் கேட்டபடி அவன் அருகில் வந்து நின்றாள்.


"இல்ல... சும்மா தான். பூங்கொடி கூட கொஞ்சம் சண்டை. அதான் இங்க வந்தேன்," என அவன் சாதாரணமாகச் சொல்ல, பவித்ரா அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.


"அவ ஒரு வாயாடி! இளமாறன். எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்பா. ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களைப் பார்த்த முதல் நிமிஷமே... நீங்க தான் எனக்கு ஏத்தவர்னு தோணுச்சு," எனத் தயக்கமின்றி தன் காதலை முன் வைத்தாள்.


இளமாறன் அதிர்ச்சியில் உறைந்தான். "பவித்ரா... நீ என்ன சொல்றன்னு உனக்குப் புரியுதா? நாம உறவுக்காரங்க தான், அதுக்காக..."


"இல்ல இளமாறன், நான் விளையாடல. நான் உங்களை விரும்புறேன். எங்க வீட்ல பேசினா கண்டிப்பா ஒத்துப்பாங்க. நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க," என அவன் கையைத் தொட முயற்சித்தாள்.


அதே நேரம், அந்தப் பக்கமாகத் தற்செயலாக வந்த ஜெயராணி, இதைக் கண்டு அதிர்ந்து போனாள். பவித்ரா தன் அண்ணன் இளமாறனின் கையைப் பிடிக்க முயல்வதையும், இருவரும் நெருக்கமாகப் பேசுவதையும் பார்த்தவளுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.


"ஐயோ... அண்ணன் என்ன இப்படிச் பண்றாரு? அங்க பூங்கொடி இவருக்காகத் தவம் இருக்கா... இவரு இங்க இந்தப் பட்டணத்து வாலு கூட என்ன பேச்சு வேண்டியிருக்கு?" என முணுமுணுத்தபடி, அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.


நேராகப் பூங்கொடியின் வீட்டில் அவளின் அறைக்குள் நுழைந்தவள், மூச்சிரைக்க நின்றாள்.


"ஏய் ! என்னாச்சு? ஏன் இப்படிப் பேய் அறைஞ்ச மாதிரி ஓடி வர்ற?" எனப் பூங்கொடி கேட்க, ஜெயராணி விஷயத்தைப் படபடவெனக் கொட்டினாள்.


"அடியே! கொடி... அங்க தோப்புல அந்தப் பவித்ரா அண்ணன் கையைப் பிடிச்சு லவ் சொல்றா... அண்ணனும் அவளை அப்படியே பார்த்துகிட்டு நிக்கிறாரு!"


பூங்கொடியின் முகம் ஒரு நொடியில் சிவந்து போனது. "என்னது? கையைப் பிடிச்சாளா? அவன் அப்படியே நின்னான்னா?" எனக் கத்தியவள், அருகில் இருந்த விளக்குமாற்றை (துடைப்பம்) கையில் எடுத்தாள்.


"இப்போ வாரேன்டா கருவாயா! உனக்கு இன்னைக்கு இருக்கு கச்சேரி!" என ஆவேசமாகத் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.
ஜெயராணி பின்னாடியே, "அய்யோ... அவசரப்படாத!" என ஓடி வர, பூங்கொடியின் ஆவேசம் ஊரையே கூட்டும் போல இருந்தது.


ஜெயராணி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். அவசரப்பட்டு இவளிடம் வந்து கூறி விட்டோமோ என நேரம் கடந்து யோசித்தாள்....

 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty