தேசம் 13 :
தன்னைப் பற்றிச் சம்யுக்தன் அப்படி சொன்னது வசுமதிக்குப் பிடிக்கவே இல்லை.
ஆனால் அந்த விஷயம் உண்மை தானே? ஏனெனில் வசுமதியின் குணாதிசயம் இது தான் என்று அவளது பெற்றோரே தங்களிடம் சொல்லி இருக்கிறார்களே? என்றெண்ணிய ஜெயராமும், கலாவதியும் மகனின் கூற்றை மறுத்துப் பேசவில்லை.
தன்னாலும் கணவனிடம் உண்மையைக் கூறிப் புரிய வைக்க முடியாது! அப்படி செய்து விட்டால் அவன் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவானோ! என்ற பயம் பிடித்தாட்டிக் கொண்டு இருந்ததால் தனது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டாள் வசுமதி.
ஆனாலும் தங்கள் மனம் கேட்காமல்,”அதனால் என்ன? வசுவும் வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் இங்கே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செஞ்சிட்டு இருக்கிறாள்! இவளும் வெளிக் காத்தை வாங்கனும்ல? நீங்க ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குப் போயிட்டு வாங்க. நான் நம்மக் காரை வரவழைக்கிறேன்”என்று கூறி அதற்குத் தன் மகனைச் சம்மதிக்க வைக்க முயன்றார் ஜெயராம்.
அப்படி எங்கேயாவது சென்று வெளி உலகத்தைப் பார்த்தவுடன் தனது உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்று கலக்கம் கொண்ட வசுமதியோ,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா. நான் வேலைக்குப் போன அப்போவே எல்லாத்தையும் பார்த்துட்டேன். அதே மாதிரி எனக்குத் தூசி எல்லாம் ஒத்துக்காது! அதனால் நாங்க எங்கேயும் போகலை”என்று தீர்க்கமாக மறுத்து விட,
அவளுக்குமே விருப்பம் இல்லாத போது தாங்கள் இனிமேல் என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? என்று அத்துடன் அந்தப் பேச்சை விட்டு விட்டார்கள் சம்யுக்தனின் பெற்றோர்.
“நீங்க என் அண்ணாவையே மிஞ்சிட்டீங்க அண்ணி”என்று வசுமதியிடம் சொல்லிச் சலித்துக் கொண்டான் பிரதீபன்.
ஆனால் இந்த விஷயத்தால் பாதிப்படைந்து அடிக்கடி தலைவலி எடுக்கத் தொடங்கி விட்டிருந்தது வசுமதிக்கு.
அதில் உழன்று கொண்டிருந்தவளின் தலையில் மேலும் ஒரு பாரத்தை ஏற்றி விட்டார்கள் அவளது பெற்றோர்.
அது வேறொன்றும் இல்லை. அவர்களது அடுத்த சந்ததியை உலகிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோள் தான்!
ஆம்! தனது மகளிடம் குழந்தைப் பெற்றுக் கொள்வதைப் பற்றிய பேச்சை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
“நீ கையோட குழந்தைப் பெத்துக்கிறதைப் பத்தி யோசி வசு. இப்படியே இருந்தால் உங்களுக்குள்ளே கடைசி வரைக்கும் எந்தப் புரிதலும் வராது! அதே மாதிரி, குழந்தைப் பிறந்ததுக்கு அப்பறம் கூட அந்த சந்தோஷத்தால் உன்னோட குணத்தில் மாற்றம் வந்துடுச்சுன்னு நம்ம மாப்பிள்ளைக் கிட்டேயும், அவர் வீட்டு ஆளுங்க கிட்டேயும் சொல்லிச் சமாளிச்சிடலாம்”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் கண்மணி.
அவரது வார்த்தைகளைக் கேட்க, கேட்க வசுமதிக்குப் பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்தது.
ஏனென்றால், தன்னுடைய சுயம் மற்றும் இயல்பைத் தொலைத்து விட்டு ஜடம் போல் நடமாடிக் கொண்டிருப்பதே நரக வேதனையாக இருக்கிறது என்றால் அந்த மனநிலையில் அவனுடன் சேர்ந்துப் பிள்ளை பெற்றுக் கொள்வதைக் கனவிலும் அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
“ம்மா! நீங்களும், அப்பாவும் சொல்றதை எல்லாம் கேட்டாலே எனக்குத் தலை வலிக்க ஆரம்பிக்குது! என்ன தான் இவங்க கிட்டே சொத்து, சுகம் இருந்தாலும் அதையெல்லாம் எடுத்து ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டேங்கிறாங்க. இந்த வீட்டுக்கு மருமகளாக வந்ததால் கிடைச்ச ஒரே நல்ல விஷயம் நான் வேலைக்குப் போகத் தேவையில்லைன்றது மட்டும் தான்! ஆனால் வீட்டுக்குள்ளேயே இருந்து எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது! அதே மாதிரி எனக்கு இவங்க போட்ட நகைகளோ, கிடைச்ச விதவிதமான துணிகளோ என்னோட மனசை அமைதிப்படுத்தலை! நான் உங்கப் பேச்சைக் கேட்டுப் பெரிய தப்புப் பண்ணிட்டேனோன்னுத் தோணுது!”என்று தனது நிலைமையை அவர்களுக்கு விளக்க முற்பட்டாள் வசுமதி.
ஆனால்,” நீ அவங்களுக்கு ஒரு வாரிசைப் பெத்து தரனும்மா. அப்போ தான் தங்களோட பேரனுக்கோ, பேத்திக்கோ ஊர் மெச்ச செய்றதுக்கு அவங்க சேர்த்து வச்ச நகை, பணத்தை எல்லாம் வெளியே எடுப்பாங்க! உனக்கும் இன்னும் நல்லா செய்வாங்க! அதனால் தான் சொல்றோம்! நீ உன்னோட புருஷன் கிட்டே நல்லா மனசு விட்டுப் பேசு! நமக்கும் வயசாகுதுல்ல? அதனால் நமக்காக கண்டிப்பாக ஒரு குழந்தை வேணும்னு சொல்லு!”என்று அவளுக்கு யோசனை கூறினார் விஜயன்.
அதையெல்லாம் தலையில் போட்டுக் கொண்டு நடமாடிய மருமகளிடம்,”என்னம்மா கொஞ்ச நாளாகவே உன் முகம் வாடிப் போய் இருக்கே! உன் உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?”என்று அக்கறையாக விசாரித்தார் கலாவதி.
அதில் நெகிழ்ந்து அவரிடம் உண்மையை சொல்லப் போய்ச் சட்டென்று தனது மனதை மாற்றிக் கொண்டு,”அப்படியெல்லாம் ஒன்னுமில்லைத்தை. எனக்கு இந்த ஊரோட தண்ணீர் சேரலை. அதனால் அடிக்கடி தலை வலிக்குது. அதனால் தான், என்னோட முகம் சோர்வாக இருக்கு. ஆனால் எனக்கு இதுப் போகப், போகப் பழகிடும்த்தை”எனப் பதிலளிக்க,
அவளது களைப்பு நிறைந்த முகத்தை வைத்து அவள் ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவளிடம் இப்படி கேட்டிருந்தார்.
ஆனால் அவளது பதிலில் உண்டான ஏமாற்றத்தை அவள் முன்பு காட்டிக் கொள்ளாமல்,”சரிம்மா. எதுவாக இருந்தாலும் சம்யுகிட்டே சொல்லிரு. அவன் உன்னை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போவான்”என்றுரைத்தார் கலாவதி.
ஆனால், அவளுக்குத் தனது தலையில் தன் பெற்றோர் ஏற்றி விட்டக் குழந்தை விஷயம் அவளது தலைவலியை இன்னும் அதிகப்படுத்தி விட்டிருக்கவும், அதைப் போக்க அடிக்கடி மாத்திரைகளை விழுங்கத் தொடங்கி இருந்தாள் வசுமதி.
அதைக் கவனித்து விட்டு,”எதுக்கு இவ்வளவு மாத்திரையைப் போட்டுட்டு இருக்கீங்க? உங்க உடம்புக்கு என்னப் பிரச்சினை?”என்று அவளிடம் ஆதூரமாக வினவினான் சம்யுக்தன்.
உடனே கலாவதியிடம் கூறிய பதிலையே அவனிடமும் தெரிவித்து,
“தலைவலி தான்ங்க. ஒரு மாதிரி மண்டையைப் போட்டு இடிக்குறதைப் போல் வலிக்குது! இதை என்னால் பொறுத்துக்கவே முடியலை. அதான்”என்க,
“ஓஹோ! அதுக்கு ஏன் நீங்களே மாத்திரையை எடுத்துக்கிறீங்க? டாக்டரைப் பார்த்து அவர் கொடுக்கிற மாத்திரைகளைப் போடுங்க. இது ரொம்ப டேன்ஜர்”என்று அறிவுறுத்தி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பிக்க,
அவரோ வசுமதியைப் பரிசோதித்து விட்டு அவளைப் பற்றிச் சில கேள்விகளைக் கேட்டுப் பதிலை வாங்கிக் கொண்டு,
“ஓஹ்! புதுசாக கல்யாணம் ஆனவங்களா? அதனால் தான், இந்த ஊர்த் தண்ணீரையும், சுற்றுச்சூழலையும் உங்க உடம்பு இன்னும் பழகலை. இதெல்லாம் போகப், போகச் சரி ஆகிடும். அதுவுமில்லாமல் புதுப் பொண்ணுன்றதால் நிறைய சடங்குகள், கடமைகள் எல்லாம் இருக்கும்ல? அதையெல்லாம் நினைச்சு உங்க மனசுக்குள்ளே அழுத்தம் வந்து உங்களுக்குத் தலைவலி வருது! அதனால் நீங்க எதையும் யோசிக்காமல் நல்லா தூங்கி, சாப்பிட்டு உடம்பையும், மனசையும் ஆரோக்கியமாக வச்சுக்கோங்க”என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்க,
அதை தங்களது இரண்டு குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டு,
வசுமதியின் பெற்றோரிடமும் அவளை அடிக்கடி வந்து பார்த்து எதையாவது சொல்லி அவளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்று வலியுறுத்தி விட்டான் சம்யுக்தன்.
அதில் கொஞ்சம் மனம் சுணங்கினாலும் தங்கள் மகள் மீது மருமகன் வைத்திருக்கும் அக்கறையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் விஜயன் மற்றும் கண்மணி.
அவர்கள் இருவரும் தன்னல அடிக்கடி வந்து பார்ப்பதைக் குறைத்துக் கொண்டதை நினைத்து வருத்தம் ஏற்பட்டாலும் கூடக் கணவனுக்குத் தன் மீதிருந்த அக்கறையில் மனமுருகிப் போய் விட்டவளோ,
அதன் விளைவாக அவளுக்கு முதல் முறையாகச் சம்யுக்தனின் மேல் காதல் துளிர்க்கத் தொடங்கி விட்டிருந்தது வசுமதிக்கு.
அதை அவள் வெளிக் காட்டிக் கொள்ள நினைக்கும் சமயங்களில் எல்லாம், அவனைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் பெற்றோரும், தானும் அவனிடம் உரைத்தப் பொய்யை எண்ணி அவளுக்கு அழுத்தம் உண்டானது.
அது அவளது தலைவலியை மீண்டும் வரவழைத்து விட்டிருக்கத் தனது குற்ற உணர்வில் இருந்து வெளியே வருவதற்காகவும், தன்னுடைய காதலைக் கணவனிடம் வெளிப்படுத்துவதற்காகவும் வசுமதிக்கு அவளது பெற்றோரின் உதவித் தேவைப்பட்டது.
அதனால் சம்யுக்தனிடம் சென்று,”நான் எங்கப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வரலாம்னு ஆசைப்பட்றேன்ங்க”என்று வேண்ட,
அதில் தனது புருவம் சுருங்க,”ஏன்ங்க? அவங்க உங்க கூடப் பேசாமல் இருக்கப் போய்த் தான் நீங்க கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கீங்க! இல்லைன்னா, உங்களுக்கு மறுபடியும் ஸ்ட்ரெஸ் அண்ட் தலைவலி வந்துடும்”என்றவன் மீது இன்னும் காதல் பெருக்கெடுத்தது.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.