புயல் 15
"வழி விடுங்க சார். நான் உள்ளே போகணும்" என்றாள்.
"நீதான் எப்பவோ உள்ளே வந்து என்னை ஆட்டிப் படைக்கிறாயே! இன்னும் எங்கே போகணும்னு நினைக்கிற?" என வாய்விட்டே புலம்பினான்.
"ஆங்! என்ன சொல்றீங்க சார்?" எனச் சத்தமாகக் கேட்டாள்.
கதை குடைந்தவன் (கடுப்பானவன்), "உனக்குத்தான் டி கேட்கலை, எனக்கு நல்லாக் கேட்குது! சத்தமா பேசாதே!" என்றான்.
அதற்கும் "ஆங்?" என்றாள். தலையில் அடித்துக்கொண்டவன், "மிஷினை மாட்டுடி!" என்று பல்லைக் கடிக்க, வேகமாக ஹியரிங் மெஷினை (Hearing Machine) எடுத்து காதில் மாட்டினாள்.
"மக்கும்! இதையே இப்போதான் மாட்டுறாளாக்கும்... விளங்கிடும்!" என வாய்க்குள் முனங்கியவன்,
"உள்ளே வா" என்று முன்னே செல்ல, அவளும் பூங்கொத்துடன் பின் தொடர்ந்தாள்.
அவளைக் கண்டதும் புன்னகையுடன் எழுந்து நின்றான் பிருத்வி! அவனுடன் சேர்ந்து ஆர்யாவும் எழுந்து நின்றாள்.
"வா வாசுகி!" என்று புன்னகையுடன் வரவேற்றான்.
"ஹாப்பி மேரிட் லைஃப் அண்ணா, அண்ணி!" என்று பூங்கொத்தை நீட்டினாள்.
"தேங்க்ஸ்" என்று இருவரும் சேர்ந்து வாங்கிக்கொண்டனர்.
"ஏன் லேட் மேடம்?" எனப் பிருத்வி புன்னகையுடன் வினவ, "இந்தப் பூங்கொத்து வாங்கத்தான் லேட், சாரி அண்ணா!" என்றாள்.
"சரி சரி!" என்றவன், "ஆர்யா! இவ வாசுகி, எங்களோட பி.ஏ. ரொம்ப ஷார்ப்!" என இவன்
புகழ்ந்துகொண்டிருக்கும்போதே, ஆதித்யா "எல்லா விஷயத்துலயும் இல்லை" என்றான் அவளை முறைத்தபடி.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க, பிருத்வியோ சிரிப்பை அடக்கிக்கொண்டு, "ரொம்ப கிளீன்! எல்லா வேலையும் நீட் அண்ட் கிளீனா பார்ப்பா! எல்லாத்துலயும் அட்வான்ஸ்டுதான்..." என்று மீண்டும் புகழ, "என் விஷயத்துல இல்லை!" என்று மீண்டும் முனங்கினான் ஆதித்யா.
வாசுகிக்குக் கேட்கவில்லை என்றாலும் ஆர்யாவிற்கு அது கேட்டுவிட, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
"டேய் போதும்டா" என்று ஆதித்யாவை அடக்கினான் பிருத்வி.
ஆர்யா புன்னகையுடன் "ஹாய் வாசுகி" என்றவள், அப்போதுதான் அவளது காதில் இருந்த ஹியரிங் மெஷினைக் கவனித்தாள். அப்படியே பிருத்வியைப் பார்க்க, அவன் கண்களை மூடித்திறந்து ஆமோதிப்பது போலத் தலையசைத்தான்.
"வாசு! ஆர்யாவிற்கு நீதான் ஃபேக்டரியைச் சுற்றிக் காட்டணும். என்னென்ன வேலை எப்படி நடக்குதுன்னு சொல்லிக் கொடு. அவ அப்சர்வ் (Observe) பண்ணிப்பா! நீ வெளியே இரு, நான் அவளை அனுப்பி வைக்கிறேன்" என்றான். அவளும் புன்னகையுடன் வெளியே சென்று காத்திருந்தாள்.
"உனக்கு என்னதான்டா அவளோட பிரச்சனை?"
"என்ன பிரச்சனைன்னா... என் மனசைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறா!"
"எப்படிப் புரிஞ்சுப்பா? முதல்ல லவ்வைச் சொல்லு! அப்புறம் அவ ஏத்துக்கலைன்னா புரியலைன்னு புலம்பு, என்ன?!" எனப் பிருத்வி கேட்க, அவனோ வழியத் தொடங்கினான்.
இருவரின் பேச்சைக் கேட்ட ஆர்யாவிற்கு ஆதித்யா வாசுகியைக் காதலிப்பது புரிய, மனதில் ஒரு சொல்லொணாத் தவிப்பு... வாசுகியைத் தன்னிடத்தில் வைத்துப் பார்க்கவே அவள் விரும்பவில்லை. 'இந்தப்பணக்காரக் காதல் அவளை என்ன செய்யுமோ?' என்று உள்ளம் பதைபதைத்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
"ஆர்யா, நீ வாசுகியோட போய் எல்லாத்தையும் கவனிச்சுப் பாரு! உனக்கு எந்தச் செக்ஷன்ல வேலை பார்த்தால் ஈஸியா இருக்குமோ சொல்லு, நான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்" எனப் பிருத்வி கூற, அவள் தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.
வாசுகி நிற்க, அவளோடு நடந்தாள் ஆர்யா. இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தனர்.
வாசுகிக்குப் பிறந்ததிலிருந்தே காது கேட்காது. அவளது தந்தைதான் அப்போதே மெஷின் வாங்கிக் கொடுத்தார். இன்றளவும் அவர் நினைவாக அதைத்தான் உபயோகிக்கிறாள். தந்தை வசந்தன் இறந்துவிட, தாய் வள்ளி மற்றும் தங்கை விஷ்ணுபிரியாவுடன் கம்பெனி அளித்த வீட்டில் வசிக்கிறாள். விஷ்ணு இரண்டாம் ஆண்டு பி.இ. படிக்கிறாள். அவளது படிப்புச் செலவையெல்லாம் ஆதித்யாதான் செய்கிறான், ஆனால் பிருத்வி பெயரில். தனியாகச் செய்தால் வாசுகி ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதற்காக இந்த ஏற்பாடு.
இங்கு சேர்ந்த முதல் நாளிலேயே அவள் மீது காதலில் விழுந்தான் ஆதித்யா! ஆனால் அவளோ காதல், கல்யாணம் என்றாலே தவிர்க்கிறாள்; வேண்டாம் என்று பிடிவாதமாக நிற்கிறாள். அவளது பிடிவாதத்தைக் கரைத்து அவளைக் காதலிக்க வைக்கப் போராடிக்கொண்டிருக்கிறான் ஆதித்யா. அவன் மனம் புரியாமல் இருக்கிறாள் வாசுகி.
பிருத்வியின் வீட்டில் பெரியவர்கள் கூடியிருந்தனர். மேகன், பார்வதி, ராஜேஸ்வரி, மௌலி, ரவி, செல்வராணி ஆகியோர் கூடத்தில் அமர்ந்து, தங்களுக்கு எதிரே இருந்த ஜோசியரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வித்யூவிற்கும் பிரணவிக்கும் திருமணத் தேதி குறிக்க அவரை அழைத்திருந்தனர்.
அவரும் இருவரின் ஜாதகத்தைக் கணித்து முகூர்த்த தேதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மௌலி முகத்தைத் தூக்கி வைத்திருந்தார். மகனை எதிலும் சேர்த்துக்கொள்ளாத ராஜேஸ்வரியின் மீதும், மகள் பிரணவியின் மீதும் அவருக்குக் கோபம். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.
வித்யூவிற்கு இதில் பெரிய ஆர்வமில்லை.
அவனுக்கு எப்படியாவது ஆர்யா தனக்குக் கீழ் வரவேண்டும், தனது காலடியிலேயே கிடக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். இன்று பிருத்வி அவளை அணைத்துக்கொண்டு போனது வித்யூவை எரியச் செய்தது. தன்னிலை இழந்திருந்தால் நிச்சயம் பிருத்வியைத் தள்ளிவிட்டு ஆர்யாவைத் தன்னோடு நிறுத்தியிருப்பான்.
ஆனாலும் சொத்து வேண்டும் என்பதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான். அவனது நினைவெல்லாம் ஆர்யாவைப் பற்றியே இருந்தது. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த பிரணவியோ அவனைக் காதலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரணவிக்குச் சிறுவயதிலிருந்தே வித்யூவைப் பிடிக்கும். பருவம் வந்த நொடியிலிருந்து அது காதலாக மாறியது. அவள் வித்யூவைக் காதலிப்பது குடும்பம் முழுவதற்கும் தெரிந்ததால், அவனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் வித்யூ அவளை அத்தை மகளாகத்தான் பார்க்கிறான். அவள் மீது துளியும் காதல் இல்லை. அவனது விருப்பத்தைச் சொன்னால் சொத்து பறிபோய்விடும் என்பதால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து அமைதியாக இருக்கிறான்.
பிரணவியின் குணம் - அவளே எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்; அவளைத்தான் அனைவரும் கொண்டாட வேண்டும். அவள் ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் அதை அழித்து விடுவாளே தவிர, இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கும் மனமில்லை. சிறுவயதிலேயே பிருத்வியை அனைவரும் கொண்டாடியதால் அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போனது.
ராஜேஸ்வரியும் மௌலியும் மூத்த பிள்ளையான பிருத்வி மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தனர். அவனை முற்றிலுமாக வெறுக்க வைக்கச் செல்வராணியும் பிரணவியும் போட்ட திட்டத்தால், இன்று குடும்பமே பிருத்வியை வெறுக்கிறது.
ராஜேஸ்வரி தன் மகனை வெறுக்கக் காரணம் பிரணவிதான் என்று தெரியாமல், அவள் மீது கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கிறார். உண்மை தெரிந்தால் அவர் என்னாவாரோ?
ஜோசியர் அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுத்தார்.
"எல்லாருக்கும் அந்தத் தேதி ஓகே தானே? பிரணவி, உனக்கு ஓகேவாடா?"
"எனக்கு ஓகேதான்மா! மாமா உனக்கு?" என வித்யூவிடம் கேட்டாள். அவனோ யோசனையில் இருந்ததால் பதிலளிக்கவில்லை. இதனால் அவள் முகம் வாடியது.
மருமகளின் வாடிய முகத்தைக் கண்ட மேகன், மகனை இடித்து, "என்ன யோசனையில இருக்கே? மருமக உன்கிட்டதான் கேட்கிறா, என்னன்னு கேளு" என்றார்.
"ஆங்! என்ன பிரணவி?"
அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, "உனக்கு இந்த டேட் ஓகேவான்னு கேட்டேன்" என்றாள்.
"எனக்கு எந்தத் தேதியா இருந்தாலும் ஓகேதான். ஏன், இப்போ தாலி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்" என்று அவன் விளையாட்டாகச் சொல்ல, அவன் தன்னை அந்த அளவிற்கு காதலிப்பதாக எண்ணி அவள் வெட்கப்பட்டாள்.
"மாப்பிள்ளைக்கு அவசரம் போல!" எனச் செல்வராணி கேலி செய்ய, அவன் சிரித்து மழுப்பினான். ஆனால் உள்ளுக்குள் இப்படி நடிக்க வேண்டியிருக்கிறதே என்று கடுப்பாக இருந்தது.
"செல்வராணி! ருத்விக் வந்துடுவான் தானே? மேரேஜ் லீவ் கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லு! ஒரு வாரம் முன்னாடியே வரச் சொல்லு" என்ற மேகன், மௌலியின் முகத்தைப் பார்க்க, அது கடுகடுவென இருந்தது.
"உங்களுக்கு என்ன இப்போ? ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கீங்க?" என ராஜேஸ்வரி கேட்க, "ஏன் உனக்குத் தெரியாதா? இல்ல நான் வாயால சொல்லணும்னு நினைக்கிறியா? அதான் எல்லாரும் பேசி முடிச்சுத் தேதியும் குறிச்சுட்டீங்க, இதுல நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறே?"
"நீங்க சொல்லணும்னு எதிர்பார்க்கலை. அட்லீஸ்ட் முகத்தைச் சிரிச்ச மாதிரி வச்சுக்க வேண்டியதுதானே! சொந்த மகளோட கல்யாணப் பேச்சு நடக்கும்போது இப்படி முகத்தைத் தூக்கி வச்சிருப்பீங்களா?"
"இங்கே குடும்பமா இருக்கிறது மேகன் மட்டும்தான். ரவி பையன் வெளிநாட்டுல இருக்கான் சரி, என் பிள்ளை இங்கேதானே இருக்கான்? வீட்டு மூத்த வாரிசான அவனை ஏன் கூப்பிட்டுப் பேசலை? அவன்கிட்ட ஏன் ஐடியா கேட்கலை? அவன் என்ன பண்ணிட்டான்னு எல்லாரும் வெறுக்கிறீங்க?"
"ஏன், அவன் பண்ணது மறந்து போச்சா உங்களுக்கு? அவமானப்பட்டது நான்தானே தவிர நீங்க இல்லை! மொத்தக் குடும்பத்தோட என் அண்ணன் குடும்பமும் அவமானப்பட்டுச்சு. அதுக்குக் காரணம் அவன். அவனை எப்பவோ குடும்பத்துல இருந்து விலக்கி வச்சாச்சு. அவன் இனி நம்ம குடும்பம் இல்லை. எனக்கு ஒரே பொண்ணு பிரணவி மட்டும்தான்" என்றார் ராஜேஸ்வரி. மௌலி கோபமாக எழுந்து சென்றுவிட, பிரணவி தன் தந்தையை முறைத்துப் பார்த்தாள்.
பிருத்வி ஏற்பாடு செய்த விருந்தை உண்டு, தொழிலாளர்கள் அவர்களை ஆசீர்வதித்து விட்டு வேலையைத் தொடங்கினார்கள். வேலை நேரம் முடிந்ததைக் குறிக்கும் அலாரம் ஒலிக்க, ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர். அவர்கள் கிளம்புவதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்யா.
"இங்கே என்ன சிஸ்டர் பண்றீங்க?" என அவளருகே வந்தான் ஆதித்யா.
"சும்மா வேடிக்கை பார்த்தேன் அண்ணா!" என்றவள், வாசுகி அமர்ந்திருந்த அறையை ஒருமுறை பார்த்தாள். வாசுகி மெஷினைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்துகொண்டிருந்தாள்.
"நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா அண்ணா? நீங்க உண்மையாவே வாசுகியை லவ் பண்றீங்களா?" என ஆர்யா கேட்டதும் அவனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது.
"என்ன சிஸ்டர் இப்படி கேட்கறீங்க? லவ்னாலே உண்மைதானே! பொய்யா யாராவது பண்ணுவாங்களா?"
"பண்ணுவாங்க! டைம் பாஸுக்காகவும் சுகத்துக்காகவும் பண்ணுவாங்க. அதுவும் இந்தப் பணக்காரங்களை நம்பவே முடியாது. ப்ளீஸ்... வாசுகியை விட்டுடுங்க! அவளைக் காதலிக்காதீங்க. உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி வீட்ல பார்க்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அவளை ஏமாத்தாதீங்க" என அவள் பேசிக்கொண்டே போக, ஆதித்யா உறைந்து போய் நின்றான்.
"ஏய்!" எனக் கர்ஜித்தான் பிருத்வி. அந்தச் சத்தத்தில் இருவரும் பதறித் திரும்பினார்கள்.
"எல்லா பணக்காரர்களும் அப்படி இல்லை! முக்கியமா என் பிரண்ட் அப்படி இல்லை. உனக்கு என்ன தெரியும் அவனைப் பத்தி?" என எகிறிய பிருத்வியை, "பிருத்வி வேணாம்டா" என்று தடுத்தான் ஆதித்யா.
"சும்மா இருடா நீ! அவ பேசிட்டு இருக்கா, நீ அமைதியா இருக்கே" என்று நண்பனைக் கடிந்து கொண்டவன், ஆர்யாவைப் பார்த்து, "நீ ஏமாந்துட்டே... உன்னை ஒருத்தன் ஏமாத்திட்டான் என்பதற்காக உலகத்துல இருக்கிற எல்லாப் பணக்காரங்களும் காதலிச்சு ஏமாத்துறவங்களா இருப்பாங்களா?"
"இவன் வாசுகியை எத்தனை வருஷமா லவ் பண்றான் தெரியுமா? கடைசி வரை அவளைக் கைவிடாமல் பார்த்துப்பான். உண்மையான லவ் எதுன்னு தெரியாம, ஆசை வார்த்தை பேசினதும் மயங்கி ஏமாந்துட்டு, இப்போ மொத்தப் பணக்காரங்களையும் தப்பாப் பேசறே!"
"உண்மையான லவ்வை நீ இன்னும் பார்க்கலை. என் பிரண்டோட லவ் உண்மையானது. நிச்சயமா வாசுகியைக் கல்யாணம் பண்ணி அவன் சந்தோஷமா வாழ்வான். நீ பேசின வார்த்தை அவனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் தெரியுமா? அதுக்காக அவன்கிட்ட மன்னிப்பு கேள் ஆர்யா" என்றான் ஆதித்யா.
உடனே அவளும் கைகூப்பி, "என்னை மன்னிச்சிடுங்க அண்ணா!" என்று கூறிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் செல்வதையே வெறித்துப் பார்த்தபடி நின்றான் பிருத்வி.