பத்தாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்.. 10
ஒத்த மனமுடையவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வார்கள். நட்பு அந்த வித்தையை செய்துவிடும்.
காவ்யாவின் முக மாற்றத்தை நுணுக்கமாக புரிந்து கொண்ட ஹேமா.. “காவ்யா... முதலில் மலர்ந்த உன் முகம், அடுத்த நிமிடம் வாடிப் போனதே. என்ன காரணம்.?” என்று கேட்டாள்.
“ஒண்ணுமில்லே.... நீ தான் வீடு பார்த்து போயிடுவியே. அப்புறம் என்னை மறந்திடுவே.. எப்படி ஹெல்ப் கிடைக்கும்.?”
“இது தான் காரணமா.? நாங்க இங்க தானே செட்டில் ஆகப் போறோம். உன்னை விட்டு ஓடிப் போக மாட்டோம்..”
“சரி.... தேங் காட். உன் கிட்டே நிறைய பேசணும் ஹேமா. முதல்ல சாப்பிட வா. என் அம்மா வேதவல்லியை மீட் பண்ணு. நாம அப்புறம் மன்னவனூர் ஏரி போகலாம். ரிலாக்ஸ் பண்ண பக்காவான இடம்....” உற்சாகமாக காவ்யா சொன்னதும், அந்த உற்சாகம் ஹேமாவையும் தொற்றிக் கொண்டது.
குளித்துவிட்டு ரோஸ் நிற பூ போட்ட சூடிதார் அணிந்து கண்ணாடியில் பார்த்தாள் ஹேமா. அவளுக்கு அவளையே ரொம்ப பிடித்தது. இந்த உடை அகில் வாங்கிக் கொடுத்தது. எத்தனை காதலோடு வாங்கிக் கொட்டுத்தான்!. இப்ப ரோகிணியோடு டூயட் பாடுகிறானோ.? கொடுத்து வச்ச ரோகிணி... பத்திரிகையில் அவள் முகம் பளிச்சென்று இருந்ததே.... பொறாமை வந்தது.
“ஹேமாம்மா.. அம்மா சாப்பிட கூப்பிடறாங்க.” ரோசியை பின்பற்றி அவள் மாடிக்குச் சென்றாள். வேதவல்லி அம்மாவின் அறைக்குள் அவளை விட்டுச் சென்றாள் ரோசி....
“வா ஹேமா.. இது எங்க அம்மா. அம்மா நா சொன்னேனே ஹேமா.. இவ தான்..” அறிமுகம் செய்தாள் காவ்யா. அந்த அறையே கோவில் போல் இருந்தது. ஒரு பக்கம் முருகன், சிவன், பார்வதி விநாயகர் என்று ஏகப்பட்ட சாமிப் படங்கள். மெல்லிதாக சந்தன ஊதவத்தி நறுமணம் வந்தது. பால் போல் குழந்தை முகத்துடன், ஹேமாவைப் பார்த்து புன்னகை செய்தார் வேதவல்லி.
“உக்காரும்மா....” தாய்மை நிறைந்த கனிவான பார்வை. கிளி அவர் தொண்டையில் உட்கார்ந்து இருக்கோ.? இனிமையான குரல். கையெடுத்து கும்பிட்டு மதிக்கத் தக்கத் தோற்றம்.
“காவ்யா.. உன் தோழிக்கு பரிமாறு.”
அன்று அங்கேயே சாப்பிட்டாள் அந்த அம்மாவோடு. வழக்கமாக பொது ஹாலில் தான் உண்பாள். அனைவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். கைகழுவி துண்டில் கையைத் துடைத்துக் கொண்டு, சின்ன சிரிப்புடன் அம்மாவை பார்த்தாள் ஹேமா.
“காவ்யா இந்த விடுதியை திறம்பட நடத்தறா. அவளுக்கு உன் நட்பு கூடுதல் தைரியத்தை கொடுத்திருக்கு. உன் அண்ணா சந்திரன் எப்ப வரார்.? வீடு பார்த்தாச்சா.?”
“பார்த்திட்டு இருக்கேன்மா. கூடிய சீக்கிரம் வந்திடுவார்.”
அம்மா காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றாள் அவள்.
“அம்மா.... நாங்க கிளம்பறோம்.... ரோசி அம்மாவை பார்த்துக்க.”
“ரோசி லஞ்ச் கட்டி வச்சிருப்பா. எட்டுத்துக்கிட்டு, இருட்டும் முன் வந்திடுங்க. பத்திரமா போயிட்டு வாங்க.. நீ வண்டி ஓட்ட வேணாம் காவ்யா. கண்ணன் வண்டி ஒட்டட்டும்....”
“இல்லம்மா ஹேமாவோடு தானே போறேன். கவலைப்படாதீங்க..”
இருவரும் கிளம்பினார்கள். முப்பத்திநாலு கிலோமீட்டர் கடந்து வந்தாச்சு. வண்டியை நிறுத்திவிட்டு கட்டணம் கட்டிவிட்டு உள்ளே ஒரு கிலோமீட்டர் நடந்தார்கள். சுற்றிலும் மலைகள். இடையில் புல்வெளிகள். அமைதியான இந்த இடத்தில் தான் ஏரி இதய வடிவில் இருக்கிறது. பறவைகளின் இன்னொலி எழுப்பின.
“பேசாமல் இங்கேயே இருந்திடலாம் போல இருக்கு காவ்யா.”
“பையின் மரங்கள்.. மற்றும் அடர்ந்த காடுகள் சூழ இருக்கு இந்த ஏரி. மனசு கஷ்டமாக இருக்கும் நேரம் இங்க தான் வருவேன்....”
ஒரு தடிமனான மரத்தின் அடிப்பகுதி மல்லாந்து கிடந்தது. அதன் மேல் உட்கார்ந்தார்கள்.
“இது எனக்கு பிடித்தமான இடம். ஏரியை ரசிச்சுக்கிட்டு புத்தகம் வாசித்தபடி இருப்பேன்..” என்றாள் காவ்யா.
“மனசை அள்ளுது இந்த சூழல்..... ஓ கிரேட் ரீலிப்.”
சுற்றுலா பயணிகள் அதிகம் இல்லை. ஏனென்றால் இது சீசன் இல்லை. காவ்யா மெதுவாக சொன்னாள்.
“அந்த சகோதரிகள் வேணி ராணியோட இங்க வந்திருக்கேன். பாவம் டீன்ஏஜ் புள்ளைக. அநியாயமா செத்திட்டாங்க.... ரெண்டு பேரும் ரொம்ப துறுதுறுன்னு இருப்பாங்க. கல்லூரிப் பெண்கள்.”
“சாவு வரும் தான். ஆனா.... இப்படி வரக்கூடாது. கொலைக்கு மோடிவ் என்ன காவ்யா.?”
“அது ஒரு பெரிய கதை. வேணி ராணியை கூட்டி வந்தது சந்தோஷ் என்ற இளைஞன். அவன் இவர்களின் அண்ணன் என்று சொல்லிக் கொண்டான்..... ஆனால் அவன் வேணியின் காதலன்.”
“அப்படியா.? திட்டம் போட்டு தான் வந்தானா.?”
“காதல் வியாதி யாரை விட்டது.? ரகசியமாக வேணியை கல்யாணம் பண்ணிக்க திட்டம். வேணியின் அண்ணன் காமராஜ் துரத்திக்கிட்டு வரான். அவனை திசை திருப்ப இவன் அண்ணன் ஆனான்.”
“பேஷ் காதலன் அண்ணன் வேஷம் போட்டு வந்திட்டான். பிரசாத் என்ன வேஷம் போட்டான்.?”
“அவன் நல்லவன் வேஷம் போட்டான். எங்க அப்பா இறந்த சமயம் அது. விடுதியை அவர் தான் நடத்தி வந்தார். சட்டுன்னு அவர் சாவு வந்திடுச்சு. கதிகலங்கி நின்னேன். விடுதியை வித்திடலாம்ன்னு விளம்பரம் பண்ண போது இந்தப் பாம்பு உள்ளே நுழஞ்சுது.”
“பாம்பு விஷயத்தை கக்கிடுச்சு.”
“டெட்லி விஷம். வேலை தேடி தான் பிரசாத் வந்தான்னு நினச்சேன். ஆனா அவன் வேணி இங்க தங்கி இருப்பதை அறிந்து வந்திருக்கான். அவனுக்கும் சந்தோஷ்கும் குடுமிபுடி சண்டை.... வேணி எனக்குத் தான் என்று அவனவன் போட்டியில் இறங்கி.... கடைசியில் அந்தப் பெண்ணை பிரசாத் கொன்று விட்டான். ராணி பாவம் பதினாலு வயசு.. கொலையை பார்த்துவிட்டாள் என்று அவளையும் கிளோஸ் பண்ணிவிட்டான்..... சந்தோஷ் தலைமறைவு ஆகிவிட்டான்.”
“எப்படி கொன்னான்.?”
“கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கவிட்டிட்டான். பிறகு அவனே அய்யோ கொலை கொலைன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினான்... தற்கொலை என்று சாதித்தான். ஓடிப் போன சந்தோஷ் மேல் பழி போட்டான்....”
“அப்புறம் எப்படி மாட்டினான் காவ்யா.?”
“அவன் ரத்தக்கறை படிந்த வாட்ச்சை நான் தான் கண்டுபிடிச்சேன். அந்த அறையின் பீரோ அடியில் விழுந்து கிடந்தது. அதில் அவன் கைரேகை பதிவாகி இருந்திருக்கு. அதுவே வலுவான ஆதாரமா எடுத்துக்கிட்டு கோர்ட் அவனுக்கு பத்து வருட கடுங்காவல் விதிச்சுது. அவன் இப்ப எப்படி ஜாமீனில் வந்தான்னு தெரியலை..”
இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார்கள். ஹேமாவுக்கு மனசை என்னவோ செய்தது. தனிமனுஷியா காவ்யா எவ்வளவு பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு சமாளித்திருக்கா.! அப்பாடான்னு ஒரு மனுஷியை இருக்க விட மாட்டாங்க போலிருக்கு. ஆண் ஒருவன் பழி வாங்க எண்ணினால் நாசப்படுத்தாமல் விட மாட்டான்....
“என்ன யோசிக்கிற ஹேமா.?”
“உனக்கு எந்த வகையில் ஹெல்ப் பண்ண முடியும்ன்னு யோசிக்கிறேன்..”
“பேசாம செத்திடலாம் போலிருக்கு. நா நொருங்கிப் போயிருந்த சமயத்தில் தான் நிரஞ்சன் வந்தான்.... விடுதியின் பேர் கெட்டுவிட்டது. கோர்ட் கேஸ் கொலை என்று அல்லோலப் பட்டதால், சுற்றுலா பயணிகள் என் விடுதியை தவிர்த்தனர்..... டீ எஸ்டேட்டில் பல ஊழல்கள் செய்து நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தான் பிரசாத்.... லட்சக்கணக்கில் நஷ்டம். விடுதியை மூட வேண்டியது தான் என்று முடிவு எடுத்தேன். அப்போ வந்த நிரஞ்சன் தான் மலர்விழி விடுதியை மலர வைத்தான்....”
“உன் மனசையும் மலரவைத்தான்னு சொல்லு....”
ஒரு சோகப் புன்னகை உயிர்புடன் வந்தது காவ்யாவிடமிருந்து.
“நிரஞ்சன் அன்பு உள்ளம் கொண்டவன். அவன் தைரியம்.. உரம் கொண்டவன். தோல்வியை வெற்றியாக மாற்றத் தெரிந்தவன்.. அவன் சொன்னான். உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளக் கூடிய பெரிய கிப்ட் என்ன தெரியுமா.? அடுத்தவங்க ஒபினியன் என்னன்னு ஆராய்ச்சி பண்ணுவதிலிருந்து மனசை விடுவித்துக் கொள்வது தான்..... கொலைகார விடுதின்னு சொல்லி ஒதுங்க நினைக்கிறவங்க மத்தியில் நீ ஜெயித்து காட்டனும்.... விடுதியை நடத்துன்னு சொன்னான்.... அவனும் பெருமளவு முயற்சி செய்து.. இப்ப இந்த நிலைக்கு கொண்டு வந்தான்.... ஆனா..”
காவ்யா கண்ணில் அவ்வளவு வருத்தம். உலகத்து துயரமெல்லாம் தாங்கி நின்றது அவள் கண்கள். ஹேமா அவள் கையை மெல்ல பற்றினாள். “நான் முன்பு சொன்னது தான். நிரஞ்சன் வருவார்..”
“நிஜமா.?” என்று குழந்தை போல் கேட்டாள்.
“பின்னே ட்ரு லவ் நெவர் பெயில்ஸ்..”
அவள் முகம் பிரகாசம் அடைந்தது.
“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.... உன் அகில் பத்தி சொல்லேன்.”
ஹேமா இப்பொழுது அதே துயரம் நிறைந்த கண்களுடன் ப்சு என்றாள். “கண்ணாடி அழகு தான். நம்ம பிம்பத்தை பார்க்க அதை விட்டா வேறு கருவி ஏது.? ஆனா அது சுக்குநூறா உடஞ்சு போனா.? அதுவே ரேசர் ஆயிடும். கிழித்துவிடும். காதல் அப்படித்தான். அழகான கண்ணாடி மாதிரி. போட்டு உடச்சாச்சு.. அது கூரிய துண்டாக வலிக்க வலிக்க குத்துது.”
“ஏய்.... என்னை சொல்லிட்டு நீ நெகடிவ்வா பேசினா எப்படி.? உனக்கும் உன் அகில் கிடைப்பான். காதல் எங்கள் சொந்தம்ன்னு வாழத் தான் போறே.. சீர் அப் யா..”
அந்தச் சொல் புதிய ரத்தத்தை ஹேமாவினுள் பாய்ச்சியது. ஆனால் மறுநிமிடம் அவள் சோர்ந்து போனாள்.
“எனக்கு நடக்காது காவ்யா.. என்னிடம் ஒரு குறை இருக்கு....”
“உனக்கென்ன குறை.? பப்ளியா இருக்கே. சித்திரம் போல் அழகு. உன்னோட சுருள் முடிக்கே கியூவில் நிற்பானுங்க. அகில் மட்டும் விதிவிலக்கா என்ன.? அந்த ரோகிணி உன் கால் தூசு பெறமாட்டா....”
“உன் பாசம் அப்படி நினைக்க வைக்குது. என் குறை தோற்றத்தில் இல்ல.... என்னை உளமாற காதலிச்ச அகில் பிரிந்தது, அந்த குறையை சுட்டிக் காட்டி தான். ஸாரி ஹேமான்னு சொன்னப்ப நான் இடிஞ்சு போயிட்டேன். தனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டான். சூரியன் இல்லாத தாமரை நான். ஸோ.. இது தான் என் கதை....”
மேகங்கள் இருண்டு கொண்டு வந்தது. காற்று வேகமாக வீசியது. முடிக்கற்றைகள் பறக்க.. அதை கையால் ஒதுக்கிக் கொண்டே..
“மழை வரும் போல இருக்கு.. திரும்பிடலாமா.?” என்றாள் காவ்யா. “மழை வரட்டுமே.. நனைவது எனக்குப் பிடிக்கும்.”
“அம்மா திட்டுவா. எனக்கு மழையில் நனைந்தால் ஒத்துக்காது..”
திரும்ப நடக்க ஆரம்பித்தார்கள். பிரசாத் அவர்கள் போவதையே பைன் மரக் காடுகளில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
எதிர் வரும் ஆபத்து தெரியாமல் அவரவர் சிந்தனையில் மூழ்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
சொந்தம் தொடரும்.