தங்களை நோக்கி வருபவனை இருவரும் உணர்ந்து கொண்டாலும் அவன் அருகே வரட்டுமென்று சாதாரணமாகவே அமர்ந்திருக்க, ஒரு நிமிடத்தில் தேவாவின் வலது பக்கம் வந்தவன் கத்தியை தேவாவின் வயிற்றை நோக்கி செலுத்திருக்க, அதனை ஆடவன் சுதாகரித்து கொண்டு கையை பிடித்து தடுத்திருந்தான்.
அதனை பயன்படுத்தி ஆடவன் எதிர்பாராத நேரம் அவனின் தோள்பட்டையை நோக்கி இன்னொரு கத்தி வந்திருக்க, இம்முறை பெண்ணவளோ அவனின் கைகளை தன் தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து தேவாவை காத்தாள்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தாங்கள் பிடித்திருந்தவனின் கையை திறுக்க, இரு ரவுடியின் கத்தியும் ஒரு நொடியில் தரையில் விழுந்து விட்டது.
அதன் பின் டைவ்யடித்த சம்யுக்தாவோ அவனின் மூஞ்சிலே காலால் எத்து விட, அவனோ வலியில் சுருண்டு விழுந்தான்.
மறுபுறம் தேவாவோ எழும்ப முடியாததால் தன் கைகளால் அவனின் மூக்கை பஞ்சராகிக்கியவன், அடிப்படாத கால் கொண்டு அவனின் வயிற்றிலே உதை விட,
அவனோ தூர சென்று விழ, மறுகணம் அவனின் சட்டை பட்டனை அடுத்த கத்தி தீண்ட, தன்னை தீண்ட வந்த கத்தியை தேவா பிடிக்க குனியும் முன் குத்த வந்தவனின் கையை பிடித்தது வேறொரு கரம்.
***
விக்கியுடன் சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பிடித்தவையை வாங்கிக்கொண்டு “நாங்க போறோம் நீ பே பண்ணிட்டு வா” என்று நிக்க பொறுமையின்றி விக்கியிடம் கூறிவிட்டு,
இரு பெண்கள் வந்ததும் கண்ட காட்சி தான் சம்யுக்தா மற்றும் தேவா இரு ரவுடிகளின் கையை உடைத்தது. அப்போது தான் அவனை நோக்கி வந்த இன்னொரு கத்தியை கண்டு கொண்டு கையில் உள்ளதை கீழே போட்ட தேவிபிரியா அதனை தடுக்க விரைந்தாள்.
தேவாவோ தன்னவள் என்று நினைத்து நிமிர்ந்தவன் தேவிபிரியாவை கண்டு விழிக்க, மறுநொடி தன்னவனின் சகோதரனை தாக்க வந்தவனின் கையை முறுக்கு உடைப்பது போல் உடைத்திருந்தாள்.
இதில் தேவிபிரியாவுடன் வந்த ஶ்ரீநிதி நட்பதை கண்டு அதிர்ந்து நிற்க, அவளை பாதுகாக்க எண்ணிய பிரசன்னா பெண்ணவளை இழுத்து சென்று மறைவில் நின்று கொண்டான்.
அவன் அவர்களுக்கு உதவி செய்யாமல் தன்னை மட்டும் காத்ததில் கோவம் கொண்டவள் “என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. அங்க மூணு பேரும் ரிஸ்க் எடுத்து சண்ட போட்டுட்டு இருக்காங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாம என்ன மட்டும் எதுக்கு இழுத்து வரீங்க”
“அவன் எதுக்கு எதிரி.. அவன கொல்ல வரவங்கள நான் எதுக்கு தடுக்கணும் அதான் வீர பெண்மணிகள் ரெண்டு பேரும் சண்ட போடுறாங்கல்ல” என்றதை அவன் பிடித்திருந்த தன்னை கையை உதறியவள் “நீங்க சரியான சுயநலவாதியா இருக்கீங்க.. வெயிட் வெயிட் உண்மைய சொல்லுங்க நீங்க தான தேவா மாமா கொல்ல ஆள் அனுப்பிருக்கீங்க”
“நான் எதுக்கு அவன கொல்லனும்.. அவன் எனக்கு எதிரி தான் பட் அவன அழிச்சி ஜெயிக்க.. நான் கோழை இல்ல” என்றவளின் நம்பாத பார்வையில் பெண்ணவளின் தலையில் கைவைத்து “உன்மேல சத்தியமா.. இப்போ நடக்கிறதுக்கும் எனக்கு சம்மந்தம் இல்லடி நிதிமா” என்றதை கேட்டு பெண்ணவளுக்கு சற்று நம்பிக்கை வந்தது.
அதன் பிறகு விக்கியும் அவ்விடம் வந்து விட, முதலில் மூவரும் அடித்து கொண்டிருப்பதை புரியாமல் நோக்கியவன், அவர்களுக்கு உதவி கரம் நீட்டினான்.
பின் நால்வரும் அடித்த அடியில் தாக்க வந்தவர்கள் விழுந்தடித்து ஓடி விட, அதனை கண்ட பின் தான் பிரசன்னா ஶ்ரீநிதியை செல்ல அனுமதித்தான்.
அவளும் நாலவருடன் இணைந்து கொண்டு அவர்களுக்கு அடியேதும் இல்லையே என்று கேட்ட பிறகு தான் மூச்சே விட முடிந்தது.
இதில் தேவிபிரியாவோ கீழே போட்டு வந்த தீனியை கண்டு “அச்சோ.. உங்கள காப்பாத்துற வேகத்துல ஸ்நாக்ஸ வேஸ்ட் பண்ணிட்டேன் மாமா” என்று உதடு பிதுக்க, மற்றவர்கள் அவர்களை முறைத்தனர்.
தலையில் அடித்து கொண்ட விக்கியோ “அது சரி.. யாரு இவனுங்க எதுக்கு தேவாவ டார்கெட் பண்றாங்க” என்றதை கேட்டு தேவாவின் முகம் இறுகி விட,
அதனை கண்டு கொண்ட சம்யுக்தா “சீக்கிரமே தெரிய வரும்.. அண்ட் இங்க நடந்தத வீட்டுல யாரும் மூச்சு விடாதீங்க” என்று அவர்களை புறப்பட கூற, மற்றவர்கள் தான் அவளை குழப்பத்துடன் நோக்கியிருந்தனர்.
ஆனால் தேவிபிரியா தோழி பார்த்து கொள்வாள் என்று நொடியில் அதனை ஒதுக்கிவிட்டு விக்கியை நச்சரித்து தீனி வாங்கி வாய்க்குள் இறக்கி விட்டாள்.
இவர்கள் செல்வதற்குள் அங்கு மற்றவர்களும் உடை எடுத்திருக்க, தேவாவை உயிருடன் கண்ட ஒரு ஜோடி கண்கள் அவன் உயிர் தப்பி விட்டானே
என்று தோல்வி கலந்த வெறியுடன் நோக்கியது.
மொத்த குடும்பமும் வந்த வேலையை முடிந்த திருப்தியில் வந்தவழியே செல்ல, ஆனால் இம்முறை சின்ன மாற்றமாக தேவிபிரியா விக்கி புல்லட்டில் வைத்து தன் வேகத்தில் அவனை பறக்க விட,
தன்னையறியாமல் அவளின் இடுப்பை பற்றி கொண்டவன் அந்நிமிடத்தை ரசிக்கவும் தவறவில்லை, கூடவே சகோதரனுக்கு நன்றியும் சொல்லி கொண்டான்.
பின்ன புல்லட்டில் ஏற போன சம்யுக்தாவை தடுத்த தேவா தான் சகோதரன் மற்றும் அவளின் தோழியை கண்ணை காட்ட, அதன் அர்த்தம் உணர்ந்து அவளே தோழியிடம் “நீங்க பைக்ல வாங்க நாங்க கார்ல வாரோம்” என்றாள்.
தேவிபிரியாவோ தோழியை “தெய்வமே” என்று ரீதியில் பார்த்துவைத்து வண்டியில் ஏறிக்கொள்ள,
இது தன் சகோதரனின் விளையாட்டு என்று தெரிந்த விக்கி அவனை முறைக்க, ‘நீ என்ஜாய் பண்ணு ப்ரோ’ என்று கண்ணை காட்டினான்.
பின் முறைப்பை புண்ணகையாக மாற்றியவனும் தலைகோதி புன்னகைத்து கொண்டு தன்னவளுடன் ஏறி கொண்டான்.
***
விஷேசத்திற்கு ஒரு வாரமிருக்க, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை இழுத்து போட்டு செய்தனர்.
இப்படியே ஐந்து நாட்கள் கழிந்திருக்க, தேவாவின் காயமும் சீராகி விட்டது.
அன்று இரவு தங்களின் பணியை காண செல்ல எண்ணிய பெண்கள், குடும்பம் உறங்கியதும் தங்களை மொத்தமாக மறைத்து கொண்டு அன்று போல் ஜன்னல் வழியே குதித்து, வண்டியை தள்ளி கொண்டு வீட்டை விட்டு சற்று தொலைவில் வந்தவர்கள் அங்கு தங்களுக்காக காத்திருந்த ஆடவர்களை முறைத்து வைத்தனர்.
அதனை கண்டு கொள்ளாத தேவா “எவ்வளவு நேரம் வெயிட் பண்றது.. இவ்வளவு நேரமா உங்களுக்கு” என்றதுக்கு தேவிபிரியா “நீங்க எதுக்கு வரீங்க” என்க,
இம்முறை பதில் விக்கியிடம் “அன்னைக்கே நாங்க உங்க மிஷன் பார்ட்னர்ஸ் ஆயிட்டோம்.. சோ எடுத்த வேலைய பாதிலயே விடுறது எங்களுக்கு பழக்கம் இல்ல”
“ஓ பார்ட்னர்ஸ் மிஷன்ல மட்டும் தானா” என்று கேலியாக கேட்டிருக்க, இம்முறை அதற்கு பதில் தேவாவிடம் வந்தது.
“மிஷன்ல மட்டும்ல லைஃப் லாங் பார்ட்னரஸா கமிட்டாக எனக்கு சம்மதம்” என்று தன்னவளை பார்த்து கண்ணடிக்க,
“நாங்க இன்னைக்கு போறோம்.. உனக்கு யாரு சொன்னா” என்றவளின் பார்வை தோழியை குற்றபார்வை பார்க்க,
தேவாவோ அவ சொல்லல.. ஆனா நாங்க வருவோம் உனக்கு தெரியாதா என்ன.. அது தெரிஞ்சி தான என் காயமறட்டும்ன்னு நீ அஞ்சு நாள் தள்ளி போட்டிருந்த” என்று அவன் கூறியது உண்மையென்று மனம் குரல் கொடுக்க,
அதை அடக்கியவள் “ஏன் மிஸ்டர் ஏற்கனவே கால பஞ்ஜராக்கியது பத்தலயா.. இந்த முறை மொத்தமா பஞ்சராக வந்திருக்கீங்களா” என்றவர்களின் பேச்சு நீண்டு கொண்டே போனதை தடுத்த விக்கி “சண்ட போட நேரம் இல்ல.. கிளம்பலாம்” என்று அவர்களை கிளப்பிருக்க,
பெண்கள் ஸ்கூட்டியை ஓரம் நிறுத்திவிட்டு ஆடவர்களின் இரு புல்லட்டிலும் முன்னே பெண்கள் ஏறிக்கொள்ள, இவர்கள் பின்னே அமர்ந்து பயணத்தையும் பெண்களையும் ரசித்தப்படி காட்டை அடைந்தனர்.
குகையிருக்கும் இடம் ஏற்கனவே அறிந்ததால் நால்வரும் ஒன்றாகவே அதனை நோக்கி செல்ல, போகும் வழியில் ஏதோ சிலை இருப்பதை கண்டு அதனருகில் விரைய, தன் தலையில் எரிந்த ஒளியின் மூலம் அதில் பொறித்திருந்த பெயரை கண்ட சம்யுக்தா “பங்கு இதான் காட்டம்மன்” என்று தோழியை அழைத்து காட்டினாள்.
பின் அதனை சுற்றி நோட்டமிட்ட சம்யுக்தா சிலைக்கு அருகிலிருந்த பெட்டியை புருவம் சுருக்கி பார்த்துவிட்டு அதனை திறக்க, அதுவோ காலியாக காட்சி கொடுத்தது.
பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை தன் தலையிலிருந்த வெளிச்சத்தை அதன் முன் காட்டி, அப்பெட்டியை சுற்றி புகைப்படம் எடுத்து கொண்டவள் “பங்கு நீயும் ஃபோட்டோ எடுத்துக்க” என்று அவளையும் எடுக்க கூறியிருந்தாள்.
அதோடு மேலும் நோட்டமிட்டு எதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ந்து விட்டு குகைக்குள் நுழைந்து அங்கே தன் தேடலை தொடர்ந்தவர்கள், சில மணி நேரத்தில் விடியும் வேலையை எட்டியதால் இம்முறையும் குகையில் எதையும் காணாமல் வீட்டிற்கு திரும்பினார்கள்.
***
அடுத்து இரு நாட்களும் கடந்திருக்க, அவர்கள் எதிர்பார்த்த விஷேச நாளும் வந்து விட்டது, கூடவே தேவிபிரியாவின் தாய் தந்தையரும் வந்து இணைந்து கொண்டனர்.
முந்தின இரவே விஷேசத்திற்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபத்தில் மொத்த குடும்பமும் ஆஜராகியிருந்தனர்.
காலையில் நல்ல நேரத்திற்கு முன் பெண்கள் மூவருமே, அன்று எடுத்த புடவையை அழகாக கட்டி வானுலக தேவதை போல் காட்சியளிக்க, ஆண்களும் தங்களை அறியாமலே தங்களின் இணையின் உடை நிறத்திலே வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர்.
அவர்களின் தோற்றத்தில் பெண்கள் திக்கு முக்காடி போக, ஆண்களோ தங்களின் இணையின் அழகில் கிறங்கி இமைக்க மறந்து அவர்களையே பார்வையால் வட்டமிட்டனர்.
விஷேசகாரியை இரு பெண்களும் அழைத்து மேடைக்கு வந்திருக்க, அவளும் பவ்வியமாக அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அதோடு பெண்ணவள் அறியாமலே நானமும் கூடி கொண்டது. பின்ன இது அவளின் சடங்கு விழாயல்லவா பத்து வருடத்திற்கு முன் நடக்க வேண்டியது இப்போது தான் நடத்த நேரத்தோடு குடும்பமும் கூடி வந்திருக்க, ஶ்ரீநிதிக்கோ இந்த நாளிற்கான பல வருடம் ஏக்கம் இன்று நிறைவேறியதில் கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிய, அதை உணர்ந்த சகோதரிகள் இருவரும் பெண்ணவளை அணைத்து கொண்டனர்.
மேடையின் கீழே நின்றிருந்த பிரசன்னா ‘என் நிதிய கம்பர் பண்ணும் போது சம் ஒன்னும் அவ்வளவு அழகு இல்ல.. சம் மட்டும் இல்ல தேவி விடவும் என் நிதி தான் தேவதை போல இருக்கா’ என்று எண்ணியவனுக்கு அக்காவை மணந்து கொள்ள முடிவெடுத்துவிட்டு தங்கையை ரசிக்கிறோம் என்று தவறு உணரபடவேயில்லை.
இவன் சம்யுக்தாவின் அழகை தாழ்த்திருக்க, ஆனால் அவனருகில் நின்ற தேவா மற்றும் விக்கிக்கு “ரெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதைடா” என்ற எண்ணம் தான் ஓடி கொண்டிருந்தது.
பின் காதல் வந்தாலே தன்னவள் மட்டுமே இவ்வுலகத்தில் அழகு என்று நினைக்கும் நோய் வந்து விடுகிறதல்லவா.
ஆனால், அது காதல் என்று பிரசன்னா தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். காரணம் தேவாவின் மேலுள்ள அந்த பகையே சம்யுக்தாவை தன்னவளாக்கி அவனை தோற்கடிக்க வேண்டுமென்பதால் தான்.
பார்க்கலாம் காதலை விட பகை சக்தி மிகுந்ததா?
****
ஶ்ரீநிதிக்கு செய்ய வேண்டிய சம்பரதாயம் முடிய, அங்கிருந்த இன்னொரு மேடையில் ஏறிய தேவிபிரியா “பங்ஷன்ல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இல்லன்னா எப்படி.. ஆட்டம் பாட்டம் மட்டுமில்ல கூடவே நீங்க கொண்டாட விளையாட்டும் இருக்கு.. ஆரம்பிக்கலாமா?” என்றவள்
“ஆனா அதுக்கு முதல் ரூல்ஸ் அண்ட் பிளேயர்ஸ் சொல்லிடுறேன்” என்றுவிட்டு “பங்கு.. தேவா மாமா.. விச்சு” என்று மூவரையும் அழைக்க,
இதில் விக்கி மற்றும் தோழியை கெஞ்சி தான் மேடையேற்றிருந்தாள்.
தேவாவோ அவள் அழைத்ததுமே நல்ல பிள்ளையாக அவ்விடம் நின்று கொண்டான்.
பின் அங்கு அமர்ந்திருந்த பிரசன்னாவின் புறம் வந்தவள் “நீங்களும் வாங்க” என்று அவனையும் இழுத்துவிட்டு சிந்தித்தவள் “கேர்ள்ஸ் டீம்ல ஒருத்தர் கம்மியா இருக்கிறதாள விசேஷகாரியையே கூப்பிடுறோம்”
என்று ஶ்ரீநிதியை அழைக்க, அங்கு பிரசன்னா இருந்ததில் தயங்கியவள் குடும்பம் வற்புறுத்தவும் கடமைக்கென்று சென்று நின்று கொண்டாள்.
அவர்கள் வந்த திருப்தில் தேவிபிரியா விளையாட்டு விதியை கூற, மற்றவர்கள் ஆர்வமாக நோக்கினார்கள்.
- துயர் தொடரும்..

Author: STN - 95
Article Title: துணை - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.