தன்னுடைய கணவனின் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஏற்பட்ட பரவசத்தால்
பிரார்த்தனாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
அதை தனது சைடு மிரர் வழியாக கண்ணுற்றான் சம்யுக்தன்.
அதை அறிந்து இன்னும் விரிவாகப் புன்னகைத்தாள் பிரார்த்தனா.
அதில் ஒரு கணம் தனது சுயத்தை இழந்து விட்டான் அவளது கணவன்.
அவனது சிந்தை தன்னில் நிலைத்து இருப்பதைக் கவனித்துக் கர்வம் கொண்டவளோ,
நேரம் ஆவதை உணர்ந்து,
“இப்படியே சைட் மிரர் வழியாக என்னை சைட் அடிச்சது போதும். நமக்கு லேட் ஆச்சு.
வண்டியை ஸ்டார்ட் பண்றீங்களா?”என்று அவனிடம் குறும்புடன் வினவினாள்
பிரார்த்தனா.
அதில் திரும்பி அவளை முறைத்து விட்டு வண்டியை இயக்கினான் சம்யுக்தன்.
“நீயும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு நேரத்துக்குக் காலேஜூக்குப் போ”எனக் கூறிச் சின்ன
மகனை உண்ண வைத்தார் கலாவதி.
அவன் சிவில் இன்ஜினியரிங் இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்குத் ஊன்னுர தந்தை மற்றும் தமையனைப் போல் பேராசிரியராக வேண்டும்
என்ற எண்ணம் இல்லை.
சிவில் இன்ஜினியராகிப் பல கட்டிடங்களைக் கட்டும் தொழில் செய்யவே அவனுக்கு
விருப்பம்!
தனது உணவை உண்டு விட்டுத் தாய், தந்தையிடம் விடைபெற்றுக் கல்லூரிக்குச்
சென்றான் பிரதீபன்.
இங்கு கல்லூரியின் வாயிலை அடைந்ததும், வண்டியிலிருந்து இறங்கி,”சாயந்தரமும் நாம
ஒன்னா தானே வீட்டுக்குப் போவோம்”என்று கேட்க,
“ம்ஹ்ம்”எனப் பதிலளிக்க,
“தாங்க்ஸ்”என்றுரைத்து விட்டுக் கல்லூரிக்குள் சென்றாள் பிரார்த்தனா.
இவனும் தனது வண்டியை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்து அலுவலக
அறைக்கு நடந்தான் சம்யுக்தன்.
அவனுக்கு முன்னதாகவே அங்கே சென்றிருந்த பிராத்தனாவே தனது கையொப்பத்தை
இட்டு விட்டு வெளியே வந்த சமயம் அவளை எதிர் கொண்ட உத்ராவோ,
“ஹாய் பிரனா!”என்று புன்சிரிப்புடன் கூற,
“ஹாய் உதி”எனத் தானும் அவளிடம் மொழிந்தாள் பிரார்த்தனா.
“நீ இங்கேயே இரு. சைன் போட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டு உள்ளே சென்று
விட்டாள் உத்ரா.
அவளுக்காக காத்திருந்தவளை அங்கே வந்த சம்யுக்தனோ புருவச் சுருக்கத்துடன் ஏறிட,
‘இவர் ஒருத்தர்! இப்படி புருவத்தைச் சுருக்கிப் பார்த்துட்டா பதில் சொல்லிடனுமாம்! ஏன்
வாயைத் திறந்து கேட்டால் குறைஞ்சுப் போயிடுவாராக்கும்?’என மனதில் பொருமி
விட்டு,
“உத்ராவுக்காக காத்திருக்கேன்”என்று கூறினாள் பிரார்த்தனா.
“ஓஹ் ஓகே”என்றவன் அலுவலக அறைக்குள் செல்லவும், உத்ரா வெளியே வரவும் சரியாக
இருந்தது.
இவனைப் பார்த்ததும்,”குட் மார்னிங் சம்யுக்தன் சார்”என்று கூறிப் புன்னகைக்க,
அவளைத் தவிர்க்க முடியாமல்,”குட் மார்னிங் மேம்”என மொழிந்து விட்டு உள்ளே போய்
விட்டான் சம்யுக்தன்.
பிரார்த்தனாவிடம் வந்து,”என்னக் கல்யாணப் பொண்ணு மறு வீட்டு விருந்தை எல்லாம்
முடிச்சிட்டுத் தான் வருவன்னு நினைச்சேன். நீ என்னடான்னா நேத்துக் கால் செஞ்சி
இன்னைக்கு வர்றேன்னு சொல்லிட்ட. உன் புகுந்த வீட்டில் எல்லாம் ஓகே தானே
உனக்கு?”என்று அவளிடம் அக்கறையுடன் விசாரிக்க,
அவளோ,“எல்லாம் ஓகே தான் உதி”என்றவாறு அவளுடன் சேர்ந்து நடந்தாள்.
“சம்யுக்தன் சார் இன்னும் விறைப்பாகத் தான் சுத்திட்டு இருக்கார்
போலவே?”என்றவளிடம்,
“ஆமாம் டி. நாம இதைப் பத்திப் பிரேக்கில் பேசுவோம்”என்று அவளிடம் தெரிவித்து
விட்டுத் தன் வகுப்பிற்குச் சென்றாள் பிரார்த்தனா.
இதே சமயம் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்குத் தேர்வு மீளாய்வு செய்து
கொண்டிருந்த சம்யுக்தனுக்கோ அதில் மனம் லயிக்கவே இல்லை.
அவனுக்கு ஏனோ தனது இரண்டாம் திருமணத்தின் மூலமாகத் தன் முதல் மனைவியான
வசுமதிக்குத் துரோகம் இழைத்ததைப் போன்ற குற்ற உணர்வுத் தோன்றியது.
அதனாலேயே அவனால் வகுப்பில் கவனம் வைக்க முடியவில்லை.
உடனே வேறொரு பேராசிரியரை அழைத்து,”என்னால் இப்போ கிளாஸ் எடுக்க
முடியலை சார். எனக்கு ஒரு மாதிரி இருக்கு. டீ குடிக்கனும் போல இருக்கு. அதனால் நான்
கேன்டீனுக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் நீங்க பார்த்துக்கிறீங்களா?”என்றவனிடம்,
“ஓகே சார். கல்யாணம் ஆன உடனே காலேஜூக்கு வந்துட்டால் இப்படித் தான் ஆகும்!
நீங்கப் போயிட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன்”என்று நமுட்டுச் சிரிப்புடன்
கூறியவரைச் சலிப்பாகப் பார்த்து விட்டுச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று தேநீரை
வரவழைத்து நாற்காலியில் அமர்ந்தான் சம்யுக்தன்.
தனக்கும், பிரார்த்தனாவிற்கும் இடையே நிகழ்ந்த திருமணம் தனக்குத் தீராத
தலைவலியை உருவாக்கி வைத்து விட்டது என்ற கழிவிரக்கம் கொண்டுத் தேநீர்க்
கோப்பையையே பார்த்தவாறு இருந்தவனுக்கு வசுமதியின் நினைவு எழுந்தது.
அவளை அவனது பெற்றோர் தான் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
வசுமதியுடனான அந்த ஒரு வருட வாழ்க்கைக்குச் சாட்சியாக இப்போது குழந்தை கூட
இல்லை. அதனால் தான், அவனது பெற்றோரும் அவனுக்கு மறுமணம் செய்து
வைத்திருந்தனர்.
ஏனென்றால், அவர்களுக்குக் குழந்தை பிறந்திருந்தால் அவன் நிச்சயமாக
மறுமணத்திற்குச் சம்மதித்து இருக்க மாட்டான் என்பது அவர்களுக்கு நன்றாகவே
தெரியும்!
அதனால் அதையே காரணம் காட்டி சம்யுக்தனுக்கு இரண்டாம் திருமணத்தைச் செய்து
வைத்து விட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவனுக்கோ துளியும் விருப்பம் இல்லாத இந்த திருமணம் மிகவும் கசப்பு
உணர்வைக் கொடுத்தது.
அவனது எண்ணங்கள் தறிகெட்டுப் போய்க் கொண்டிருந்த நிலையில் யாரோ தனக்கு
எதிரில் வந்து அமர்வதைக் கண்டு நிமிர்ந்து பார்க்க,
அங்கே பிரார்த்தனாவைக் கண்டதும் உடனே தனது முகத்தை இறுக்கமாக வைத்துக்
கொண்டு,”இங்கேயும் என்னைத் தனியாக விட மாட்டியா?”என்றான் சம்யுக்தன்.
அதற்கு நிர்மூலமான முகத்துடன்,”மாட்டேன்! நான் உங்களை எப்பவும் தனியாக விட
மாட்டேன்! ஏன்னா, யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கிறதோட வலி எப்படி
இருக்கும்னு எனக்குத் தெரியும். அதை நீங்க அனுபவிக்க நான் விட மாட்டேன்!”என்று
அழுத்தமான குரலில் பதிலளித்தாள்.
அதைக் கேட்டதும் அவளிடம் வெளிப்படையாகவே தன்னுடைய வெறுப்பைக்
காண்பித்துக் கொண்டு இருக்கும் தன்னிடம் இப்படியான வார்த்தைகளை உரைக்க
அவளுக்கு எப்படி முடிகிறது? என்று மலைத்துப் போய் அவளை நோக்க,
“என்ன அப்படி பார்க்கிறீங்க? டீ ஆறிப் போயிரும். அதைச் சீக்கிரம் குடிங்க”என்றவளை
ஆயாசமாகப் பார்த்து விட்டுத் தேநீரைக் கடகடவெனக் குடித்து முடித்தான் சம்யுக்தன்.
“எனக்கும் டீ வாங்கிட்டு வர்றேன்”எனக் கூறித் தனக்குத் தேநீரை வாங்கிக் கொண்டு
வந்தவளிடம்,
“நீ கிளாஸூக்குப் போகலையா?”என்க,
“அங்கே தான் இருந்தேன். ஆனால் நீங்க கேன்டீன் பக்கம் வர்றதை ஜன்னல் வழியாகப்
பார்த்தேன். அதான், வேற மேம்மை மாத்தி விட்டுட்டு வந்தேன்”என்றுரைத்தாள்
பிராத்தனா.
“இதெல்லாம் எதுக்குப் பண்ற?”என்றவனுக்குப் பதிலளிக்காமல் தேநீரைக் குடிக்கத்
தொடங்கியதால் அதைக் குடித்து முடிக்கும் வரைக் காத்திருக்கலானான் சம்யுக்தன்.
ஆனால் அவள் முழுமையாக குடிக்காமல்,”நான் இதெல்லாம் எனக்காகப்
பண்றேன்”என்று நிதானமாக உரைத்தாள் பிரார்த்தனா.
“புரியலை”என்றான் குழப்பத்துடன்.
“நீங்க நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும். அதுக்காக!”என்றவளை வியப்பு
மேலிட பார்த்து,
“நீ ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கிற? எனக்கு உன்னோட நடந்தது முதல் கல்யாணம்
இல்லை. ஆனால் உனக்கு இது முதலாவது. அப்படி இருக்கும் போது நீ எதுக்கு என்னைக்
கல்யாணம் செய்துக்கிட்டே?”எனக் கேட்டான் சம்யுக்தன்.
“இதையெல்லாம் இங்கே இருந்து பேசுறது தப்பு சார். நாம காலேஜில் இருக்கோம். சுத்திப்
பாருங்க, எல்லாரும் நம்மளைத் தான் பார்த்துட்டு இருக்காங்க”என்றதும்,
தன்னைச் சுதாரித்துக் கொண்டுக் கண்களைச் சுழற்றிப் பார்க்க, அவள் சொன்னதைப்
போல் தான் அங்கே இருந்தவர்களின் பார்வைகள் முழுவதும் தங்களிடம் தான் இருந்தது
என்பதை அறிந்து கொண்டு,
“ஆமாம். நான் கிளாஸூக்குப் போறேன். ஆனால் வீட்டுக்குப் போனதும் நாம
கண்டிப்பாகப் பேசனும்”என்று அவளிடம் உறுதியாக கூறி விட்டுத் தன் வகுப்பிற்குப்
போனான் சம்யுக்தன்.
அதைப் புன்னகையுடன் பார்த்து விட்டுத் தானும் வகுப்பறைக்குச் சென்று விட்டாள்
பிரார்த்தனா.
இதே சமயம், கோமளாவிற்கு அழைத்து,”சம்பந்தி! பிரனாகிட்டே பேசினீங்களாம்”என்றார்
கலாவதி.
“ஹாங்! ஆமாம் சம்பந்தி. மறு வீட்டு விருந்துக்கு வர்றதைப் பத்திப் பேசினேன்”
“அதையும் சொன்னாள்”
“அப்போ சரிங்க சம்பந்தி. இந்த வாரக் கடைசியில் நாங்க வந்துட்றோம்”என்றவரே,
“அவங்க ரெண்டு பேரும் இப்போ எப்படி பழகுறாங்க? கண்டிப்பாக இயல்பாகப் பழகிக்க
மாட்டாங்க! ஆனாலும் ஒரு நப்பாசையில் கேட்கிறேன். கொஞ்சம்
சொல்லுங்களேன்”என்று இறைஞ்சிக் கேட்டார் கோமளா.
“எனக்கும் அதே நப்பாசை தான் சம்பந்தி. அவங்க ரெண்டு பேரும் இயல்பாகப்
பேசிக்கவே மாட்டேங்குறாங்க! என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சி வச்சதே தப்புன்னுத்
தோணுது!”என்று சோகமாக உரைத்தார் கலாவதி.
“ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க? மாப்பிள்ளையோட மனசு சீக்கிரம் மாறி, அவர்
என்னோட பொண்ணை ஏத்துக்குவார்”என்று அவருக்கு நம்பிக்கை அளிக்க,
“சரிங்க சம்பந்தி”என்று கூறிப் பெருமூச்செறிந்தார் கலாவதி.
“மறு வீட்டு விருந்துக்கு என்னென்ன கொண்டு வரனும் சம்பந்தி? உங்களுக்கு
அதெல்லாம் தெரியும் தானே?”என்றதும் தனது இதயத்தில் சுருக்கென்று வலி எடுத்தது.
ஆனாலும் சமாளித்துக் கொண்டு,”சொல்றேன் சம்பந்தி”என்று தனக்குத் தெரிந்தவற்றை
அவரிடம் விவரித்தார் கலாவதி.
“நன்றி சம்பந்தி”என்று கூறி அழைப்பை வைத்து விடவும்,
“இவங்க வேணும்னே என்னைக் கஷ்டப்படுத்துறதுக்காகப் பேசுறாங்களா?
இல்லைன்னா, உண்மையாகவே விஷயம் தெரியாமல் பேசுறாங்களான்னு எனக்குச்
சத்தியமாகப் புரியலை”என்று கலக்கத்துடன் புலம்பிய மனைவியிடம்,
“பிரார்த்தனாவோட அம்மாவைத் தானே சொல்ற? இப்போ என்னப் பேசினாங்க?”என்று
கனிவாக கேட்டார் ஜெயராம்.
உடனே அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள,”அவங்க உண்மையிலேயே
தெரியாமல் தான் கேட்டு இருப்பாங்கம்மா. ஏன்னா, இது அவங்க வீட்டில் நடந்த முதல்
கல்யாணம்ல? அதான்”என்றுரைத்தவரை முறைத்து,
“நீங்க அவங்களுக்கு மேலே பேசுறீங்க! இப்போ இது முதல் கல்யாணமா? இல்லை,
ரெண்டாவதான்னு ஆராய்ச்சிப் பண்றது ரொம்ப முக்கியமா?”என்றார் கலாவதி.
“சாரிம்மா”என அவரிடம் சரணடைந்து விட்டார் ஜெயராம்.
இங்கே கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின் போது,”இப்போ சொல்லு.
சம்யுக்தன் சாருக்கு உன் மேல் கோபம் எதுவும் இருக்கா?”என்று அவளிடம் பரிவுடன்
கேட்டாள் உத்ரா.
“அவருக்கு என் மேல் கோபம் எல்லாம் இல்லை. வீட்டில் என்கிட்ட நல்லா தான்
பேசுவார். இது காலேஜ்ல? அதான், நாங்க ரெண்டு பேரும் டீசன்ட்டா
நடந்துக்கிறோம்”எனப் பதிலளித்தாள் பிரார்த்தனா.
- தொடரும்

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.