அன்றைய இரவுச் சடங்கிற்கான ஏற்பாடுகள் கூட நடக்கத் தொடங்கி விட்டது.
அதைத் தான் சம்யுக்தனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால்,”இப்போ ஃபர்ஸ்ட் நைட் ரொம்ப முக்கியமா? அதெல்லாம் வேண்டாம்”என
மறுத்துப் பார்க்க,
“அதை எப்படி வேண்டாம்னு சொல்லுவ? இங்கே இருக்கிற நம்ம உறவுக்காரங்க எல்லாம்
என்ன நினைப்பாங்க? நீ பேசாமல் இரு”என்று அவனை அடக்கிச் சில அறிவுரைகள்
வழங்கி, அவனைத் தயாராக அனுப்பி விட்டு,“நீ போய் உன் அண்ணன் கூட இரு”என்று
பிரதீபனைச் சம்யுக்தனிடம் செல்லுமாறு பணித்தார் கலாவதி.
பின்பு, பிரார்த்தனாவிடம் சென்று,”உனக்கும் இந்தச் சடங்கில் மறுப்பு இருக்கா?”எனச்
சங்கோஜத்துடன் வினவ,
அவளோ,”எனக்கு எந்த மறுப்பும் இல்லத்தை”எனப் பதிலளித்தாள்.
உடனே நிம்மதிப் பெருமூச்சுடன் அவளைத் தயார் செய்யத் தொடங்கினார் கலாவதி.
அவரிடம் பதிலளித்து விட்டாலும் கூட பிரார்த்தனாவிற்கு இந்த முதலிரவைப் பற்றிய
பயம் இருந்தது தான்!
ஏனெனில், சம்யுக்தனைத் தனியாக எதிர் கொள்வது சங்கடமாகத் தான் இருந்தது
அவளுக்கு.
ஏற்கனவே, சம்யுக்தனுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை, இதில் இந்தச்
சடங்கு அவனது கோபத்திற்குத் தூபம் போடுவதைப் போன்று அமைந்துள்ளது.
“அலங்காரம் முடிஞ்சதும்மா. உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. அவனைப்
பத்தி உனக்கே நல்லா தெரியும். அதனால் ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற
சங்கடங்களைப் பேசித் தீர்த்துக்கோங்க”என அவளுக்கு அறிவுரை அளித்தார் கலாவதி.
“சரிங்கத்தை”என்றவளுக்கும் கூட அதே சிந்தனை தான்!
ஆனால், இங்கே தனது அறையில் கடுகடுத்த முகத்துடன் தான் தயாராகி கொண்டு
இருந்தான் சம்யுக்தன்.
அவனிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிப் போனது பிரதீபனுக்கு.
“குளிச்சிட்டு வந்துட்டீங்க தானே? டிரெஸ்ஸை மட்டும் மாத்துங்க. போதும்”எனத்
தமையனிடம் கெஞ்ச,
“ப்ச்! இருடா. கொஞ்ச நேரம் ஆகட்டும். என்னால் உடனே எல்லாம் மாற முடியாது! மாத்த
முடியாது!”என்று அவனிடம் தீர்க்கமாக உரைத்து விட்டுக் கட்டிலில் அமர்ந்து
கொண்டான் சம்யுக்தன்.
“உஃப்!”என்றவனோ அவனை ஒரு வழியாகச் சமாதானம் செய்து உடையை மாற்ற
வைத்தான் பிரதீபன்.
“அதான் டிரெஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டேன்ல? நீ கிளம்பு. நான் கொஞ்சம் தனியா
இருக்கனும்”என்க,
“ஓகேண்ணா” என்று கூறி வெளியேறி விட அயர்ந்து போய் அமர்ந்து விட்டான்
சம்யுக்தன்.
“என்னடா அவன் தயாராகிட்டானா?”என்ற தாயிடம்,
“ம்ஹ்ம். ரெடி ஆகிட்டான்ம்மா”என்றான் சலிப்புடன்.
“உன்னை எதுவும் திட்டினானா? அதான் வந்துட்டியா?”
“அவர் தனியாக இருக்கனும்னு நினைச்சார். அதனால் தான் என்னை அனுப்பினார்”
“சரி விடு. நீயும், அப்பாவும் ரூமில் போய் வெயிட் பண்ணுங்க”என அவனை அனுப்பி
வைத்தவரோ,
தங்கள் உறவுப் பெண்களை அழைத்து,”பிரார்த்தனாவை அறைக்கு அழைச்சிட்டுப் போய்
விட்டுட்டு வாங்க”என்று சொல்லி விட்டுத் தன் கணவர் மற்றும் இளைய மகன் இருந்த
அறைக்குப் போய் விட்டார் கலாவதி.
“இந்தாம்மா”எனத் தன் கரத்தில் பால் செம்பைத் திணித்து விட்டு,”எங்க கூட வா”என்று
அழைத்துப் போன நடுத்தர வயது பெண்மணியுடன் சேர்ந்து நடந்தாள் பிரார்த்தனா.
சம்யுக்தன் இருந்த அறை வரை வந்த அப்பெண்ணோ,”உள்ளே போம்மா”என்று
அவளிடம் கூறி விட்டு அங்கேயிருந்து அகன்றார்.
பெண்ணவளுக்கோ முகம் முழுவதும் வியர்வை பூத்தது.
தனது கணவனே என்றாலும் கூட அவனது தற்போதைய மனநிலையை
அறிந்திருந்தவளோ பதட்டத்துடன் தான் அறைக்குள் நுழைந்தாள் பிரார்த்தனா.
அவளது வருகையை அறிந்து கொண்ட சம்யுக்தன்,”கதவைச் சாத்தி தாழ்ப்பாள்
போட்டுட்டு வா”என்க,
உடனே பால் செம்பை டேபிளில் வைத்து விட்டு அவன் சொன்னதை செய்து
முடித்தவளை,
“இங்கே வா” என்றழைத்தான்.
“இப்படி உட்காரு. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”என்று நிர்மூலமான முகத்துடன்
உரைத்தவனைக் கேள்வியாக நோக்கியபடி அவனுக்குச் சற்று தள்ளி அமர்ந்தாள்
பிரார்த்தனா.
“இந்த ரூமில் எனக்கு எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி உனக்கும் உரிமை இருக்கு.
ஆனால் நீ என்னோட பொருட்கள் எதையாவது உபயோகிக்கனும்னா எங்கிட்ட
சொல்லிட்டு யூஸ் பண்ணு. நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்காது. சோ, நீ நிம்மதியாகத்
தூங்கு”என்றுரைத்து விட்டு உறங்கத் தொடங்கி விட்டான் சம்யுக்தன்.
அவனைப் பொறுத்தவரை அவளும் தனது குடும்பத்திற்காக தான் இந்த திருமணத்திற்கு
ஒப்புக் கொண்டாள். அதனால் அவளுக்குத் தன் மேல் எந்தவித ஈடுபாடும் இருக்காது
என்று எண்ணிக் கொண்டு தான் அவளிடம் இவ்வாறெல்லாம் கூறி உள்ளான்.
ஆனால் அவனுக்கு உண்மை தெரியும் சமயத்தில் என்ன ஆகப் போகிறதோ? என்ற
பயத்துடன் உறங்கி,
காலை ஐந்து மணிக்கு விழிப்புத் தட்டி விட்டதால் மெல்ல தனது இமைகளைத் திறந்தாள்.
நேரெதிராக இருந்த கணவனின் முகத்தைக் கண்டவுடனேயே இதழ்களை மெல்லப்
பிரித்துப் புன்னகைத்தாள்.
என்ன செய்வது என்று அறியாமல் அப்படியே கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து விட,
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு விழித்த சம்யுக்தனுக்கு அவளது கலையாத, தெளிந்த
முகமும், தோற்றமும் தான் காணக் கிடைத்தது.
“இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்டியா?”என எழுந்து அமர,
“இல்லை. இது தான் நான் தினமும் கண் விழிக்கிற டைம்”எனப் பதிலளித்தாள்
பிரார்த்தனா.
“ஓகே.நீ போய் ரெடி ஆகிட்டு வா. நான் அதுக்கப்புறம் போய்க்கிறேன்”
“நாம எழுந்ததும் இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க. சாங்கியம்
செய்யனுமாம்”என்றவளிடம்,
“நமக்குள்ளே எதுவுமே நடக்கலையே! அப்பறம் எதுக்கு இதெல்லாம்? போய்க் குளி”என்று
அவளை அனுப்பி விட்டுத் தன் தம்பிக்கு அழைத்து விஷயத்தை உரைத்து விட்டு
வைத்தான் சம்யுக்தன்.
அதைக் கேட்டு விழி பிதுங்கி போய்,”ம்மா! அவனும், அண்ணியும் குளிச்சிக் கிளம்பித்
தான் கீழே வருவாங்களாம். எந்தச் சடங்கும் செய்ய வேண்டாம்னு சொல்ல
சொன்னார்”என்று தாயிடம் கூற,
அவரோ,“அது தான் தெரிஞ்ச விஷயமாச்சே! இப்போ நான் அவளோட அப்பா,
அம்மாகிட்டே என்ன சொல்லுவேன்?”எனப் புலம்பினார்.
அவர்கள் வீட்டிலிருந்த உறவினர்கள் அனைவரும் அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று
விட்டிருந்தார்கள். அதனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்பதில் கொஞ்சம்
நிம்மதி அடைந்தனர் சம்யுக்தனின் பெற்றோர்.
அப்போது கோமளாவிடம் இருந்து அழைப்பு வர,
“சம்பந்தியம்மா தான் கூப்பிட்றாங்க”என ஏற்றுக் காதில் வைக்க,
“ஹலோ! கலாம்மா! மாப்பிள்ளையும், பொண்ணும் எழுந்தாச்சா?”என்று விசாரித்தார்
கோமளா.
“இன்னும் இல்லைங்க”
“அப்படியா? நைட் சடங்குக்கு நல்லபடியாக தயார் பண்ணீங்க தானே?”
“அதெல்லாம் பண்ணோம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் தான் இப்போ எந்தச்
சடங்கும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க சம்பந்தி”
“நினைச்சேன்! ஆனால் என்ன தான் உங்கப் பையனுக்கு இது ரெண்டாவது
கல்யாணம்னாலும் எங்க பொண்ணுக்கு முதல் கல்யாணம். அதனால் எல்லா சடங்கு,
சம்பிரதாயத்தையும் அவளுக்குச் செய்ய ஆசைப்பட்டோம். அதுவும் நடக்காது போலவே!
சரிங்க சம்பந்தி. நாங்க உடனே கிளம்பி வர்றோம். மறு வீட்டு அழைப்பு
இருக்குல்ல”என்று கூறி அழைப்பை வைக்க,
அவர் பேசிய வார்த்தைகளால் கலாவதியின் முகம் சுருங்கி போனது.
“அவங்க என்ன சொன்னாங்கம்மா?”எனக் கேட்டான் பிரதீபன்.
உடனே அவனிடமும், கணவரிடமும் கோமளா கூறியதை தெரிவிக்க,
அவர்களோ,”அவங்களே வந்து இவங்க கிட்ட பேசிக்கட்டும்!”என கூறி அவரைச்
சமாதானம் செய்ய,
“என்னமோ போங்க! நான் எல்லாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் செய்றேன். அவங்க வந்ததும்
காபி போட்டுத் தரனும்”என்றுரைத்து விட்டுச் சமையலறைக்குப் போனார் கலாவதி.
சில நிமிடங்கள் கழித்து மாடியில் இருந்து இறங்கி வந்தனர் சம்யுக்தன் மற்றும்
பிரார்த்தனா.
“ம்மா! அண்ணாவும், அண்ணியும் வந்தாச்சு”என்று தாய்க்குக் குரல் கொடுத்தான்
பிரதீபன்.
உடனே அங்கு வந்து இருவரையும் ஆராய்ந்தவருக்கோ பெருமூச்சை வெளியிடுவதை
தவிர வேறு வழி தெரியவில்லை.
“குட் மார்னிங் அண்ணா! குட் மார்னிங் அண்ணி”என்றான் பிரதீபன்.
அவனிடம்,“குட் மார்னிங்!”என்று இறுக்கமான முகத்துடன் உரைத்த சம்யுக்தனைப்
பின்பற்றி,
“குட் மார்னிங்”எனப் புன்னகைத்தாள் பிரார்த்தனா.
“கலா! மருமகளைப் பூஜை ரூமுக்கு அழைச்சிட்டுப் போய் விளக்கேத்த வை”என
மனைவியிடம் உரைத்தார் ஜெயராம்.
“சரிங்க”என்று அவளைச் சாமி அறைக்குக் கூட்டிப் போய் விளக்கை ஏற்றச் செய்து விட்டு,
அவளுக்கும், மகனுக்கும் காபி போட்டுக் கொடுத்தார் கலாவதி.
தனது பானத்தைப் பருகிக் கொண்டே,“நீ காலேஜூக்குப் போகலையா?”என்ற
தமையனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டான் பிரதீபன்.
சம்யுக்தன்,“என்னடா?”
“நேத்து தான் உனக்குக் கல்யாணம் ஆச்சு ஞாபகம் இருக்கா?”
“ம்ஹ்ம். அதனால் என்ன?”
“அதுக்காக தான், நான் காலேஜூக்கு ஒரு வாரம் லீவ் போட்ருக்கேன்”எனப்
பதிலளித்தான் பிரதீபன்.
“நானே நாளையில் இருந்து வேலைக்குப் போகப் போறேன். நீ வீட்டில் இருந்து என்னப்
பண்ணப் போற? ஒழுங்காக காலேஜூக்குப் போ”என்று அவனை அதட்ட,
“இப்போ கொஞ்ச நேரத்தில் பிரார்த்தனாவோட அப்பா, அம்மா வந்துடுவாங்க. நீ இதை
அவங்க கிட்ட சொல்லு”என்று கூறிய ஜெயராமை முறைத்த சம்யுக்தன்,
“ப்பா!”என்றான் கோபமாக.
“எங்கிட்ட உன் கோபத்தைக் காட்ற வேலை வச்சுக்காதேடா!”என அவனிடம் அழுத்தமாக
கூறினார்.
இதைக் கலக்கத்துடன் பார்த்த கலாவதியோ,”நீயும் நாளையிலிருந்து வேலைக்குப் போகப்
போறியா?”எனத் தன் காபியை ரசித்துப் பருகிக் கொண்டிருந்த பிரார்த்தனாவிடம்
வினவினார்.
“ஆமாம் அத்தை”என்றவளை ஒரு கணம் நிதானமாகப் பார்த்து விட்டுத் திரும்பினான்
சம்யுக்தன்.
ஆனால் மற்ற மூவரும்,”இதை உங்கப்பா, அம்மா வந்ததும் பேசிக்கோங்க”எனக் கூறி
விட்டார்கள்.
அதே நேரம் சக்திவேலும், கோமளாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.
“வாங்க சம்பந்தி”என அவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரித்து விட்டு,
“இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்றாங்கன்னுக் கேட்டு நீங்களே அதுக்கு ஒரு தீர்வு
கொடுங்க”என்று சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவைக் கைக் காட்டினார் கலாவதி.
அதில் குழப்பமடைந்து,“என்னப் பிரனா?”என விசாரித்தார் கோமளா.
“நாங்க ரெண்டு பேரும் நாளையில் இருந்து வேலைக்குப் போகலாம்னு
இருக்கோம்மா”என்று சாதாரணமாக உரைத்தாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டு அதிர்ந்து போய்,”என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? நேத்து
தான் உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு! அதுக்குள்ளே என்ன அவசரம்?”என்றவரோ,
“ஏன் மாப்பிள்ளை?”என்று சம்யுக்தனிடம் கேட்டார் சக்திவேல்.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.