சம்யுக்தனின் முதல் மனைவி வசுமதியின் புகைப்படம் ஒன்று கூட வீட்டில் எங்கேயும்
காணக் கிடைக்கவில்லை.
ஏனெனில் அவள் இறந்து சில மாதங்களிலேயே அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து
வைக்க முடிவு செய்து இருந்ததால் அவளது புகைப்படங்களை வீட்டிலிருந்து அகற்றி
இருந்தனர் ஜெயராம் மற்றும் கலாவதி.
அதனாலேயே அவளது முகத்தைக் கூட அவனால் பார்த்து வருத்தம் கொள்ள
முடியவில்லை.
அதெல்லாம் சேர்ந்து சம்யுக்தனுக்கு மனச் சோர்வையும், தளர்வையும் உண்டு
பண்ணியது.
இதே சமயம், தன் மாமியாரிடம்,”அவருக்கு ரொம்ப தலைவலி போல அத்தை! நான்
மாத்திரை கொண்டு வரவா - ன்னுக் கேட்டால் வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க
எடுத்துட்டுப் போய்த் தர்றீங்களா?”என்றாள் பிரார்த்தனா.
“நான் இனிமேல் அவன் விஷயத்தில் தலையிட மாட்டேன்மா. எதுவாக இருந்தாலும் நீயே
அவனுக்குச் செய். என்னை உங்க பிரச்சினையில் இழுக்காதீங்க”என்று மறுத்து விட்டார்
கலாவதி.
ஆனால் மாத்திரையை எடுத்து அவளிடம் தந்து விட்டுப் போக, அதனுடன் மீண்டும்
சம்யுக்தனிடம் சென்றாள் பிரார்த்தனா.
அப்போது வசுமதியின் முகத்தைக் கற்பனை செய்து கண்ணீர் வடித்துக் கொண்டு
இருந்தவனின் கண்களுக்குத் திடீரென்று அந்த முகம் மாறிப் பிரார்த்தனாவின் முகமாக
காட்சியளித்து விட, உடனே கண்ணீரைத் துடைத்து விட்டு,
“மறுபடியும் எதுக்கு வந்த?”எனக் கேட்க,
“இதைக் கொடுக்க தான் வந்தேன்”என்று தலைவலி மாத்திரை மற்றும் சுடுநீரை
அங்கேயிருந்த மேசையில் வைத்தாள்.
“ஊஃப்!”என்றவனோ அவளிடம் வாக்குவாதம் செய்யும் முயற்சியில் இறங்காமல் அந்த
மாத்திரையை நீருடன் விழுங்கி விட்டு,
“தேங்க்ஸ்” என்றான் சம்யுக்தன்.
“சில நேரங்களில் நமக்குக் காலம் இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்கும். அதை நாம
பயன்படுத்திக்கிட்டா நமக்கு மறுபடியும் புதுசா வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதை
மிஸ் பண்ணிட்டா அது கடைசி வரைக்கும் நமக்குத் திரும்பக் கிடைக்காது!”என்று
அவனுக்கு அறிவுரை வழங்கினாள் பிரார்த்தனா.
உடனே தனது புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்து,”இதை ஏன் எங்கிட்ட சொல்லிட்டு
இருக்கிற? எனக்கு அந்தக் காலம் கொடுக்கிற இரண்டாவது வாய்ப்பும், வாழ்க்கையும்
தேவையில்லை! நான் என்னோட முதல் வாழ்க்கைக் கொடுத்த நினைவுகளை மட்டுமே
எனக்குள்ளே வச்சுக்க நினைக்கிறேன்!”என்று கூறி அவள் மீது வெறுப்பை உமிழ,
அதைக் கேட்டும் கூடக் கோபப்படாமல் புன்னகைத்து விட்டு,”நல்லா தூங்கி ரெஸ்ட்
எடுங்க”எனக் கூறி விட்டுப் போக,
தன்னுடைய வார்த்தைகளால் அவள் காயப்பட்டாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல்
புன்னகைக்கிறாளே என்றெண்ணி வியந்தான்.
ஆனால் அவன் விழுங்கிய மாத்திரை அதன் வேலையைக் காட்டவும் தூங்கிப் போனான்
சம்யுக்தன்.
“என்னாச்சு பிரனா? அவன் மாத்திரையை முழுங்கினானா?”என மருமகளிடம்
விசாரித்தார் கலாவதி.
“முழுங்கிட்டார் அத்தை”எனப் பதிலளித்தாள் பிரார்த்தனா.
அப்போது அவளது செல்பேசி ஒலிக்க அது தனது அன்னையின் அழைப்பு என்பதை
அறிந்து,
“அம்மா தான் கால் பண்றாங்கத்தை. நான் பேசிட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டுத்
தனியே சென்று அழைப்பை ஏற்று,
“ஹலோ ம்மா”என்றவளிடம்,
“ஹலோ பிரனா. என்னடி செய்ற? நாங்க கிளம்பி வந்ததுக்கு அப்பறம் உனக்கும்,
மாப்பிள்ளைக்கும் சண்டை எதுவும் வரலைல?”என்று பதட்டத்துடன் வினவினார்
கோமளா.
“நான் சும்மா தான் இருக்கேன் ம்மா. அவருக்குத் தலைவலி. அதனால் மாத்திரை
போட்டுட்டுத் தூங்குறார். எங்களுக்குள்ளே எந்த சண்டையும் வரலை”எனக் கூற,
“நீ நிஜத்தை தானே சொல்ற?”என்றார் சந்தேகமாக,
“ஆமாம்மா”என்றவுடன் தான், அவருக்கும் நிம்மதி உண்டாகியது.
“மாப்பிள்ளைப் பேசுனது இன்னும் எனக்கும், உங்கப்பாவுக்கும் உறுத்திக்கிட்டே இருக்கு.
நீ ஏன்டி இப்படி பண்ணின?”என்று அவள் சம்யுக்தனைத் திருமணம் செய்து கொண்டது
தவறென்ற ரீதியில் பேசினார் கோமளா.
“ம்மா! நான் இவரைப் பிடிச்சுத் தான் கல்யாணம் செய்துக்கிட்டேன். அது உங்களுக்கும்
தெரியும். இவருக்கு என்னைப் பிடிக்கக் கொஞ்சம் லேட் ஆகும். அவ்வளவு தான்!
அதுக்காக என்னோட சாய்ஸ் தப்புன்னுப் பேசாதீங்க!”என்று தீர்க்கமாக கூறினாள்
பிரார்த்தனா.
“நீ ஏன் இப்படி இருக்கடி? நாங்க உனக்கு ஏதாவது குறை வச்சோமா? அப்பறமும் ஏன்
இப்படி ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி இறந்தவனைக் கட்டிக்கிட்ட?”என்று மனத்
தாங்கலுடன் கேட்டார்.
“நீங்க எனக்கு எந்தக் குறையும் வச்சது இல்லம்மா. ஆனால் அவரை நான் தானேம்மா
முதலில் காதலிச்சேன்! அதை உங்ககிட்டயும் சொல்லித் தானே இப்போ கல்யாணம்
செய்து இருக்கேன். அதேபோல் அவர் என்னை ஏத்துக்கிறதுக்கும் ரொம்ப நாள் ஆகாது!
அதுவரை நான் காத்திருப்பேன் ம்மா. ஆனால் அதுக்காக மட்டுமே இருக்க மாட்டேன்!
எனக்கானதையும் செய்துப்பேன்!”என்றவளை எண்ணி ஆயாசமாக இருந்தது
கோமளாவிற்கு.
“நீ என்னடி இப்படியெல்லாம் பேசுற? ஏன் நாங்க உனக்குப் பிடிச்ச மாதிரியான வரனைப்
பாத்திருக்க மாட்டோமா? எங்க மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“எனக்கு உங்க மேல் ரொம்ப நம்பிக்கை இருக்கும்மா. ஆனால், இதுநாள் வரையில்
எனக்குக் கிடைச்சதை தான் நான் என்னோடதா ஏத்துக்கிட்டேன்! ஆனால் இப்போ முதல்
முறையாக எனக்குப் பிடிச்சதை நான் அடைஞ்சு இருக்கேன்! எஸ்! சம்யுக்தனை நான் லவ்
பண்ணேன்! அவரையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்! ஆனால் அவர் அந்த
வசுமதியைக் கல்யாணம் செய்துக்கிட்டார். அதுக்கப்புறம் அவரை விட்டு ஒதுங்கிட்டேன்!
ஆனால், அவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்கப் பொண்ணுப்
பார்க்கிறாங்கன்னுத் தெரிஞ்சதுமே எனக்கு செகண்ட் சான்ஸ் கிடைச்சிருக்குன்னு உங்க
கிட்டேயும், அப்பாகிட்டேயும் போராடி அவரைக் கட்டிக்கிட்டேன்! ஆனாலும் என்
விதியைப் பாருங்கம்மா! நான் முதலில் காதலிச்சு இருந்தாலும் இப்பவும் எனக்கு
இரண்டாவது வாய்ப்பு தான் கிடைச்சு இருக்கு!”என்று அவரிடம் தன் மனதிலிருந்ததைக்
கொட்டித் தீர்த்தாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டுத் துடித்துப் போய்,“என்னடி என்னென்னவோ சொல்ற? பிரனாம்மா!
நாங்க உன்னை நல்லா பார்த்துக்கலையா?”என்றவரிடம்,
“நீங்களும், அப்பாவும் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்கம்மா! ஆனால்,
நீங்களும் எனக்கு அந்த ஆசிரமம் தேடிக் கொடுத்தவங்க தானே? என்னோட முதல்
அப்பா, அம்மா இல்லையே? அதே மாதிரி எனக்குக் கிடைச்சது எல்லாமே எனக்குப்
பிடிச்சு, நான் செலக்ட் செஞ்ச விஷயங்கள் இல்லையே? அதெல்லாம் மத்தவங்க எனக்குத்
தேடிக் கொடுத்தது தானே? முதல் முறையாக நான் சம்யுக்தனை விரும்பினேன். ஆனால்
அவரும் என் கையை விட்டுப் போய் இப்போ தான் திரும்ப கிடைச்சு இருக்கார். அவரை
எப்படி நான் மறுபடியும் இழக்க நினைப்பேன்? அதனால் தான் உங்க கிட்ட பிடிவாதம்
பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! இதில் தப்பு என்ன இருக்கும்மா?”என்று
நிதானமாக வினவினாள்.
அவள் பேசியதைக் கேட்டு அவருக்கு உலகம் சுற்றுவதே நின்று போனது போல்
இருந்தது.
“பிரனா!”என்றவரிடம்,
“சொல்லுங்கம்மா”என்று இயல்பான குரலில் கேட்டாள் பிரார்த்தனா.
“இப்போதாவது உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழு. நானும், உங்கப்பாவும் உங்க
ரெண்டு பேரையும் மறு வீட்டு விருந்துக்கு அழைக்க சீக்கிரமே
வந்துட்றோம்”என்றுரைக்க,
“சரிம்மா”என்று அழைப்பை வைத்து விட்டுத் தன் மாமியாரிடம் வந்து,
“அம்மாவும், அப்பாவும் மறு வீட்டு விருந்துக்குச் சீக்கிரமே அழைக்க வர்றோம்னு
சொன்னாங்கத்தை”என்றவளை, அறைக்கு அனுப்பி வைத்து விட்டுத் தன் கணவர் மற்றும்
இளைய மகனிடமும்,
“அவனுக்குத் தலைவலியாம். எங்கிட்ட மாத்திரை கொண்டு போகச் சொல்லி சொன்னாள்
மருமக”எனக் கூறவும்,
“அவங்களுக்குள்ளே பேச்சு வார்த்தை நடந்தால் தான் சகஜமாக வாழவும் ஆரம்பிக்க
முடியும்!”என்றார் ஜெயராம்.
“ம்மா! காலையில் சீக்கிரம் எழுந்ததால் எனக்கும் தூக்கம் கண்ணைக் கட்டுது! நான்
கொஞ்ச நேரம் தூங்கி எழுறேன்”எனக் கூறி விட்டுச் சென்றான் பிரதீபன்.
தன் கணவனின் உறக்கம் தழுவிய நிர்மூலமான முகத்தைச் சில நிமிடங்கள் மௌனமாகப்
பார்த்துக் கொண்டு இருந்தாள் பிரார்த்தனா.
‘ஏன் முதல் மனைவி இறந்ததுக்கு அப்பறம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க
கூடாதா? அதே மாதிரி, எந்தப் பொண்ணும் இரண்டாவது மனைவியா ஆகக் கூடாதா?
நான் உங்களை லவ் பண்ணேன்! இப்பவும் லவ் பண்றேன் சம்யு! அதனால் தான்
எல்லாரையும் சமாளிச்சு உங்களைக் கல்யாணம் செய்து இருக்கேன்! கூடிய சீக்கிரம்
உங்களையும் என்ன லவ் பண்ண வைப்பேன்!'என அவனிடம் சொல்வதைப் போல்
நினைத்துக் கொண்டு மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
இதே வேளையில், தன்னிடம் மகள் பேசியதைக் கணவரிடம் பகிர்ந்து கொண்டார்
கோமளா.
அதைக் கேட்டதும்,”என்னம்மா சொல்ற? பிரனாவா இப்படியெல்லாம் பேசுனது?”என்று
நம்ப இயலாமல் வினவினார் சக்திவேல்.
“ஆமாங்க. நாம என்ன தான் அவளை நம்மப் பெத்தப் பொண்ணு மாதிரி வளர்த்து
இருந்தாலும் அவ அந்த ஆசிரமத்தில் வளர்ந்தவள்ன்றதை இன்னும் மறக்காமல்
இருக்கிறாள்! அவளுக்குப் பிடிச்ச எதுவும் அவளுக்குக் கிடைச்சது இல்லையாம்!
மாப்பிள்ளையும் அப்படித் தானாம்! ஆனால் இப்போ கிடைச்சிட்டாராம்!”எனப்
பதிலளிக்க,
“நாம இதைப் பத்தி அவ கிட்ட நேரில் பேசுவோம்மா. அப்போ தான், அவ என்ன சொல்ல
வர்றாள்ன்னுத் தெளிவாக கேட்டுப் புரிஞ்சிக்க முடியும்”என்று கூறி விடத் தானும் அதை
ஆமோதித்தார் கோமளா.
தனது புடவையைக் கலைந்து வீட்டில் அணியும் உடையை அணிந்து கொண்டுத், தனது
செல்பேசியில் தோழிகளுடன் உரையாடலை மேற்கொண்டாள் பிரார்த்தனா.
“என்னப் பண்ற? கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா?”என்றாள் அவளது தோழி உத்ரா.
“வந்தாச்சு டி. நான் சும்மா தான் இருக்கேன். அப்பறம், நான் சீக்கிரமாகவே லீவ் முடிஞ்சு
வந்துடுவேன். சரியா?”
“அப்படியா? சம்யுக்தன் சாரும் வந்துருவாரா?”
“ஆமாம். நிறைய பெண்டிங் வொர்க் இருக்கு. அடுத்த மாசம் செமஸ்டர் வேற வருது.
ஸ்டூடண்ட்ஸூக்கு ரிவிஷன் கொடுக்கனும். அதனால் நாங்க ரெண்டு பேருமே
காலேஜூக்கு வந்துடுவோம்”என்றுரைத்த
“சூப்பர்!”
“என் பீரியடை யாரு யூஸ் பண்ணிட்டு இருக்கா?”
“ரம்யா மேம் அவங்களோட சப்ஜெக்ட்ஸில் நிறைய பாடங்களை நடத்தாமல்
இருக்காங்களாம். அதனால் அவங்க தான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க!”என்பர்
பதிலளித்தாள் உத்ரா.
“ஓஹோ! சரி. நான் வந்து பார்த்துக்கிறேன். நீ உன் பாடத்தோட ரிவிஷன்
முடிச்சிட்டியா?”எனக் கேட்டாள் பிரார்த்தனா.
“இன்னும் இல்லை”
“அப்போ நான் வந்ததும் சேர்ந்து பிராக்டீஸ் கொடுக்கலாம். சரியா?”
“சரி பிரனா. நீ காலேஜூக்கு வந்ததும் நேரில் பேசுவோம்”எனக் கூறி அழைப்பை
வைத்தாள் உத்ரா.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.