அவர்களைக் கண்டதும் முதலில் மிரண்டு போனார்கள் வசுமதியின் பெற்றோர்.
அதற்குப் பின்னர் இவர்கள் அனைவரும் பிரார்த்தனாவின் பாதுகாப்பிற்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டனர்.
விஜயன்,“வந்து உட்காருங்க”என்று அவர்களை வரவேற்றுப் பழச்சாறு கொடுத்து உபசரித்து விட்டு,
“ நல்லா இருக்கியாப்பா?”என்று பிரதீபனிடம் நலம் விசாரித்தார் கண்மணி.
அதில் அவரை வியப்பாகப் பார்த்து விட்டு,”நல்லா இருக்கேன்ங்க”என்றுரைக்க,
அவனைத் தனியாக அழைத்து,“நீயும், உன் ஃப்ரண்ட்ஸூம் உங்க அண்ணியோட பாதுகாப்புக்காகத் தான் வந்திருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கப் பேசப் போற விஷயங்களை இவங்க எல்லார் முன்னாடியும் பேச முடியாது. அதனால் இவங்களைக் கூட்டிட்டு வெளியே போய்க் கொஞ்ச நேரம் காத்தாட இருந்துட்டு வர்றியாப்பா?”என்று தன்மையாக கேட்டார் விஜயன்.
உடனே நிலைமையைப் புரிந்து கொண்டு,”சரிங்க”என்றவனோ,
தனது நண்பர், நண்பிகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் பிரதீபன்.
அவனது தோழன் ஹரீஷின் அக்கா திருமணம் நாளை நடைபெறவுள்ளது.
அவர்களின் வரவேற்பு இன்றிரவு நடைபெறுவதால் அவன் தங்களுக்கு மண்டபத்தில் ஒதுக்கிக் கொண்டிருந்த அறைகளில் தங்கிக் கொள்ளலாம் என்று தான் காலையிலேயே தன் நண்பர்கள் பட்டாளத்துடன் கிளம்பி வந்திருக்கிறான்.
அதனால் தான், தங்களுடன் பிரார்த்தனா வருவதற்கு ஒப்புக் கொண்டார்கள் பிரதீபனும், அவனது நண்பர்களும்.
தன் அண்ணியை வசுமதியின் பெற்றோருடன் தனித்து விடுவதில் உடன்பாடு இல்லாததால் தன்னுடைய நண்பர்களிடம்,”எங்க அண்ணியோட ஃப்ரண்ட் ஊருக்குப் போயிருக்காங்களாம். அவங்கப் பேரன்ட்ஸ் மட்டும் தான் வீட்டில் இருக்காங்களாம். அதனால் அவங்க கிட்டே பேசிட்டு வர்றேன்னு சொல்லி இருக்காங்க. நாம அங்கே போய் அவங்கப் பேசி முடிச்சதும் அவங்களைக் கூட்டிட்டுப் போய்ப் பஸ் ஏத்தி விட்றலாம். ரிசப்ஷன் நைட் தானே? அதுக்குள்ளே மண்டபத்துக்கு வந்திடலாம்”எனக் கூறித் தான், அவர்களை இங்கே அழைத்து வந்திருக்கிறான்.
இங்கே அவர்கள் வருவதற்கு முன்புப் பிரார்த்தனாவின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டிருந்த விஜயனும், கண்மணியும் கண்ணீர் மல்க அவளைப் பார்த்தார்கள்.
கண்மணி,“நீ உன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கியாம்மா? உன்னை எடுத்து வளத்தவங்க நல்லா இருக்கனும்! அதே மாதிரி உன்னோட காதல் உண்மையானது! அதனால் தான் உனக்குச் சம்யுக்தனைக் கல்யாணம் பண்ணிக்க இரண்டாவது வாய்ப்புக் கிடைச்சிருக்கு! நீ இனிமேல் உன் வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும் படக் கூடாது!”என்று அவளுக்கு ஆசி வழங்கினார்.
தாங்கள் இருவரும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தி விட்டு வசுமதிக்கும், சம்யுக்தனுக்கும் திருமணம் நடந்து, அதற்குப் பிறகு நிகழ்ந்தவற்றையும், தங்கள் மகள் தங்களிடம் கூறியவற்றையும் அவளிடம் விவரித்து முடித்திருந்தனர் வசுமதியின் பெற்றோர்.
அதைக் கேட்டுத் திகைப்பின் உச்சிக்கே போய் விட்டிருந்தாள் பிரார்த்தனா.
ஏனெனில் வசுமதிக்கு ஏதோ உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பிரச்சினை இருக்கும். அதனால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டு இருப்பாள்! அதேபோல் அதன் காரணமாகத் தான் சம்யுக்தனுடன் தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொண்டு இருக்க மாட்டாள் என்று தான் தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டார் சொன்னவற்றை எல்லாம் வைத்து இவ்வளவு நாட்களாக எண்ணிக் கொண்டு இருக்க,
இவர்களோ அதற்கு எதிர்மாறாக ஒரு காரணத்தைச் சொல்லி இருப்பதைக் கண்டு மிகவும் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போனாள்.
“அப்படின்னா அவங்க கிட்டே சம்யுக்தன் மாதிரியான குணாதிசயம் ஒன்னுக் கூட இல்லையா?”என்று அவர்களிடம் கேட்டாள் பிரார்த்தனா.
உடனே வேதனை மிகுந்த விழிகளால் அவளை ஏறிட்டு,”இல்லைம்மா. அவ ரொம்ப உணர்ச்சிகரமான குணமுள்ள பொண்ணு. அவளால் ரொம்ப நேரம் தன்னோட உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது! அது எங்களுக்கும் நல்லாவே தெரியும்! ஆனாலும் எங்களோட மிடில் கிளாஸ் நிலைமை மாறனும்னா சம்யுக்தனோட பொண்டாட்டியா, அவங்க வீட்டுக்கு மருமகளாக எங்கப் பொண்ணை அனுப்பி வைக்கிறதை தவிர எங்களுக்கு வேற வழி கிடைக்கலை! அதனால் தான் அப்படி பொய் சொல்லி வசுவைச் சம்யுக்தனுக்குக் கட்டி வச்சோம். ஆனால் அதுவே எங்கப் பொண்ணோட உசிரைக் காவு வாங்கும்ன்றதை நாங்க யோசிச்சுக் கூடப் பார்க்கலை!”என்று அவளிடம் மொழிந்து விட்டுத் தங்களின் மகளின் புகைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.
தனது கணவனுக்காகவும், அவனது குடும்ப உறுப்பினர்களுக்காவும் வருந்திய பிரார்த்தனாவோ,
“என்னை உங்களோட பொண்ணாக நினைச்சுத் தானே இதையெல்லாம் எங்கிட்ட சொன்னீங்க? அதே மாதிரி நான் நல்லா இருக்கனும்னு தானே நீங்களும் எனக்கு ஆசி வழங்குனீங்க? நீங்க என்னை உங்களோட பொண்ணு மாதிரிப் பார்க்கிறது உண்மைன்னா நான் உங்ககிட்ட ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதுக்குச் சம்மதிப்பீங்களா?”என்று அவர்கள் இருவரிடமும் தீர்க்கமாக வினவ,
உடனே,”நீ என்னக் கோரிக்கை வச்சாலும் அதுக்குச் சம்மதிக்கிறோம்மா”என்று யோசிக்காமல் அவளுக்கு வாக்களித்தனர்.
“அப்போ நான் என்னோட புருஷனையும், அவர் வீட்டாளுங்க, அப்பறம் என்னோட அப்பா, அம்மாவையும் இங்கே கூட்டிட்டு வர்றேன். நீங்க இதையெல்லாம் அவங்க கிட்டேயும் சொல்றீங்களா? ப்ளீஸ்!”என்று வசுமதியின் பெற்றோரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
அதில் துக்கம் தொண்டையை அடைத்தாலும்,”சரிம்மா. நாங்க அவங்ககிட்டேயும் இதையெல்லாம் சொல்றோம். நாங்க இப்பவும் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லலை! அதை மட்டும் சொல்லிட்டா உங்க எல்லாருக்கும் நிம்மதியாக இருக்கும்! அதே மாதிரி எங்களுக்கும் இவ்வளவு மாதங்களாக எங்களை மனசளவுல உறுத்திட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வச்சு இருக்கிற விஷயத்தில் இருந்து விமோசனம் கிடைச்சிரும்னு நம்புறோம். அதனால் அவங்களை நாளைக்கே எங்ககிட்ட கூட்டிட்டு வா, ம்மா. சம்யுக்தன் அப்பறம் அவரோட வீட்டாளுங்களோட இத்தனை மாச வேதனைகள் எல்லாம் மறைஞ்சிப் போகப் போகுதுன்னு அவங்க கிட்ட சொல்லிரு!”என்று தன்னிடம் தெரிவித்த விஜயன் மற்றும் கண்மணிக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறியவளின் கலங்கிய விழிகளைக் கண்டதும்,
“என்னாச்சு அண்ணி? உங்க கண்ணு ஏன் கலங்கி இருக்கு? நீங்க அழுதீங்களா? அவங்க உங்க மனசைக் காயப்படுத்துற மாதிரியான எதையோ சொன்னாங்களா?”என்று பதறிப் போய் விசாரித்தான் பிரதீபன்.
“ம்ஹூம். இல்லை தீபன். நான் வீட்டுக்குக் கிளம்பறேன். நீ நாளைக்குக் காலையில் உன் ஃப்ரண்ட்டோட சிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் மண்டபத்தில் இருந்து நேராக கிளம்பி இங்கே வந்திரு”என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டு,
“நான் நம்ம வீட்டுக்குக் கிளம்பறேன்”என்றவளிடம்,
“எதுக்காக அண்ணி இங்கே திரும்பவும் வரனும்னுச் சொல்றீங்க?”என்று கேட்க,
“அதை நாளைக்குச் சொல்றேன்”என்றதுமே,
“சரி. வாங்கண்ணி. நாங்க உங்களைப் பஸ் ஏத்தி விட்டுட்டு மண்டபத்துக்குப் போறோம்”என்றுரைத்து அவளைத் தங்களுடன் அழைத்துச் சென்றுப் பத்திரமாகப் பேருந்தில் ஏற்றி விட்டதற்குப் பின்னர் தான் தங்களது நண்பனின் தமக்கையின் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றார்கள் பிரதீபனும், அவனது தோழர், தோழியரும்.
இங்குப் பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டுத் தனது கணவனும், அவனது குடும்பமும் இவ்வளவு மாதங்களாக மனதில் சுமந்திருந்த குற்ற உணர்வுகளுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்பதை எண்ணி ஆசுவாசமாக உணர்ந்து,
தனது கணவனுக்கும், அத்தை, மாமாவிற்கும், தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தியைச் செல்பேசியில் குறுந்தகவலாக அனுப்பி வைத்து விட்டுப் பயணத்தை மேற்கொண்டாள் பிரார்த்தனா.
அதேசமயம்,”நம்ம மருமக வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்னு அனுப்பி இருக்கா! அப்படின்னா, அவ வசுமதியோட பெத்தவங்க கிட்டே பேசிட்டாள்ன்னு அர்த்தம்! அப்போ அவளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு தானேங்க?”எனக் கேட்ட மனைவியிடம்,
“ஆமாம்மா. அவ இங்கே வந்ததும் நம்மகிட்டே அதைச் சொல்லுவாள் பாரு. அதுவரைக்கும் எதையும் யோசிக்காமல் பொறுமையாக இரு”என்றுரைத்து அவரை அமைதிப்படுத்தினார் ஜெயராம்.
சில மணி நேரங்களுக்குப் பின் தனது பேருந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள் பிரார்த்தனா.
அவளை வரவேற்று முதலில் அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார் கலாவதி.
நீரைப் பருகி முடித்து,”எனக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சுத்தை, மாமா! நீங்க எல்லாருமே வசுமதியோட விஷயத்தில் என் புருஷனைத் தான் குற்றம் சொல்லிட்டு இருந்தீங்க! ஆனால் நடந்தது மொத்தமும் வேற! இதில் அவரோட தப்பு என்னத் தெரியுமா? அவர் கல்யாணத்துக்காகப் போட்ட நிபந்தனை மட்டும் தான்!”என்றவளிடம்,
“அப்போ அந்த வசுமதி மேல் தான் எல்லா தப்பும் இருக்கா பிரனா?”என்று வேதனையுடன் வினவினார் ஜெயராம்.
“இல்லை மாமா. என்னால் இன்னைக்கு எதையும் சொல்ல முடியாது! நாளைக்கு நாம எல்லாரும் அவங்களைப் பார்க்கப் போவோம்! அங்கே உங்களோட எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சிடும்! அங்கே என் புருஷனையும் கண்டிப்பாக கூட்டிட்டுப் போகனும்! எனக்குக் களைப்பாக இருக்கு. நான் போய்க் கொஞ்ச நேரம் தூங்குறேன்”எனக் கூறி விட்டுத்,
தனது அறைக்குப் போய்ப்
படுக்கையில் விழுந்து தனது கணவனுக்காக மௌனமாய்க் கண்ணீர் வடித்தவாறே தன்னை மறந்து உறங்கியும் போய் விட்டாள் பிரார்த்தனா.
அவளது வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் துவண்டு போயிருந்தனர் சம்யுக்தனின் பெற்றோர்.
இதையறியாமல், மாலையில் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் சம்யுக்தன்.
தன்னை வரவேற்றப் பெற்றோரிடம் மனைவியைப் பற்றி விசாரிக்க,
“அவப் பிரயாணம் செஞ்சதால் சோர்வாக இருக்குன்னுச் சொல்லி ரூமில் ரெஸ்ட் எடுக்கிறாள்டா”என்று மகனிடம் கூறினார் கலாவதி.
“சரிம்மா. நான் போய் அவளைப் பார்த்துப் பேசிட்டு அவ கூட வந்து காபி குடிக்கிறேன்”என்றுரைத்து விட்டுத், தங்கள் அறைக்குச் சென்று மெத்தையில் கண் மூடித் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கனிவுடன் நோக்கி அவளது அருகே சென்று அவளின் நெற்றியை மென்மையாக நீவிக் கொடுத்தான் சம்யுக்தன்.
தன் கணவனின் ஸ்பரிசத்தை உணர்ந்ததும் கண் விழித்து விட்டவளிடம்,
”என்னாச்சு பிரனா? உனக்கு ரொம்ப களைப்பாக இருக்கா? இன்னும கொஞ்ச நேரம் கூடத் தூங்கு!”என்றவனைக் கண்கள் கண்ணீர் வழிய அடுத்த நிமிடம் இறுக்கமாக அணைத்து விட்டிருந்தாள் பிரார்த்தனா.
தன் மனைவியின் இந்த எதிர்பாராத செயலில் செய்வதறியாது திகைத்துப் போனான் சம்யுக்தன்.
ஆனால் தனது இறுக்கத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே சென்றவளோ, அவனது தோளில் தன் முகத்தைப் புதைத்து விசும்பத் தொடங்கவும்,
அதில் தன்னுடைய திகைப்பில் இருந்து மீண்டு,”பிரனா! இப்போ எதுக்கு அழறே? என்னாச்சும்மா? உன்னை யாரும் ஏதாவது சொன்னாங்களா?”என்று மனைவியிடம் ஆதூரத்துடன் வினவ,
அதை,“இல்லங்க”என்று கூறி மறுத்தாள் பிரார்த்தனா.
- தொடரும்

Last edited by a moderator:
Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 32
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.