பதினேழாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்.. 17
காதல் ருசியான பழம் மாதிரி. கனிந்து இருக்கும்போதே கைகூடிவிடனும். இல்ல அது அழுகிடும்....அல்லது எட்ட முடியாத உயரத்துக்கு போய்விடும். காவ்யா ஹேமா காதல் எந்த திக்கை நோக்கிப் போகிறது என்று அவர்களுக்கேத் தெரியவில்லை.
அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் மனம் திறந்து பேச முடிந்தது ஹேமாவால். அவள் முகம் பனியில் நனைந்த ரோஜா போல் இருந்தது.
“காவ்யா.... அகிலை மறக்க முடியாமல் தவிக்கிறேன். ஏன்னா நா நிஜமா காதலிச்சேன்..”
“ஹேமா.... அந்த அயோக்கியன் போனா போகட்டும். மனசை தூண்டிவிட்டு விலகிட்ட அவனுக்காக நீ ஏன் உன்னை வருத்திக்கணும்.? உன்னை புரிந்துகொண்ட ஒருவன் நிச்சயம் வருவான். நம்பிக்கையோடு இரு....”
“இன்னொரு காதல் எனக்கு வேண்டவே வேண்டாம். காதல் தோல்வியின் வலி ரொம்ப பெரிசு. அதை திரும்பவும் அனுபவிக்க என் மனசுக்கு திராணி இல்லே காவ்யா...” அவள் சிரித்தாள். அது வரவழைத்துக் கொண்ட சிரிப்பு.
“ஹேமா.... காதலிக்கும்போது.. அது கனவாக முடியும்ன்னு நாம நினைக்கறதில்ல. அது தரும் வலி மட்டும் உள்ளத்தைக் கீறிவிடுகிறது. பிரசாத் என்ற பாம்பு, ஏஞ்சல் வேஷத்துடன் வந்துச்சு. அது அமிர்தமா கக்கும்.? ஏகபட்ட ஊழல். நஷ்டம்.... டீ எஸ்டேட்டை அவனுக்கு எழுதி கொடுக்க வேணும்ன்னு மிரட்டிட்டு இருந்தான்... பொய்யான ரெக்கார்ட்ஸ் தயாரித்து.. அவனால் கோர்ட் வரை போகவேண்டி இருந்துச்சு. அப்ப தான் நிரஞ்சன் வந்தார்.... நா டீ எஸ்டேட் போயிடுச்சுன்னே நினச்சேன்..... மீட்டுக் கொட்டுத்தார். இந்த தலைவலி போதாதென்று வேணி ராணியை சந்தோஷ் தங்கைகள் என்றான்.. என்ன ஒரு நாடகம் பார்த்தியா.? அந்த கசப்பான அனுபவத்தால் தான், உன் அண்ணா சந்திரன் வந்தபோது கடுமையா பேசிட்டேன். சில ஆண்கள் பொய் சொல்லி ரவுடிகளாக வந்துவிடுவதால் ஆண்களே விடுதிக்கு வேண்டாம்ன்னு முடிவெடுத்தேன்.”
“புரியுது காவ்யா. உன்னைச் சுற்றி சிலந்தி வலை பின்னிட்டாங்க.”
“உண்மை தான். அப்பாவின் பாதுகாப்பில் குழந்தை போல பேதமையுடன் இருந்தேன்.... அவர் சடாரென்று மறைந்ததும், திடீரென ஜான்சி ராணி போல் நடந்துக்க எனக்குத் தெரியலை.... வேணி ராணி கொலை வழக்கு.. திக்குமுக்காடிப் போனேன்..... நிரஞ்சன் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணி.. என்னை வாழ வச்சார்... இந்த விடுதியையும் பழய நிலைக்கு கொண்டு வந்தார். என்னை உயிருக்கு உயிரா காதலிச்சார். என் முகம் வாட சம்மதிக்க மாட்டார்.” சொல்லும்போதே நீர் முத்துக்கள் தோன்றின.
“காவ்யா... அவ்வளவு தூரம் உன்னை காதலிச்ச பின், எதுக்கு காரணம் சொல்லாமல் ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போனார்.? உன்னை கைவிட்ட மாதிரி தானே.?.. இது காதல் தானா.? அகிலுக்கும் இவருக்கும் என்ன வித்தியாயசம்.?”
காற்றில் அலைமோதிய ஏரியின் நீரலைகளை பார்த்துக் கொண்டே இருந்தாள் காவ்யா. என்ன பதில் சொல்வது.?
“உன் காதல் நிஜம். அவன் காதலில் உண்மை இல்லை. காதலிச்சிருந்தா இப்படித் தான் சொல்லாமல் கொள்ளாமல் தவிக்கவிட்டு ஓடிப் போவாங்களா.? நீ வேறு யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிட்டுப் போவாங்களா.?”
“இல்ல ஹேமா.. ஏதோ ஒரு சூழ்நிலை அவரை அமுக்கி இருக்கு. அவர் காதல் நிஜம் தான். ஒண்ணு மட்டும் நா புரிஞ்சுகிட்டேன். நா தைரியமா இருக்கணும்.. ஒரு நிரஞ்சன்.. ஒரு சந்திரன் என்று யாரையாவது நம்பி என்னை பலகீனப்படுத்திக்க கூடாது... நீ சொல்வது போல் இன்னொரு காதல் தோல்வியை சந்திக்க நானும் தயாரா இல்ல.”
வாழ்க்கை, போகிற போக்கில் வாழும் வழிகளை கத்துக் கொடுத்துக் கொண்டே போறது. இருவரும் அவரவர் சிந்தணையில் மூழ்கி இருக்க.... காவ்யாவின் செல்ல அடித்தது. ரோசி தான்.
“சின்னம்மா.... ஒரு முக்கிய செய்தி..”
“என்னாச்சு ரோசி.? அந்த பிரசாத் மீண்டும் வந்திட்டானா.?”
“இல்லமா.... குழந்தை சசி தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கா. உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னாங்க அம்மா.”
“அய்யோ அப்படியா.? சசிக்கு எப்படி அடிபட்டுது.?”
“அது வந்து.. நீங்க வாங்க சின்னம்மா....” ரோசி போனை வைத்துவிட்டாள்.
“காவ்யா.. சசியை வள்ளி ஏதாவது செய்திருப்பாளோ.? வள்ளி சசியிடம் தகராறு பண்ணிக்கிட்டே தானே இருந்தா.”
இருவரும் எழுந்து கொண்டார்கள். அம்மாவுக்கு ஃபோன் செய்தாள் காவ்யா. உடனே எடுத்தார் வேதவல்லி..
“அம்மா.. சசிக்கு என்னாச்சு.?.. ஆபத்து ஒண்ணுமில்லையே....”
“வள்ளி சரியில்லைன்னு நா சொல்லிட்டே இருந்தேன்.. அது சரியாப் போச்சு.. சசியை தள்ளி விட்டிருக்கா. சுவத்தில பலமா மோதி.. அங்க படங்கள் மாட்டன்னு இருந்த ஆணி மேலே பின் மண்டை பட்டு அடி. ரத்தம் குபுகுபுன்னு வந்திருக்கு. அமுதன் தான் ஆஸ்பத்திருக்கு கூட்டிக்கிட்டு ஓடி இருக்கான்.... நீ வா.. சசி பாவம் மயக்கமா இருக்கா.” அம்மாள் குரல் கலங்கி வந்தது.
காவ்யாவும் ஹேமாவும் வந்தபோது மாலை மணி ஏழை தாண்டிவிட்டது.... அமுதன் ஓடி வந்தான். ஏதும் கேட்பதற்கு முன் அவனே தலையில் அடித்துக் கொண்டு விவரம் சொன்னான்.
“காவ்யா மா.... அந்த சின்னக் குட்டிய கண்டா வள்ளிக்கு பிடிக்கமா போயிடுச்சு.... நானும் அவ கிட்டே பல முறை சொல்லிட்டேன். தாயும் இல்ல தந்தையும் இல்ல.. இப்படி சிடுசிடுக்கிறே பாவத்தை சம்பாதிக்காதேன்னு.... அவ கேக்கலை. சின்னப் பிள்ளைய சமைக்க விட்டா அது என்ன செய்யும்.? ரொம்ப நேரம் குக்கர் அடுப்பில் இருந்திருக்கு. தண்ணி பிடிக்க போயிட்டா. வால்வு புஸ்சுன்னு போயிடுச்சு. கவனம் வேண்டாம்.? தண்ட சோற்று கழுதைன்னு ஏசி அடிச்சிருக்கா. இந்த முறை சசி எதிர்த்து பேசியிருக்கு. பிடிக்கலைன்னா எதுக்கு என்னை உங்க மகளா பார்த்துக்கறேன்னு சொன்னேங்க.? நீங்க ஒரு ராட்சசின்னு, அடி பொறுக்காம சொல்லிடுச்சு. அதுக்கு தான் இவ ஆவேசமா அநாதை நாயேன்னு சொல்லி தள்ளிவிட்டிருக்கா.... சுவத்திலே மோதி அங்க உள்ள ஆணி பட்டு.. புள்ள துடிச்சு போச்சும்மா..”
கண்ணீருடன் சொன்னான் அமுதன்.
“ச்சே வள்ளியா இப்படி?... டாக்டரை பார்த்து பேசிட்டு வரேன்.” காவ்யா டாக்டர் அமுதாவை சந்தித்து பேசினாள்.
“கட்டு போட்டிருக்கோம். நல்லவேளை பெரிய ஆபத்து ஒண்ணுமில்லே. ஜாக்கிரதையா பார்த்துக்கங்க..”
ரெண்டு நாள் ஆஸ்பத்திரியிலேயே இருந்தாள் ஹேமா. வெளுத்து போய் கட்டிலில் கிடந்த சசியை அனுதாபத்துடன் பார்த்தாள். கண் விழித்ததும் சசி சொல்லிய சொல்.! ஆடிப் போய்விட்டாள் ஹேமா.
“ஆன்ட்டி.. என்னை அநாதை விடுதியில் சேர்த்திடுங்க.... நா இனிமே வள்ளி ஆன்ட்டி கிட்டே போகமாட்டேன்....”
அம்மா இல்லை ஆனா என்னைப் பார்த்துக்க நல்ல உறவுகள் இருக்கு.. பாவம் இந்தச் சிறுமி.... அவள் மேல் விரிவாக ஒரு அன்பு தோன்றியது ஹேமாவுக்கு. “நீ அங்க போகவேண்டாம் கண்ணு. நா உன்ன பார்த்துக்கறேன்.” ஆதரவுடன் பேசினாள்.
“வேண்டாம் ஆன்ட்டி.... உங்களுக்கும் என்னைப் பிடிக்காம போயிட்டா.? எனக்கு நா மட்டும் தான் உறவு..... நா பொறந்திருக்கவே கூடாது.” அந்த சிறுமி சொன்னதும் தூக்கிவாரிப் போட்டது ஹேமாவுக்கு. எப்படிப்பட்ட வார்த்தைகள்.! ஒரு சின்னப் பெண் இப்படி பேசுகிறாள் என்றால்.? இந்த சமுதாயம் அவளுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் என்ன.? எனக்கு கர்பப் பை இல்லன்னு அழறேன்.. கர்பத்திலே ஜனித்திருக்கவே கூடாதுன்னு இவ அழறா....
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சசி. உனக்கு ஒரு தாய் மடி கிடைக்கும்.”
“என்னை என் ஸ்டெப் பாதரிடம் சேர்த்திட முடியுமா.? அவர் என்னிடம் அன்பா தான் இருந்தார்....”
இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.?
“சசி.... நீ இனிமே சந்தோஷமா இருக்கப் போறே.... நீ சொன்னது பற்றி காவ்யா ஆன்ட்டிக்கிட்டே பேசறேன். சரியா.?”
“தேங்க்ஸ் ஆன்ட்டி.... என்னோட உரிமையுள்ள இடம் அங்க தான்.” தெளிவாக சொல்லும் சசியை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஹேமா. எப்படிப்பட்ட அறிவுள்ள குழந்தை!.... அது வாடிப் போகக் கூடாது. அவ சிங்கப்பூர் அப்பாகிட்டே பேசி, எப்படியாவது அனுப்பி வைக்க முடியமான்னு பார்க்கலாம்.
சசி ஆஸ்பத்திரியிலிருந்து குணமாகி வந்தாள். அவளை விடுதிக்கு கூட்டி வந்தாள் காவ்யா. அமுதன் அவளிடம் மன்னிப்பு கேட்டார்.
“விடுங்க அமுதன். வள்ளியை குற்றம் சொல்லி பயனில்லை. அவளை நம்பி சசியை விட்டது நம் தவறு தான்.”
“சசி கண்ணு.. இப்பதைக்கு நீ இங்க இரு. உன் அப்பாகிட்டே பேசி அனுப்ப ஏற்பாடு பண்ணறேன். சரியா.? டூ வீக்ஸ் டைம் கொடு.”
புதிய விடியல் வரும் என்று காத்திருக்கிறாள் சசி. ஹேமா தன் அப்பாவிடம் பேசினாள்.
“அப்பா.. அந்தக் குழந்தை பாவம் பா. நா அந்தக் குழந்தையின் பொறுப்பை ஏத்துக்கவா.?”
“ஹேமா.. அந்த மாதிரி முட்டாள்தனம் எல்லாம் பண்ணிடாதே. உனக்கு கல்யாணம் பேசி இருக்கேன்.”
“என்னப்பா சொல்றீங்க.?”
“ஆமாம்மா சூப்பர் வரன் வந்திருக்கு... அருமையான பையன். முப்பது வயசு ஸ்ரீதர். அவனுக்கு ஒரே மகன். தாயில்லாமல் தவிக்கிறான்.... அவன் ஜாதகமும் உன் ஜாதகமும் பொருந்தி இருக்கு. அவனுக்கு குழந்தை இருப்பதால்.. நீ குழந்தை பெற்று தர முடியாதது பற்றி நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டான்...”
“அப்பா.... அந்த ஜாதகத்தாரிடம் ஒண்ணு சொல்லுங்க..”
“என்ன சொல்லணும் மா.?”
“என் பொண்ணு ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக்கப் போறா அவளை அக்குழந்தையோட ஏத்துக்க தயாரான்னு கேளுங்கப்பா.”
“என்னம்மா இது.? யாரோ ஒரு சசிக்காக.. உனக்கு வரும் நல்ல சான்ஸ்சை மிஸ் பண்ணப் போறியா.? அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கம்மா.”
“ஏன் பா?.. யாரோ ஒரு ஸ்ரீதரின் குழந்தையை நா ஏத்துக்கணும். ஆனா அவங்க என் குழந்தையை ஏத்துக்க மாட்டாங்களா.? நல்ல நியாயமா இருக்கே.? ஸ்ரீதர் சசியை ஏத்துக்கணும். அப்புறம் பேசலாம் கல்யாணத்தைப் பத்தி.” இதுவரை ஹேமா அப்பா கிழித்த கோட்டை தாண்டியதில்லை. இன்று அவள் இப்படி பேச சசி தான் காரணம். அந்த பிஞ்சு குழந்தையின் கண்ணீர் தான் காரணம்.
“ஹேமா முடிவே பண்ணிட்டியா.? அந்த உன் முடிவை மாத்திக்கமா. இந்த உலகத்தை புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்கே. நமக்கு சாய்ஸ் கிடையாது. இந்த வழியாவது கிடக்குதேன்னு நா நிம்மதியா இருக்கேன். கருணையுடன் சம்மதிச்சிருக்கான்.”
“அப்பா.. யாரும் கருணை பிச்சை போட்டு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். என் மேல் அன்பு, மதிப்பு இருக்கணும். உனக்கு வாழ்வு கொடுத்திருக்கேன் பார்ன்னு கர்வம் இருக்கக் கூடாது. தன்மானம் இல்லாமல் நான் பொறக்கலை.”
“கர்பப் பை இல்லாமல் பொறந்திட்டியே மா.”
கைபேசியை நிறுத்த முடிந்த அவளால், கண்ணீர் சொரிவதை நிறுத்த முடியவில்லை. அங்கு வந்த காவ்யா கண்ணீரைத் துடைத்தாள். “நான் இருக்கேன் உனக்கு.” என்றாள்.
சொந்தம் தொடரும்.