பிரதீபனைப் போலவே அவனது தோழர், தோழிகளும் மிகவும் கலகலப்பாகப் பேசினர் என்பதால் தானும் எந்தவித தயக்கமும் இன்றி அவர்களுடன் பேசிச், சிரித்துக் கொண்டே அந்தப் பயணத்தை ரசித்தாள் பிரார்த்தனா.
“அண்ணி! ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடாமல் வர்றீங்களே?”என விசாரித்தான் அவளது கொழுந்தன்.
“அதெல்லாம் வேண்டாம் தீபன். இன்னும் கொஞ்ச தூரம் தானே? நான் அங்கே போய் ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்”என்றுரைத்து விடவும்,
“சரிங்க அண்ணி”என்றான் பிரதீபன்.
ஆனால் அவனது தோழமைகளோ,”தண்ணீர் பாட்டிலையாவது எடுத்துட்டுப் போங்கண்ணி”என்று அறிவுறுத்தி அவளிடம் தண்ணீர் போத்தலைக் கொடுத்தார்கள்.
உடனே,”தாங்க்யூ”எனக் கூறிப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் பிரார்த்தனா.
சிறு தூரப் பயணத்திற்குப் பிறகு,”நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு. அப்படி ஓரமாக வண்டியை நிறுத்தச் சொல்லு தீபன்”என்றதும்,
உடனே ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தினான் பிரதீபன்.
வண்டி நின்றதும் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து இறங்கிக் கொண்டு,”நான் போயிட்டு வர்றேன். பை”என்று காரில் இருந்தவர்களிடம் கூறினாள் பிரார்த்தனா.
“நீங்கப் பார்த்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்கண்ணி. எதுவாக இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுங்க”என அவளுக்கு விடைகொடுத்து விட்டுத் தங்களது கார்ப் பயணத்தை தொடர்ந்தனர் பிரதீபனும், அவனது தோழர், தோழிகளும்.
தனது கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வசுமதியின் வீட்டிற்கு நடைப் பயணத்தை மேற்கொண்டவளோ, ஒரு பழச்சாறு கடையில் சென்று அங்கே தனக்குப் பிடித்த மாதுளைப் பழச்சாற்றை வாங்கிக் குடித்து விட்டுப் பிரதீபனின் காரிலிருந்து இறங்கியதையும், தனது தோழியின் இருப்பிடத்திற்கு நடந்து கொண்டிருப்பதையும் தன் கணவன் மற்றும் மாமனார், மாமியாருக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் பிரார்த்தனா.
அதைப் பார்த்ததும் அவளுக்குச்,’சரி. பத்திரம் பிரனா’என்ற மறுமொழியை அனுப்பி வைத்தார்கள் ஜெயராம், கலாவதி.
ஆனால் அவளுக்குச் செல்பேசி அழைப்பை விடுத்து விட்டான் சம்யுக்தன்.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ”என்றிருந்தாள் பிரார்த்தனா.
“ஹலோ. நீ பத்திரமாகத் தானே இருக்கிற? இப்போ எந்த ஏரியாவில் நடந்துட்டு இருக்கிற?”என்றெல்லாம் மனைவியிடம் விசாரிக்க,
“நான் பத்திரமாக இருக்கேன்ங்க”என்றவளோ,
வேறொரு இடத்தின் பெயரை அவனுக்குத் தெரிவித்து விட்டு,”நான் இப்போ ஒரு ஜூஸ் கடையில் இருந்து தான் பேசறேன்ங்க. இதுக்கப்புறம் நடக்கிறதை தொடரனும்”என்க,
“சரிம்மா. உன் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனதுக்கு அப்பறமும் எனக்குக் கால் செஞ்சி சொல்லிரு”என அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தான் சம்யுக்தன்.
அதற்குப் பிறகுத் பழச்சாறு கடையிலிருந்து வெளியேறித் தனது நடையை எட்டிப் போட்டு வசுமதியின் பெற்றோரின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரார்த்தனா.
அந்த வீட்டின் புற அமைப்பைப் பார்க்கும் போதே அதனுள் இருக்கும் மனிதர்களின் மனநிலை அவளுக்குப் புரிந்து போயிற்று.
அதனாலேயே, அந்த வீட்டின் வாயிலில் நின்று அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருக்க, தங்கள் மகளின் இறப்பிற்குப் பிறகுத் தங்களது வீட்டிற்குச் சொந்தங்களின் வருகையைத் தடை செய்து இருக்கும் போது அதையும் மீறி வந்திருப்பது யார்? என்றக் குழப்பத்துடன் தான் வீட்டின் கதவைத் திறந்து பார்க்க,
அங்கோ தங்களது மகளையொத்த வயதைக் கொண்ட பெண் ஒருத்தி நின்றிருப்பதைப் பார்த்ததும் குழப்பத்துடன்,”யாரும்மா நீ? வசுவோட ஃப்ரண்ட் ஆ?”என்று அவளிடம் விசாரித்தார் கண்மணி.
அவரது சோர்ந்த முகமும், கண்களைச் சுற்றியிருந்த கருவளையங்களையும் கண்டு வேதனையுற்றவளோ,”நான் உங்கப் பொண்ணோட ஃப்ரண்ட் இல்லம்மா. ரொம்ப தூரம் நடந்து வந்தேனா? காலெல்லாம் வலிக்குது. நாம உள்ளே போய்ப் பேசலாமா? ப்ளீஸ்!”என்றவளின் கெஞ்சலில் மனமிறங்கி,
“சரிம்மா. உள்ளே வா”என்று அவளை வீட்டினுள் நுழைய அனுமதித்ததும்,
அவர்களது வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே அவர் எடுத்துப் போட்ட நாற்காலியில் அமர்ந்தாள் பிரார்த்தனா.
“உனக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்”என்று கூறி விட்டுச் சமையலறைக்குப் போனார் கண்மணி.
உடனே அங்கே சுவரில் மாட்டியிருந்த வசுமதியின் புகைப்படத்தைப் பார்த்து,’இந்த அமைதியான முகத்தில் எவ்வளவு ரகசியங்களைப் புதைச்சு வச்சிருக்கீங்கன்னுத் தெரியலைங்க! நான் அதையெல்லாம் கண்டுபிடிக்கத் தான் வந்திருக்கேன்! அப்படியே உங்களுக்கும் நியாயம் வாங்கித் தரப் போறேன்!’என்று அவளது பிம்பத்திடம் மானசீகமாக முணுமுணுத்து விட்டுக் கண்மணியின் வரவை அறிந்து இயல்பாக உட்கார்ந்து கொள்ள,
அவளிடம் தண்ணீர்ச் செம்பைக் கொடுத்து விட்டு அதைக் குடிக்கும் வரைக் காத்திருக்க,
உடனே தானும் போதிய அளவு நீரைப் பருகித் தாகத்தை தணித்து விட்டு அவரைப் பார்க்கவும்,
“இப்போதாவது உன் பேர் என்ன? நீ யாருன்னு சொல்லுவியாம்மா?”என்று அவளிடம் கேட்டார் கண்மணி.
“என் பேர் பிரார்த்தனா. நான் சம்யுக்தனோட வொய்ஃப்”என்றதுமே,
அவருக்கு எங்கேயிருந்து தான் அவ்வளவு கோபமும், ஆங்காரமும் வந்தது என்று தெரியவில்லை!
“ஒழுங்கு மரியாதையாக எழுந்து வீட்டை விட்டுப் போயிரு! இல்லைன்னா நான் உன்னோட கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டுப் போய் வெளியே தள்ளுவேன்!”என்று கத்தினார் கண்மணி.
அதுவரையில் இருந்த சாந்தம் அவரது முகத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டு ஆங்காரம் குடி கொண்டது.
ஆனால் அவரிடம் தானும் எகிறிப் பேசாமல்,”இவ்வளவு நேரம் என்னை அனைத்து உங்களை அடையாளம் தெரியலையா? நான் சொன்னதுக்கு அப்பறம் தான் நீங்க இப்படி நடந்துக்கிறீங்க! அப்போ என்னோட பேர், ஃபோட்டோன்னு எதையுமே நீங்க இது வரைக்கும் பார்க்கலையா?”எனக் கேட்டாள் பிரார்த்தனா.
“இல்லை! உங்கத்தை எங்களுக்குக் கால் செஞ்சி அவங்கப் பையனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறதாகச் சொன்ன உடனேயே காலைக் கட் பண்ணி அவரைப் பிளாக் பண்ணிட்டோம்! அதே மாதிரி அந்தக் குடும்பத்தைப் பத்திப் பேசுற யார் கூடவும் நாங்க இப்போ தொடர்பில் இல்லை! எங்கப் பொண்ணே போனதுக்கு அப்பறம் நாங்க யாரைப் பத்திக் கவலைப்படனும்? அதான். நீ முதல்ல எழுந்து வெளியே போறியா?”என்று அவளிடம் கடுமையாக உரைத்தார் கண்மணி.
ஆனால் அவளோ,”முடியாது! என்னோட கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் நான் இங்கேயிருந்து போக மாட்டேன்ம்மா!”என்று தீர்க்கமாக கூற,
“அப்போ நானே உன்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறேன்”என அவளருகில் செல்ல முனைய,
உடனே,“நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கப் பதில் சொல்லலைன்னா உங்கப் பொண்ணு வசுமதியோட இறப்பு எதிர்பாராமல் நடந்தது இல்லை! அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க! அதை அவங்க பேரன்ட்ஸ் மறைச்சு என் புருஷன் மேலே எல்லாப் பழியையும் போட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குறாங்கன்னு உங்க ரெண்டு பேர் மேலேயும் போலீஸில் கம்ப்ளைண்ட் தருவேன்!”என்று அழுத்தமாக கூறியவளைக் கண்டுக் கிலி பிடித்துப் போய் விடவும் அப்படியே மடங்கி உட்கார்ந்து கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்டார் கண்மணி.
அவரது அழுகையைக் கண்டு மனம் வருந்தி அவருக்காகத் தண்ணீர் முகர்ந்து கொண்டு வந்து கொடுத்துக் குடிக்கச் செய்து அவரை நாற்காலியில் அமர வைத்து,
“இங்கே பாருங்கம்மா. எனக்கும் உங்கப் பொண்ணு வயசு தான்! நான் உங்களைக் கஷ்டப்படுத்திப் பார்க்கிறதுக்காக இங்கே வரலை! வசுமதிக்குத் துரோகம் செய்துட்டேன்! நான் அவளுக்கு எந்த நியாயமும் செய்யலைன்னுத் தினமும் என் புருஷன் தூக்கமில்லாமல் குற்ற உணர்ச்சியில் புழுங்கிக்கிட்டு இருக்கார். அவர் தன்னோட முதல் கல்யாணம் எப்படி நடந்தது? எதனால் வசுமதி இறந்தாங்கன்னுத் தெரியாமல் தினமும் அலைக்கழிஞ்சிட்டு இருக்கார்! அவரோட அந்த நிலையை என்னால் பார்க்க முடியலைம்மா! அதே மாதிரி வசுமதி எப்படி இறந்தாங்கன்னும் அவருக்கும், என்னோட புகுந்த வீட்டு ஆளுங்க யாருக்குமே தெரியலை! அதே மாதிரி, இதில் முழுக்க, முழுக்கத் தன்னுடைய தப்புத் தான் இருக்குன்னுச் சொல்லிச், சொல்லி அழுதுட்டு இருக்கார்! அதனால் தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கேன்! நீங்க எங்கிட்ட சொல்லப் போற விஷயத்தால் நிறைய பேரோட குற்ற உணர்வும், என்னோட வாழ்க்கையும் சரி ஆயிடும்மா! உண்மையைச் சொல்லுங்க ப்ளீஸ்!”என்று அவரிடம் மண்டியிட்டுக் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
உடனே அவளது முகத்தை வருடிக் கொடுத்து உச்சி முகர்ந்து விட்டு,”நான் உங்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன்ம்மா! நீ முதல்ல என் கையால் சமைச்சதைச் சாப்பிடுவியாம்மா?”என அவளிடம் ஏக்கத்துடன் வினவினார் கண்மணி.
அவருக்குத் தன்னைப் பார்த்ததும் அவருடைய மகளின் ஞாபகம் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு,
“சரிம்மா”என்று அவரது கோரிக்கைக்குச் சம்மதித்தாள் பிரார்த்தனா.
உடனே தனது கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டுச் சமயலறைக்குச் சென்றுத் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தந்தார் கண்மணி.
அதை வாங்கி நாலு வாய் உண்டவளோ,”சாப்பாடு ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும்மா”என அவரைப் புகழ்ந்து விட்டுத் தட்டிலிருந்த உணவு முழுவதையும் உண்டு முடித்திருந்தாள் பிரார்த்தனா.
அவளைச் சமையலறைக்கு அழைத்துப் போய்க் கையைக் கழுவச் செய்து வரவேற்பறைக்குக் கூட்டி வந்தவரிடம்,
“இப்போ சொல்லுங்கம்மா”என்க,
“இரும்மா. என் புருஷனையும் வரச் சொல்றேன். அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்கிட்ட எல்லாத்தையும் சொல்றோம்!”என்றதும்,
“சரிம்மா” எனக் கூறி விட,
உடனே தனது செல்பேசியில் கணவனுக்கு அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறி விட்டு வைத்தார் கண்மணி.
அப்போது தனது செல்பேசி ஒலிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது கொழுந்தன் தான் அழைத்திருந்தான்.
அதை ஏற்றுக் காதில் வைக்க,”அண்ணி! நீங்க அண்ணாகிட்டே எதுவுமே சொல்லாமல் அங்கே தனியாகப் போயிருக்கீங்க! உங்களை அங்கே தனியாக விட்டுட்டு என்னால் இங்கே நிம்மதியாக இருக்க முடியலை. அதனால் நானும் என்னோட சில ஃப்ரண்ட்ஸூம் இப்போவோ கிளம்பி அங்கே வர்றோம்”என்று அவளிடம் தீர்க்கமாக கூறினான் பிரதீபன்.
அவன் கூறுவதும் சரி தான் என்றெண்ணி,”சரி வாங்க”என்றுரைத்து விட்டு அழைப்பை வைத்தாள்.
அவளும், அவளது புகுந்த வீட்டாரும் பயந்ததைப் போல் எதுவுமே செய்யாமல் சற்று நேரத்திற்குப் பின்னர் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த தனது கணவரிடம் பிரார்த்தனாவைக் காட்டி அவளது வருகையின் காரணத்தையும் கூறி,”நம்மப் பொண்ணு மாதிரி தானேங்க இவளும்! இவகிட்டே எல்லா உண்மையையும் சொல்லிடலாம்ங்க!”என்று அவரிடம் கேட்டுக் கொண்டார் கண்மணி.
“சரிம்மா”எனத் தானும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார் விஜயன்.
“ஆனால் நீங்க முதல்ல என்னைப் பத்தியும் தெரிஞ்சிக்கனும்”என்று, தான் ஆசிரமத்தில் வளர்ந்தது மற்றும் தன்னைத் தனது வளர்ப்புத் தாயும், தந்தையும் அங்கேயிருந்து அழைத்துச் சென்று தங்களது சொந்த மகளாக வளர்த்ததைப் பற்றியும், அதற்குப் பிறகுச் சம்யுக்தனின் மீதான தனது காதல் மற்றும் அவனுக்கும், வசுமதிக்கும் திருமணம் நடந்து விட்டதால், அவனை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, வசுமதியின் இறப்புச் செய்தியைக் கேட்டுத் துடித்துப் போனதையும், சில மாதங்களுக்குப் பிறகு, அவனுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க அவனது பெற்றோர் முடிவெடுத்ததைக் கேள்விப்பட்டு, யார் பேச்சையும் கேட்காமல், அவனைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டதைப் பற்றியும், இன்னும் தங்களுக்குள் இடைவெளி இருப்பதையும் அவர்களிடம் ஒப்புவித்து முடித்திருந்தாள் பிரார்த்தனா.
அதே நேரத்தில் அங்கே வந்து சேர்ந்திருந்தனர் பிரதீபனும், அவனது சில தோழர், தோழிகளும்.
- தொடரும்

Last edited by a moderator:
Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.