16
கயல் இல்லத்தில் இருந்த அந்த வேப்ப மரத்தில் சாய்ந்து தன் வாழ்வை நினைத்துக் கொண்டாள்.
எம்.எஸ்.டபிள்யூ (மாஸ்டர் ஆஃப் சோசியல் ஒர்க்) படித்துவிட்டு சில அரசு அலுவலகங்களுக்கு பயிற்சிக்கு போன போது ஒரு சமூக நலத்துறை அலுவலர் நிலா காலம் பற்றியும் அங்கே நிர்வாகம் மற்றும் மேற்பர்வைக்கு ஆட்கள் தேவை என்று கேள்விப்பட்டதாகவும் பேச்சு வாக்கில் சொல்லி இருந்தார்.
அந்த சமயம் சமூக சேவைக் குழு ஒன்று அவளை கோவையில் உள்ள பூதக்கிணறு என்னும் குக்கிராமத்துக்கு சேவைக்கு அழைத்தனர். கல்லூரியில் இருந்தே இந்த படிப்பு படிக்கும் மாணவர்களை அவர்களுக்குத் தெரியும். அதன்படி தங்கள் பணிக்கு உதவியாக இருப்பார்கள் என்று கருதும் சில பழைய மாணவர்களை
அடிக்கடி தங்கள் சேவைப் பணிக்கு பயன் படுத்திக் கொள்வார்கள்.
இவள் சிறு வயதில் கயலின் அப்பா இறந்துவிட, அவள் அம்மா ஏதோ காரணமாக இரண்டாவது மணம் புரிந்து கொள்ளவும் அவருக்கு சங்கடத்தை தர விரும்பாமல் கயல் விடுதியில் இருந்தே படிப்பை முடித்தாள்.
இந்தப் படிப்பு அவளைப் பொறுத்தவரை அவளை வேறு யோசிக்க விடாமல் சுறுசுறுப்பாக வைத்து இருந்தது.
படிப்பு முடிந்தபின் எங்கே தங்குவது என்று யோசித்து அம்மா வீட்டுக்கு (?) போகப் பிடிக்காமல் அந்த சமூக சேவைக் குழு நடத்திய ஒரு சீர்திருத்த விடுதியில் தங்கி இருந்தாள். அவர்களும் விரைவில் கிளம்புமாறு கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“இதப் பாரும்மா இது பாதிக்கப் பட்டவங்களுக்கான இல்லம். உன்னால இங்கே ஆதரவு தேவைப்படுற யாரோ ஒருத்தர் அது கிடைக்காம கஷ்டப்படுறார். டு யூ அண்டர் ஸ்டாண்ட்? இஸ் இட் ஃபேர் டு யூ?” என்று அந்த இல்லத்தின் வார்டன் பிளந்து கட்டியதில் முகத்தை எங்கே வைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.
“ஓகே மேம். ஒன் வீக்ல கிளம்பிடுவேன்” என சத்தியம் செய்து அவரை திருப்பி அனுப்பி வைத்தாள்.
பின் மகளிர் தங்கும் விடுதிகளை செல்போனில் தேடி மீண்டும் அலைபேசி மூலம் அறை பெற முயற்சித்தாள்.
ஓரளவு அவளுக்குத் தோதான விடுதியில் அடுத்த மாதம் ஒரு அறை வேகண்ட் ஆவதாகச் சொல்லி முன் பணம் கொடுக்கச் சொன்னார்கள்.
இவளும் அவர்கள் சொன்ன மொபைல் எண்ணிற்கு பணத்தை அனுப்பிவிட்டு அதே எண்ணுக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் அவள் முதலில் பேசிய லேண்ட் லைன் நம்பருக்கு கூப்பிட்டு கேட்க அப்படி யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள், அறை வேண்டுமானால் நேரில் வாருங்கள் என்று சொல்லி வைத்து விட்டார்கள், தான் ஏமாந்தது புரிந்து நொந்து போனாள் கயல்.
வாழ்க்கை இப்படியே ஏமாற்றமாய் போய் விடுமோ என்று அவள் பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் பூதக்கிணறு செல்ல அழைப்பு வந்தது. திங்கவும் தூங்கவும் கவலை இல்லை என்பதால்
நல்லதாகிப் போயிற்று என்று கிளம்பி வந்து முதல் நாள் அங்குள்ள வீடுகளில் சில கணக்கெடுப்புகள் எடுத்துக் கொடுத்துவிட்டு ஊரைச் சுற்றப் போன இடத்தில் ஜம்புவையும் செல்வாவையும் பார்த்து அதிர்ந்தாள்.
ஜம்பு அவள் பெரியப்பா. செல்வா அவள் அண்ணன். பல வருடங்கள் முன்பே ஜாதகம், ஜோசியம், பரிகாரம், சவர்க்காரம் என்று இருவரும் இவள் குடும்பத்தில் இருந்து -
இவள் அப்பாவிடம் இருந்து விலகி இருந்தனர்.
ஜம்பு அவள் அப்பாவின் ஜாடையில் இருப்பார்தான் என்றாலும் சரியாகத் தெரியாமல் எதுவும் பேசி வைக்கக் கூடாது என நேரம் கிடைக்கும் போதேல்லாம் ஜம்புவைப் பின் தொடர்ந்தாள்.
அப்படியே இரண்டு மூன்று நாட்கள் கடக்க, மறுநாள் அங்கிருந்து கிளம்பலாம் என்று இவளை அழைத்து வந்த குழு முடிவெடுக்க கயல் சுதாரித்தாள்.
அதற்கு மேலும் பொறுக்க மனமின்றி ஜம்புவினைத் தொடர்ந்து அவர் வீட்டுக்குப் போனாள் கயல்.
தனியான வீடு அது.
“சார். யாராவது இருக்கீங்களா?” கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய நடுக் கூடத்தில் ஒருவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.
சோபாவில் அமர வேண்டியது தானே? என இவள் யோசிக்கும் போதே அவன் இவளைப் பார்த்து எழுந்து விட்டான். என்னவோ அதிர்ச்சியில் திகைத்தவன் போல் நின்ற அவன் முகத்தில் ஏதோ யோசனை ஓடியது.
“வாங்கம்மா. ஐயா குளிக்கப் போய் இருக்காரு. வந்திருவார். உக்காருங்கம்மா!” எனப் பதவிசாகப் பேசினான்.
இவன் யாருடா கோமாளி? என்ற கேள்வியை விழுங்கிக் கொண்டு, “சார் நீங்க..” என இழுத்தாள் கயல்.
“நான் வேலைக்காரன். நீங்க உக்காருங்க. இருங்க இப்போ வந்திடறேன்” என்று வீட்டுக்கு உள்ளே ஓடிப் போனான்.
‘சரி, நமக்கு காபி டீ ஏதாவது எடுத்துட்டு வருவார் போல’ என நினைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து அந்தக் கூடத்தைப் பார்வையிட்டாள்.
அவள் இந்த வீட்டுக்கு கணக்கெடுக்க வரவில்லை. இந்த வீடு இருக்கும் பகுதி அவளுக்கு பணிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவில்லை.
சோபா எதிரே சின்ன டீபாய் இருந்தது. அதன் மீது ஒரு காக்கி உறை, ஏதோ ஒரு வண்டியின் சாவி, சின்ன பித்தளைத் தட்டு, அந்தத் தட்டினுள் சின்ன பித்தளை குப்பியில் கருப்பு மை, இன்னொரு குப்பியில் கொஞ்சம் கற்கண்டு, இன்னொன்றில் கொட்டைப் பாக்கு என குழப்பமான கலவையில் இருந்தது.
அவற்றை பார்த்து முடித்துவிட்டு அறையைப் பார்வையிட்டாள். ஜம்புவின் படங்கள், ஜம்பு சில பெரிய மனிதர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள், செல்வாவின் படங்கள் என்று இருந்தன.
சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவள் அதிர்ந்தாள்.
ஜம்பு ஏதோ அறையில் அமர்ந்து ஏதோ ஒரு பூசையை செய்வது போன்ற படம் அது. அப்போதுதான் இவள் சிறுவயதில் இவள் அம்மா ஜம்பு பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
‘அய்யய்யோ ப்ளாக் மேஜிக் பண்றவரா இவர்? தெரியாம வந்து சிக்கிகிட்டேனே?’
அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்ப முயல, இவள் கால் முட்டி தட்டி அந்த காக்கி கவர் கீழே விழுந்தது.
அதற்குள் இருந்து விழுந்த புகைப்படங்களை அவசரத்தில் அவள் சரியாகப் பார்க்கவில்லை.
அதுவும் ஏதோ ப்ளாக் மேஜிக் போட்டோஸ் என்று உணர்ந்து கொண்டவள் அங்கிருந்து வெளியேற எண்ணி கால்களை இன்னும் நகட்டவும், சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு பால்ய விவாக புகைப்படம் கிடந்தது. அதை மட்டும் எடுத்து தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கேட்டில் சொருகிக் கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அந்த காக்கி கவர் அன்று அங்கு அப்போது ஏன் எப்படி வந்தது என்பது பற்றித் தேவையில்லை அவளுக்கு. எப்படியோ வந்து விட்டது. இவள் பார்வையிலும் பட்டுவிட்டது. இவளும் ஏதோ உந்துதலில் அதை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.
மறுநாள் அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.
தன்னை யாரென்று ஜம்பு கண்டு கொண்டாரா? முதலில் அவருக்கு அவள் அவரைத் தொடர்ந்தது தெரியுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க அங்கிருந்தால் நல்லதல்ல என்று ஒரு மனம் நச்சரிக்க ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தாள் கயல்.
அவ்வப்போது பேசும் அம்மா அன்று அழைத்து குடும்பத்துடன் (!) பெங்களுரில் செட்டில் ஆகப் போவதாகவும் இவளைப் பற்றியும் கேட்டார்.
“நீ இங்கே வந்திறியா கயல்?” என்றவர் கேள்வியில் ‘வர மாட்டேன் என்று சொல்லு ‘ என்ற தவிப்பு தெரிந்தது அவளுக்கு.
“இல்லம்மா. இங்கே ஒரு வேலை கிடைச்சு இருக்கு. கொஞ்ச நாள் பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்”
“அப்பா உனக்குக் கல்யாணத்துக்குப் பாக்கவாங்கிறாங்க டா. ஓகே வா. எனக்கும் ஒரு கடமை முடியும்“ என்றார் கயல் அம்மா.
அவள் கல்யாணம் அவள் அம்மாவுக்கு கடமையா? சரி. அதை நிறுத்தி வைத்து என்ன சாதிக்கப் போகிறாள்?
“ஓகே மா” என்றதோடு அப்போது நிறுத்திக் கொண்டாள்.
அப்புறம் தான் ஜம்பு வீட்டில் எடுத்து வந்திருந்த அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.
சுமார் பதினைந்தில் இருந்து பதினெட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் அவனை விட சிறிய சிறுமிக்கு காலில் மெட்டி போட்டுக் கொண்டு இருந்தான். இருவர் கழுத்திலும் மாலை இருந்தது. அந்தச் சிறுமி ஏதோ மருத்துவமனை படுக்கையில் கிடந்தாள். அவள் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்த பையன் முகம் முக்கால்வாசி தெரிந்தது.
இது பால்ய விவாகம் மாதிரியும் இல்லையே என்று குழம்பினாள் கயல்.
அது எப்படி இருந்தாலும் இதில் இருக்கும் பையனைப் பற்றி விசாரிப்போம் என்று அந்த போட்டோவை அவள் போனில் போட்டோ எடுத்துக் கொண்டு அந்தப் பையனை மட்டும் தனி புகைப்படமாக்கி ஒரு ஸ்டூடியோவில் விசாரித்தாள்.
அவர்கள் அதை ஆராய்ந்து விட்டு இது பத்து பனிரென்டு வருடங்கள் முன்பு எடுத்தது போல் தெரிகிறது என்றார்கள்.
அப்படியே அந்த பையனின் தற்போதைய உருவத்தையும் உருவாக்கி கொடுத்தார்கள், காசை வாங்கிக் கொண்டுதான்.
நல்ல அழகான களையான இளைஞனாக இருந்த அவன் புகைப்படம் அவளை யோசிக்க வைத்ததே தவிர கவரவில்லை.
ஆனால்…
கயல் கண்களை ஒரு விஷயம் கவர்ந்தது. அவன் அணிந்திருந்த டீ சர்ட்டில் நிலா காலம் என்று எழுதி இருந்தது.
இல்லத்துக்குள் அவர்களால் வழங்கப்படும் எந்த உடை வேண்டுமானாலும் அணியலாம் என்றாலும் வெளியே செல்ல நேர்ந்தால் இந்த மாதிரி வடிவமைக்கப்பட்ட டீ சர்ட் உடைக்கு மேலே அணிய வேண்டும் என்ற விதி நிலா காலம் இல்லத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.
அதன்படி அன்று ஒருநாள் தமிழின் கோரிக்கையின் அடிப்படையில் வெளியே வந்திருந்த மொழி அந்த டீ ஷர்ட் அணிந்து இருந்தான்.
இப்போது கயல் அதைப் பார்த்து எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது அந்த சமூக நலத்துறை அலுவலர் போன் செய்தார்.
“என்ன கயல்? நிலா காலம் இல்லத்துல வேலைக்கு போறியா? போறதுன்னா இன்னிக்கு போ. மணிமொழின்னு ஒருத்தர் இருப்பார். நான் சொன்னேன்னு சொல்லி சேர்ந்துக்கோ. அங்கே சாப்பாடு, தாங்குறது இலவசம். வேற நல்ல வேலை கிடைச்சா முன்னாடியே சொல்லிட்டு கிளம்பிக்கோ” என்றார் அவர்.
இதான் அந்த நிலா காலமா? அதுதான் எங்கேயோ கேட்ட மாதிரி இருந்ததா?
இதுவே அதுவாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அது எப்படி இருந்தாலும் அவளுக்கு ஒன்றும் இல்லை. பிறகென்ன? போய் பார்த்து விடலாம் என்றுதான் நிலாகாலம் இல்லத்துக்குச் சென்றாள் கயல்.
அங்கே ஜார்ஜை தான் முதலில் சந்தித்தாள் அவள்.
இதே நிலா காலத்து சிறுவன்தான் அந்த புகைப்படத்தில் இருப்பவன் என்று உறுதியானது அவளுக்கு.
ஆனால் யார்?
அப்போதுதான் சேர்ந்திருக்கிறாள் என்பதால் அதிகம் கேள்விகள் கேட்க முடியவில்லை அவளால்.
ஆனால் அடுத்த வாரம் மணிமொழி அங்கே சேர்மனாக பொறுப்பெடுத்துக் கொண்டான்.
அதற்கு அடுத்த வாரம் மதிவாணனை சந்தித்தாள்.
பின்பு மதிவதனியையும் சந்தித்தாள்.
விதி மனிதர்களை வைத்து கோலம் போடுவதில் கெட்டி ஆயிற்றே?