ரயில் நிலையத்தில் திருநெல்வேலி சந்திப்பு என்ற பெயரை தாங்கிய பலகையை பார்த்து பெருமூச்சுவிட்டு பத்து வருடங்கள் கழித்து தான் பிறந்த மண்ணில் காலை வைத்தாள் நம் நாயகி சம்யுக்தா.
அவளை தொடர்ந்து தான் பிறந்த ஊரை அதே கால இடைவெளிக்கு பின் கண்டதில் சம்யுக்தாவின் கையை பிடித்தப்படி பரவசத்துடன், அவ்விடம் மாற்றத்தை புன்னகை முகமாக பார்த்திருந்தாள் நம் நாயகியின் உயிர் தோழி தேவிபிரியா.
தோழியின் முகத்தை சலிப்பாக பார்த்த சம்யுக்தாவோ “என்னடி ரொம்ப குஷியோ”
“பின்ன பத்து வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் மறுபடியும் பிறந்த மண்ணுல கால் வைக்க வரம் கிடைச்சிருக்கு.. அப்பப்பா சொந்த ஊருனா சொந்த ஊர் தான்பா.. இங்க இருக்கிற சொகம் எங்கையும் கிடைக்காது” என்றவள் தோழியின் முகத்தில் தெரியும் வெறுப்பு உணர்வை கண்டு “நீ ஏன்டி கடுகடுன்னு இருக்க.. அவனவன் சொந்த ஊருக்கு வர லீவ் கிடைக்காம நாயா பேயா திரியுறான்.. உனக்கு கிடைச்ச லீவ்வ என்ஜாய் பண்ண வலிக்குதாடி”
“சொந்த வீடு புடிச்சா தான சொந்த ஊரு சொர்க்கம்..” என்று மனதிற்குள் நினைத்தவண்ணம் தோழியிடம் வாடகை புன்னகையை பதிலாக கொடுத்தாள்.
அவளின் புன்னகையில் உண்மை இல்லை என்பதை உயிர் தோழியால் நன்றாகவே உணர முடிந்தது, ஆனால் காரணம் தான் தெரியவில்லை.
பத்து வருட காலமாக தோழியின் இதை நிலை கண்டு வேதனை மட்டுமே தேவிபிரியாவால் அடைய முடிந்ததே தவிர, தோழியின் வாயிலிருந்து விஷயத்தை வாங்க முயற்சித்தும் தோற்று தான் போனாள்.
அவளை பார்த்து பெருமூச்சு விட்ட தேவிபிரியாவோ “இங்கயிருந்து மானூர் எப்படி போகிறது டாக்ஸியா ஆட்டோவா”
“டாக்ஸில தான் புக் பண்ண இருந்தேன்.. பட் வீட்டுல இருந்து கார் வரும் சொல்லிட்டாங்க.. இந்நேரம் வந்திருக்கும்” என்றப்படி தோழியுடன் ரயில் நிலையம் வெளியே வந்தவள் தங்களுக்காக காத்திருக்கும் காரை கண்டு கொண்டு ஏறினாள்.
**
திருநெல்வேலி கிராம பகுதிகளில் ஒன்றான பகுதியில் மானூரும் ஒன்று.
அவ்வூர் காலை நேர வெளிச்சத்தில் புல்கள் எல்லாம் பச்சை பச்சைலென்று காட்சியளித்து மனதிற்குள் ரம்மியமான சூழலை ஏற்படுத்த, ஜன்னல் வழியே அவ்வழகை ஆசையாக பார்த்து கொண்டிருந்த தோழி தேவிபிரியாவின் மகிழ்வில் புன்னகைத்த சம்யுக்தா ஜன்னல் வெளியே வெறிக்க தொடங்கினாள்.
சற்று நேரத்தில் பெண்ணவளின் வீடு வந்து விட, இறங்கவே மனமில்லாமல் அமர்ந்திருக்கும் தோழியை கண்ட தேவிபிரியா “என்னடி கனவு கண்டுகிட்டு இருக்கியா.. வீடு வந்துருச்சு இறங்குற ஐடியா இருக்கா இல்லையா” என்றதில் இதழ் குவித்து ஊதிய சம்யுக்தா ‘ரொம்ப வருஷம் கழிச்சி மொத்த குடும்பமும் ஒன்னு கூடியிருக்கு.. சந்தோசமா இல்லனாலும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கவாது செய் சம்.. யார் சந்தோசமும் என்னால கேட்டு போக கூடாது’ என்று தனக்கு தானே கூறியவள் புன்னகையை முகத்தில் தவளவிட்டு காரை விட்டு இறங்கினாள்.
இவளின் வரவுக்காக மொத்த குடும்பமும் வாசலில் காத்திருக்க, தனக்காக இருந்த உறவை இத்துணை கால கழித்து பார்த்ததில் எழும் கண்ணீரை உள்ளிழுத்து கொண்ட சம்யுக்தா அருகில் ஆரத்தி தட்டுடன் முன் வந்த பாட்டி ரூபாவதியை கண்டவள் “என்ன ரூப்ஸ் இதெல்லாம்”
“இத்துணை வருஷம் கழிச்சி வர ஆரத்தி எடுக்காம எப்படி.. நீ பேசாம நில்லு” என்று கூற, இடை புகுந்த தேவிபிரியா “ரூப்ஸ்.. என்னையும் கொஞ்சம் கவனிக்கிறது”
“உனக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சிலாம் கூப்பிட முடியாது.. உனக்கும் சேத்து தான்டி” என்றதும் மொத்த பற்கள் தெரிய தோழியின் கையை பற்றி கொண்டு நிற்க, இருவருக்கும் சேர்த்தே ஆரத்தி சுற்றினார்.
பின் ஆரத்தி சுற்றி முடித்து வீட்டிற்குள் காலை வைத்ததும் தன்னை பார்ப்பவர்களை கண்டு கொள்ளாமல் வேகமாக சென்ற சம்யுக்தா “அத்தமா” என்று அவள் தந்தையின் இரண்டாவது தங்கையான தன் அத்தை கீதாராணியை இறுக்கி கட்டி கொண்டவளுக்கு கண்ணின் ஓரத்தில் நீர் கசிய, யாருமரியாவண்ணம் துடைத்து கொண்டாள்.
அதை உணர்ந்து கொண்ட கீதாராணியோ, அவளை அணைப்பிலிருந்து பிரித்து தலையை வாஞ்சையாக தடவி விட்டவர், தன் கண்களை மூடி திறந்த வண்ணம் ‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் அளித்து “எப்படி பப்பு இருக்க” என்க,
அவர் தன்னை கண்டு கொண்டதில் மெல்ல இதழ் விரித்த சம்யுக்தா “நல்லா இருக்கேன் அத்தமா.. நீ எப்படி இருக்க.. என் டார்லிங் எங்க” என்று கண்களை சுழலவிட்டவள் அவரின் வீட்டுக்காரான தன் மாமனை தேட,
அதில் தலையாட்டி சிரித்து கொண்ட கீதாராணி “அவர் காலைலயே மார்கெட் கிளம்பிட்டாரு.. உனக்கு புடிச்சத சமைக்கணுமா அதுக்கு எல்லாம் வாங்கி வர போயிருக்கார்”
“சோ ஸ்வீட் மை டார்லிங்” என்று கூறி கொண்டிருக்கையில், அவளின் காதை திருகிய அபிராமி “நான் உன்ன பத்து மாசம் சுமந்து பெத்தவ.. என்ன நினைவுருக்கா” என்றவரின் பிடி வலிக்கவில்லை என்றாலும் வலிப்பது போல் பாவளம் காட்டிய சம்யுக்தா “ஏய் அபி வலிக்குது விடு” என்று தன் காதை அவரிடமிருந்து விடுவித்து கொண்டு “வந்ததும் உன் கொடுமை ஆரம்பிச்சிட்டியா.. பத்து வருஷம் நான் இல்லாமலும் உனக்கு என் அருமை தெரியல” என்று முகத்தை வெட்டிக் கொள்ள,
பதிலுக்கு உதடு சுழித்த அபிராமியை கண்டு சிரித்த தேவிபிரியா “அபிமா கழுதைக்கு தெரியுமா கற்புற வாசனை அவளுக்கு உங்க அருமை புரியல விடுங்க.. நான் தான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்று அவரை கட்டிக்கொண்டு ஃபீல் செய்ய,
“உனக்காவது என் அருமை புரிஞ்சுதே.. அது சரி உன் வீட்டுலயிருந்து யாரும் வரலயா”
“ஸ்ட்ரைட்டா பங்ஷன்ல மீட் பண்ணிப்பாங்கலாம் அபிமா” என்று கூறியப்படி,
இன்னும் அவரின் அண்ணைப்பிலேயிருந்த தோழியின் அருகில் வந்த சம்யுக்தா “கை எடுடி” என்று கையை தட்டி அன்னையை விட்டு விலக்கிவிட்டவள் “என்ன அபி கோச்சிக்கிட்டியா.. உன்கிட்ட சும்மா விளையாடினேன் அபி செல்லம்.. உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா சாப்பாடு கூட உள்ள இறங்கல” என்று ஃபீல் செய்து கட்டிக்கொண்டவள் ஆசையாக அவரின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“அய்யோ அபிமா அவ பொய் விடுறா.. நேத்து நைட் கூட சிக்கன் பீஸ் சேத்து ஃபுல் பிரியாணி முழுங்கினா” என்று போட்டு கொடுத்த தோழியின் தலையில் தட்டிய சம்யுக்தா “துரோகி..” என்க,
“பாருங்க அபிமா உண்மைய சொன்னா அடிக்குறா” என்று தலையை தடவி கொண்டு வராத கண்ணீரை துடைத்து விட,
அவர்களின் சேட்டையை ரசித்த முதியவர் ரூபாவதியின் இத்தனை காலம் பேரன் பேத்தியை பிரிந்த வெறுமைகள் நொடியில் நீங்கி விட, இத்தகைய நிலையை நிலைத்திருக்க வேண்டுமென்று மனதார கடவுளை வேண்டி கொண்டவர் “சரி போதும் அடுத்து அடுத்து தல நிறையா வேலை கிடக்கு.. உங்க சேட்டைய நிறுத்திட்டு ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க..” என்க,
அதனை பெண்கள் இருவரும் அமோதிக்க, தேவிபிரியாவோ “ரூப்ஸ் ஒரு குட்டி தூக்கத்த போட்டு வரேன்.. நீ நடக்குறது பறக்கிறது ஓடுறது எல்லாத்தையும் புடிச்சி விருந்து ஏற்பாடு பண்ணிடு.. இன்னைக்கு உன் கையால மனசார சாப்பிட்டா தான் என் ஆத்மா புனிதமடையும்” என்று முதிவரை கொஞ்ச,
அதில் சிரித்தவர் “என் பேத்திங்களுக்கு தினம் தினம் விருந்தாக்கி போட எனக்கு வலிக்கவா போகுது.. அதெல்லாம் பிரமாதமா டெய்லி வக வகையா விருந்து பண்ணிடலாம்” என்றவர் “கீதா ரெண்டு பேரையும் ரூம் காட்டி விட்டுட்டு வா” என்றவர் மற்றவர்களுடன் அங்கிருந்து விடை பெற,
பின் முதிவர் கூறியது போல் இருவரையும் அவர்களின் அறைக்கு கூட்டி வந்த கீதாராணியோ “வெயில்ல களைப்பா வந்திருப்பீங்க குடிக்க இளநீர் கொண்டு வரேன்” என்றவர் மருமகள் எதிரேயிருந்த அவளின் சிறு வயது அறையை வெறிப்பதின் காரணம் உணர்ந்து பெண்ணவளின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தவர் “நீ குடும்ப சந்தோசத்துக்காக சிரிக்கலாம்.. ஆனா அந்த சிரிப்புல உயிர்ப்பு இல்லன்னு எனக்கு தெரியும்” என்றதும் பெண்ணவள் பட்டென்று திரும்பி தோழி இருக்கிறாளா என்று பார்க்க,
அதில் மெல்ல புன்னகைத்த கீதாராணி “அவ வந்ததுமே டிரஸ் எடுத்துட்டு ஃப்ரெஷ்ஷாக போயிட்டா” என்றதை கேட்டு இதழ் குவித்த ஊதிய மருமகளை கண்டவர் “நடந்தது எதுவும் மாறல தான் பப்பு.. ஆனா இப்போ உன்னோட ரூம் மாறின போல.. உன் மனசு மாற காலமும் சீக்கிரம் வரும்” என்றுவிட்டு செல்ல, உணர்ச்சி துடைத்த முகத்துடன் படுக்கையில் பல நினைவுகளில் உழன்றப்படி பொத்தென்று அமர்ந்தாள் சம்யுக்தா.
***
இருவரும் நன்றாக தூங்கி எழுந்து மதியம் உணவிற்கு கீழே வந்திருக்க, தேவிபிரியாவோ “ஆத்தாடி வாசனைலயே கொல்ல பசியாகுதே” என்று இதழை ஈரமாக்கி கொண்டு, அங்கு உணவு மேஜையில் வரிசையாக அடுக்கப்பட்ட உணவை பார்த்தப்படி அமர்ந்த தோழியின் தலையில் தட்டிய சம்யுக்தா “அடியே தீனிமூட்ட மானத்த வாங்கி தொலையாத.. வாயிலயிருந்து வருர வாட்டர்பால்ஸ் க்ளோஸ் பண்ணுடி” என்க,
அதில் காதில் வாங்காத தேவிபிரியாவோ ரூபாவதி பரிமாறியதை வாயில் இறக்கும் பணியை தொடங்கி விட்டாள்.
அதோடு தோழியின் வீடு என்று எந்த வித சங்கடமும் இல்லாமல் “ரூப்ஸ் அந்த பீஸ் வை.. அத்தமா வறுவல் வைங்க.. அபிமா ஒரு கரண்டி பிரியாணி வைங்க” என்று தன் வீடு போல் உரிமையாக உணவை கேட்டு வாங்கி சாப்பிட, பெரியவர்களும் கூட சம்யுக்தாவை அவளையும் எந்த வித பாகுபாடுயின்றி உபசரித்தனர்.
பின் இரு பெண்களும் சாப்பிட்டு முடிக்க, பெரிய ஏப்பம் விட்ட தோழியை மார்க்கமாக பார்த்த சம்யுக்தாவோ “ஏன்டி இதுக்கு அப்புறம் நீ சாப்பிடவே மாட்டியா”
“கண்ணு வைக்காதடி..” என்று சிந்தித்தவள் “ஏய் சம்.. இந்த விருந்துக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டா ஃபுல்பில் ஆகிடும்ல” என்றதை கேட்டு தோழி முறைக்கவும் அதிலிருந்து நழுவ பாட்டியின் பக்கம் தாவிய தேவிபிரியா “ரூப்ஸ் அந்த ஹாண்ட்சம் காய் யாரு” என்று தூரத்தில் நின்ற சிவப்பு சட்டை அணிந்திருந்த ஒருவனை கைக்காட்டி கேட்க,
அதில் வெளிப்படையாக தன் தலையில் அடித்து கொண்ட சம்யுக்தா “என்னடா வந்து இவ்வளவு நேரமாகியும் உன் வேலைய பாக்கலயேன்னு பாத்தேன்.. அது என்னடி ஒன்னு திங்குற.. இல்லன்னா பார்வையால ஆள முழுங்குற இதெல்லாம் ஒரு பொழப்பு.. தூ” என்க,
அதனை தட்டிவிட்ட தேவிபிரியா “இதெல்லாம் வாலிப வயசு பங்கு.. கடவுள் கொடுத்துருக்கிற பார்ட்ஸ கரெக்ட்டா யூஸ் பண்ணனும்ல வாய் ருசிக்க கண்ணு ரசிக்க”
“என்னடி ரைமிங்கா.. இதுக்கு மேல மொக்க பன்ச் போட்ட டைமிங் சரியில்லாம போயிடும்” என்றவளின் மிரட்டலை கண்டுகொள்ளாத தேவிபிரியா “ரூப்ஸ் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல”
“என் பேரன் தான்டி”
“வாட்.. இந்த வீட்டுல அதுவும் உனக்கு இவ்வளவு அழகான பேரனா..” என்று வாயில் கை வைத்தவள் “பாட்டி அப்படியே உன் ஆழகு பேரன கூப்பிட்டு இந்த சுமாரான அழகிய ரெண்டு பேருக்கும் இன்றோ கொடுக்கலாம்ல” என்றதை கேட்டு சிரித்த முதியவர் “டேய் தேவா..” என்று சிவப்பு சட்டைக்காரனை அழைக்க,
அதில் கடுப்பாகிய சம்யுக்தா தோழி காதில் “ஏய் நீ பண்ற அசிங்கபிடிச்ச வேலையில.. என்ன எதுக்குடி கோர்த்து விடுற”
“பங்கு அசரடிக்குற அழகுல இருக்கான்டி.. இந்த அழக கூட ரசிக்க தெரியலன்னா நீயெல்லாம் பொண்ணா பிறந்ததே பாவம்டி” என்க,
அதில் விரக்தியாக சிரித்த சம்யுக்தா “ஆமா.. நான் பொண்ணா பிறந்ததே பாவம் தான்டி” என்று நினைத்தப்படி பழைய நினைவுகளில் இதழை கடித்து தலையை கவிழ்த்து நின்றாள்.
***
ரூபாவதி அழைத்ததில் பக்கத்தில் இருந்த கருப்பு சட்டைக்காரனையும் இழுத்து கொண்டு “பாட்டி கூப்பிடுறாங்க வாடா”
“உன்ன கூப்பிட்டா நீ போடா என்ன எதுக்கு இழுக்குற”
“உன் ஆள பாக்க தான்டா கூப்பிடுறாங்க” என்றதை கேட்டு பற்களை கடித்தவன் “அந்த அடங்காபிடாரிய ஒன்னும் என் ஆளு இல்ல” என்றபடியே சிவப்பு சட்டைக்காரன் இழுப்பிற்கு வேண்டாவெறுப்பாக அவர்களின் முன் வந்து நின்றான்.
பாட்டி அழைத்ததும் ஆர்வமாக அவனை கண்ட தேவிபிரியாவோ உடன் வந்த கருப்பு சட்டைக்காரனை கண்டு விழிகள் தெரித்து விடுமளவு விரிய, அவனோ பெண்ணவளை முறைத்து கொண்டிருந்தான்.
இவன் இப்படி என்றால் இன்னொருவன் சம்யுக்தாவை சீண்ட எண்ணி “என்ன பாட்டி.. உங்க பேத்தி எங்கள பாத்து பயந்து குனிஞ்சி நிக்குறாங்க.. நாங்க என்ன அவ்வளவு பயங்கரமா இருக்கோம்” என்று பெண்ணவளை நக்கலாக நோக்க,
அதில் பழையதை ஒதுக்கி வைத்துவிட்டு பட்டென்று நிமிர்ந்த சம்யுக்தா எதிரே நின்றவனை கண்டு அதிர்ந்து விட்டாள்.
துயர் தொடரும்...