அதில் சில மணித்துளிகள் பிரார்த்தனாவைப் பார்த்து விட்டு,”எனக்குத் தான் முதலில்
இருந்தே இந்தக் கல்யாணத்தில் உடன்பாடு இல்லையே மாமா! நீங்க எல்லாரும்
சொன்னதுக்காகத் தான் நான் இதைச் செய்தேன்! என்னை மாதிரியே தான் உங்கப்
பொண்ணுக்கும் தோணுது போல! அதனால் தான் அவங்களும் என்னை மாதிரியே
யோசிக்கிறாங்க!”என்றுரைத்தான் சம்யுக்தன்.
அதைக் கேட்டுத் திகைத்துப் போய் அவனைத் தவிர மற்ற அனைவரின் கண்களும்
பிரார்த்தனாவைத் தான் அதிர்ச்சியுடன் ஏறிட்டது.
அவளோ,”அப்படின்னு நான் சொல்லவே இல்லையே! எனக்குப் பிடிச்சதால் தான் நான்
உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். என்னோட விருப்பம் இல்லாமல் இந்தக்
கல்யாணம் நடக்கலை!”என அவனை நேராகப் பார்த்துக் கூறி விட,
அதில் திடுக்கிடலுடன் எழுந்து நின்று விட்டான் சம்யுக்தன்.
அதைக் கருத்தில் கொள்ளாமல் தனது காபியைக் குடித்தக் கப்பைக் கழுவி வைத்து விட்டு
வந்தாள்.
“நீ சொன்னது உண்மையா?”
“ஆமாம்”எனத் தீர்க்கமாகப் பதிலளித்தாள் பிரார்த்தனா.
“நேத்து வரைக்கும் உன்னையும் என்னை மாதிரியே கட்டாயப்படுத்தி இருக்காங்கன்னு
நினைச்சிட்டு இருந்தேன்!”என்றுரைத்தவனின் குரலில் ஏகத்துக்கும் ஏமாற்றம் இருந்தது.
“ஓஹ்”
“ப்ச்! நீங்களும் எங்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சுட்டீங்க தானே?”எனத் தன்
பெற்றோரிடம் வினவ,
“நாங்க உங்கிட்ட எதையும் மறைக்கலையே! நீ இதைப் பத்தி எங்ககிட்ட கேட்கலை.
அவ்வளவு தான்”என்றார் கலாவதி.
“சரி. இப்போ தான், எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சே! எனக்கு இந்தச் சடங்குகளில் எந்த
ஆர்வமும் இல்லை. இரண்டாவது கல்யாணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்
வேண்டாம்னு நினைக்கிறேன்”எனத் தெளிவாக கூறினான் சம்யுக்தன்.
“ஆனால் எங்கப் பொண்ணுக்கு இது முதல் கல்யாணம் மாப்பிள்ளை! எல்லா சடங்கையும்
செஞ்சி தான் ஆகனும்”என்று உறுதியாக அறிவித்தார் சக்திவேல்.
அதில் கடுகடுத்த முகத்துடன், ஏதோ சொல்ல முயல,”அவங்களுக்கு ஆசை இருக்கும்
தானேடா? கல்யாணமே நடந்துருச்சு. சடங்குகளையும் பண்ணிட்டா எல்லாம் முடிஞ்சது.
அதுக்கப்புறம் உங்களோட இஷ்டம் தான். நாங்க உங்க ரெண்டு பேரையும் தொல்லை
செய்ய மாட்டோம்”என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார் ஜெயராம்.
அவனும்,”சரி”என்று கூறி விட,
“நீ என்ன சொல்ற?”எனப் பிரார்த்தனாவிடம் வினவினார் கோமளா.
“எனக்கும் ஓகே தான்ம்மா”என்றவளை, வெறித்துப் பார்த்து விட்டு அமைதியாகி
விட்டான் சம்யுக்தன்.
சக்திவேல்,“எல்லாரும் ரெடி ஆகிட்டீங்க தானே? குல தெய்வக் கோயிலுக்குப் போகனும்”
“சாப்பாடு தயார் சம்பந்தி. சாப்பிட்டுப் போகலாம்”என்று அனைவரையும் டைனிங்
டேபிளிற்கு வரவழைத்து உணவைப் பரிமாறினார்.
சம்யுக்தனும், பிரார்த்தனாவும் அருகருகே தான் அமர்ந்திருந்தனர்.
ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. தன் அருகே
இருந்தவளை ஏறிட்டுக் கூடப் பார்க்கும் நிலையில் இல்லை சம்யுக்தன்!
உணவுண்டு முடித்ததும், இரண்டு வாடகை கார்களை வரவழைத்து அதில் ஏறிக்
கொண்டனர்.
அதிலும் புது தம்பதிகள் பக்கத்தில் தான் அமர்ந்திருக்க, சம்யுக்தனின் முகத்தைக் கண்டுப்
பிரார்த்தனாவிற்குப் பாவமாக இருந்தது.
“ஏங்க”என அவனை மெதுவான குரலில் அழைத்தது கேட்டாலும் அதற்குச் செவி
சாய்க்கும் நிலையில் இல்லை அவன்.
ஏனென்றால், அவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை, பெற்றோரின்
கட்டாயத்தினால் தான் சம்மதித்தாள் என்றெண்ணி இருந்த தனக்கு ஏமாற்றத்தை வழங்கி
இருக்கிறாள் என்பதை சம்யுக்தனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவர்கள் இருவரையும் கண்காணிக்குமாறு பிரதீபனிடம் தான் கூறி இருந்தனர் ஜெயராம்
மற்றும் கலாவதி.
ஆனால் அவனோ அண்ணனும், அண்ணியும் ஒரு வார்த்தைக் கூடப் பேசிக்
கொள்ளவில்லையே என்று ஆச்சரியம் அடைந்தான்.
இதே நேரத்தில் மற்றொரு மகிழுந்தில் இருந்த சக்திவேலும், கோமளாவும் தங்களது
மகளை எண்ணி இன்னும் கலக்கத்தில் தான் இருந்தனர்.
தாங்கள் சொல்ல, சொல்ல கேட்காமல், சம்யுக்தனை மணந்து கொண்டு தெரிந்தே
அவனது வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை எண்ணி வேதனை
அடைந்தார்கள் இருவரும்.
இத்தனைக்கும் அவர்களுக்குப் பிரார்த்தனா சொந்த மகளில்லை.
தங்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களாக குழந்தைகள் இல்லை என்பதை
நினைத்து வருந்திக் கொண்டு இருந்தவர்கள், அதற்கு மேல் தாங்க முடியாமல், ஏதாவது
ஒரு ஆசிரமத்திற்குப் போய் அங்கே இருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ள
முடிவெடுத்து அதை நிறைவேற்றவும் செய்தனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தவள் தான்
பிரார்த்தனா.
அதுவும் அவளுக்கு நன்றாக நினைவு தெரியும் வயதாக இருக்கும் போது தான் அவளைத்
தங்கள் மகளாகத் தத்தெடுத்துக் கொண்டனர்.
தனது துறுதுறு குணத்தால் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டாள்.
அவள் படிப்பிலும், விளையாட்டிலும் எந்தப் பின்தங்கலும் கிடையாது. அவளுக்கு
வரலாற்றுப் பாடத்தில் அதிக நாட்டம் இருந்ததால் இளங்கலை மற்றும் முதுகலையில்
வரலாறுப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தாள்.
அதற்குப் பிறகுத் தான் படித்த கல்லூரியிலேயே வரலாற்றுப் பேராசிரியையாக
வேலைக்கும் சேர்ந்து விட்டாள் பிரார்த்தனா.
அவளுக்கு அப்படியே எதிரான குணநலன்களைக் கொண்டவன் தான் சம்யுக்தன்! அவன்
மற்றவர்களிடம் அவ்வளவு எளிதாகப் பழக கூடியவன் கிடையாது. பாசத்தைக் கூட
நேரடியாக காட்ட மாட்டான். தன்னுடைய குடும்பத்தின் நலனிற்கு முக்கியத்துவம்
கொடுப்பான். அவ்வளவு தான்! மற்றபடி அவன் எந்த மாதிரியான மனநிலையில்
இருப்பான் என்பதை யாருக்கும் வெளிக்காட்டி விட மாட்டான்!
அவனுக்குத் தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் முனைப்போடு படித்து
தமிழ்ப் பேராசிரியராகி விட்டிருந்தான்.
சம்யுக்தனும், பிரார்த்தனாவும் ஒரே படித்து, அதே கல்லூரியில் தான், வேலையும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் வெவ்வெறு துறைகளில் பேராசிரியராகப் பணிபுரிகின்றனர்.
அதனாலேயே, அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை.
அதே போல், ஒரே கல்லூரியில் படித்து இருந்தாலும் கூடத் தாங்கள் இருவரும் சந்தித்தது
இல்லை என்று தான் இப்போது வரை நினைத்துக் கொண்டு இருக்கிறான் சம்யுக்தன்.
ஆனால் கதையே வேறு! அதை அவன் தெரிந்து கொள்ளும் நாளும் வரும்.
இப்படியாக குல தெய்வ கோயிலை அடைந்ததும் மணமக்கள் இருவரையும் கடவுளைத்
தரிசிக்க சொல்ல, தம்பதி சமேதராக நின்று கைக் கூப்பிச் சாமியை வணங்கி,
“நான் இவரைப் பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சிருக்கேன்! அது இவருக்குத்
தெரிஞ்சிடுச்சு. ஆனால் என் கூட வாழ்க்கையைத் தொடங்குறதுக்கு இவருக்குக்
கஷ்டமாக இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்! கூடிய சீக்கிரம் எல்லாமே சரியாகி
இவர் என் கூட சந்தோஷமாக வாழனும் கடவுளே!”என்று மனமுருகி வேண்டினாள்
பிரார்த்தனா.
“எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை. ஆனால் என் மனசில் இருக்கிற குழப்பத்தை தீர்த்து
வைங்க. அதுவே போதும்!”என வேண்டிக் கொண்டான் சம்யுக்தன்.
அனைவரும் தத்தமது வேண்டுதலை முடித்து விட்டுப் பூசாரி கொடுத்தப் பொருட்களை
வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
அப்போது இளைய மகனை அழைத்து,”என்னடா அவங்க ஏதாவது
பேசிக்கிட்டாங்களா?”எனக் கேட்டார் கலாவதி.
“இல்லம்மா. அண்ணி தான் அண்ணனோட முகத்தையே பார்த்துட்டு இருந்தாங்க.
ஆனால் அவர் கண்டுக்கலை”
“ம்க்கும்! இது தெரிஞ்ச விஷயம் தான்!”என நொடித்துக் கொண்டவரிடம்,
“விடுங்க சம்பந்தி. எங்களுக்குமே அப்படித் தான் இருக்கு. சாமி மேல் பாரத்தைப்
போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம். இது அவங்க வாழ்க்கை. அவங்க
பார்த்துப்பாங்க”எனச் சமாதானம் செய்தார் கோமளா.
“காரில் வரும் போது நான் உங்களைக் கூப்பிட்டது உங்களுக்குக் கேட்கலையா?”என்ற
பிரார்த்தனாவிடம்,
“கேட்டுச்சு. ஆனால் நான் இப்போ உன் கூடப் பேசத் தயாராக இல்லை. அதான்”எனப்
பதிலளித்தான் சம்யுக்தன்.
“ஏன்?”
“நீயும் அவங்க கூடச் சேர்ந்து என்னை ஏமாத்திட்டே தானே?”என வலியுடன் வினவ,
“இல்லை. உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம்ன்னு தான் எங்கிட்டேயும்
சொன்னாங்க”என்றாள் பிரார்த்தனா.
“அவங்க என்னைக் கன்வின்ஸ் பண்ணாங்க. நானும் வேண்டா வெறுப்பாக
ஒத்துக்கிட்டேன்”
“ஓஹ்! அப்போ நான் தான் ஏமாந்து போயிருக்கேன்”என்று ஏமாற்றத்துடன் உரைக்க,
“இப்போ என் மேல் பழியைப் போட்றியா?”என்றவனிடம்,
“நீங்க என்னமோ நினைச்சுக்கோங்க”எனக் கூறியவளோ, அதற்குப் பின் அவனிடம் பேச
முயலவில்லை.
சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கேயிருந்து கிளம்பி இல்லத்தை அடைந்ததும்,
“மறு வீட்டு விருந்துக்குத் துணி எல்லாம் எடுத்துட்டு வந்து முறையாக
அழைக்கிறோம்”என்று கூறி விட்டு,
“பார்த்துக்கோ பிரனா”,
“போயிட்டு வர்றோம் மாப்பிள்ளை”,
“நாங்க கிளம்பறோம்ங்க!”என்று மற்ற மூவரிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டனர்
பிராத்தனாவின் பெற்றோர்.
“நான் இன்னும் எத்தனை நாளைக்கு வீட்டில் இருக்கனும்ப்பா?”எனத் தந்தையிடம்
வினவினான் சம்யுக்தன்.
“மறு வீட்டு விருந்து முடிஞ்சதும் எப்போ வேணும்னாலும் வேலைக்குப் போ. ஆனால்
தாலி கோர்க்கிற சடங்குக்கு மட்டும் லீவ் போடனும்”என்று பிரார்த்தனாவிற்கும் சேர்த்து
உரைத்தார் ஜெயராம்.
மதிய உணவை உண்டு விட்டு அறைக்கு வந்து தன் தலையைக் கையால் பிடித்துக்
கொண்டு அமர்ந்து விட்டான் சம்யுக்தன்.
அப்போது அறையினுள் நுழைந்து அவனது நிலையைக் கண்டு,”தலை வலிக்குதா?
மாத்திரைக் கொண்டு வரவா?”எனக் கேட்டாள் பிரார்த்தனா.
உடனே விருட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்தவன்,”அது ஒன்னு தான் குறைச்சல்! நீ
ஏன் இப்படி செஞ்ச?”என்க,
“எப்படி?”என்றாள் நிதானமாக,
“உனக்கும் இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லை, உங்கப்பா, அம்மா
கட்டாயப்படுத்தியதால் தான் என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டேன்னு நான்
நினைச்சேன்! ஆனால் நீயும் என்னை ஏமாத்திட்டே!”என்று அவளுக்கு விளக்கினான்
சம்யுக்தன்.
“ஏன் நம்ம கல்யாணம் நிச்சயம் ஆன அப்போவே நீங்க எங்கிட்ட பேசி இருக்கலாமே?
அப்போ எல்லாம் அமைதியாக இருந்துட்டு, எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்பறம்
எங்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு, என் மேல் பழியைப் போட்டுட்டு இருக்கீங்க!
உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு எனக்குத் தெரியாது! அது
முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நானும் உங்களைக் கல்யாணம் செய்து இருக்க
மாட்டேன்! இப்போ சொல்லுங்க? ஏமாந்தது நீங்களா? நானா?”என்று அவனைக் குற்றம்
சாட்ட,
அதில் அவனுக்குத் தலைவலி இன்னும் அதிகமாகி விட்டது.
“நீ கொஞ்ச நேரத்துக்கு எங்கிட்ட பேசாமல் இரு!”என்றவனிடம்,
“நான் ஒன்னும் உங்ககிட்ட பேச ஆசைப்பட்டு பேசலை! தலைவலி மாத்திரை எடுத்துட்டு
வரவா - ன்னு தான் கேட்டேன்!”என்றவளைத் தன் கையை உயர்த்தி
அமைதிப்படுத்தினான்.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.