அத்தியாயம் 27:
நிச்சயதார்த்தப் பந்தல் கலவரமாகிக் கிடந்தது. பூங்கொடியைக் காணவில்லை என்ற செய்தி ஊர் முழுக்கப் பரவி, அல்லிராணியும் ஜெயராணியும் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை தீபிகாவும் அவள் வீட்டினாரும் சமாதானம் செய்தனர்.
மற்ற பக்கம் தனலட்சுமியும் முருகவள்ளியும் தலையில் அடித்துக் கொண்டு கதறினர். கதிரேசன் துவண்டு போய் அமர்ந்து இருந்தார். சுப்பிரமணியும் தன் செல்ல மருமகள் என்ன கஷ்ட படுகிறாளோ என வருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது, இளமாறனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது.
காரிலிருந்து பூங்கொடியை இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் பத்திரமாக இறக்கினர். அவளது கலைந்த கோலத்தைப் பார்த்த தனலட்சுமி நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
"என் ராசாத்தி... உனக்கு என்னடி ஆச்சு?" என அழுதுகொண்டே அவளை அணைத்தாள்.
இளமாறன் காரின் பின் கதவைத் திறந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரனைத் தெருவில் தூக்கி எறிந்தான். ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இளமாறன் கர்ஜித்தான். "இவன் மட்டும் காரணமில்லை... கோயம்புத்தூர் கலையரசன் தான் இதற்கெல்லாம் பின்னணியில் இருக்கான்.
என் பூங்கொடிய கடத்தி, அவ மானத்தைச் சிதைக்கப் பார்த்திருக்கான் இந்த நாய்!" என கூறியதை கேட்டு தீபிகா வீட்டினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்து வந்த அவர்களின் உறவுக்காரர்கள், "இதுக்கு ஒரு முடிவு கட்டணும் மாறா... அந்த கலையரசன் யாருன்னு அவனுக்குக் காட்டணும்!" என்றார்.
இளமாறன் பூங்கொடியின் அருகில் சென்று, அவளது நெற்றியில் இருந்த காயத்தைத் தன் கையால் துடைத்தான். "கொடி... பயப்படாத. இனி உன்னை எவனும் தீண்ட முடியாது.
நாளைக்கே நமக்குக் கல்யாணம்! எந்தத் தடையும் இல்லாம, இந்த ஊர் முன்னாடி நான் உன் கழுத்துல தாலி கட்டுறேன். அந்த கலையரசன் நேர்ல வந்து பார்த்தாலும், அவனைத் தடுத்து நிறுத்த முடியாது!"
அப்பா! நாளைக்கே பொற்செழியனுக்கும் ஜெயரானிக்கும் சேத்தே கல்யாணத்த முடுச்சுறல்லாம் என கூறினான் செந்தூர் பாண்டியன்.
சரிப்பா நாம்ம மாரியம்மன் கோவிலையே கல்யாணத்த ரெண்டு பேருக்கும் வச்சுறலாம் என சம்மதம் கூறினார், கதிரேசன்.
மறுபுறம், செய்தி கலையரசனுக்கு எட்டியது. கருணாகரன் பிடிபட்டதும், இளமாறனின் மச்சான்கள் செந்தூர் பாண்டியனும், இளஞ்செழியனும் களத்தில் இறங்கியதும் அவரை நடுங்க வைத்தது.
"அப்பா... இப்போ என்ன பண்றது? இளமாறன் நம்மள சும்மா விடமாட்டாரே!" எனப் பவித்ரா பயத்தில் அழுதாள்.
கலையரசன் தன் கையில் இருந்த மதுக்கோப்பையைச் சுவரில் அடித்து உடைத்தார். "அவன் கல்யாணம் மட்டும் நடக்கட்டும்... அந்த மேடையிலேயே எல்லாரையும் தீர்த்துக்கட்டுறேன்!" என வஞ்சகமாகத் திட்டம் தீட்டினார்.
அன்று இரவு பூங்கொடி அவளது அறையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். அவளால் நடந்த நிகழ்வுகளில் இருந்து வெளியே வருவது சிரமமாக இருந்தது.
உணவும் உண்ண மறுத்தால். அதனை அறிந்த இளமாறன் அவளின் அறைக்குள் வந்தான். அவனைக் கண்டதும் ஓடி வந்து அவனை அனைத்தவள் அழுது கரைந்தாள்.
அவனுக்கும் கண்கள் கலங்கியது. அவள் இருந்த கோலத்தை நினைத்து. நானும் கலங்கினால் அவள் தாங்க மாட்டாள் என கண்களை துடைத்தவன் அவளை தேற்ற ஆரம்பித்தான்.
"கொடி அழாதடா! இங்க பாரு அத்தான", என அவளை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டான். நான் உன் கூடவே தான் இனிமேல் இருக்க போறேன். இனி உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்டி என கூறி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
அவளின் தேம்பல் நிற்கவில்லை. அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான் மென்மையாக... பிறகு நெற்றி, கண்கள் என முத்தம் வைத்தவன் அவளின் மென்பட்டு இதழ்களை சிறை செய்தான்.
அவளின் தேம்பல் அவனுள் அடங்கி போனது....
மறுநாள் அதிகாலை... ராமநாதபுரதில் இருந்த அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால், அந்தத் திருமணத்திற்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
திருமணப் பந்தலைச் சுற்றி இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் தங்கள் ஆட்களுடன் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இளமாறன் பட்டு வேட்டியில் கம்பீரமாக மேடையில் அமர்ந்திருக்க, பூங்கொடி தேவதை போல அழைத்து வரப்பட்டாள்.
மறுபுறம் பொற்செழியன் மற்றும் ஜெயராணி அமர்ந்து இருந்தனர்.
அப்போது, கூட்டத்திற்குள் அந்நிய முகங்கள் சிலர் கையில் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு நுழைவதை இளமாறன் கவனித்துவிட்டான்.
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.