நாடெங்கிலும் தங்களின் உரிமைக்கான குரல்கள் வலுக்க தொடங்கி ஆங்கிலேயர்களை அச்சுறுத்த தொடங்கிய காலகட்டம்.
இந்திய சுதந்திரப் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பரவ தொடங்கியது.
“இன்னும் எத்தனை நாள் தான் நம்மளும் இப்படி அடங்கியே போறது? எத்தனையோ மக்கள் சுதந்திரத்துக்காக போராடுறாங்க. நமக்கான நியாயத்தை நம்ம தான் கேக்கணும்.” என்று மூளை முடுக்கில் இருந்து எல்லாம் தங்களுக்கு மேலே நின்று ஆட்சி செய்யும் வெள்ளையர்களை எதிர்த்து நின்றனர்.
இங்கு நெடுவயல் கிராமத்தில், அதுவரை தன் வாழ்வில் எந்த ஒரு பற்றுதலும் இல்லாமல் அடிமையாய் வீட்டில் முடங்கி கிடந்த யாஸ்மினுக்கு, தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெரிய பொறுப்பை விட்டு சென்றிருந்தான் இளங்கோவன்.
‘தன்னவனுடன் வாழ்வில் மட்டுமல்ல. அவன் லட்சியத்திலும் அவன் கனாவிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தவள் தானும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
இளங்கோவனுக்கு வாக்களித்ததை போல் தன் எதிர் குரலை எழுத்தில் வடித்தாள்.
அவள் கற்ற கல்வி துணை நிற்க, ஒரு அடிமை சமுதாயத்தின் குரலாக அவள் எழுத்துக்கள் பேனாவின் வழி மக்களை சென்றடைய காத்திருந்தது.
உடல் உழைப்பை தந்து எதிரியுடன் நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் மோதுவது ஆண்களின் வீரம் என்றால், விவேகத்தால் எதையும் வெல்லும் வீரம் பெண்ணியம் அல்லவா.
இரவு, பகல், உணவு, உறக்கம் என்று அனைத்தையும் மறந்து தன் சொற்களால் ஒவ்வொரு இந்தியனையும் அவன் உரிமைக்காக குரல் கொடுக்க வைத்தாள் யாஸ்மின்.
அவள் வார்த்தைகள், உறங்கிக் கொண்டிருந்த இந்தியர்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பும் ஏவலாக காகிதத்தில் தயாராக இருந்தது.
வீட்டில் சிறை பெட்டி கிடக்கும் கைதியான யாஸ்மினுக்கு, இந்த கட்டுரைகளை எப்படி நாளிதழுக்கு அனுப்ப வேண்டும் என்று மட்டும் புரியவில்லை.
பல நாட்கள் அவள் எழுதி வைத்த கட்டுரைகள் அந்த சிறிய அறையின் இருளில் உறங்கிக் கொண்டிருக்க, அவள் எழுத்து மட்டும் ஒரு நொடி கூட தடைப்படவில்லை.
மகளை எப்படியாவது திருமணம் செய்து அனுப்ப வேண்டும் என்று அவள் பெற்றோர்களின் ஏற்பாடு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கு அவள் வாழும் இறுதி நொடி வரை தன்னவனின் லட்சியத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருந்தாள் யாஸ்மின்.
அவள் உழைப்பு மக்களை சென்று சேர ஒரு வழியையும் அந்த இறைவனே அவளுக்கு அமைத்து தந்தார்.
யாஸ்மினின் தங்கை மரியம், “அக்கா! நம்ம அழகுவேல் அண்ணா இருக்காரு இல்ல? அவர் கிட்ட நீ எழுதுறது எல்லாம் நான் கொண்டு போய் கொடுக்கிறேன். அவரு அது எல்லாத்தையும் பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கிறேன்னு என் கிட்ட சொன்னாரு.” என்று கூற, இருளில் கிடைந்த யாஸ்மினுக்கு ஒரு சிறு பொறி கிடைத்துவிட்டது.
வெறும் காகிதங்களில் உறங்கிக் கொண்டிருந்த அவள் கட்டுரைகள், பல்வேறு அடிமைப்பட்ட மனதின் கதவைத் தட்டி எழுப்பி போராட புறப்பட்டு விட்டது.
தன் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அக்காவிடம் இருந்து காகிதங்களை பெற்றுக்கொண்டு நேராக அழகுவேலிடம் சென்று கொடுத்து விடுவாள் மரியம்.
அழகுவேலும் அந்த கடிதங்களை எல்லாம் அவனுக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளரை வைத்து தினசரி மற்றும் வார நாளிதழ்களில் பிரசுரம் செய்ய வைத்தான்.
துணிந்த மனம் எதையும் எதிர்கொள்ளும் என்று அவள் பெற்றோரை பற்றியோ தன்னை தவறாக பேசும் இந்த சமூகத்தை பற்றியோ நினைத்து தன்னை நிந்தித்துக் கொள்ளாமல், தன்னவன் தனக்குள் தோற்றுவித்த சென்ற இந்த வெறியை பேனா மையின் வழி இளங்கோவனுக்கு துணை நின்றாள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு பல இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மனதில் தங்கள் கொள்கைகளை ஆழமாக விதைத்து உடல் அளவிலும் மனதளவிலும் அவர்களை தயார் செய்து கொண்டிருந்தனர்.
இயக்கத்தில் சேர்ந்த நாள் தொட்டு தன் மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் வெறியை தீர்த்துக் கொள்ளவே நேரம் பார்த்து காத்திருந்தான் இளங்கோவன்.
மற்றைய இளைஞர்களிடையே அவன் உள் மன வெறியே அவனை தனித்து காட்ட, ‘இவனை இயக்கத்தில் சேர்க்க வேண்டுமா?’ என்று சிரித்த நபர்கள் முன்பு திடமான வீரனாக உருவெடுத்து நின்றான் நம் தலைவன்.
அவனை காணும் போதெல்லாம் இவ்வளவு வலிமையான போராட்ட இயக்கத்தை உருவாக்கி இருக்கும் தலைவனான தீரேந்திரனுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
காலையிலிருந்து மாலை வரை பயிற்சியிலும், அடுத்ததாக போராட்டங்களை மேற்கொள்ள திட்டம் வகுப்பதிலுமே நேரம் கழியும்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, வானில் தனியாக நிற்கும் நிலவை வெரிக்கும் நேரம் மட்டும் அவன் மனம் தன்னவளை நினைத்துக் கொள்ளும்.
“அப்படி என்ன தான் டா அந்த நிலாவுல தெரியுதுன்னு தினம் ராத்திரி முழுக்க அதையே பாத்துட்டு உட்கார்ந்திருக்க?” என்று உடன் இருக்கும் இளைஞர்கள் எல்லாம் அவர்கள் வயதிற்கு உண்டான குறும்புடன் அவனை கேலி செய்த போதும் சிரித்துக் கொள்வானே தவிர வேறு எந்த பதிலும் அவனிடமிருந்து வராது.
அவள் காந்த விழிகளை நினைக்கும் போது அவனுக்கு மனம் ஒருவித நிம்மதியை பரப்பும்.
கிட்டத்தட்ட இளங்கோவன் நெடுவயல் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து ஒரு மாதம் கழிந்து விட்டது.
அவன் இயக்கத்தின் வழி, சிறப்பாகவே தயாராகி நின்றிருக்க, அடுத்ததாக போராட்ட களத்தில் மட்டும்தான் அவன் பங்கேற்க வேண்டும்.
அப்படி ஒரு காலை தான் தீரேந்திரன் தன் இயக்க இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தான்.
அதிகாலையிலேயே எழும்பி உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களின் பலத்தை சோதித்துப் பார்ப்பது அவனின் வழக்கம்.
அதட்டலான குருவாக அவன் தவறு செய்பவர்களை திரும்பத் திரும்ப செய்ய சொல்வதில் தான் தங்கள் போராட்டம் முடிந்தும் தம்மவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்ற அக்கறை ஒளிந்திருக்கும்.
“தோழரே! இந்த கட்டுரைய கொஞ்சம் படிச்சு பாருங்களேன். இதை எழுதினது யாருன்னு தெரியல. ஆனா இந்த கட்டுரையில எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் படிக்கிறவங்கள தங்களுக்காக போராட தூண்டுற மாதிரி இருக்கு.
முன்ன எல்லாம் எழுதுறதுக்கே யோசிக்கிற நம்ம ஊர்ல இருந்தும், ,இப்படிப்பட்ட கட்டுரைகளை படிக்கிறதுக்கே சந்தோஷமா இருக்கு.” என்று கூறினான்.
அந்த நாளிதழை வாங்கி படித்த தீரேந்திரனும் புன்னகைத்தவன், “நாளுக்கு நாள் நம்ம மக்களுக்கு போராட்ட குணம் அதிகமாக வளந்துட்டு இருக்கு. இதெல்லாம் பாக்கும்போதே தெரியுது நம்மளோட எண்ணம் கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்.
ஒவ்வொருத்தரோட போராட்டமும் ஒவ்வொரு விதம். பரவால்ல இதுல பெண்களும் அவர்களுடைய பங்களிப்ப கொடுக்கிறது நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.” என்று கூறினான்.
“பொண்ணா? இந்த கட்டுரையை எழுதினது யாருன்னே தெரியலையே. எப்படி இது பொண்ணு தான்னு இவ்வளவு உறுதியா சொல்றீங்க தோழரே?” என்று நாளிதழை கொண்டு வந்தவன் சந்தேகமாக கேட்டான்.
காரணம் அந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெயரும் குறிப்பிடப்படவில்லை, அவர்கள் அடையாளமும் வெளியில் தெரியவில்லை.
அவன் கேள்வியை கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்த தீரேந்திரன், “இந்த கட்டுரைய சாதாரணமா படிச்சா இது வெறும் மக்களை போராட்டத்துக்கு தோன்ற வரிகள் மட்டும் தான்.
ஆனா இந்த எழுத்துக்களுக்கு பின்னாடி இருக்கிற வலி, தெரிஞ்சோ தெரியாமலோ இதுல வெளிப்பட்டிருக்க இந்த உணர்வுகளே சொல்லுது, இத எழுதினது நிச்சயம் ஒரு பொண்ணா தான் இருக்க முடியும்.” என்று அடித்துக் கூறினான்.
“நம்ம நாட்டுல பெண்கள வீட்டை விட்டு வெளியே விட மாட்டாங்க. இதுல இவ்வளவு தூரம் படிக்க வைச்சிருக்க எல்லாம் வாய்ப்பு இருக்கா? அப்படியே படிச்சாலும் பெரிய பெரிய ஜமீன்தார்களோட பொண்ணுங்க தான் அதிகம் இருப்பாங்க.
பரம்பரையா கொஞ்சம் காசு பணத்தை கையில வச்சுக்கிட்டு வாழ்றவங்களுக்கு நம்ம அடிமை வாழ்க்கை எங்கிருந்து தெரிய போகுது? இத எழுதினது ஒரு பொண்ணா இருக்கறதுக்கு வாய்ப்பே இல்ல” என்று அங்கு இருந்தவர்கள் அவர்களுக்கு தோன்றியதை பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்.
இளங்கோவனுக்கு மட்டும் அந்த நாளிதழையும், தீரேந்திரன் அந்த கட்டுரையை பற்றி கூறியதையும் வைத்து மனது ஒருவித நெருடலாகவே தந்தது.
வேகமாக அந்த நாளிதழை சென்று வாங்கி அவசரமாக அதை படித்தான்.
கட்டுரையின் மேல் பகுதியில் தீரேந்திரன் கூறியதைப் போலவே அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை சுதந்திர காற்றுக்காக போராட தூண்டும் வார்த்தைகள் வீரியமாக எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்தபடியே கீழே வந்தவனின் கண்கள் இறுதியில் எழுதப்பட்டிருந்த வரிகளில் நிலை குத்தி நின்றது.
“சமயம் என்ன? பேதம் என்ன?
மானுடம் அறியுமா வேறுபாடுகள்?
கப்பல் ஏறிய உணர்வுகளும்,
இருளில் கிடக்கும் நேசமும்,
காத்திருக்கிறது; சுதந்திர காற்றை சுவாசிக்க.
கண்கள் பூத்திருக்கிறது அந்த ஒற்றை விடியலை காண.
நான்கு விழிகள் இயங்கும் விடியல் மறைத்திருக்கும் ரகசிய கானம் யாது?
ஒன்றை மட்டும் நினைவில் கொள் விதியே!
எத்திசையில் எறிந்தாலும் இறுதி நிமிடம் வரை கனா காண்போம்.” என்ற அந்தக் கட்டுரையின் முடிவுரை இளங்கோவனின் இதயத்தை அதிவேகமாக துடிக்க வைத்தது.
அது யாஸ்மின் எழுதிய வார்த்தைகள். அதில் பொதிந்து கிடக்கும் உள் அர்த்தம் அவர்கள் வாழ்வையும் பிரிவையும் குறிக்கிறது.
அதை வாசித்துப் பார்த்த இளங்கோவனின் கண்கள் தானாக கண்ணீர் பூக்க, அவன் இதழ்கள் தன்னவளை நினைத்து கர்வமாக புன்னகைத்துக் கொண்டது.
அந்த நாளிதழை தன் நெஞ்சோடு அணைத்தவனுக்கு, ஏதோ அவள் தன் அருகில் மிக நெருக்கத்தில் அமர்ந்து, தன் நெஞ்சில் சாய்ந்து, நம்பிக்கையை மனதினுள் விதைப்பது போன்ற தோற்ற பிம்பம் அவனுக்கு.
நித்தமும் அவள் நிலையை நினைத்து துடிக்கும் மனது அவள் எழுத்துக்களால் இதுவரை அவள் இருக்கும் நிலையை வெளிப்படையாக இளங்கோவனுக்கு காட்டிவிட்டது.
ஒருவேளை யாஸ்மினும் அந்த இறுதி வாக்கியங்களை இவனை நினைத்து இவனுக்கான செய்தியாக தான் எழுதினாளோ…..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இதோ இங்கு நெடுவயல் கிராமத்தில் தன் தமக்கை கொடுத்த காகிதங்களை அந்த நள்ளிரவுகளை யாருக்கும் தெரியாமல் அழகவேலிடம் ஒப்படைக்க வந்தாள் மரியம்.
சுற்றி முற்று யாரேனும் பார்க்கிறார்களா என்று அச்சத்துடன் வந்தவள் காகிதங்களை அலகுவேலின் கையில் ஒப்படைத்துவிட்டு செல்ல எத்தனித்தாள்.
“ஏய் பாப்பா! இந்தா இந்த நாளிதல்ல உங்க அக்கா எழுதின கட்டுரைக்கு யாரோ பதில் கடிதாசி எழுதி இருக்காங்களாம். இந்த கட்டுரைகள அச்சு அடிக்கிற என் நண்பன் இத குடுக்க சொன்னான்.
இதை கொண்டு போய் உங்க அக்கா கிட்ட கொடுத்துடு.” என்று ஒரு வார இதழை கொடுத்துவிட்டு சென்றான் அழகுவேல்.
மரியமும் நடுநிசிக்கு மேல் அயர்ந்து தூங்கும் தன் பெற்றோர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்திருந்தவள் மீண்டும் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்தாள்.
தன் தாயும் தந்தையும் அயர்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டு, அந்த சிறிய மர கதவின் கீழ் இருக்கும் ஓட்டை வழியே அந்த வார இதழை உள்ளே தள்ளிவிட்டு ஒன்றும் தெரியாததைப் போல் வந்து படுத்துக்கொண்டாள் மரியம்.
ஒற்றை ராந்தல் விளக்கை துணைக்கு வைத்துக்கொண்டு காகிதங்களில் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்த யாஸ்மின் அருகில் வந்து விழுந்தது மரியம் தள்ளிவிட்ட அந்த வார இதழ்.
புருவங்கள் முடிச்சிட தன்னை அடைத்து வைத்திருக்கும் அந்த கதவை நிமிர்ந்து பார்த்தாள் யாஸ்மின்.
யோசனையுடன் வார இதழை பிரித்து பார்த்த யாஸ்மின் விழிகள் விரிந்து, அவள் கண்ணால் காண்பது ‘நிஜம் தானா?’ என்று விழிகள் தெறிக்க ஏறிட்டது அந்த காகிதத்தை.
-கனா 🤎

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.