அத்தியாயம் 14
ஈஸ்வர் இல்லம்…
கதிரவன் தன் ஏழு பரி பூட்டிய ரதத்தில் பூவுலகை சுற்றி முடித்து தன் இல்லம் புக காத்திருந்த மாலைப்பொழுது… இன்னும் முழுதாய் இருட்டி இருக்கவில்லை. ஆரஞ்சு வண்ண பந்தாய் மேற்கில் அவர் இருக்க, வானில் அவர் வாரி இறைத்த வண்ணங்களின் மிச்சங்களே உச்சங்களாய் இருந்தது.
அந்த அழகிய வர்ணங்களை முற்றம் முழுவதும் படர விட்டிருந்த ஈஸ்வர் இல்லம் வழக்கத்தை விட அதிக அமைதியில் இருந்தது.
முற்றத்தில் இருந்த விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. சாம்பிராணி வாசம் வீடு முழுக்க பரவி மனதுக்கு அமைதியைக் கொடுத்தது.
நடுவிலிருந்த பெரிய மர மேசையின் மீது ஜாதகக் கட்டங்கள், பஞ்சாங்கம், வெற்றிலை தட்டு எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதன் முன் வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தார் அவர்களது குடும்ப ஜோதிடர்.
அவருக்கு முன்னே அமர்ந்திருந்தார் வரலட்சுமி அம்மாள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த புவனேஸ்வரி முகத்தில் அத்தனை ஆர்வம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பேச்சினை அவர் ஆரம்பித்து இருக்க, தொழிலில் ஸ்திரம் பெற வேண்டும் என்று மகனும், கணவனும் சொல்லி இருக்க, அத்தை வரலட்சுமி இதே ஜாதகத்தை காரணமாக கூறி தான் தள்ளி வைத்தார். அவர் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதை மருமகளாக அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த நாள் முதலாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். ஆகையால் அமைதியாகி போனார் அப்பொழுது.
ஆனால், லோகேஷ்வரனுக்கு இரண்டாம் முறை மாரடைப்பு வந்து குடும்பத்தையே கதிகலங்க வைத்து ஒரு வழியாய் பிழைத்து வந்தவரை பிள்ளைகள் வீட்டில் காட்டாய ஓய்வில் இருக்க வைக்க கடந்த சில மாதங்களாகவே மனதுக்குள் நினைத்த விசயங்கள் தான் இது. பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் நிறைவாய் வாழ்வதை பார்க்க வேண்டும் என்று தாயாய் தவித்தது அவர் உள்ளம்.
எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஆர்வமாய் அவர் காத்திருக்க, ஜோசியர் ஜாதகத்தை நீண்ட நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் அறையில் இருந்து இறங்கி வந்தவனை பார்த்த வரலட்சுமி,
“ஜெகா…” என்று அழைக்க,
“பாட்டி…” என்று தலையசைத்து அமைதியாக வந்து அமர்ந்தான்.
அவனுக்கு பின்னாலேயே சர்வேஷும் மகாலட்சுமியும் வந்தார்கள். எல்லோரும் வந்து சேர்ந்ததை உணர்ந்த ஜோதிடர் பேச ஆரம்பித்தார் வரலட்சுமியிடம்.
“பெரியம்மா… இதுவரைக்கும் சின்னவர் ஜாதகத்துல கல்யாண ஸ்தானம் வலுவா இருந்தாலும் நேரம் அமையல.”
மேலே சொல்லுங்கள் என்பது போல அங்கே இருந்தவர்கள் அவரைப் பார்க்க,
“ஆனா இப்போ…”என்றவர் மீண்டும் ஜாதகத்தை திருப்பிப் பார்த்தார்.
“இப்ப சின்னவருக்கு சுக்கிர தசை நடக்குது… அதுக்குள்ள குரு புத்தி ஆரம்பிச்சிருக்கு.” என்று சொல்ல, புவனேஷ்வரியால் இருப்புக் கொள்ள முடியவில்லை.
“அதுனால எதுவும்?” கேள்வியாக கூட கேட்க முடியாமல் அவர் நிறுத்த, அவர் தவிப்பை உணர்ந்த
ஜோதிடர்,
“சுக்கிரன் என்றாலே கல்யாண காரகன் அம்மா. அதுல குரு புத்தி சேர்ந்தா குடும்ப யோகம் பலப்படும்.” என்றவர்,
வரலட்சுமியை மீண்டும் பார்த்து,
“இந்த காலம் சாதாரண காலம் இல்ல பெரியம்மா...” என்க,
“ஏன் சொல்றீங்க?”
“ஏன்னா… ஏழாம் வீடு முழு பலத்தோட இயங்க ஆரம்பிக்குது. அதுக்கு மேல குரு பார்வையும் கிடைக்குது.”
என்றவர் ஜாதகத்தை மூடி வைத்து விட்டு, “இந்த தசை முடியறதுக்குள்ள கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.” என்றவர் முகமலர்ச்சியோடு,
“அது மட்டும் இல்ல… இந்த கல்யாணம் உங்க குடும்பதுக்கு சகல சௌபாக்கியத்தையும் கொடுத்து சுபிட்சம் ஆக்க போகுது.” என்று சொல்ல வரலட்சுமியின் முகம் தெளிந்தது. புவனேஸ்வரியின் முகம் பூரித்து போனது.
“ம்…” என்று திருப்தியாக தலையசைத்துக் கொண்டவர்,
“பொண்ணு ராசி, குடும்பம் எல்லாம் சரியா அமையணும்.”
“நீங்க தேடி அலைய வேண்டி வராது பெரியம்மா… தானா தேடிவரும்.” என்றார் ஜோதிடர்,
பொண்ணு ஜாதகம் வந்ததும் சொல்லுங்க அம்மா… வரேன். இப்போ உத்தரவு வாங்கிக்கிறேன்… என்று சொல்லி கைக்கூப்ப, அவருக்கான மரியாதையை செய்து அனுப்பி வைதத்து ஈஸ்வர் குடும்பம்.
ஜோசியர் சென்ற பிறகு, புவனேஸ்வரி கடவுளுக்கு நன்றி சொல்ல பூஜை அறை சென்று விட, வரலட்சுமி மெதுவாக தன் அருகில் இருந்த காகிதம் ஒன்றை எடுத்தார்.
அதை பார்த்ததும் மகாலட்சுமி புருவம் உயர்த்தினாள்.
“பாட்டி… அது என்ன?”
“லிஸ்ட்”
“எதுக்கு?”
“உன் அண்ணனுக்கு பார்க்குற பெண்ணுக்கு.” என்றார் அவர் மிகவும் சாதாரணமாக.
அந்த நொடி சர்வேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் கீழே குனிந்தான். அப்படியும் முடியாமல் அவன் சிரிப்பு சத்தம் அந்த இடத்தை நிறைக்க,
“என்ன?” என்று முறைத்தார் வரலட்சுமி.
“ஒன்னும் இல்ல பாட்டி…ஐஎஸ்ஓ சர்ட்டிபிகேஷன் (ISO certification) மாதிரி ஃபீல் ஆகுது.” என்றவன் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க,
“சர்வேஷ்.”
“சரி பாட்டி… சாரி பாட்டி… யூ கண்டியூ….” என்றவன் வாயில் ஒற்றை விரலை வைத்து சமத்து பிள்ளையாக அமர்ந்து கொண்டான்.
“முதல்ல…” என்று ஆரம்பித்தவர், ஜெகதீஸ்வரன் ஜாதகத்துக்கு பொருத்தமான ராசி நட்சத்திரங்கள் என்று ஜோதிடர் கொடுத்துவிட்டு சென்றதை சொல்ல, லோகேஸ்வரன் கவனித்துக் கொண்டார்.
பின் ஜெகதீஸ்வரன் முகத்தை ஆழ்ந்து ஒரு நொடி பார்த்தவர்,
“நல்ல குடும்பம்.” என்று சொல்ல,
இதுவுமா அந்த லிஸ்ட்ல இருக்கு? என்று சர்வேஸ்வரனின் காதை கடித்தாள் மகாலட்சுமி.
“அது வேற லிஸ்ட் இது வேற லிஸ்ட்… இது அண்ணா சொன்னதுக்கான கவுண்டர் லிஸ்ட்…” என்று சர்வேஸ் சொல்ல, பாட்டி ஆச்சரியமாக பார்த்தவள் தலையை இரு புறமும் அசைத்துக் கொண்டு,
“எக்ஸ்பெக்ட்டெட்…” என்று முணுமுணுத்தாள் மகாலட்சுமி.
“ஆசாரம் தெரிஞ்சிருக்கணும்.” என்று அவர் சொல்ல,
“டபுள் டிக்.” என்று காற்றில் எழுதுவது போல நடித்தான் சர்வேஷ்.
“குடும்பத்தை மதிக்கணும்.”
“ம்ம்ம்…”
“தேவையில்லாம வெளிய சுத்துற பழக்கம் இருக்கக்கூடாது.”
அந்த நொடி மகாலட்சுமி இரும ஆரம்பித்தாள்.
“என்ன?” என்று பார்த்தார் வரலட்சுமி.
“நத்திங் பாட்டி…” என்று பதில் சொன்னாலும், “தேவையா தேவையில்லைன்றதுக்கான இவங்களோட ஸ்கேல் என்னவா இருக்கும்?” என்று மனதோடு கேட்டுக் கொண்டாள்.
“வேலை பார்த்தாலும் எல்லைக்குள்ள இருக்கணும். நேரம் காலம் பார்க்காம வேலை பார்க்கிறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்படாது…”
“சிறப்பு…” என்று மெதுவாக சிரித்தான் சர்வேஷ்.
“அண்ணா… என்னோட வருங்கால அண்ணிக்கு ஆஃபீஸ் டைமிங் கூட மேரேஜ் அக்ரிமெண்ட்ல வருமோ? என்றும் கேட்டு வைக்க, அசையாமல் பார்த்து வைத்தான் ஜெகதீஸ்வரன். அதில் உடனே வாயை மூடிக் கொண்டான் அவன்.
அதைக் கண்டு கொள்ளாமல் வரலட்சுமி தொடர்ந்து கொண்டிருந்தார்.
“முக்கியமா…” என்று அவர் சொல்ல,
அந்த ஒரு வார்த்தையில் அனைவரின் பார்வையும் அவர் முகத்திலேயே நிலைத்தது.
“நம்ம குடும்பத்துக்கு ஏத்த ஃபேமிலி பேக்ரவுண்ட்.”
சில நொடிகள் அமைதி.
“அதாவது…” என்று மகாலட்சுமி பாட்டி பார்க்க,
“நம்ம பழக்க வழக்கமெல்லாம் புரிஞ்ச குடும்பம்.” என்று அவர் சொல்ல,
“அப்போ லவ் மேரேஜ்க்கு வாய்ப்பே இல்ல போல.” என்று உடனே விட்டான் சர்வேஷ்.
அந்த நொடி வரலட்சுமியின் பார்வை நேராக அவன் மீது விழுந்தது.
“அது மாதிரி எதுவும் இந்த வீட்டுல நடக்காது. குடும்பத்துக்கு ஏத்த நல்ல பொண்ணா இருக்கணும்.” என்று நொடியும் தாமதிக்காமல் வந்து விழுந்தன வார்த்தைகள்.
மகாலட்சுமி மெதுவாக சர்வேஸ்வரன் காதோரம் குனிந்து, “உனக்கு பியூச்சர்ல லவ் வந்தாலும் ரிப் (RIP) தான் போல அண்ணா...” என்று சொல்ல அதிர்ந்து போனவனாக நெஞ்சில் கையை வைத்தான் சர்வேஷ்.
இவர்களின் சேட்டைகளை ஜெகதீஸ்வரன் கவனித்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவன் முகம் எந்த உணர்வுகளையும் வெளி காட்டாமல் நிர்மலமாக இருந்தது.
ஆனால், நேற்று தன்னால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதுக்குள் மீண்டும் வந்து நின்றது. அதைச் சொல்ல காரணமானவளின் மீதான நேசம் மனதுக்குள் பிரம்மாண்டமாக உருவெடுத்து நின்றது.
அதே நேரம்… வரலட்சுமியின் குரல்.
“இந்த வீட்டுல அது மாதிரி எதுவும் நடக்காது.” என்ற வார்த்தைகளும் ஓங்கி ஒலித்தது.
இரண்டு எண்ணங்களும் ஒரு நொடி மனதுக்குள் மோதிக் கொண்டன ஆக்ரோஷமாக. அவன் மெதுவாக இமைகளை மூடித்திறந்தான்.
அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி.
பாட்டி சொன்னதில் எது அவனை யோசிக்க வைக்கிறது என்று சில நொடிகள் தனக்குள்ளே வாதிட்டுக் கொண்டவளுக்கு ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது.
நல்ல பெண் என்பது வரலட்சுமியைப் பொறுத்தவரை அன்பு, அமைதி, அடக்கம், குடும்பம் என்பதிலேயே முடிந்துவிடும் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அண்ணன் கூறிய வார்த்தைகள் அச்சுபிசகாமல் நினைவில் வந்தது.
“எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் விட்டுக் கொடுக்காம போராடி தன்னைத்தானே உருவாக்குற பொண்ணா இருக்கணும்.” மனதுக்குள் வார்த்தைகள் வட்டமடிக்க,
“அப்போ அண்ணா எனக்கு புடிச்ச பொண்ணு இப்படி இருக்கணும்னு சொன்னது உங்க லிஸ்ட்ல இல்லையா பாட்டி?” என்று பாட்டியிடம் கேட்டும் இருந்தாள் மகாலட்சுமி.
“எது?” என்று கேட்டார் வரலட்சுமி.
“எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் விட்டுக் கொடுக்காம போராடி தன்னைத்தானே உருவாக்குற பொண்ணா இருக்கணும்.” ஜெகதீஸ்வரன் சொல்லியது போலவே அழுத்தமான குரலில் மகாலட்சுமி சொல்ல, வரலட்சுமி மெதுவாக அவளை பார்த்தார்.
“ஒரு குடும்பத்துக்குள்ள வாழ வர்ற பெண்ணுக்கு முதல்ல குடும்பம் முக்கியம்.” என்றார் அமைதியாக.
“அதுக்காக அவங்களுக்கு தனியா ஐடென்டிட்டி இருக்கக்கூடாதா பாட்டி?” என்று உடனே கேட்டாள் மகாலட்சுமி.
அந்த கேள்வியில் சர்வேஷ் மெதுவாக சீட்டி அடித்தான்.
“இப்போ தான் கச்சேரி கலை கட்டுது… சபாஷ் சரியான போட்டி!” என்று அவன் சொல்ல, பெண்கள் இருவரும் முறைத்தனர்.
அதில் உஷாரானவன் அமைதியாகி போனான். பெண்களின் வாக்குவாதம் தொடங்கியது.
“சொல்லுங்க பாட்டி…” மகாலட்சுமி மீண்டும் கேட்க,
“நான் எப்போ ஐடென்டிட்டி இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்? ஐடென்டிட்டி இருக்கட்டும். ஆனா அது குடும்பத்துக்கு மேல போகக்கூடாது.” என்றவர்,
“அது பொண்ணுக்கு மட்டும் இல்ல பையன்களுக்கும் தான். எதுவா இருந்தாலும் எல்லாமே இரண்டாம் பட்சம் தான். குடும்பம் தான் எல்லாத்துக்கும் மேல. குடும்பம்கறது மனுஷங்களோ அவங்க வாழ்ற வீடோ இல்லை. அந்த ஆட்கள் வாழற முறையில இருக்கு… ஒழுக்கத்துல இருக்கு குடும்பம்…” என்று அழுத்தமான குரலில் சொன்னவர் சுற்றி இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து செல்ல குடும்ப சபை கலைந்தது.
தன் அறை வந்த ஜெகதீஸ்வரன் அங்கிருந்து சோபாவில் அமர்ந்து மடிக்கணினியை இயக்க, திரையில் ஒளிர்ந்தது அன்று காலை சக்தி விளக்கிய வரைபடம் ஒன்று.
அன்று காலை அதை ஒட்டி நடந்தவைகள் எல்லாம் நினைவில் வந்த நொடி ஜன்னலின் வழியாக தெரிந்த முழு நிலவினை காட்டிலும் அதிகமாய் பிரகாசமானது ஜெகதீஸ்வரனின் முகம்.
என்னதான் எண்ணங்கள் முட்டிக் கொண்டாலும் அத்தனையையும் பின்னுக்கு தள்ளி வண்ணங்களை வாரி இறைத்திருந்தாள் ஈஸ்வரனின் சக்தி.
அன்று மாலை ஜோதிடரை பார்க்க வேண்டும் என்று வரலட்சுமி சொல்லியிருந்ததில் அன்றே செய்து முடிக்க வேண்டிய பணிகளை செய்வதற்காக காலை சற்று முன்னதாகவே அலுவலகம் வந்திருந்தான் ஜெகதீஸ்வரன்.
வேக எட்டுக்களோடு சக்தியின் அறையை கடக்கும் நொடி எப்பொழுதும் போல கண்கள் அந்த அறையை ஸ்கேன் செய்தது. அவன் தேடிய அவள் அங்கு இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது என்று அறிவு சொன்னாலும் அவளை தேடிய மனம் சற்று சுணங்கி தான் போனது.
அதன் பிறகான வேலைகளும் இணைய வழி சந்திப்புகளும் அவனை தனக்குள் இழுத்திருக்க, எல்லாவற்றையும் முடித்த போது நேரம் பதினொன்றைக் கடந்து இருந்தது.
கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்து அமர்ந்தவன், “கம் இன்…” என்று சொல்ல உள்ளே நுழைந்தார் பரசுராமன்.
ஆர்வமாய் நிமிர்ந்து அவனது கண்கள் நொடியில் அந்த ஏமாற்றத்தை பிரதிபலித்தது.