தீஞ்சுவை மலர் 12
மலர் அந்த நடன வகுப்பில் சேர்ந்து நன்றாகவே ஆட ஆரம்பித்து விட்டாள் .இப்படி சொல்வதை விடவும் வேறு மாதிரி கூட சொல்லலாம். அதாவது நல்ல நடனப் பயிற்சி
பெற்ற மங்கையாகவே மாறி இருந்தாள் மலர்.
இப்போது அவள் நடன வகுப்பில் இருப்பவர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய மாலில் இருக்கும் ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் டில் தான் அமர்ந்திருக்கிறார்கள் கும்பலாக. நடன வகுப்பில் இருப்பவர்கள் எல்லோரும் அநேகமாக ஜென் சி தான் என்றால் கேட்கவும் வேண்டுமா? அவர்களின் ஆட்டமும் பாட்டமும் சொல்லவா வேண்டும்? அனைவரும் கண்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தவர்கள் திடீர் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள். ஆரம்பித்து வைத்தது ஒரு ஏழு வயது குட்டி தான். அவள் ஆடவும் அங்கே இருந்த மற்றவர்கள் எவ்ளோ க்யூட் என்று பார்க்க ஆரம்பித்தார்கள் .பிறகு தான் மற்ற பெரியவர்களும் இணைந்துக் கொண்டார்கள் . அவர்களின் அந்த ஸ்பெஷல் டான்ஸ் மலருக்காக தான். ரொம்ப நேரம் எல்லாம் இல்லை. அரி நிமிடம் இருந்திருக்கலாம். அவர்களின் வரவேற்பில் உள்ளம் குளித்துப் போனாள் மலர்.
ஏன்? அவள் என்ன செய்தாள் ? இந்த விருந்தே அவளுக்காகத்தான் .
ஒரு முக்கியமான நடனப் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது அதில் பங்கேற்க வேண்டிய பெண் கீழே விழுந்து காலில் அடிபட்டு விட்டதால் அதற்கு பதில் அந்த நேரத்தில் உதவி செய்தது மலர்தான் . நிறைய பேர் பயிற்சி பெற்றவர்கள் தான் .இருந்தாலும் அந்த நேரத்தில் அனைவருக்குமே ஒரு வித படபடப்பு வந்து விட்டது. அப்போது தான் நான் செய்கிறேன் என்று இறுதி நேரத்தில் வந்து உதவி செய்தவள் மலர்தான்.
இதில் என்ன ஒரு பெரிய கஷ்டம் என்று யாரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அந்த பெண் ஹை ஸ்பீட் பர்பார்மர். அதற்கு ஏற்ற பாடல் வேகத்திற்கு தக்க நடனம்., அந்த மணித்துளிகளுக்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும். அதுவும் இல்லாமல் அது கயிற்றின் மீது உச்சியில் ஏறி பிறகு அங்கிருந்து தலை கீழாக தொங்கும் படி ஒரு இடம் வரும். அது யாரும் செய்ய முடியாது. மலர் யோகா பயிற்சி ஆசிரியை என்பதால் அவளுக்கு எந்த பயமும் இல்லை. உடலும் அவள் சொன்ன இடத்தில சொன்ன படிக்கு வளைந்துக் கொடுத்தது.
அந்த பெண் அளவுக்கு யாருக்கும் அத்தனை ஸ்டைல் வரவில்லை என்பதுக் கூட மற்றவர்கள் தயங்க ஒரு முக்கியமான காரணம். அத்தனையும் சேர்த்து அழகாக குறித்த நேரத்தில் நடனமாடி அனைவரின் வரவேற்பையும் கைத்தட்டல்களையும் வாங்கிக் கொடுத்தது மலர்தான். முதல் பரிசு கிடைத்தது இவளால் தான். இதற்கு முன்பும் ஒரு முறை மலர் இதேபோல நடனமாடி இருக்கிறாள். அது நம் நாட்டுப்புற நடனத்தை மைக்கேல் ஜாக்சன் போல கலந்து ஆடிய ஆட்டம். எல்லாரும் பரதம் கலக்கலாம் என்று சொன்ன போது மாற்றி யோசி என்று இவள்தான் அந்த ஐடியா கொடுத்தது. மைக்கேல் ஜாக்சன் நடனம் தாரை தப்படையுடன். யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. செய்து காட்டினாள் .அதுதான் இவர்களுக்கு பரிசு கிடைக்க முக்கிய காரணம் . அப்போதும் இவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த போட்டி தான் இவர்களின் நடன வகுப்பை பெ ருமளவில் பலருக்கும் கொண்டு போய் சேர்த்தது.
அப்போதே மலர் நினைத்திருந்தால் அவளுக்கு வந்திருந்த சினிமா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள் . மலர் உடன் இருந்த ஆண்களும் பெண்களும் நடனமாடி அவளுக்கு மலர் கொத்தை கையில் கொடுத்து வரவேற்றார்கள் .
அந்த நடனப் பயிற்சியாளருக்கும் அத்தனை சந்தோஷம்.
" ரொம்ப தேங்க்ஸ் மலர் உங்களால தான் இவ்ளோ பெரிய வெற்றி நம்ம எல்லாருக்கும் கிடைச்சிருக்கு" என்று மனதார நன்றி கூறினார்.
லேசான தோள் அணைப்புடன் விலகியவளுக்கு அவரின் பாராட்டு சற்று கூச்சமாகத் தான் இருந்தது.
"எனக்கு எதுக்கு இவ்வளவு பாராட்டலாம்? எல்லாமே நீங்க சொல்லிக் கொடுத்தது தான் "என்று தன்னடக்கத்தோடு மலர் கூறினாள் . பிறகு அனைவரும் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து உற்சாகமான பேச்சுக்கள் விதவிதமான அலங்காரமான உணவுகள் என்று அந்த இடமே களை கட்டியது. அப்போது அருகில் அமர்ந்தவர்களில் ஒரு சின்னப் பெண் குழந்தை வந்து மலரிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டாள்.
" உனக்கு என்னை எப்படி தெரியும்?" என்று அந்த குழந்தையை எடுத்து மடியில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
" நான் உங்க ப்ரோகிராம் பார்த்தேன் டிவில" என்று அந்த மழலை குரலில் அவளை மயக்கியது அந்த குட்டி பூச்செண்டு . பின்னோடு வந்து நின்றது அவள் அன்னை. குறுகுறு என்று அவள் மலரை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு தலையை நிமிர்த்தி மலர் அவரை பார்க்கவும் அவளுக்கு சற்று அதிர்ச்சி தான் ஏனெனில் அந்த பெண் குழந்தையின் அன்னை செல்வியின் நாத்தனார் .
இதற்கு மேல் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் அமைதியாக குழந்தையை மடியில் இருந்து இறக்கி விட்டு விட்டாள் மலர்.
"மலர் தானே ? மலர் எப்படி இருக்கீங்க? என்று அவர் கேட்கவும் இவள் என்று அமைதியாக தலையசைத்தாள் .
மலர் கதிர் சார்ந்த எந்த உறவுகளும் வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருந்தாள் .
முன்பு எல்லாம் கதிரையோ அல்லது அவனின் உறவுகளையோ ஏன் தன் உறவுகளைக் கூட எங்காவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற படபடப்பு இருந்துக் கொண்டே இருக்கும்.
"eன்ன மலர்? புருஷனை அறுத்து விட்டுட்டியாமே " கேவலமான கேள்விகளுக்குத் தான் அந்த பயம். இப்போதெல்லாம் அந்த பயம் வருவதில்லை. கதிர் பார்த்துக் கூட முதலில் சில நாட்களுக்கு மட்டும்தான் அவளுக்கு லேசான பயம் இருந்தது. அது அவனுக்காக இல்லை. அவன் முரடன் கோபக்காரன், ஆத்திரக்காரன் என்பதால் இருந்த பயம்தான். இப்போது நான் எதற்கு யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை வந்து விட்டது. அதற்க்கு முழுக்க காரணமும் ஆரிவ் தான் என்றால் மிகையல்ல.
குழந்தை பெயர் அனு. அனுவின் அம்மாவுக்கும் அதற்கு மேல் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று எதுவும் புரியவில்லை. ஏனெனில் செல்வி இவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் மலரை பற்றி கூறிய குறைகள் தான் அதிகம். அதுவும் இல்லாமல் கதிருக்கும் மலருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதும் இவர்களுக்கு நன்றாகவேத் தெரியும் அமைதியாக குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் இந்த சந்திப்பு அதோடு நிற்கவில்லை . அப்போதே அனு அந்த டான்ஸ் கிளப்பில் தானும் சேர வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லவும் அப்போதே அந்த பயிற்சியாளரிடம் சென்று பேசி குழந்தையை சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுவிட்டார் அனுவின் அம்மா.
வீட்டுக்கு வந்ததும் அவர் தன்னுடைய கணவனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது,
" இங்க பாரு. இது அவங்க குடும்ப பிரச்சினை. நமக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம்ம பொண்ணு அங்க டான்ஸ் கத்துக்க போறா. அதுக்கு மேல வேற எதுவும் இல்லை. அதுவும் இல்லாம அங்க ஜஸ்ட் ஒரு டான்ஸ் கத்துக்க வர பொண்ணு தான். அவங்க ஓனரோ இன்சார்ஜ் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பத்தி நமக்கு கவலை இல்லை. நம்ம பிள்ளைக்கு எந்த தொந்தரவும் வரக் கூடாது. அப்படி வந்தா வேற இடம் பார்க்க வேண்டியது தான் . எல்லாத்துக்கும் மேல வாங்கிட்டா போய் அவங்க சொந்த விஷயம் எதுவும் பேசாத. "
கணவர் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. பின்வந்த நாளில் அனுவின் அன்னை குழந்தையை கூட்டிக் கொண்டு செல்ல கொண்டு வந்து விட என்று வரும்போது எல்லாம் மலரை சந்திக்க நேர்ந்தது. அப்படி சந்திக்க நேர்ந்த போது முதலில் ஆரம்பித்த சிறு புன்னகை பின்னாலே நல்ல நட்பாகவே மாறியது. அதே சமயம் இருவரும் சொந்த விஷயம் பேசுவதை கவனமாக தவிர்த்துக் கொண்டார்கள். சொந்தம் என்பது இல்லாமல் அவர்களுக்குள் நல்ல நட்புதான் இருந்தது.
மலர் செல்வி சொன்ன மாதிரி இல்லைங்க. செல்வி அண்ணி ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்கன்னு தோணுது என்று பாராட்டு பாத்திரம் கொடுத்த மனைவியைப் பார்த்து அனுவின் தந்தைக்கு சிரிப்பு தான் வந்தது. கணவனிடம் சொன்னது மட்டுமில்லாமல் உடன் பிறந்தவனிடமும் மலர் பற்றிய பாராட்டு பாத்திரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் அனுவின் அன்னை. இதனால் செல்வியின் கணவருக்குமே கூட மலர் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வர ஆரம்பித்தது. அதுவும் இல்லாமல் சில நேரங்களில் தங்கையால் வர இயலாத போது அண்ணன் வந்து அழைத்துச் செல்ல அல்லது கூட்டி வந்துவிட என்று இப்போதெல்லாம் செல்வியின் கணவரை கூட மலர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெரிய விதத்தில் பேச்சு வார்த்தை எதுவும் இல்லை என்றாலும் சிறு புன்னகை இருந்து கொண்டு தான் இருக்கிறது . அவனும் அவனின் உறவுகளும் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும்
நேரம், காலம், மனிதர்கள் என்று ஏதாவது ஒரு விதத்தில் அவன் மலர் வாழ்வின் வந்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் மலர் அவன் வாழ்வில் வரவிரும்பவும் இல்லை. இப்போது வரை அவளாகவே அவன் வாழ்வில் வர முயற்சியும் செய்யவில்லை.
அனு கூட இப்போதெல்லாம் நடன வகுப்பு முடிந்து வீட்டுக்கு வரும்போது மலர் ஆன்ட்டி எனக்கு இப்படி சொல்லி கொடுத்தாங்க அப்படி சொல்லிக் கொடுத்தாங்க என்று சில நேரங்களில் சொல்லவும் இவர்கள் எல்லோரும் மனதிலும் மலரை பற்றிய ஒரு நல்ல எண்ணம் தான் உருவாகிக்கொண்டிருந்தது .
செல்வியின் மாமனார் மாமியார் திருமண நாளன்று சிறு விழா போல ஏற்பாடு செய்திருந்தால் செல்வியின் கணவர் அதற்கு இவர்கள் எல்லோரும் அங்கே சென்றபோது எதேச்சையாக கதிரைப் பற்றிய பேச்சும் மலரை பற்றிய பேச்சும் வந்தது. செல்வியின் நாத்தனார் " அண்ணி நீங்கதான் என்னவோ மலர பத்தி இப்படி தப்பு தப்பா பேசிகிட்டு இருக்கீங்க. ஆனா நம்ம மலர் தான் என் பொண்ணுக்கு டான்ஸ் கிளாஸ் எடுக்கிறா. என்னவோ மலரைப் பார்த்தா நல்ல விதமா தான் தெரியுது. அண்ணா நீயும் தப்பா எடுத்துக்காத. அண்ணி ஏதோ மலர பத்தி தப்பான எண்ணங்களை மனசுல வச்சுக்கிட்டு ஏதோ பேசுறாங்க. நாம இன்னொரு குடும்பத்துல இருக்குற பொண்ண பத்தி தப்பா பேசறது நம்ம குடும்பத்துக்கும் நல்லதில்லை. நமக்கும் வீட்டுல பொம்பளை பிள்ளை வச்சிருக்கோம். பார்த்து நடந்துக்கோங்க அண்ணா என்று அண்ணனுக்கும் சேர்த்து தான் சொல்லிவிட்டு வந்தார்.
"இது என்ன போகிற போக்குல உங்க தங்கச்சி இப்படி கொளுத்தி போட்டுட்டு போறா. எனக்கு எங்க அண்ணியைப் பத்தி தெரியுமா? இல்ல உங்க தங்கச்சிக்குத் தெரியுமா? வெற்றி வீட்டை விட்டு போனதுக்கு காரணமே அவதாங்க" என்று இரவில் கணவனிடம் சண்டையிட இதழில் இதழ் பதித்து வார்த்தைகளுக்கு அடக்கம் செய்து விட்டான்.
செல்வி அவள் கணவன், வெற்றி ஜோடி, என் மலரை பெற்றவர்கள் எல்லாருக்குமே எந்த வயதானலும் அவரவர்களுக்கு அவர்களின் துணை தேவைதான். மலர் மட்டும் சந்யாச வாழ்க்கை வாழ வேண்டும் . சூப்பர்தான்.
இங்கே ஆரிவ் யமுனா பழக்கம் அவ்வப்போது நேர்ந்து கொண்டுதான் இருந்தது.
ஹை! நீங்க டாக்டரா?" அவள் தான் முதலில் பேசினாள்.
"ம் ஆமா!"
"எந்த ஹாஸ்பிடல் ?"
அவளின் கேள்விக்கு அவள் முகத்தை ரசித்துக் கொண்டே மருத்துவமனை அவன் கிளினிக் பற்றி எல்லாம் சொன்னான் .
"உங்க பேரு நீங்க வேலை பாக்கறீங்களா? 'கண்களில் ரசனையுடன் பதில் கேள்வி கேட்டவனுக்கு எப்படி பதில் செய்வது என்றது தெரியாமல் "ம்" என்று மட்டும் பதில் சொன்னாள் .
"நீங்க இன்னும் உங்க பேரை சொல்லவே இல்லை. "உதட்டின் ஓரத்தில் குறும்பு. நிச்சயம் அந்த சிரிப்பில் கவிழ்ந்து விடுவோம் பயந்தவள் அமைதியாக தலை குனிந்துக் கொண்டு பதில் சொன்னாள் .
"யமுனா !"
"யமுனா ஆரிவ் "சொல்லிப் பார்த்தான்.
"என்ன?"
அவன் சொன்னதைக் கேட்டவள் பதறியடித்துக் கொண்டு அவனிடம் என்ன சொன்னீங்க என்றாள் .
"இல்ல நான் ஆரிவ். என் பேரு .."
"ஓ ! நான் கிளம்பறேன் " அமைதியாக சென்றவளைப் பார்த்து தன்னுடைய பின் தலையில் லேசாக தட்டிக் கொண்டான்.
பிறகு வேறு ஒரு நாள்.
"என்னை நீங்க கொஞ்ச நாளைக்கு பாக்க கூடாது "
"ஏன் நான் உங்களை ஏன் பாக்க கூடாது " என்றவளிடம்
"எதுக்கு இவ்ளோ படபப்பு?" என்றுக் கேட்டவன் அதை அவன் ரசித்தான் .
"பாக்க கூடாது இல்ல. பாக்க முடியாது." இப்போது வார்த்தைகளை மாற்றி போட்டான். தெளிவாக வார்த்தைகளை கையாள்பவன் அவளிடம் ஏதேதோ மாற்றி மாற்றி பேச ஆரம்பித்தான். தெரிந்தே தான் வார்த்தைகளை நீட்டிக் கொண்டிருந்தான் .
"எங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. முட்டில ஆபரேஷன் பண்ணனும். அதுக்குத்தான் நான்பெங்களூர் போறேன் "
"ஓ ! எப்ப வருவீங்க?"
"இப்படி மை போட்ட கண்ணால என்னை முழுங்காதடி . "மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான் ரசனையாக
"தெரியலை. எப்படியும் மூணு மாசமாவது ஆகும்."
"மூணு மாசமா?" அவள் கண்களில் மாற்றத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.
"ஆமா கொஞ்ச நாள் அவங்க கூட இருகலான்னு பாக்கறேன்."
"வேலை?"
"'எங்க ஹாஸ்பிடல் பிரான்ச் அங்க இருக்கு. அங்க மாத்திப்பேன் "
"சரி. ஆல் தி பெஸ்ட் "
கை கொடுப்பாள் என்று எதிர்பார்த்தவன் ஏமாந்து போனான்.
அதற்கு எல்லாம் கவலைப் படுபவனா நம் ஆரிவ் . அவன் கை நீட்டினான்.
பதிலுக்கு அவள் கைகொடுத்த போது அவள் கைகளை விடத்தான் இவனுக்கு மனமே இல்லை.
"ப்ளீஸ் சீக்கிரம் வந்துருங்க " அவன் நெஞ்சில் சாய்ந்து சொல்ல வேண்டும் போல இருந்த உணர்வை அவள் தான் கடினமாய் கட்டுப் படுத்திக் கொண்டாள். கீழ் உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டு நின்றவளிடம், "ஏதாவது சொல்லனுமா?" என்றான்.
"ம் என்ன? "
"இல்ல ஏதாவது எங்கிட்ட சொல்லணுமான்னு கேட்டேன் "
"இல்ல எதுவும் இல்லை ."
"அப்ப ஏதாவது கொடுக்கணுமா?"
"என்ன என்ன கொடுக்கணும்?"
"இல்ல சும்மா தான்." மறைத்துக் கொண்ட புன்னகையுடன் கிளம்பி விட்டான்.
"சீ லூசு! அவரு கிட்ட போன் நம்பராவது வாங்கி இருந்திருக்கலாம்"
மனதிற்குள் திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் அவள்.
"இடது கண்ணாலே அகிம்சைகளை செய்தாய் வலதுக் கண்ணாலே வன்முறை செய்தாய். "இரவில் காதல் பாடல் கேட்டுக் கொண்டிருந்தவனை ஆச்சர்யமாக பார்த்தாள் மலர் .
அதே வரிகளை சீட்டியடித்தவன் , என்ன என்று புருவம் உயர்த்தினான்.
அவன் முகத்தின் அருகில் வந்தவள் லேசாக மூக்கு நுனி கிள்ளி காதல் வந்துச்சோ என்று சங்கர் மகாதேவனை நினைவு படுத்தினாள் .
"அது.. "
"அழகா வெக்கப் படறடா. போ போய் கடலை வரு "
"எங்க போன் நம்பர் வாங்கவே இல்லையே" குறைப்பட்டுக் கொண்டவன் .
மேலோட்டமாக நடந்த விஷயங்களையும் கூறினான்.
"அது சரி. அவ தான் சின்ன பொண்ணு. எப்படி கேக்கறதுன்னு யோசிச்சுருப்பா. உனக்கு என்னடா? சும்மா வெட்டி பந்தா காட்டின இல்ல. அப்படியே விட்டத்தை பார்த்துகிட்டு படு. இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசியவள் , "ஹவ் எ ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்று அவனை வெறுப்பேத்திவிட்டு ஓடினாள் தன் அறைக்கு.
தொடரும்...........