• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர் நிலவே - 3

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் -3

அறையிலிருந்து வாடிய முகத்துடன் வந்தவனை பார்த்த பாரதி,” என்னாச்சு அருண்..? ஏன் உன்னோட முகம் வாடியிருக்கு….? உடம்பு ஏதாவது சரியில்லையா…?” என அவனது நெற்றியை தொட வர சட்டென்று நகர்ந்தவன் ,” அதெல்லாம் ஒண்ணுமில்லை பாரதி….மேடம் கொஞ்சம் டென்ஷனா பேசிட்டாங்க…அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு…” என நெஞ்சை நீவியபடி சோகமான முகத்துடன் கூறினான்.

கடுப்பானது பாரதிக்கு.

“ஃபீல் பண்ணுறியா அருண்…? கொஞ்சம் இல்ல நிறையவே திமிரு தான் அவங்களுக்கு…” என்றாள்.

“ சே…சே…யாரு‌ ஃபீல் பண்ணுனா…? சும்மானாச்சுக்கும் ‌முகத்தை சோகமா வச்சிக்கிட்டேன் அவ்வளவு தான். நானாவது ஃபீல் பண்ணுறதாவது…! என்னோட டார்லிங்குக்கு என்னைய திட்டறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு டி மக்கு பாரதி….” என அவளது தலையில் நங்கென்று கொட்டினான்.

“ அ..ஆ… ஏன்டா எருமை என்னைய கொட்டுற…? ரொம்ப பீத்திக்காத…எவ்வளவு திட்டினாலும் நாய் மாதிரி பின்னாடியே சுத்து…திருந்தவே மாட்ட நீ…” என்றாள் எரிச்சலுடன்.

அவனோ ஒரு விதமான பரவச நிலையில் கண்களை மூடிக் கொண்டு, “அதெல்லாம் ஒரு ஃபீல் டி பாரதி…உனக்கெல்லாம் அது சொன்னா புரியாது…என்னோட தேவதை அவ. என்ன திட்டுனாலும் நான் துடைச்சி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்….டி பெட்ரோமாக்ஸ் லைட்டு…” என்றவன் நட்புடன் அவளது தோளினைச் சுற்றி கைகளை போட்டுக் கொண்டு அவளது இரு தோள்களையும் பிடித்து உலுக்கினான்.

“எருமை மாடே…கையை எடு.” என அவனது கையை தட்டி விட்டுவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

அவளின் பின்னாடு சென்றவன்‌, “உனக்கு ஏன் அவங்களை பார்த்தா ரொம்ப காண்டாகுது …?” என்றபடி அவளை சுழல் நாற்காலியில் சுற்றி விட்டுக் கொண்டே கேட்டான்.

“ அய்யோ…. சாமி…! ஆளை விடு. அவங்களை நான்‌ ஒண்ணும் சொல்லல. ஆனா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்…” என கூறிவிட்டு நிறுத்தினாள்.

அருண்மொழியோ அவள் கூறுவதையெல்லாம் சட்டை செய்யாமல் , “ என்ன அட்வைஸ் பண்ணப் போறீங்க பாரதி மேடம்…?” எனக் கூறி கொண்டே அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை மீண்டும் ஒரு முறை சுற்றி விட்டான்.

அவனது தோளில் படீர் படீரென‌ அடித்தவள், “ ஏன்‌டா…கொஞ்சம் கூட சீரியஸாவே இருக்க மாட்டியா.‌.? அவங்களை பாத்து எனக்கென்ன காண்டு? பீ சீரியஸ் அருண். தேவையில்லாம அவங்க பின்னாடி சுத்தி உன்னோட லைப்ஃபை ஸ்பாயில் பண்ணிக்காத. அவங்களோட ஸ்டேட்ஸ் வேற…உன்னோட…” என‌ ஆரம்பித்தவளின் வாயை மூடியவன் , “ தேவையில்லாம பேசாத பாரதி. ஐ‌ யம் நாட்‌ எ கிட் . என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ கவலைப்படாதே..” எனக் கூறி சுழல் நாற்காலியை இன்னும் வேகமாக சுற்றி விட்டுவிட்டு வெளியே சென்றான் அருண்மொழி .

“ஆ... அய்யோ ...! தள்ளி விட்டுட்டு போயிடதா டா..." என்றவள் காலை ஊன்றி நாற்காலி கீழே சாய்ந்து விடாமல் பார்த்துக் கொண்டாள்.

அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டே," பட்டா தான் டா தெரியும் உனக்கு…” என்று முணுமுணுத்தாள்.

தனது அறையிலிருந்து இவை அனைத்தையும் சலமற்ற‌ பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாட்கள் அழகாக சென்று கொண்டிருந்தது.

தனது கேபினில் அமர்ந்து கணினியில் முகப்புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அருண்மொழி.

அவன் பின்னே இருகைகளையும் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் நந்தினி ‌.

மிகவும் சுவாரஸ்யமாக ரீல்ஸ் வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அருகிலிருந்த அமுதன் அவனை எச்சரிக்கை செய்ய மெல்லிய குரலில் அழைக்க அருண்மொழியோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விசிலடித்தபடி சுழல் நாற்காலியில் சுழன்றபடியே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ பாத்து முடிச்சாச்சா…?” என அழுத்தமான குரல் கேட்கவும் பதறி திரும்பியவன் சுழல் நாற்காலியில் தடுமாறி கீழே விழப் போனான்.

அருகில் அமர்ந்திருந்த அமுதன் கைக் கொடுக்கவே அதை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

“மிஸ்டர் இது என்னோட ஆஃபிஸ். உங்கப்பா கட்டுனது இல்லை…உங்க இஷ்டத்துக்கு ஆட்டம் போட. நீங்கயெல்லாம் எதுக்கு ஆஃபிஸ் வர்றீங்க..? ஃபேஸ்புக் பாத்துட்டு டைம்‌ பாஸ் பண்ணவா? அதுக்கு தான் உங்களுக்கு மாசா மாசம்‌ சம்பளம் தர்றேனா? நீங்க வர்றது அரட்டை அடிச்சிட்டு போகவும் சேரை தேய்ச்சிட்டு போகவும் இல்ல. வேலை செய்ய தான். வேலையை தவிர மத்ததெல்லாம் நல்லாவே பண்ணுறீங்க மிஸ்டர். திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். இனி இது மாதிரி நடந்துக்காதீங்க. காட் இட்…” என எரிச்சலுடன் மொழிந்தாள்.

“ சாரி…மேம்…”

“ உங்க சாரியை‌ தூக்கி குப்பையில் போடுங்க‌ மிஸ்டர்…” என்றவள் விடுவிடுவென தனதறைக்குச் சென்றாள்‌.

அலுவலகமே அவனை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கழுத்தை தடவியபடி,” அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா. வேலையை பாருங்க…. வேலையைப் ‌பாருங்க…” என சிரித்தபடி தனது இருக்கையில் அமர்ந்தான்.

“திருந்தாத கேஸூ…”என தலையில் அடித்துக் கொண்டாள்‌ பாரதி .

அருண்மொழிக்கு நாளுக்கு நாள் நந்தினியின் மீது காதலும் மோகமும் அதிகரித்து கொண்டே போனது.

மீண்டும் மீண்டும் அவளிடம் தன்னுடைய மனதை மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான்.

அவளோ அதையெல்லாம் சிறிதும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.

அவனிடம் மட்டும் அதிக அலட்சியமாக நடந்து கொண்டாள்.

“டேய் அருண்…! வேலை‌ முடிஞ்சிருச்சா…?” என்றபடி அவனருகே வந்தான் அமுதன்.

“ உனக்கு என்ன வேணும்…? அதைச் சொல்லு முதல்ல…” என கணினியில் பார்வையை பதித்தபடியே கேட்டான்.

“ என் ஆளை பாக்க போகணும். அவ‌கிட்ட இன்னைக்காவது என்னோட லவ்வை சொல்லணும்‌ டா. தனியா போக கொஞ்சம் பயமா இருக்கு. நீயும் கொஞ்சம் வந்தன்னா….”

“ஏன் வாங்குற அடியில் பாதி நானும் வாங்கறதுக்கா…?” என்றான் ‌‌நக்கலுடன்.

“ டேய்…! ப்ளீஸ் டா…”

“அடேய்..! நாமெல்லாம் ஐ.டி புரெபஷனல் டா…போயும்‌ போயும் லேடீஸ் காலேஜ் வாசல்ல போய்‌ கேட் கீப்பர் மாதிரி நிக்கச் சொல்ற..? அவமானமா இருக்குது டா…” என்றான்.

“ ஏன்…சார்‌ மட்டும் ஞாயிற்று கிழமை ஆனா நந்தினி மேடம் வீட்டு வாசல்ல போய் வாட்ச்மேனுக்கு கம்பெனி கொடுக்குறீங்களே…! அது அவமானமா இல்லையா..? இல்ல அவங்க ப்யூட்டி பார்லர் போகும் போது பாடிகார்டோட வேலை காலி பண்ணி அதை நீங்க பண்ணிட்டு இருக்கீங்களே…? அது அவமானமா இல்லையா..? இதையெல்லாம் விடவா லேடீஸ் காலேஜ்ல போய்‌ நிக்கறது அவமானமா இருக்குது…? அப்ப சாருக்கு நாமெல்லாம் ஐ டி புரெபஷனல்ங்கறது மறந்து போயிடும். டீனேஜ் பையன்‌ மாதிரி வாய்ல வாட்டர் பால்ஸ் ஓட விட்டுட்டு அவங்க பின்னாடியே போவீங்க…”என‌ மூச்சு பிடிக்க பேசிக்கொண்டே போக அதில் கடுப்பான அருண்மொழி, “போதும்…மூடு…இப்ப என்ன‌ உங்கூட வரணும் …அதானே..? வந்து தொலையுறேன்…” என்றான் கடுப்புடன்.

“வந்தா மட்டும் போதாது…என் ‌சார்பில நீதான் அவ கிட்ட பேசணும்..” என அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான்.

“ டேய்…! நீதான் டா லவ் பண்ணுற..? என்னைய ஏன்டா கோர்த்து விடுற…?” என்றான் பதட்டத்துடன்.

“இல்ல மச்சி…நீ பேசினா அவ எனக்கு ஓகே சொல்லிடுவா…” என்றான் அபத்தமாக.

“ டேய்…!டேய்…! அதெப்படி டா…நான் ‌பேசினா உனக்கு ஓகே சொல்லுவா…உன்‌ ஆளு…?” என்றான்‌‌ கேள்வியாக.

“அதெல்லாம் அப்படிதான்…நீ வா நம்ம‌ போகலாம்…” எனக் கூறி அவனை இழுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பறந்தான் ‌அமுதன்.

அந்த மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினான் அமுதன்.

ஹெல்மெட்டை கழட்டிவிட்டு சுற்றிலும் பார்வையை சுழல விட்டான்.

“ உங்கூட பழகின பாவத்துக்கு என்னைய எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா…? நானெல்லாம் ஜென்டில்மேனாக்கும். இப்படி ரோட் சைட் ரோமியோ மாதிரி நிக்க வச்சிட்ட..” என சலித்துக் கொண்டான் அருண்மொழி.

ஆங்காங்கே நின்றிருந்த இளம்பெண்களின் பார்வை அருணை மொய்த்தது.

ஆண்மையின் இலக்கணத்துடன், அலையலையான கேசத்தை கோதியவாறு சாதாரணமாக நின்றிருந்தவனை பார்வையினாலேயே கவளவாடிக் கொண்டிருந்தார்கள் கன்னிப் பெண்கள்.
 
Top Bottom