உடனே அவனிடம் வாங்குவாதம் செய்யாமல் சமைலறைக்குச் சென்று அவனுக்குத் தண்ணீர் கொண்டு கொடுத்துக் குடிக்கச் செய்தாள் பிரார்த்தனா.
அதை வாங்கிப் பருகியவனிடம்,”வசுமதி கனவில் வந்தாங்களா?”என்று நிதானமாக வினவ,
“ம்ஹ்ம். என்னோட கடந்த கால வாழ்க்கையில் நடந்தது எல்லாம் திடீர்னு ஞாபகத்துக்கு வந்துருச்சு”என அவளிடம் தலை கவிழ்ந்து போய் உரைத்தான் சம்யுக்தான்.
“ஓஹ்! நானும், நீங்களும் காலேஜில் வேற, வேற டிபார்ட்மெண்ட்ன்றதால் உங்க கல்யாண விஷயம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அது தெரிய வந்தப்போ ரொம்ப உடைஞ்சுப் போயிட்டேன்!”என்றாள் பிரார்த்தனா.
“அப்படியா? நீ என்னை எப்போதிலிருந்து லவ் பண்ணிட்டு இருந்த?”எனக் கேட்கவும்,
“நானும், நீங்களும் ஒரே காலேஜில் தான் படிச்சோம்! அதே மாதிரி ஒரே காலேஜில் தான் வேலையும் பார்க்கிறோம்! எனக்கு உங்களைக் காலேஜில் படிக்கிற காலத்தில் இருந்தே எனக்குப் பிடிக்கும்! நான் ரொம்ப துறுதுறுன்னு இருக்கிற மாதிரி நீங்க அமைதியாக இருப்பீங்க! உங்களோட அழுத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதைப் பார்த்து தான் நான் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேன்! நான் உங்களைக் காதலிச்சதைப் பத்தி விரிவாக சொல்லனும்னா நீங்க முதல்ல வசுமதியைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு அப்பறம் என்ன நடந்துச்சுன்னு எங்கிட்ட ஷேர் பண்ணுங்க!”என அவனிடம் தீர்க்கமாக கூற,
“சரி”என்றவனோ,
“முதல்ல அப்பா, அம்மா எங்கிட்ட கல்யாணத்தைப் பக்திப் பேசும் போது எனக்கு அதில் விருப்பமே இல்லை! அதனால் அவங்ககிட்ட ஒரு கண்டிஷன் போட்டேன்”என்றுரைத்து அந்த நிபந்தனையையும் அவளிடம் தெரிவித்தான் சம்யுக்தன்.
அவள்,“ஓஹ்”என்றதும்,
மேலும தொடர்ந்து,”அதுக்கேத்த மாதிரி வசுமதின்றப் பொண்ணுக் கிடைச்சாங்க! எனக்கு ஃபர்ஸ்ட் அவங்க மேலே எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால் அவங்க என்னை மாதிரியான கேரக்டர் தான்னு யோசிக்க, யோசிக்க நமக்கு நல்லப் பொண்ணு தான் லைஃப் பார்ட்னராக வந்திருக்காங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அதே மாதிரி அவங்களை எடுத்தவுடனே தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட வைக்க வேண்டாம்னு கொஞ்சம், கொஞ்சமாகப் பேசி அவங்களை ஏன்னோட பொண்டாட்டியா உணர வைக்கனும்னு நினைச்சேன்! ஆனால் அது என்னால் முடியவே இல்லை! ஏன்னா, அவங்க என்னை மாதிரியான கேரக்டர் இருக்கிறவங்கன்னு நினைக்கும் போது எல்லாம் நான் எப்படி எதிலேயும் ஆசை இல்லாமல் இருக்கிற மாதிரி அவங்களும் இருப்பாங்கன்னு முட்டாள்தனமாக நினைச்சிட்டேன்! ஆனால் அவங்களுக்குள்ளே நிறைய ஆசைகள் இருந்து இருக்கு! என் கூட வாழனும், குழந்தை பெத்துக்கனும்னு எல்லாம்! ஆனால் நான் கடைசி வரைக்கும் அதுக்கான இடமே கொடுக்கலைன்னு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்கு! அதே மாதிரி அவங்கப்பா, அம்மாவால் தான் அவங்களுக்குத் தலைவலி வருதுன்னு நினைச்சு அவங்க கூடப் பேசக் கூடாதுன்னு சொன்னேன். அதுவும் அவங்களுக்கு மன அழுத்தத்தைத் தான் தந்துச்சு! ஆனால் அவங்களுக்கு நான் தான் மன அழுத்தத்தைக் கொடுத்து இருக்கேன்னு அவங்க சாவுக்கு அப்பறம் அவங்கம்மா சொல்லித் தான் எனக்குத் தெரிய வந்துச்சு! அதில் இருந்து என்னால் இப்போ வரைக்கும் வெளியே வர முடியலை! அதே சமயம் என்னால் அடுத்த கல்யாணத்தைப் பத்தி நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை! அதான், எங்கப்பா, அம்மா உன்னைக் கல்யாணம் செய்துக்க சொல்லும் போது மறுத்துப் பார்த்தேன். ஆனால் அவங்க நிலையில் உறுதியாக இருந்தாங்க. உனக்கும் இந்தக் கல்யாணம் பிடிக்கலை, உங்கப்பா, அம்மாவோட வற்புறுத்தலால் தான் இதுக்குச் சம்மதிச்சு இருக்கன்னு நினைச்சேன்! ஆனால் உனக்கு என் மேல் காதல் இருக்கிறதால் தான் நீ என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சு இருக்கன்னு இப்போ தான் புரியுது! நான் என்னைச் சேர்ந்தவங்க யாரையுமே புரிஞ்சிக்கவே இல்லை!”என குரல் தழுதழுக்க கூறி முடித்திருக்க,
அதையெல்லாம் பொறுமையாக கேட்ட பிரார்த்தனாவோ,”அதெப்படி உங்களை மாதிரியே ஒரு கேரக்டர் இருக்கிறப் பொண்ணு தான் உங்களுக்கு மேட்ச் ஆவாங்கன்னு நீங்களே முடிவு செய்துக்கிறது? சரி, அப்படியும் கணவன், மனைவி இருப்பாங்க தான்! ஆனால் நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே வசுமதி கிட்டே இதைப் பத்திக் கேட்டுத் தெளிவுபடுத்திட்டு அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தால் கல்யாணம் பண்ணி இருந்திருந்தால் இந்தக் குழப்பமும், ஒரு இழப்பும் நடந்து இருக்காதே? உங்களுக்கு என்ன உங்களோட எண்ணங்கள், உங்களோட உள்ளுணர்வுகள் எல்லாம் எப்பவும் சரியாக இருக்கும்னு நினைப்பா? அதனால் தான் எனக்கும் உங்களை மாதிரியே இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு முடிவு செய்துட்டீங்க! அப்படித் தானே?”என்றவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னைச் செருப்பால் அடிக்காத குறையாக இருந்தாலும்,
“ம்ஹ்ம்”எனத் தன் தவறை ஒப்புக் கொண்டான் சம்யுக்தன்.
“நீங்க என்றைக்காவது இந்த மாதிரி வசுமதிகிட்டே உட்கார்ந்து பேசி இருக்கீங்களா?”எனக் கேட்டாள் பிரார்த்தனா.
“இல்லை”என்றிருந்தான்.
“அதனால் தான் அவங்க என்ன நினைச்சாங்கன்னு உங்களுக்குத் தெரியாமலேயே போயிடுச்சு! அவங்க மன அழுத்தத்தில், தலைவலியில் இருக்காங்கன்னு ஹாஸ்பிடலில் கூட்டிட்டுப் போய்க் காமிச்சது, அவங்கப்பா, அம்மாவைப் பேச வேண்டாம்னு சொன்னதுக்கு பதிலாக நீங்க அவங்க கூடக் கொஞ்ச நேரம் உட்கார்ந்து மனசு விட்டுப் பேசி இருக்கலாம். அப்போதாவது அவங்க மனசில் இருந்ததை உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க!”என்றுரைக்க,
“நீயும், மத்தவங்களும் எத்தனை தடவை எங்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாலும் என்னோட பதில், அவங்க என்னை மாதிரியான குணம் கொண்டவங்க! அதனால் தான் நான் அவங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டேன்! அவங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்!”எனக் கசங்கிய குரலில் கூறினான் சம்யுக்தன்.
“அப்போ அவங்க உங்களை மாதிரியான குணம் இருக்கிறவங்கன்னு நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டீங்களா?”என்றாள் பிரார்த்தனா.
“ம்ம். எங்க கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா ஒரு தடவை அவங்க கிட்ட பேச சொன்னாங்க. அப்போ அவங்க கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்!”என்கவும்,
அதைக் கேட்டவளுக்கோ, அப்படியென்றால் இந்த விஷயத்தில் வசுமதியும், அவளது பெற்றோரும் தான் ஏதோ திருகுதாளம் செய்துள்ளார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,
“சரி. ரொம்ப லேட்டாச்சு. நீங்க தூங்குங்க. நாளைக்குக் காலேஜூக்குப் போகனும்”என்றவளிடம்,
“நீ என்னை எப்போ இருந்து, எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சன்றதை சொல்லவே இல்லை”என்று தயக்கத்துடன் மொழிந்தான் சம்யுக்தன்.
அவனைப் புருவம் உயர்த்தி ஏறிட்டு,”அதுக்கு முன்னாடி எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு. அதுக்கெல்லாம் தீர்வு கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் பொறுமையாக வந்து உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றேன். இப்போ தூங்குங்க”என்றவளோ அடுத்த நிமிடமே படுத்துக் கொண்டுக் கண்களை மூடி உறங்க ஆரம்பித்து விட்டாள் பிரார்த்தனா.
அவளிடம் தன் மனக்குறைகளை வெளிப்படையாகச் சொல்லி விட்டதாலோ, என்னவோ வெகு விரைவாகவே உறங்கிப் போனான் சம்யுக்தன்.
அடுத்த நாள் காலையில் எழுந்து தனது வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவனோ,
“நீ காலேஜூக்கு வர்ற ஐடியா இல்லையா? இன்னும் குளிக்காமல் இருக்கிற?”எனத் தன் மனையாளிடம் விசாரித்தான்.
“நான் இன்னைக்குக் காலேஜூக்கு வரலை. ஹெச். ஓ. டி க்குக் கால் செஞ்சி லீவ் சொல்லப் போறேன். நீங்கப் போயிட்டு வாங்க”என்றவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் சம்யுக்தன்.
“என்ன?”எனக் கேட்டாள் பிரார்த்தனா.
“நீ என்னோட அந்த முதல் கல்யாண விஷயத்தைப் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டியா என்ன?”என்று அவளிடம் வினவ,
“எனக்கு வேற வேலை இல்லை பாருங்க. நான் நைட் லேட்டாகத் தூங்கினதால் கொஞ்சம் களைப்பாக இருக்கு. அதான். வீட்டிலிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்”என்றதுமே,
“தலைவலியா? ஹாஸ்பிடலுக்குப் போகலாமா? இல்லைன்னா, என்ன விஷயமாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லு”என்று பரிதவிப்புடன் கேட்டான் சம்யுக்தன்.
உடனே,”அப்படியெல்லாம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியே இருந்தாலும் நான் அதை வெளியே சொல்லாமல் இருக்கவே மாட்டேன். நான் வசுமதி இல்லஐ! பிரார்த்தனா! அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க! அதனால் நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாமல் வேலைக்குக் கிளம்புங்க”என்றுரைத்தாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டு முகம் சுருங்கினாலும் கூட அவள் கூறுவது சரியென்று எண்ணித் தான் உணவுண்ணச் செல்ல,
“உன் பொண்டாட்டி எங்க?”என மகனிடம் வினா எழுப்பினார் கலாவதி.
“அவ இன்னைக்குக் காலேஜூக்கு வரலையாம்மா”எனப் பதிலளித்தான் சம்யுக்தன்.
“ஏன்?” என்றவரிடம்,
அந்தக் கேள்விக்குத் தன் கணவனிடம் கூறிய பதிலையே அவரிடமும் சொன்னாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டவரோ,”அப்படியா? உனக்கு உடம்புக்கு வேற எதுவும் பண்ணுதா பிரனா?”என்று கலக்கத்துடன் கேட்டார் கலாவதி.
“நீங்கப் பயப்பட்ற மாதிரி எல்லாம் எதுவும் இல்லத்தை. ஒரு காபி மட்டும் போட்டுக் கொடுங்க”என்று கூறி விடவும்,
அவளது அந்தப் பதிலைக் கேட்ட பின்னர் தான், தனது முகம் தெளிவடைய அவளுக்குக் காபி கலக்கி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டுத் தன் மகனுக்கு உணவைப் பரிமாறிய சமயத்தில்,
அங்கே பிரதீபனும், ஜெயராமும் வந்து விட்டதால் அவர்களுக்கும் உணவைப் பரிமாறி விட்டு இன்றைக்குப் பிரார்த்தனா கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டதை அவர்களிடமும் பகிர்ந்து கொண்டார் கலாவதி.
“ஆமாம்மா. செமஸ்டர் வருதுன்னு சனிக்கிழமையும் காலேஜ் வச்சா என்னப் பண்றது? நீ ரிலாக்ஸ் ஆக இரு”என்று மருமகளுக்கு அறிவுறுத்தினார் ஜெயராம்.
“என்ன ஒரு ஓரவஞ்சனை! இதுவே நான் இப்படி சொல்லி இருந்தால் எனக்கு ஓகே சொல்லி இருப்பீங்களா?”என்று பொருமினான் பிரதீபன்.
“சொல்லி இருக்கவே மாட்டோம். நீ ஒழுங்காக சாப்பிட்டுக் கிளம்பு”என அவனை அதட்டி உணவுண்ணச் செய்து அவனையும், சம்யுக்தனையும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் கலாவதி.
அதற்குப் பிறகுத் தன் மனைவி மற்றும் மருமகளிடம் கூறி விட்டு நடைப்பயிற்சிக்குச் சென்று விட்டிருந்தார் ஜெயராம்.
உடனே தனது துறைத்தலைவருக்கு அழைத்து தன் விடுப்பைத் தெரிவித்து விட்டு அதை தோழிக்கும் பகிர்ந்து கொண்ட பின்னர் குளித்து முடித்து தயாராகி விட்டு முதல் வேலையாகத் தன் மாமியாரிடம் போய் நின்ற பிரார்த்தனாவோ,
“நாம ரெண்டு பேரும் ஒன்னாக உட்கார்ந்து சாப்பிட்டுட்டே பேசலாமா அத்தை?”என்க,
“சரி பிரனா“என அதற்கு ஒப்புக் கொண்டு அவளுடன் உணவுண்ண ஆயத்தம் ஆனார் கலாவதி.
அவருக்கும், தனக்குமான தட்டுகளில் உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறியவளோ,
“நான் இன்னைக்குக் காலேஜூக்குப் போகாததுக்கு உண்மையான காரணத்தை நான் உங்ககிட்ட இப்போ சொல்றேன்த்தை”என்றவளைக் குழப்பத்துடன் ஏறிட்டார் அவளது மாமியார்.
“நான் உங்ககிட்ட வசுமதியைப் பத்தின சில விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்கத் தான் வேலைக்கு லீவ் போட்டேன்!”என்றுரைத்து விட்டிருந்தாள் பிரார்த்தனா.
- தொடரும்

Last edited by a moderator:
Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.