அதற்குப் பிறகு மாலையில் கல்லூரி முடிந்ததும் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி
இருந்த இடத்திற்கு வந்தான் சம்யுக்தன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவனுக்குக் காட்சி அளித்த பிரார்த்தனாவோ,
“எனக்காக தான், வெயிட் பண்றீங்களா என்ன?”என்க,
“ஆமாம்”என்றவனோ, தனது வாகனத்தில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான்.
அதன், பின் இருக்கையில் அமர்ந்ததும்,”இப்பவும் தலைவலி இருக்கா?”என்று அவனிடம்
வினவினாள் பிரார்த்தனா.
“தலைவலியா?”என்றான் சம்யுக்தன்.
“ஆமாம். அதனால் தானே அப்போ டீ குடிச்சிட்டு இருந்தீங்க?”என்றவளிடம்,
தனது வண்டியை லாவகமாக இயக்கிக் கொண்டே,”தலைவலி எல்லாம் இல்லை. மனசு
சரியில்லாமல் இருந்துச்சு. அதான்”என்றுரைத்தான்.
“ஓஹோ! எதனால்?”
“எல்லாம் உனக்குத் தெரிஞ்சது தான்”என்றவனின் இறுக்கமான குரலில் விஷயத்தைப்
புரிந்து கொண்டாள் பிரார்த்தனா.
“ஓஹ்”என்றதற்குப் பிறகு, வேறெதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும்,
அதை அறிந்ததும், அவளிடம் பேச்சுக் கொடுக்காமல் வண்டியை இயக்கி, வீட்டை
அடைந்தவுடன்,”பிரதீப் இன்னும் காலேஜ் முடிஞ்சு வரலை போல”என்றுரைத்துக்
கணவனுடன் உள்ளே நுழைய,
“நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? நீங்க போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க”என
அவர்களை அனுப்பி வைத்தார் கலாவதி.
அதே சமயம், அவருக்குத் தன்னிடம் முகத்தில் அறைந்தாற் போல் பிரார்த்தனாவின்
அன்னை கோமளா பேசியதில் இருந்து அவர் மீது மனக்குறை இருந்தது தான்.
ஆனால் அதற்காக தனது மருமகளிடம் கோபப்படுவதிலும், சங்கடப்படுவதிலும்
அர்த்தமும், நியாயமும் இல்லை. அதனாலேயே அவளிடம் எப்போதும் போல் இயல்பாக
நடந்து கொண்டார் கலாவதி.
இதே நேரத்தில்,”நீங்க உங்களோட முதல் மனைவியைப் பத்தின யோசனையில்
இருந்தீங்களா?”என்ற பிரார்த்தனாவிடம்,
அதில் அவளை அழுத்தமாகப் பார்த்து,”இல்லை”என்று பதில் உரைத்தான் சம்யுக்தன்.
“ம்ஹ்ம். அப்போ உங்க மனக் கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தது என்ன?”என்று
அவனை விடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“அதுக்குக் காரணம் என்னோட முதல் மனைவி இல்லை. என்னோட முதல் கல்யாணம்
அப்பறம் என்னோட இரண்டாவது கல்யாணம்! அதாவது நம்மளோட கல்யாணத்தைப்
பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். போதுமா? நான் போய் டிரெஸ் மாத்துறேன்”என்று
கூறி விட்டு அவளிடமிருந்து விலகிக் குளியலறைக்குச் செல்ல,
உடனே தானும் தனது மாற்றுடையை எடுத்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்
பிரார்த்தனா.
இங்கோ தனது முகத்தைக் கழுவிய பின்,”நான் எப்பவும், யார் கிட்டேயும் பேசாமல்
இருக்கிற என்னை இப்படி புலம்ப வச்சிட்டா!”என்று அவளை நிந்தித்து விட்டுத் தன்
உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அவளைக் கடந்து செல்ல யத்தனித்த
போது,
“ஒரு நிமிஷம்”எனத் தடுத்தவளை ஆயாசத்துடன் ஏறிட்டான் சம்யுக்தன்.
“நம்மளோட கல்யாணத்தைப் பத்தி யோசிச்சேன்னு சொன்னீங்கள்ல?”
“ம்ஹ்ம்”
“இனிமேல் நீங்க அதைப் பத்தி மட்டும் யோசிச்சா நல்லா இருக்கும்”என்றவளிடம்,
“ஏன்? நான் ஒன்னும் அதைப் பத்திப் பாசிட்டிவ் ஆக யோசிக்கலை”என்று இறுகிப்
போய்க் கூறினான் சம்யுக்தன்.
“நீங்க நெகட்டிவ் ஆகவே யோசிங்க. ஆனால் அதை நீங்க யோசிக்கிறீங்க அப்படின்றதே
எனக்குப் போதும்!”என்று கூறியதும் அவன் சிலையாகச் சமைந்து விட்டவனைப்
பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் புகுந்தாள் பிரார்த்தனா.
தனது பெற்றோரிடம் வந்த சம்யுக்தனுக்குக் காபியைக் கொடுத்து விட்டு,”இந்தப்
பிரதீப்பை இன்னும் காணோம். கால் பண்ணிக் கேட்கிறேன்”என்று இளைய மகனுக்கு
அழைத்து,
“எங்கேடா இருக்க? வீட்டுக்கு வர ஐடியா இருக்கா? இல்லையா?”எனப் பொரிந்தார்
கலாவதி.
மறுமுனையில்,”ம்மா! நான் ஃப்ரண்ட்ஸ்ஸோட கேன்டீனில் பேசிட்டு இருக்கேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்”என்று அவரிடம் தெரிவித்தான் பிரதீபன்.
“இதை நான் கால் பண்ணிக் கேட்டுத் தெரிஞ்சிக்கனுமா? நீ சொல்ல மாட்டியா? வீட்டுக்கு
வந்ததுக்கு அப்பறம் உனக்கு இருக்கு!”என்று அவனை மிரட்டி அழைப்பை வைத்து விட்டு
அவன் கூறியதை தனது கணவரிடமும், மகனிடமும் பகிர்ந்து கொள்ள,
“அவனுக்குச் செமஸ்டர் வேற வருதே ம்மா. அதோட நினைப்பே இல்லாமல் சுத்திட்டு
இருக்கானே!”என்று தம்பியின் அசட்டைக் குணத்தை நினைத்துக் குறைபட்டான்
சம்யுக்தன்.
அங்கே வந்து,”அதுக்காக இருபத்தி நாளு மணி நேரமும் படிச்சிக்கிட்டே இருக்க முடியுமா
ங்க? அப்பப்போ நம்ம மனசுக்குப் பிடிச்சதையும் செஞ்சா தான் புத்துணர்ச்சியாக
இருக்கும்!”என்று தன் கருத்தை உரைத்தாள் பிரார்த்தனா.
அதில் அவளை முறைத்தான் அவனது கணவன்.
ஆனால்,”அப்படிச் சொல்லும்மா. எல்லாருமே இவனை மாதிரியே இருக்க முடியுமா
என்ன?”என்று கூறிச் சிரித்தார் ஜெயராம்.
“ப்பா”என்று தனது குரலில் கோபத்தை வெளிப்படுத்தினான் சம்யுக்தன்.
“என்னடா?”என அவனிடம் எகிறவும்,
“ம்ஹூம்! ஒன்னும் இல்ல ப்பா”என்றுரைத விட்டுத் தனது காபியில் கவனம் பதித்து விட,
அதில் குறுஞ்சிரிப்பை உதிர்த்து விட்டுத் தன்னிடம் மாமியார் கொடுத்த காபியை
லயித்துக் குடிக்கத் தொடங்கினாள் பிரார்த்தனா.
அந்த தருணத்தில், வீட்டினுள் நுழைந்தான் பிரதீபன்.
“வர்றான் பாரு! நல்லா காலேஜ் கேன்டீனில் உட்கார்ந்துக்கிட்டு வெட்டிக் கதைப்
பேசிட்டு எக்ஸாமுக்குப் படிக்காமல் திரியுறியா நீ?”என அவனைக் கடிந்து கொண்டார்
கலாவதி.
அதில் முகம் சுணங்கிப் போய்,”அதுக்காக இருபத்தி நாலு மணி நேரமும் படிச்சிட்டேவா
இருக்க முடியும்மா?”என்றவனின் அடுத்த வாக்கியமும் சற்று முன்னர் பிரார்த்தனா
கூறியதாகவே இருக்க அதை வியப்புடன் பார்த்தனர் மற்றவர்கள்.
அதில் குழப்பம் மேலிட,“என்னாச்சு?”என அவர்களிடம் கேட்டான் பிரதீபன்.
“அதுவா? நீ இப்போ சொன்னதைக் கொஞ்ச நேரத்துக முன்னாடி உன்னைப் பத்திப்
பேசும் போது நான் சொன்ன அதே வார்த்தைகள்! அதனால் தான், உன்னை இப்படி
ஆச்சரியமாகப் பார்க்கிறோம்”என்று அவனுக்கு விளக்கம் அளித்து விட்டு அவனுக்கான
கொட்டை வடிநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து தந்தாள் பிரார்த்தனா.
“தாங்க்ஸ் அண்ணி”என்று மெலிதான புன்னகையுடன் அதை வாங்கிக் குடித்தான்.
அவனுக்குத் தன்னைப் போலவே யோசித்துப் பேசும் மற்றொருவரைப் பார்க்கையில்
அவனது மனம் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தது.
இனிமேல் தன் அண்ணியிடம் சாதாரணமாக உரையாடலாம் மற்றும் தனக்குத்
தேவையான உதவியை அவரிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று அவனுக்குள் உத்வேகம்
எழுந்தது.
அதனாலேயே அதற்கடுத்து வந்த நாட்களில் பிரார்த்தனாவுடன் நன்றாகப் பழகத்
தொடங்கி விட்டிருந்தான் பிரதீபன்.
அதேபோல் தனக்கு அக்காவோ, தங்கையோ இல்லாத குறையை அவள் தீர்த்து வைக்கத்
தொடங்கியதால் அவளிடம் பாசமாக நடந்து கொண்டான்.
அதில் நெகிழ்ந்து போய் அவனுடன் தனது இயல்பான குணத்துடன் நட்புப் பாராட்ட
ஆரம்பித்து விட்டாள் பிரார்த்தனா.
தான் யாரிடமும், எளிதில் பேசி, சிரித்து விடும் குணம் கிடையாது என்பதால் அவன் தன்
முதல் மனைவி வசுமதியிடம் கூட அவ்வளவாகப் பேசிச் சிரித்தது இல்லை சம்யுக்தன்.
அவர்கள் இருவரும் தங்களுக்குள் நட்பாக இருப்பதைக் கண்டும், காணாமல் இருந்து
கொண்டான்.
இப்படியாக ஒரு வாரம் கடந்த இருந்த நிலையில் விடுமுறை நாளன்று பிரார்த்தனாவின்
பெற்றோரான சக்திவேலும், கோமளாவும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவர்களை வரவேற்று அமர வைத்தவுடன் அவர்களது அருகில் சென்று சலுகையாக
அமர்ந்து கொண்டாள் பிரார்த்தனா.
அதில் அவர்களது தயக்கம் தற்காலிகமாக மறைந்து போய் விடவும், அவளது சிகையைக்
கோதிக் கொடுத்தனர் இருவரும்.
“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்”என்றவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை
அவர்களால்.
“எனக்கு இங்கே ஒரு ஃப்ரண்ட் கிடைச்சு இருக்காங்க”என்று தன்னைக் கைக் காட்டிக்,
“பிரதீப் தான் அந்த ஃப்ரண்ட்”என்று குதூகலமாக உரைத்த அண்ணியைக் கண்டுத் தானும்
புன்னகைத்தான்.
பிரார்த்தனாவின் பெற்றோரின் வரவிற்கான காரணம் அனைவரும் அறிந்ததே என்றாலும்
அதை அவர்கள் ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தார்கள் அவளது புகுந்த வீட்டினர்.
அதைப் புரிந்து கொண்டு,”மறு வீட்டு விருந்துக்குத் தான் எல்லாரையும் அழைக்க
வந்தோம்”என்று தெரிவித்து,
தங்களது மகள் மற்றும் மருமகனுக்கு எடுத்து வந்திருந்த ஆடைகளை முறையாக அவர்கள்
இருவரிடமும் சேர்ப்பித்தனர் சக்திவேல் மற்றும் கோமளா.
அவர்கள் மீது இருந்த மனக்கிலேசத்தில் கலாவதியின் முகம் வாடித் தான் இருந்தது.
அதைக் கண்டு கொண்டு,”நீங்க ஏன் ஒரு மாதிரி சோகமாக இருக்கீங்க சம்பந்தி?”என்று
அவரிடம் அக்கறையுடன் வினவினார் கோமளா.
அதில் அவரை ஆராய்ச்சியாகப் பார்த்து விட்டு,”அதெல்லாம் ஒன்னுமில்லை
சம்பந்தி”என்று புன்னகைக்க,
“இந்த மறு வீட்டு விருந்து முறையில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்கு”என்றவனைச்
சோர்ந்து போய்ப் பார்க்க,
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,”நம்ம ரெண்டு வீட்டுக்கும் பொதுவாக ஒரு
விருந்து வச்சா நமக்கு நேரமும், செலவும் மிச்சம் ஆகும்ல?”என்று யோசனை கூறினான்
சம்யுக்தன்.
அதைக் கேட்ட மற்றவர்களுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை என்பதை அவர்களது
முக பாவனையே வெளிப்படுத்தியது எனலாம்.
“நீ எதுக்காக இப்படி சொல்றன்னுத் தெரியாத அளவுக்கு நாங்க வெள்ளந்திக்
கிடையாதுடா”என்று மகனிடம் தீர்க்கமாக உரைத்தார் ஜெயராம்.
அதில் பெருமூச்செறிந்து,”அதான் நான் சொன்னதோட உண்மையான காரணம்
என்னன்னு உங்களுக்கே தெரிஞ்சிடுச்சு தானே ப்பா? நாம நம்ம மொட்டை மாடியிலேயே
கொட்டகையைப் போட்டு ரெண்டு வீடும் சேர்ந்து விருந்து வச்சிடலாம். அதுக்கப்புறம்
நெருங்கின சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும் நாங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிட்டு
வர்றோமே?”என பெரியவர்களிடம் கோரிக்கை வைத்தான் சம்யுக்தன்.
அதில் தன் தாயின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள் பிரார்த்தனா.
ஆனால் கணவனின் கூற்றை ஏற்றோ அல்லது மறுத்தோ ஒரு வார்த்தைக் கூட
உதிர்க்கவில்லை அவள்.
அதை அவதானித்து அவள் மீது வருத்தம் அடைந்தான் சம்யுக்தன்.
தனது மகனின் இந்த கோரிக்கையையாவது ஏற்றுக் கொள்வோம் என்ற முடிவில்,
“இந்த ஒரு சம்பிரதாயத்தையாவது இவன் விருப்பத்துக்குச் செய்யலாமே?”என்று
அவனுக்குப் பரிந்து பேசினார் ஜெயராம்.
அதைக் கலாவதியும், பிரதீபனும் கூட ஆமோதிக்கவும்,
“சரிங்க சம்பந்தி”என்று ஒப்புக் கொண்டார்கள் சக்திவேல் மற்றும் கோமளா.
ஆனால் தனது கருத்தை யாருமே கேட்கவில்லை என்பதை உணர்ந்து முகம் இறுகிப்
போனாள் பிரார்த்தனா.
அந்த விருந்திற்கு எவ்வளவு செலவாகும், என்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று
முடிவு எடுத்த பின்னர் தங்களது வீட்டில் வைத்து மகளிடம் பேசிக் கொள்ளலாம் என்ற
முடிவோடு அனைவரிடமும் சொல்லிக் கொண்டுக் கிளம்பினர்.
அதற்குப் பிறகு, இரவு உணவை முடித்துக் கொண்டுத் தங்களது அறைக்கு வந்து உறங்க
ஆயத்தம் செய்த போது,
“இந்த விருந்தைப் பத்தின பேச்சில் நீ சம்மதமோ, மறுப்போ எதுவுமே சொல்லலையே
ஏன்?”என்று மனைவியிடம் வினவினான் சம்யுக்தன்.
“இதை ரொம்ப சீக்கிரமாகவே கண்டுபிடிச்சு எங்கிட்ட கேட்டுட்டீங்களே!”என்றவளோ,
“எங்கிட்ட யாரும் கருத்து கேட்கவே இல்லையே! அப்பறம் நான் எதுக்கு என்
எனர்ஜியையும், வார்த்தையையும் வேஸ்ட் பண்ணனும்? அவங்களை விடுங்க, ஒரு
புருஷனா பொண்டாட்டி கிட்டே கலந்து பேசிட்டுத் தான் முடிவைச் சொல்லனும். ஆனால்
நீங்க உங்களோட அபிப்ராயத்தை எங்கிட்ட கலந்து பேசாமலே சொல்லிட்டீங்க. என்
விருப்பத்தைக் கேட்கவே இல்லை. நான் ஒன்னும் உங்களைக் கட்டாயப்படுத்தி
உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலை!”என்று அவனுக்குச் சூடாகப் பதிலளித்து விட்டு
உறங்கினாள் பிரார்த்தனா.
ஆனால் அவளது பேச்சில் தடுமாறி நின்றான் சம்யுக்தன்.
அதேபோல், தங்களுக்குத் திருமணம் நடந்த அன்றிலிருந்து தன்னுடன் ஓரிரு வார்த்தைகள்
மட்டுமே பேசிய வசுமதியின் ஞாபகம் வந்து அவனது

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.