ஏழாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்....7
சந்தோஷத்தில் சில சமயம் வாய் உளறும் என்பது உண்மை தான். காவ்யாவிடம் முதன் முதலில் தான் சென்னையிலிருந்து வருவதாக சொல்லிவிட்டான் சந்திரன். பிறகு தான் மதுரை என்று அவள் தெரிந்து கொண்டாள்.
“பதட்டம் வந்தா ஊர் பேர் கூட மறந்திடுமா சந்திரன்.?” என்று கேலி செய்தாள். இன்று சித்தப்பாவும் கேலி செய்கிறார்..
“ஏன்டா கொடைக்கானல் தானே போறோம்.? மழுங்கிவிட்டதா உன் மூளை.? உதகைன்னு சொல்றே.? சரி அந்த லெட்டரில் என்னதான் எழுதி இருக்கு.? இப்படி இடி விழுந்தது போல முழிக்கிறே.? உளறாம நிதானமா சொல்லு. இந்தா தண்ணி குடி. நான் தான் வயசானவன் மாத்தி சொல்வேன். நீ டென்ஷன் ஆனா உளறிக் கொட்டுவதை எப்ப நிறுத்தப் போறே.?”
தண்ணீரை மடக்மடக்கென்று குடித்த பின் நிதானத்துக்கு வந்தான்.
“சித்தப்பு.... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை.” என்றான்.
“என்னாச்சு.? உன் முகமே சரியில்ல.”
“சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.....” இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
“என்ன சொல்லு?....” இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டே கேட்டார். கசப்பான செய்தி தான். முகம் சுளித்தபடி சொன்னான்.
ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஐ.டி கன்சல்டன்டாக பணி ஆற்றுகிறான். கம்பனி சிஸ்டம்ஸ்க்கு சாப்ட்வேர் சலூஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். கொடைக்கானல் பிராஞ்சுக்கு சீனியர் ஐ.டி கன்சல்டிங் மேனேஜர் பதவி உயர்வு கிடைத்தது. அவனை அங்கு வேலையை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். இப்ப ரெண்டு மாசம் கழித்து வந்தா போதும்.... அமெரிக்காவிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரி அருண் வந்திருக்கிறார் என்றும், அவர் மறுபரிசீலனை செய்த பின் தான் பதவி உயர்வு உறுதியாகும் என்று லெட்டர் வந்துள்ளது.
“சித்தப்பா.... நான் இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலை...”
காவ்யா இருக்கும் ஊரில் வேலை என்று மகிழ்ந்த தனக்கு இப்படி ஒரு ஏமாற்றமா.? என்று தான் நொந்து போயிருந்தான்.
“சரி.. நீ எதுக்கும் ஃபோன் பண்ணி கேள்....”
சந்திரன் ஃபோன் செய்து கேட்டான்..
“சந்திரன்.... அநேகமாக உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அருண் முடிவு பண்ண கொஞ்சம் டைம் எடுத்துப்பார். வெயிட் பண்ணுங்க.... ஆனா உங்களுக்கு மாற்றல் உறுதி. நெக்ஸ்ட் மன்த் ஜாயினிங் டைம்..” என்று பதில் வந்தது. அப்பாடா.. பதவி உயர்வு இல்லாட்டி பரவாயில்ல. டிரான்ஸ்பர் உறுதி என்றது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சித்தப்பாவிடம் சொன்னான்.
“அப்படியா.? அப்ப போய் தான் ஆகணுமா.? நல்லா கேட்டுக்கிட்டியா.? மாத்தி சொல்லிட்டு இருக்காதே. குழப்பாம சொல்லு..”
“ஓ. கே.. உங்க சந்தேகம் நியாயம் தான். அடுத்த மாசம் முதல் வாரத்துக்குள் நாம கொடைக்கானல் போய் செட்டில் ஆகிறோம். உதகை இல்லை. போதுமா.?” என்றான்.
“ஒரு மாசமாவது இருக்கே..” என்று சமாதானப்படுத்திக் கொண்டார் சித்தப்பா. ஹேமாவிடம் ஃபோன் செய்து, வீடு பார்க்கலாம் என்று சொன்னான் சந்திரன். “நா வேனா நிர்மல் கூட பேசவா.?”
“வேண்டாம் அண்ணா.. நானே பேசறேன். உனக்கு அந்த டென்ஷன் வேண்டாம். நீ அங்குள்ள விவகாரத்தைப் பார்.” என்றுவிட்டாள்.
ஹேமா அழகான வேலைபாடு நிறைந்த டசர் சில்க் புடவையை அணிந்து கொண்டு கிளம்பத் தயாரானாள். “ அங்கு காவ்யா வந்தாள்.
“எங்க கிளம்பிட்டே ஹேமா.?”
“நிர்மலை பார்க்க.... வீட்டு விஷயமா.”
“ஃபோன் பண்ணிட்டுப் போ. எனக்கு தெரிஞ்ச ஏஜென்சி பெண் சுதா இருக்கா. அவ கிட்டே வேணா முதல்ல பேசிப் பார். அந்த நிர்மல் வீட்டை விக்கப் போறானா இல்லே வாடகைக்கான்னு..”
காவ்யா எதுக்கு முட்டுக்கட்டை போடறா.? இவ உண்மையில் யோசனை சொல்கிறாளா இல்ல திசை திருப்புகிறாளா.?”
“இல்லே காவ்யா.... நான் நேரில் சென்றே கேட்டுக்கிறேன். இதுக்கு எதுக்கு புரோக்கர் எல்லாம்?.. ..”
அவளிடம் மண்டை ஆட்டிவிட்டு....
காவ்யாவுக்குத் தெரியாமல் கிளம்பிவிட்டாள். காவ்யா எதுக்கு.? நா என்ன சின்னக் குழந்தையா.? எனக்கு போகத் தெரியாதா.? விலாசத்தை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து, உறுதிப்படுத்திக் கொண்டு தெருவில் இறங்கினாள்.
“வீடு நடக்கும் தூரத்தில் தான் இருக்கு ஹேமா.” என்று ரோசி சொல்லியிருந்தாள். காலை நேரம், இதமான இளம் சூரியன் தேகத்தை வருட, நடக்க ஆரம்பித்தாள் காவ்யா. பதினைந்து நிமிட நடைக்குப் பின்.. ஒரு பெரிய பங்களா கண்ணில் பட்டது. விலாசம் சரி பார்த்துக் கொண்டாள். இது தான்..
அடேயப்பா எவ்வளவு பெரிய வீடு.! முன்னால் உள்ள தோட்டத்தில், அழகிய ரோஜா செடிகளில், கலர் கலர் ரோஜாப் பூக்கள் பூத்திருந்தது. வேலி போடப்பட்ட அந்த வீட்டின் முகப்பில், குழல் ஊதும் கிருஷ்ண பொம்மை வரவேற்பாக காட்சி தந்தது. கண்ணா.... இந்த அழகான பங்களாவை எங்களுகே சொந்தமாக்கு, என்று வேண்டிக் கொண்டு.. கேட் திறக்கப் போனாள்.
“உள்ளே வராதீங்க.... “ குரல் வந்தது. எங்கிருந்து என்று தான் தெரியவில்லை. பிறகு மாடி பால்கனியில் ஒரு இளைஞன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவன் தான் கத்தியிருக்க வேண்டும்.
“ஸார்.. வீடு விக்கப் போறதா.... “ அவள் முடிக்கவில்லை, அவன் கடுமையான குரலில் சொன்னான்.
“அதெல்லாம் வதந்தி. கெட் அவுட். இனிமே வீடு பார்க்க வந்தா என் நாயை விட்டு துரத்திடுவேன்.... இன்பா..” என்றான். பாய்ந்து வந்த ஒரு அருமையான அல்ஷேசன் வேலி கேட் வரை வந்து நின்றது. அவள் மண்டியிட்டு இன்பா.... என்று கம்பி வழியே கையை விட்டு நாயின் தலையை தடவிக் கொடுத்தாள். அது அவளை அமைதியாக பார்த்தது. குரைக்கவில்லை. மேலே நின்றவனுக்கு எரிச்சல்.
“இன்பா.... பார்க். சேஸ் ஹேர் அவுட்..” என்றான். அப்படியும் இன்பா லேசாக வாலை ஆட்டியபடி நின்றது.
மடமடவென்று கீழிறங்கி வந்தவன்.. நீளமான பாதையை கடந்து வந்து. “என்ன.? நாய் பிடிக்கும் வித்தை தெரிஞ்சு வந்திருக்கியா.?” என்றான். இன்பாவின் கழுத்து காலரை கெட்டியாகப் பிடித்திருந்தான்.
“இன்பா வேலி தாண்டி வராது. பாவம் அதுக்கு வலிக்கும். இப்படி இறுக்கி பிடிக்க வேண்டாம். நான் போயிடறேன்....” என்றாள். அவன் இன்பாவை திட்டிக் கொண்டே திரும்பினான்.
“சீக்கிரம் போயிடு. இல்லே..” என்ற எச்சரிக்கை அவன் முதுகு பின்னே வந்து அவளை பயமுறுத்தியது.
“நீங்களே கொதறிடுவீங்க. புரியுது..” அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்த வழி சென்றாள். ரோஜாப் பூக்கள் வீடு நிறைய வச்சிருக்கான், ஆனா அந்த மென்மையும் வாசனையும் அவன் மனசுக்கு இல்லையே.... முள் தான் இருக்கு.. இடியட் என்று மனதுள் வைது கொண்டே அவள் நடந்தாள்.
அவள் வீட்டை கடந்து நடக்கும் போது எதிரே ஒரு பென்ஸ் வண்டி வந்தது. இவளைப் பார்த்ததும் அது ஸ்லோ டவுன் பண்ணி நின்றது. கண்ணாடி கதவை இறக்கி “ஹாய்..” என்றான். இவன் யார்.? எதுக்கு ஹாய் சொல்கிறான்.? இந்தத் தெருவில் எல்லாம் வினோதமாக நடக்கிறதே.... அவன் இறங்கி வந்து. “மேடம்.... அதோ அந்த வீடு பார்க்க வந்தீங்களா.?” என்றான்.
“ஆமா.... அது விற்பனைக்கில்லையாமே..”
“யார் சொன்னா.?”
“நாய்..”
“நாயா.?”
“நாய் இன்பாவின் எஜமான் சொன்னார். என்னை துரத்திட்டார்.”
“ஸாரி.... அது என் தம்பி நிர்மல் தான். கோபக்காரன். விக்க தான் போறோம். என் விசிட்டிங் கார்ட் தரேன். ஃபோன் பண்ணிட்டு, என் அலுவலகத்தில் வந்து பாருங்க. நான் பிரபுசங்கர் அட்வோகேட்.... வரேன்.”
அவன் காரில் ஏறி, அந்த வீட்டின் முன் போய் நிறுத்துகிறான். ஹேமா குழம்பிப் போனாள். தம்பி விரட்டுகிறான். அண்ணன் சம்மதிக்கிறான். வாட் நான்சென்ஸ்.?
வழி நெடுக அந்த வீட்டின் சுற்றுபுரத்தின் அமைதியையும் அழகையும் பற்றி எண்ணிக் கொண்டே நடந்தாள். பெரிய தோட்டம் உடைய வீடு.. ஆகா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
மதுரை வீட்டில் உள்ள சிறிய இடத்திலேயே அவள் மல்லி, செம்பருத்தி, ரோஜா.. அப்புறம் தக்காளி, வெண்டை எல்லாம் போட்டிருந்தாள். கருவேப்பிலை கண்ணு வைத்திருந்தாள். அதற்கு நீர் ஊற்ற ஊற்ற தழைத்து வந்தது. வீட்டை வாடகைக்கு விட்டால் வருபவர்கள் பார்த்துக் கொள்வார்களோ மாட்டார்களோ.. தோட்ட வேலை ஹேமாவுக்குப் பிடிக்கும். வீட்டுக்கு வந்ததும்....
அண்ணணுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள்.
“ஹேமா.. நீ காவ்யாவை அவாய்ட் பண்ணிட்டு போனியாமே.? டிரஸ்ட் ஹர்.” என்றான். அதுக்குள்ள அண்ணணுக்கு ஃபோன் பண்ணி வத்தி வச்சுட்டாளா.? ஹேமாவுக்கு சுதந்திரமா எதையும் செய்ய வேணும் என்று ஆசை. எப்பபார் அண்ணன் அல்லது அப்பா சொல்கிறபடி நடக்கணும். சுயமா சிந்திக்க விட மாட்டாங்க. இப்ப காவ்யாவின் நாட்டாண்மை. சே...
“என்ன ஹேமா.? பதிலே இல்லே.?”
“உடனே பார்க்கணும்னு தோணுச்சு. தனியா போனேன்.”
“ஒரு ஹாலிடே ரிசார்ட்.. அப்புறம் டீ எஸ்டேட்ன்னு நிர்வாகம் பண்ணறா. அவளுக்குத் தெரியும், அவ அட்வைஸ்சை கேட்டுக்க ஹேமா. இங்க காஸ் சிலிண்டர் டிரான்ஸ்பருக்கு எழுதணும். டெலிஃபோன் கனெக்ஷன் நிறுத்த மனு கொடுக்கணும். எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. காவ்யாவின் துணையுடன் போ. புரியுதா.?” வற்புறுத்தினான்.
“சரி அண்ணா....”
“ம்ம்.. பத்திரம்.” ஃபோன் வைக்கப்பட்டதும் எரிச்சலுடன் உட்கார்ந்தாள். தனியா ஒரு காரியம் செய்ய விட மாட்டாங்களே.!
நிர்மல் டென்ஷனாக இருந்தான். அண்ணன் பிரபு உள்ளே வந்ததை கூட அவன் கவனிக்கவில்லை. இன்பா கவனித்துவிட்டு குரைத்தது.
“அந்த லேடி வந்தபோது குரைக்க வக்கில்ல. இப்ப குரை.” என்று நாயை திட்டினான். அண்ணனை கண்டதும் முகம் சுளித்தான்.
“ஏன்டா பூல். எதுக்கு வீடு வாங்க வர கஷ்டமர்ஸ் எல்லாரையும் துரத்தி அடிக்கிறே.?”
“ஓ.... நீயா.? வீடு விற்க எனக்கு விருப்பம் இல்லன்னு அர்த்தம்.”
“இவ்வளவு பெரிய வீட்டில் ஒற்றை ஆளா என்னடா பண்ணப் போறே.? அறிவு இருக்கா.?”
“இத பாரு அண்ணா. வீடு என் பேரில் இருக்கு. விற்க மாட்டேன்.”
“தப்பான முடிவு. அந்த லேடிக்கு வீட்டைப் பேசி முடிக்கப் போறேன்... அட்வான்ஸ் வாங்கப் போறேன்..” பிரபு விரைப்புடன் திரும்பிச் சென்றான். ஆத்திரம் அடைந்தான் நிர்மல்.
காவ்யா, வீட்டு ஏஜன்ட் சுதாவிடம் பேசினாள்.
“சுதா.... நிர்மல் பற்றி இன்பர்மேஷன் கிடச்சுதா.?”
“காவ்யா அந்த வீடு வேண்டாம். டிஸ்பியூட்டில் இருக்கு.”
இது கேட்ட ஹேமா. அந்த வீடு தான் வேணும் என்று முடிவு பண்ணுகிறாள். காவ்யா யார் தடுக்க.? பிரபுவின் விசிட்டிங் கார்ட் இருக்கு. பேசி முடிக்கலாம் என்று ப்ளான் போட்டாள்.
சொந்தம் தொடரும்.