குழல் - 21
நண்பர்கள் இருவருமே காதலை வெளிப்படுத்திய தருணமும் வார்த்தைகளும் வித்தியாசமானவைதான்.
இளங்கோவின் காதல் புரிந்து ரஞ்சனியின் கண்களில் ஆனந்தக் கீற்றாய் கண்ணீர்.
தங்கள் மனதிற்குள் துளிர் விட்டிருந்த ஆசை நிஜமாகிப் போனதில் அமரனுக்கும் திலோத்தமாவிற்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.
அன்றைய மதிய உணவு வேளை நான்கு மனங்களின் ஒருங்கிணைந்த நேசத்துடனும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடனும் கழிந்திருந்தது.
“அண்ணா நானும் அமரும் எங்க கல்யாண விஷயம் பத்திதான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தோம். எளிமையா பண்ணிக்கலாம்னுதான் எங்களுக்கும் ஆசை. இப்போ எங்களோட கைகோர்த்து நீங்களும் இருக்கீங்க.க்ஷ. இரண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே முடிச்சிடலாம்… ரொம்ப ஹாப்பியா இருக்கும்…”
ஆசையோடு கூறினாள் திலோத்தமா.
“இல்லடா… உங்க கல்யாணத்தைதான் உடனடியா நடத்தணும்… ரொம்ப தாமதிக்க வேணாம்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்…”
“அப்போ உங்க கல்யாணம்..?”
“இன்னைக்கு தான்மா காதலையே சொல்லி இருக்கோம்… கொஞ்சநாள் ஜாலியா லவ் பண்ணிக்கிறோமே…” என்றவன் ரஞ்சனிடம் திரும்பி ஒற்றைக் கண்ணை சிமிட்டி அழகாக சிரித்தான். பதிலுக்கு அவளும் நாணத்தோடு புன்னகைத்தாள்.
“நீயும் என்னடி கூட சேர்ந்து இளிக்கிற..? கல்யாணம் பண்ணிட்டுகூட காதலிக்க வேண்டியதுதானே…” தன் தோழியின் தோளை இடித்தாள் திலோ.
“இல்லடி… அவன் சொல்றது சரிதான்…” என்றபடி இடைபுகுந்தான் அமரன்.
“நம்மளோட கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா முடிக்கப் போறோம். ஆனா இளங்கோ கல்யாணத்தை ரொம்ப கிராண்டா பண்ணனும்னு என் மனசுக்குள்ள ரொம்ப நாளா ஆசை. அவங்க கல்யாணத்தை பிரம்மாண்டமாதான் பண்ணனும்… சோ கொஞ்சநாள் கழிச்சு அவங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்…”
“டேய்… பிரமாண்டமால்லாம் வேணாம்… கொஞ்சநாள் கழிச்சு பண்ணிக்கிறேன் அவ்வளவுதான்…”
“நீ வாயை மூடு… உனக்கு எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும்…”
தன் நண்பனின் மேல் அவன் கொண்டுள்ள பிரியம் அந்த நொடியில் அனைவருக்கும் நன்றாகவே விளங்கியது.
“எங்களுக்குத்தான் யாரும் இல்ல… ஆனா உனக்கு மாமா குடும்பம்னு ஒன்னு இருக்குதானே… அவங்ககிட்ட விஷயத்தை சொல்ல வேண்டாமா..?”
திலோவின் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்தபடி கேட்டான் அமரன்.
“சொல்லணும் அமர்… இந்த வாரம் ஊருக்கு போய் மாமாகிட்ட பேசிட்டு வந்துடறேன்…”
“என்னோட நிலைமை தெரிஞ்சா அவங்க ஏதும் ஆட்சேபணை சொல்ல மாட்டாங்களா..?”
“அதெல்லாம் தலையிட மாட்டாங்க… எனக்கான பாதுகாப்பையும் ஒதுங்க ஒரு இடத்தையும் கொடுத்த நன்றி விசுவாசம் அவங்கமேல இருக்கு. அதுக்காகத்தான் சொல்லணும்னு நினைக்கிறேன். பெருசா எதுலயும் கலந்துக்க மாட்டாங்க. இப்போகூட நானா கூப்பிட்டு பேசினாதான் பேசுவாங்க. அவங்களா ஒருமுறைகூட கூப்பிட்டு எனக்கு பேசினதில்ல. சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா… இனி அவ வாழ்க்கையை அவளே பார்த்துக்கட்டும்னு நெனச்சு அவங்களே ஒதுங்கி நிக்கும்போது இன்னும் எவ்வளவு காலம்தான் நானே ஒட்டிக்க நினைக்க முடியும்..? தேதி குறிச்சிட்டு அழைப்பு சொல்ல போகலாம்னு இருக்கேன்…”
நால்வரின் இதழ்களிலும் ஒருவித விரக்திப் புன்னகை. உறவுகள் இல்லாமல் வாழ்வதும் பெரிய வலி அல்லவா... அதனை நான்கு பேருமே அனுபவிக்கின்றனரே.
“விடுடி… இனி நம்ம உறவே பெரிய உறவா மாறப்போகுது… நமக்கான ஒரு அழகான உலகம்… அதில நாம சந்தோஷமா வாழப் போறோம்…”
மனதை தேற்றி மகிழ்ச்சியுடன் கூறிய ரஞ்சனியை தோளோடு கை போட்டு அணைத்துக் கொண்டாள் திலோ.
அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்தனர் இளங்கோவும் ரஞ்சனியும். தாங்கள் இருவர்தான் முன்னின்று அவர்களை திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் குதூகலமாகவே வேலைகளில் இறங்கி இருந்தனர்.
அவ்வப்போது தனிமையில் மருத்துவர் ரேஷ்மாவுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டாள் திலோத்தமா.
“திலோ.. இன்னும் மூனு மாசம் கழிச்சு நான் சொன்ன அந்த டாக்டர் ஃபாரின்ல இருந்து வராங்க. உன் விஷயத்தை பற்றி அவங்ககிட்ட பேசிட்டேன். இதையே ஒரு சவாலா எடுத்து இதை சக்சஸ்ஃபுல்லா முடிச்சு காட்டணும்னு அவங்களும் ஆசைப்படுறாங்க. நான் சொன்னதுதான்… இது ரொம்ப கான்ஃபிடன்சியலா இருக்கணும்… சக்சஸ் ஆகுறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்குன்னு அவங்களும் நம்பிக்கை கொடுத்திருக்காங்க. பேஷண்டுக்கு இதுல முழு சம்மதம்தானே… பேசிட்டேல்ல…” மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டார் ரேஷ்மா.
“நா..நான் பேசிட்டேன் டாக்டர்… ஒ..ஒரு குழப்பமும் இல்ல… மூனு மாசம் கழிச்சுதானே… உறுதியா பண்ணிடலாம்…”
தனக்குள் தோன்றிய தடுமாற்றத்தை மறைத்தபடியே பேசி வைத்தவளுக்கு தன்னவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதில் மகிழ்ச்சி ஒருபுறம் கிளர்ந்து எழுந்தாலும் அதை தாண்டிய ஒருவித வலியும் பதட்டமும் எழாமல் இல்லை.
ஊருக்குச் சென்று தன் தாய்மாமன் குடும்பத்திடம் தனது காதல் விவகாரம் பற்றியும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பது பற்றியும் கூறி இருந்தாள் திலோத்தமா. அவள் எதிர்பார்த்ததுதான். அவள் மாமாவும் சரி அத்தையும் சரி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை… கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை.
“உன் வாழ்க்கை… நீயும் மேஜர்… சம்பாதிக்கிற… எப்போ கல்யாணம்னு சொல்லு நாங்க வரோம்… ஆனா பார்வை குறைபாடு உள்ள ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறது எனக்கு அவ்வளவு உசிதமா படல… ஆனா நீ இவ்வளவு திடமா முடிவு பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் தடை போட எங்களுக்கு என்ன உரிமை இருக்கு..? உன் இஷ்டம்…” என்று முடித்துக் கொண்டார் அவள் மாமா.
அவள் பெரிதாக விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. முகூர்த்த தேதியை கூறி அவர்களிடம் விடைபெற்று கிளம்பி இருந்தாள்.
உடைகள் திருமாங்கல்யம் என்று அனைத்தும் வாங்கி முடித்தாயிற்று... படபடவென வேலைகள் முடிந்திருந்தன.
கணேஷ் சாந்தி இருவரும் அவர்களது திருமண விபரம் கேள்விப்பட்டு நிறைய மகிழ்ந்தனர். தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் கூறி இருந்தனர். சில சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி அவர்களிடம் கேட்டும் தெரிந்து கொண்டனர் இளையவர்கள்.
அன்றைய நாள் தனிமையில் அமர் திலோ இருவரும் திலோவின் வீட்டு மாடியின் பால்கனியில் அமர்ந்திருந்தனர்.
விளக்கை அணைத்து சற்றுத் தள்ளி இருந்த தெருவிளக்கின் மெலிதான வெளிச்சம் மட்டும் பட்டும் படாமல் ஒளிரும்படி இருந்த பகுதியில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த திலோவின் மடியில் படுத்திருந்தான் அமரன்.
“இன்னும் ரெண்டு நாள்ல நம்ம கல்யாணம்டி…”
ஆச்சரியம் விலகாமல் கூறியவனை புன்னகையோடு தலை கோதினாள் திலோ.
“ரொம்ப வேகமா கல்யாண வேலை நடந்து முடிஞ்சிட்ட மாதிரி தெரியுது. நாமளும்கூட இன்னும் கொஞ்சநாள் ஜாலியா லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு இருக்கலாம்னு தோணுது…”
“கல்யாணம் பண்ணிட்டு காதலிக்க முடியாதா..? அந்த காதல் இன்னும் அழகா இருக்கும் அமர்... எனக்கே கனவு மாதிரி இருக்கு… என் அமரோட மனசுல இடம்பிடிச்சு இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு பொண்டாட்டியாகப் போறேன்… சில நேரங்கள்ல நம்பகூட முடியல…”
ஆச்சரியத்தோடு சொன்னவளின் கன்னத்தை வருடி சிரித்தான் அமரன்.
“அமரனோட வீடு இன்னும் அழகாகப் போகுது… என்னோட போக்கிரி என் கூடவே இருக்கப் போறா… அவ கையால சமைக்கிறதை தினமும் அனுபவிச்சு சாப்பிடப் போறேன்… என்னோட அறை உன்னோட வருகையால இன்னும் அழகாகும்…”
அவன் பேசுவதை கேட்டபடியே புன்னகையோடு அமர்ந்திருந்தாள் திலோத்தமா.
“எனக்கு ஒரு ஆசை இருக்குடி…” என்றபடியே எழுந்து அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“என்ன..?”
என்னோட ஆபரேஷனுக்கு நீயும் தீவிரமா ஏற்பாடு பண்ணிட்டே… நானும் ஓகே சொல்லிட்டேன்… நீயும் எனக்கு பார்வை கிடைச்சிடும்னு பெரிய நம்பிக்கையோட இருக்க. அந்த நம்பிக்கை எனக்குள்ளேயும் வந்துட்டதோ என்னவோ..? என் திலோ என் வாழ்க்கைக்குள்ள வந்த நேரம் ஏற்கனவே என் உலகம் அழகாயிடுச்சு. ஒருக்கால் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு பார்வையும் வந்துட்டா நம்ம வாழ்க்கை இன்னும் அழகாயிடும் இல்லையா..?”
“நிச்சயமா நம்ம வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகா இருக்கப் போகுது அமர்…”
“நாம கணவன் மனைவி ஆனாலும் எனக்கு பார்வை வந்ததுக்கு அப்புறம் நமக்கு இடையில தாம்பத்திய வாழ்க்கை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது… இதைப்பத்தி நீ என்ன நினைக்கிற..?”
திக்கென அதிர்வுடன் அவனை திரும்பிப் பார்த்தாள் திலோத்தமா.
“அ..அதுக்கும் இதுக்கும் எ..என்ன சம்பந்தம்..?” தனது அதிர்ச்சியை மறைத்தபடியே கேட்டாள்.
“உன்னை நான் உடலளவில் உணரும்போது என் உணர்வுகள் மட்டுமில்ல என் விழிகளும் உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்குடி…
எனக்கு பார்வை கிடைச்சதுக்கு அப்புறம் என் திலோவை ஆழமா பார்த்து ரசிச்சு நமக்கு இடையே நடக்கப்போற அந்த முதல் கூடல்கூட முழுமையோட இருக்கணும்னு தோணுதுடி…” ஆசையோடு கூறினான்.
எச்சில் கூட்டி விழுங்கியவள் நகத்தை கடித்து கண்களை சுழற்றினாள்.
“என்னடி… பதிலே சொல்லாம அமைதி ஆயிட்ட…?”
“உ..உங்களுக்கு ஏ..ஏன் இப்படி ஒரு ஆசை..?”
“ஏன்டி… இதுல என்ன தப்பு இருக்கு..? உன்னால காத்திருக்க முடியாதா..?”
இல்லை என்று எப்படி சொல்வாள்..? அதுவும் ஒரு பெண்ணாக…
“அ..அப்படி இல்ல அமர்…”
“இதோ இந்த மாதிரி நெருக்கத்துல உன் வாசத்துல நீ என் பக்கத்துல இருக்கும்போது, உன்னை கிஸ் பண்ணும்போது, எனக்குள்ளேயும் நிறைய ஆசைகளும் உணர்வுகளும் தோனத்தான் செய்யுது. ஆனா இந்த ஒரு விஷயம் ஆபரேஷனுக்கு அப்புறம் நடக்கட்டும்னு தோணுது. பார்வை கிடைச்சிடும்னு ஒரு நம்பிக்கை… அப்படியே பார்வை வரலைன்னாலும் அதுக்கப்புறம் என் திலோகூட மனப்பூர்வமா என்னோட வாழ்க்கையை நான் ஆரம்பிச்சிடுவேன். ஆனா இந்த ஒரு ஆசை எனக்குள்ள தேங்கி இருக்கு. என்னோட இந்த ஆசைக்கு நீ துணை நிப்பியா..?”
அவள் தலையில் இடியை இறக்கியதைப் போன்று அப்படி ஒரு ஆசை அவனுக்கு வரும் என்று அவளுக்கு எப்படி தெரியும்..?
“நாம ரெண்டு பேரும் ஒரே படுக்கையில் படுத்து நெருக்கமா இருக்கும்போது நான் கண்ட்ரோலா இருக்கிறது கஷ்டமான விஷயம்தான். ஆனா என்னால முடியும்… உன்னோட ஒத்துழைப்பும் இருக்கிற பட்சத்தில… இப்போவரைக்கும் உன் கன்னத்தை தாண்டி கழுத்துலகூட நான் முத்தம் கொடுத்ததில்ல. குறிப்பா உன்னை லிப் கிஸ் பண்ணணும்னு எனக்குள்ள அவ்ளோ ஆசை வரும். அதைகூட நான் அவாய்ட் பண்ணி ஒதுங்கி இருக்கேன்னா அதுக்கு காரணம் அங்கே தொட்டா எனக்குள்ள நிறைய தோண ஆரம்பிச்சிடும்… என்னுடைய கட்டுப்பாடுகளை இழந்துடுவேன் அதுக்காகத்தான்…”
அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் “சரி அமர்… பாத்துக்கலாம்…” என்று அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.
இசை உலகில் ஓரளவு பிரபலமாக இருப்பவன்… youtube சேனலில் அவனுக்கு என்று ஒரு தனி ரசிகக் கூட்டமும் உண்டு… தனது திருமணச் செய்தியை திருமணத்திற்குப் பின் ஒரு பதிவாக மட்டுமே வெளியிடலாம் என்று இளங்கோவிடம் கூறி இருந்தான் அமரன். தனக்கு மிகவும் நெருக்கமான ராஜன் இசைக்குழு நபர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தான் அமரன். கூடுதலாக அவன் உறவாக எதிர் வீட்டு கணேஷ் சாந்தி.
கோவிலில் வைத்து எளிமையான திருமணம்.
காதல் திருமணம்… அவனைப் பற்றி முழுமையாக தெரிந்து ஆசையோடு ஒரு பெண் ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் அவனது நெருங்கிய வட்டங்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. திருமண நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பு திலோவின் மாமா குடும்பம் வந்து இறங்கி இருந்தது. சிரிப்பை கூட கடன் வாங்கி கொடுப்பவர்கள் என்பது போல்தான் அவர்கள் முகம் இருந்தது.
இளங்கோவும் ரஞ்சனியும் ஓடி ஆடி மகிழ்ச்சியோடு கோவிலுக்குள் வலம் வந்து வேலை செய்து கொண்டிருக்க முறையான திருமணச் சடங்குகளுடன் மணமகனாக அழகாக மணவறையில் வீற்றிருந்தான் அமரன். குறித்த நேரத்தில் மகிழ்வோடு அவன் அருகில் வந்து அமர்ந்திருந்தாள் திலோத்தமா.
தெய்வ சன்னிதானத்தில் மனம் நிறைந்தவர்களின் முன்னிலையில் காதலோடு தன் காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை மனைவியாக ஏற்றிருந்தான் அமரவர்மன்.
(தொடரும்)

Last edited by a moderator:
Author: STN - 29
Article Title: குழலில் காற்றாகினாள் - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.