அந்த ஆழியின் நிசப்தமான அமைதியில், தன் யாஸ்மினின் நினைப்பை மட்டும் மனம் முழுவதும் நிறைத்து வைத்து கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தில் வந்து இறங்கினான் இளங்கோவன்.
அப்போதைய தமிழகத்தின் முக்கிய மாகணமாக செயல்பட்டு வந்த மெட்ராஸ் பட்டினத்தில் தான், நெடுவயல் கிராமத்தை விடவும் ஆங்கிலேயர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை வந்து இறங்கியதும் கண்டு கொண்டான் இளங்கோவன்.
அவ்வளவு பெரிய பட்டினத்தில் ‘எப்படி புதிதாக உருவெடுத்து இருக்கும் விடுதலை இயக்கத்தை சென்று சேர்வது?’ என்று அப்போதே அவனுக்கு மலைப்பாக இருந்தது.
காரணம் இவ்வாறு போராட்டம் செய்பவர்கள் பொதுவெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாதுதே.
அப்படியே சாதாரணமாக வெளியில் வந்தாலும் ஆங்கிலேயர்களின் துப்பாக்கி கொண்டிருக்கு இறையாக தான் வேண்டும்.
அதிலும் தற்போது புதிதாக உருவெடுத்து இருக்கும் இந்த இயக்கத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று செய்தி.
பிற இயக்கங்களை விட மிக தீவிரமாக சுதந்திரத்திற்கான போராட்டங்களை மேற்கொண்டு வருவதால், ஆங்கிலேயர்களால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அல்லவா இடம்பெற்று இருக்கின்றனர்.
மாலை நேரம் வந்து பட்டணம் சேர்ந்தவன் அன்றைய இரவு முழுவதும் எங்கு செல்வது என்று தெரியாமல் வீதியில் தான் கழித்தான்.
நெடுவயல் என்ற சிறிய கிராமத்தில் இருந்து இந்த போராட்ட இயக்கத்தின் பின்னோட்டம், அது உருவான நோக்கம், அதில் சேர்வதற்கு தேவையான தகுதிகள், இதைப் பற்றி மட்டுமே அறிந்து வந்திருந்த இளங்கோவனுக்கு, அதன் தலைமையிடம் எவ்வளவு முயன்றும் தெரியாமல் தான் போனது.
இப்படியே இரண்டு நாட்கள் ஓடிய, நிலையில் அங்கும் இங்கும் வீதி வீதியாய் சுற்றி திரிந்தும் அவன் சென்று சேர வேண்டிய இடத்திற்கு மட்டும் சேர்ந்திருக்கவில்லை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆடைகள், மளிகை சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் என்று பல்வேறு பொருட்களை விற்கும் அந்த அங்காடி தெருவில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் தயாரித்த பொருட்களே விற்கப்படும்.
விலையும் அதிகம். மக்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இருக்காது.
அதிக விலை கொடுத்து என்றாலும் வாங்கி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம்.
இதையெல்லாம் கவனித்தபடி தெருவின் ஓரம் ஒரு கல்லில் சாய்ந்து அமர்ந்திருந்தான் இளங்கோவன்.
கொண்டு வந்திருந்த சொற்ப பைசாக்களும், அவன் வந்து இறங்கிய கப்பலுக்கும், அடிக்கடி தொண்டையை நனைத்துக் கொள்ள வாங்கி பருகிய தேநீருக்குமே சரியாய் போயிருக்க, ‘தற்போது என்ன செய்வது?’ என்று ஒன்றும் புரியாமல் அந்த பரபரப்பான அங்காடிகள் நிறைந்திருந்த வீதியில் பார்வையை சுழல விட்டு நிற்கிறான்.
‘யாரை சென்று சந்திப்பது?
இந்த பறந்து விரிந்த பட்டணத்தில் தனக்கு யாரை தெரியும்?’ என்று அவன் மூளை வெகு தாமதமாக தான் நிதர்சனத்தை புரிந்து கொண்டது.
போராட்டதில் அவன் கொண்டிருந்த ஆர்வம், இங்கு வரை அவனை அழைத்து வந்துவிட்டது.
செல்வதற்கு இடம் இல்லாமல் வீதியில் நின்றிருந்த இளங்கோவனுக்கு, வழி காட்டவே அங்கு வெடித்தது ஒரு கலவரம்.
எறும்பு கூட்டம் போல் மக்கள் நிறைந்திருந்த அந்த இயல்பான வீதியில், எங்கிருந்து தான் அத்தனை நபர்கள் வந்தார்களோ. திடீரென்று கோஷங்களும் முழக்கங்களும் வானை முட்டும் அளவு வெடித்தது.
“நம்ம நாட்டுல நம்ம தயாரிச்ச பொருட்களை மட்டும் தான் வாங்கணும். அந்நிய பொருட்களை வாங்குவது யாரும் ஆதரிக்க கூடாது. நமக்கு தான் நம்ம பொருளோட மதிப்ப பத்தி தெரியல ஆனா அதை தெரிஞ்சுகிட்ட வெள்ளைக்காரங்க, அதை வெளிநாடுகள்ல கொள்ள லாபத்துக்கு வித்துக்கிட்டு இருக்காங்க.
இந்தியர்களா இருக்க நாம இந்திய நாட்டுல உருவாகுற கதர் உடைகளை தான் உடுத்தனும். இங்க தயாராகிற பொருட்களை தான் உபயோகப்படுத்தனும்.
இந்த வெள்ளையர்கள மொத்தமும் கப்பல் ஏத்தி வெளியேற்றுவோம்.” என்று கூட்டத்தின் நடுவில் ஒரு கம்பீரமான குரல் ஒலிக்க, அதை தொடர்ந்து அந்த திருக்குறளில் வாங்கப்பட்ட ஆடைகளும் பல்வேறு பொருட்களும் ஒன்றாக குவிக்கப்பட்டு தீயில் எரிக்கப்பட்டது.
பொதுவெளியில் இப்படி பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில், திடீரென்று கூட்டமாக சேர்ந்து இவர்கள் செய்த கலவரம், அங்கு இருந்தவர்களுக்கு இடையில் பரபரப்பை ஏற்படுத்த, கூட்டம் சிதறி அங்கும் இங்கும் ஓட தொடங்கினர்.
ஆனால் இதை எல்லாம் ஓரம் நின்று கவனித்துக் கொண்டிருந்த இளங்கோவனுக்கு மட்டும் கண்கள் பிரகாசமானது.
தப்பி செல்ல ஓடி வரும் மக்களுக்கிடையில், அந்த கலவரம் செய்யும் அந்த கூட்டத்தின் புறம் ஓடினான் இளங்கோவன்.
ரோந்து பணியில் இருந்த ஆங்கிலேய காவல் அதிகாரிகளோ விடயம் அறிந்து அந்த கும்பலை கைது செய்ய அங்கு வந்து சேர்ந்தது.
கையில் புகை குண்டுகளை வைத்து, முகத்தை துணியால் மூடிக்கொண்டு, இருபது பேர் கொண்ட குழுவாய் நின்று வெள்ளையர்களுக்கு எதிராக கோஷமிட்டு கொண்டிருந்த கூட்டம், காவலர்களை கண்டதும் திசைக்கு ஒன்றாய் சிதறி ஓட தொடங்கியது.
விடுவார்களா என்று காவலர்களும் அனைவரையும் துரத்தி செல்ல, அந்த அங்காடி ஒட்டியிருந்த சந்துகளில் திசைக்கு ஒருவராய் சிதறி புயல் வேகத்தில் ஓடினர்.
இளங்கோவனும் தன் பெட்டியை பிடித்துக் கொண்டு ஓடியவன், சிதறி செல்லும் கூட்டத்திற்கு இடையில் ஒருவனை மட்டும் பின் தொடர்ந்தபடி வேகமாக ஓடினான்.
காவலர்களை திசை திருப்ப கையில் வைத்திருந்த புகை குண்டுகளை வீசியபடியே முன்னேறி சென்ற போராட்டக்காரர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்காங்கே சென்று மறைந்து கொண்டனர்.
இங்கு இளங்கோவன் துரத்தி சென்ற போராட்டக்காரனோ இவன் காவல்காரன் என்று நினைத்து, தொடர்ந்து புகை குண்டுகளையும் கையில் கிடைக்கும் பொருட்களையும் தூக்கி எறிந்த படி அவனிடமிருந்து தப்பி ஓடினான்.
ஆனால் அதை எல்லாம் எப்படியோ கடந்து ஒரு தெருவின் மூலையில் வைத்து அந்தப் போராட்டக்காரனை பிடித்திருந்தான் இளங்கோவன்.
தன்னைப் பிடித்து விட்டதில் துல்லியபடி தப்பியோட முயன்ற அந்தப் போராட்டக்காரனை கொடுக்கப்படியாக போட்டு பிடித்த இளங்கோவன், “ஒரு… ஒரு நிமிஷம்.” என்று வெகு தூரம் இப்படி துரத்தி ஓடி வந்ததின் விளைவாய் பலத்த மூச்சு வாங்கிக்கொண்டு அவனிடம் பேசினான்.
ஆனால் அந்த இளங்கோவனின் பிடியில் இருந்தவனோ அவனிடமிருந்து தப்பவே முயற்சிக்க, “நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்களை பிடிக்க வரல. நானும் உங்கள மாதிரி போராடறதுக்காக வந்தவன் தான். என்னையும் உங்க கூட சேர்த்துகிறீர்களா?” என்று கேட்டான்.
ஆம் அங்காடி தெருவில் போராட்டத்தை மேற்கொண்டது இளங்கோவன் சேர்வதற்காக வந்த இளைஞர்கள் விடுதலை இயக்கம் தான்.
இந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் பெரிதாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் முகத்தை மூடி, அவர்கள் கைகளில் அசோகச் சக்கரம் பச்சை குத்தப்பட்டிருக்கும்.
அந்த அடையாளத்தை தூரத்தில் இருந்தே போராட்டம் செய்யும் போது, இளங்கோவன் சரியாக இனம் கண்டு கொண்டதால் தான், இத்தனை தூரம் இவனை துரத்திக் கொண்டு வந்து பிடித்திருக்கிறான்.
இவர்கள் இருவரும் இப்படி நின்று கொண்டிருந்த சமயமே இரண்டு காவலர்கள் அந்த பக்கம் இவர்களை துரத்திக் கொண்டு வர, அந்தப் போராட்டக்காரனோ இளங்கோவனை தள்ளிவிட்டு மீண்டும் ஓட தொடங்கினான்.
கையில் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று இளங்கோவனும் அவனுடன் சேர்ந்து ஓட தொடங்கினான்.
காவலர்களும் விடாமல் துரத்திக் கொண்டே பின்னால் வர, ஒரு கட்டத்தில் அவர்கள் சென்ற பாதையில் வந்த ஒரு பெரிய சுவற்றின் மேல் அந்தப் போராட்டக்காரன் ஏறி குதித்து விட்டான்.
அவன் பின்னாலையே வந்த இளங்கோவன், அவ்வளவு பெரிய சுவற்றைக் கண்டு மலைத்தாலும் துரத்திக் கொண்டு வரும் காவலர்களிடம் இருந்து தப்ப, கடினப்பட்டு சுவரை ஏறி குதித்து விட்டான்.
பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு இது போன்ற போராட்டங்களுக்கு களம் இறக்கப்படும் இளம் காளைகள் எளிதாக இதுபோன்ற தடைகளை தாண்டி சென்று விடுவர்.
ஆனால் காவலர்களால் அது முடியாது போனது. போராட்டக்காரர்களை தப்பவிட்டவர்கள், “இதுக்கு மேல இவனுங்கள துரத்தி போய் புடிக்க முடியாது.” என்று வந்த வழியே திரும்பி சென்று விட்டனர்.
இங்கு சுவற்றின் மறுபுறம் அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்த இளங்கோவன், கீழே வைகோல் புற்கள் இருந்ததால் தப்பித்தான். இல்லையேல் கை கால் உடைந்திருக்கும் என்பது திண்ணம்.
கீழே விழுந்தவன், தனக்கு முன்னே வந்தவன் என்று பார்க்க அங்கு அவனைப் போல் முகத்தை மூடிய நிலையில் சற்று முன் அங்காடித் தெருவில் போராட்டம் செய்த அத்தனை நபர்களும் நின்று இவனையே பார்த்திருந்தனர்.
“யார் இவன்?” கூட்டத்தில் ஒருவன் கேட்க, “நம்ம கூட சேர்ந்து போராடனுமாம்.” என்று கூறி சிரிக்க அந்த கூட்டம் மொத்தமும் சிரித்தது.
இளங்கோவன் அந்தவர்களையே சுற்றி முற்றி பார்த்திருக்க அந்த கூட்டத்தின் நடுவில் இருந்து, திடகாத்திரமான ஒருவன் நடந்து வந்தான். அந்தக் கூட்டத்தின் தலைவன் போலும் என்று இளங்கோவன் நினைத்துக் கொண்டான்.
அவனை கண்டதும் மொத்த கூட்டத்தின் நகைப்பும் நின்றுவிட அந்தவனோ கீழே விழுந்து கிடக்கும் இளங்கோவனை நெருங்கினான் அந்த கூட்டத்தின் தலைவன் தீரேந்திரன்.
“போராட்டம் பண்ணனுமா? யார் நீ? இது ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி சின்ன பசங்க ஓடி விளையாடுற விளையாட்டு இல்ல. எங்கிருந்து வந்தியா அங்கே திரும்பி போ!” என்று கூறிய தீரேந்திரன் எழுந்து செல்லப் போனான்.
“இந்த நாடு இன்னும் உங்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்க உரிமையை தட்டி கேட்டு திருப்பி வாங்குற கடமை இருக்கு.” என்று கூறினான்.
அவன் கூற்றில் அந்த முகமூடி அணிந்திருந்த தீரேந்திரனும் உள்ளே புன்னகையை வைத்து, அவனை ஆராய்ச்சியாய் பார்த்தான்.
“உங்க இயக்கத்தை பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என் ஊர் என் ஊர் நெடுவயல் கடலோர கிராமம்.
சின்ன வயசுல இருந்து இவங்க பண்ற அக்கிரமங்கள, பார்த்து தான் நானும் வளர்ந்திருக்கேன். அதுக்கான சரியான வாய்ப்பா தான் உங்க இயக்கத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.
உங்க கூட சேர்ந்து இந்த நாட்டோட உரிமையை மீட்கணும்னு தான் நான் வந்திருக்கேன்.” என்று கூற மீண்டும் அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் இளங்கோவன் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தனர்.
ஆனால் தீரேந்திரனோ, இளங்கோவனை சுவாரசியமாக கண்டிருந்தவன் கைகளை கட்டிக்கொண்டு, “எங்க கூட சேரனும்னா உன்னோட சொந்த விருப்பு வெறுப்பு பாசம்னு எல்லாத்தையும் விட்டுட்டு எங்க கொள்கையே மட்டும் ஏத்திக்கிட்டு தான் வரணும்.
உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையா இருக்க கோழைகளுக்கு எங்க இயக்கத்தில் இடம் கிடையாது.
எந்நேரமும் உயிரை கூட கொடுத்து வெள்ளைக்காரர்களை தோக்கடிக்கிற ஒருத்தனுக்கு தான் எங்க கூட சேர்ந்து போராடுற தகுதி இருக்கு.
கொள்கைகள் கடினமாய் இருக்கும்போது போராட்டத்தோட முடிவும் விடுதலையா இருக்குங்கிறது இது தான் எங்க நம்பிக்கை.
ஒரு தடவை இந்த இயக்கத்துக்குள்ள வந்துட்டேனா விடுதலை கிடைக்கிற வரைக்கும் நீ கூட சேர்ந்து போராடி தான் ஆகணும்.
உன்ன பாத்தா இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாதிரி தெரியல. சும்மா வரப்போறவங்களை எல்லாம் எங்க கூட சேர்த்துக்க முடியாது.” என்று தீரேந்திரன் கூறினான்.
“தெரியும். உங்களோட கொள்கைகள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். உரிமையை திருப்பி கேக்கணும் என்கிற வெறி மட்டுமே இருந்து எனக்கு, அதுக்கான வழி தெரியாம இத்தனை நாளும் இருந்தேன்.
ஆனா இப்போ உங்க இயக்கம் எனக்கான வழியா இருக்குன்னு தோணுது. ஒருவேளை உங்க கூட சேர்ந்து போராட்டத்தில என் உயிரே போனாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை.
எனக்குன்னு சொந்தமா எந்த ஆசைகளும் உணர்ச்சிகளும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அத நான் இந்த இயக்கத்துக்காக மாத்திக்கிறேன்…” இடைநிறுத்தியவனின் மனம் அவனை கடித்து குதிறியது.
தனக்காக ஆழிக்கு அந்தப்புரம் காத்திருக்கும் யாஸ்மினை நினைத்து அவன் மனம் குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகியது.
இருப்பினும், தற்போது அவன் கண்களுக்கு முன்னால் அவன் லட்சியத்தை அடையும் கதவு திறந்திருக்கும் போது, அதை தவறவிட அவன் தயாராக இல்லை என்பது தான் உண்மை.
தீர்க்கமாக நிமிர்ந்து தீரேந்திரனை கண்டவன், “என் கடைசி மூச்சு வரைக்கும் என்னோட எதிர் குரல் இந்த வெள்ளைக்காரங்கள எதிர்த்திருக்கும்.” என்று திடமாக அவன் கூறிய தோரணையில் அந்த கூட்டத்தின் தலைவன் புருவங்களை உயர்த்தி இளங்கோவனை கண்டான்.
“தோழரே. இவன் சரி வருவான்னு நினைக்கிறீங்களா?” என்று கூட்டத்தில் இருந்த தீரேந்திரனிடம் ஒருவன் கேட்க, “பயிற்சி கொடுத்து பார்ப்போம்.
இவன மாதிரி நாட்டுல எத்தனையோ பேரு போராட வழி தெரியாம தான் தணிச்சுருக்காங்க. இந்த மாதிரி இளைஞர்கள் தான் நம்ம கொள்கைளுக்காக போராடுவாங்க.” என்று தீரேந்திரன் கூறியதில் தான் இளங்கோவனுக்கு அத்தனை ஆனந்தம்.
கீழே விழுந்து கிடந்த இளங்கோவன் அருகில் சென்று கையை கொடுத்த அந்த கூட்டத்தின் தீரேந்திரன், “எங்க கொள்கைக்கு உட்பட்டு நீ போராடுவேனு நம்புறேன். அந்த நம்பிக்கையை காப்பாத்து.” என்று அவன் எழ உதவி செய்தான்.
அன்றிலிருந்து ஒரு சாதாரண நெய்தல் நில மைந்தனாக காதலனாக மட்டும் இருந்த இளங்கோவன் ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடும் வீரனாக உருமாற தொடங்கினான்.
அவன் லட்சியமும் வெறியும் அவன் பாதைக்கு படிகளாக மாற, அந்த போராட்ட இயக்கம் அவனை முற்றிலுமாக மாற்றியது.
-கனா 🤎

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.