துணை - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
விக்கி கேட்ட கேள்விக்கு, சம்யுக்தா “அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்” என்று இதழை வில்லாக வளைத்தாள்.

அதில் மூவரும் புரியாது நோக்க, தேவிபிரியாவோ “என்ன பங்கு சொல்லுற.. உனக்கு தெய்வசக்தில நம்பிக்கை இல்ல.. அதவிடு நீ இந்த காலச்சக்கரம் எப்படி இருக்குன்னு கூட தெரியாது.. இப்போ தான் பாத்துருக்க பின்ன எப்படி அந்த ஒன்னு இருக்கிற இடம் உனக்கு தெரியும்”

“அது போகட்டும் முத இந்த பெட்டிய எடுத்து மூணாவது சக்கரத்தோட.. நம்ம டிபார்ட்மெண்ட்ல ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு வந்த வேலைய முடிக்கலாம்”

“வேண்டாம் பங்கு.. உனக்கு தெய்வபக்தி இல்லாம இருக்கலாம் சாமி காரியத்துல விளையாட வேண்டாம்.. உன் தேவா மாமா சொன்ன மாதிரி அது எந்த இடத்தில வைக்கணுமோ அது தான் நல்லது”

“பக்கி மாதிரி பேசாத பங்கு.. அப்போ நம்ம வெறுங்கைய வீசிட்டு போகணுமா” என்றவள் ஏதோ சிந்தித்து “சரி நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.. முத எப்படி இத எடுக்குறது” என்க,

முதலில் மறுத்தவள் பிறகு ஒத்துக்கொள்ள காரணமென்ன என்று மூவரும் சிந்திக்கவே செய்தனர்.

பின் தேவிபிரியா “பங்கு இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அந்த பெட்டிய பாதுக்காக்க தான் நைட் பாம்பு எப்போவும் அத சுற்றியே இருக்கும்.. பொளர்ணமி டைம் மட்டும் பாம்பு புத்துக்குள்ள இருக்கும் அன்னைக்கு என்ன நடந்தாலும் பாம்பு வெளியே வராது.. அதோட காட்டு பகுதி மிருங்கள் நடமாடும்ன்னு பூஜையை முடிச்சிட்டு போறவங்க அடுத்து வரமாட்டாங்க”

“ஏன் பூஜை பண்ண வருர யாராவது எடுத்திருந்தா எப்படி தெரியும்”

“அங்க விரதமிருந்து வருரவங்க உசுரோட வெளிய வர முடியும்.. அதுனாலயே மோஸ்ட்லி விரதம் இருந்து தான் பூஜைக்கு வருவாங்க.. அதோட இந்த காலச்சக்கரம் இடம் மாறியும் கூட அத கண்டுபிடிச்சி பாம்பு இங்க ஸ்டே பண்ணிருக்கலாம்..” என்றதை கேட்டு விக்கி “ஏதோ ரூம் எடுத்து ஸ்டே பண்ணின போல சொல்லுற” என்று நினைத்ததை வெளியே கேட்டு விட,

அவனை முறைத்து தொடர்ந்த தேவிபிரியா “ஆனா இந்த காட்ட தாண்டி காலச்சக்கரம் வெளிய போயிட்டா யாரும் எதுவும் செய்ய முடியாது.. இங்கயிருக்கிற வரை பாதுக்காப்பு கொடுக்க பாம்பு விலங்குகள் இருக்கும்..” என்று தனக்கு தெரிந்ததை சொல்லி முடிக்க,

விக்கியோ “இந்த பாம்ப தாண்டி எப்படி எடுக்கிறது” என்க,

தேவிபிரியாவோ “கஷ்டம் தான.. இத பாதுக்காப்பா இந்த பாம்பு பாத்துக்குது தான.. இதவிட்டுட்டு பங்கு சொன்ன மூணாவது சக்கரம் எடுத்து காட்டாம்மன் கோவில் வழமை பூசாரி கைல கொடுத்துட்டு.. இந்த பெட்டி இருக்கிற இடத்தையும் காட்டி கொடுத்தா அவங்களே என்ன பண்ணனுமோ பண்ணிப்பாங்க.. ஏன் சொல்லுறேனா அவங்க தான் பூஜைக்கு இத வெளிய எடுப்பாங்க சோ பழக்கப்பட்டவங்கள பாம்பு ஒன்னும் பண்ணாதே” என்க,

அதனை ஏற்று கொண்ட தேவாவும் “யுதா எனக்கு பியூட்டி சொல்லுறது தான் சரின்னு தோணுது தேவையில்லாம நம்ம ரிஸ்க் எடுக்க வேண்டாம்”

“இல்ல காய்ஸ்.. இந்த பெட்டில காலச்சக்கரம் மட்டும் இல்ல.. இதுல இன்னொரு ஆதாரமும் இருக்கு.. சோ இந்த காலச்சக்கரத்த கைல எடுத்தே ஆகனும்”

“என்ன ஆதாரம் இருக்கு.. அது அவ்வளவு முக்கியமா” என்றதை கேட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்த விக்கியை பார்த்த சம்யுக்தா “குற்றவாளிய பிடிக்கிறதுக்கான ஆதாரம்.. அதுவும் குற்றவாளியா இருக்கிற நிரபராதி பத்தின உண்மை ஆதாரம்” என்றதை கேட்டு தேவா “அப்போ போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணுவோம்”

“டேய் அந்த போலீஸ் தான் நிரபாரதியான அத்தமாவ லாக்கப்ல வச்சது.. சோ இன்னுமாடா போலீஸ் நம்புறீங்க” என்றவள்,

அடுத்து எதுவும் பேசாமல் பெட்டியைவிட்டு கை எட்டு தூரம் பாம்பைவிட்டு தள்ளி நின்றவள் யோசிக்க கூட எண்ணமில்லாமல் இரண்டில் ஒரு சக்கரத்தில் கைவைத்து தூக்கிய கணம் பாம்பு அவளின் கையை பதம் பார்க்க வர,

விக்கியோ தன் கையை இடையில் விட்டு அவளை காத்து தான் கொத்து வாங்கியவன் வலியில் ஆவென்று கத்தினான்.

அப்போதும் கூட பாம்பு அசந்த நேரத்தில் இன்னொரு கையில் மற்றொரு காலசக்கரத்தையும் தூக்கிருந்தான்.

இதை எதிர்பாராமல் மூவரும் திகைக்க, பதறிய தேவிபிரியா “விச்சு ஏன்டா இப்படி பண்ணின” என்று பெண்ணவள் கலங்கி விட, அதனை பொருட்படுத்தாதவனோ தான் கையில் வைத்திருந்த காலசக்கரத்தில் ஏதோ இருந்ததை கண்டுவிட்டு சம்யுக்தாவின் கையில் அதனை ஒப்படைத்தவன், அவளை பார்த்து யாருமரியா வண்ணம் புன்னகைத்தான்.

அவனையே பார்த்திருந்த சம்யுக்தாவோ கீழே ஊர்ந்து வந்து தன் காலருகில் நின்ற பாம்பை கவனிக்காமல் போய் விட, அதோவோ பாவம் பார்க்காமல் ஒரு கொத்தோடு விடாமல் மறுமுறையும் கொத்திவிட, “அம்மா” என்று கத்தியவள் வலியில் கீழே விழுந்திருந்தாள்.

விஷத்தின் வீரியத்தில் கிறங்கும் விக்கியை தாங்கியப்படி இருவரும் தவித்து கொண்டிருக்க, அப்போது தான் சம்யுக்தா விழுந்ததை கண்டு தேவிபிரியா,

விக்கியை தேவா பிடித்திருந்ததால் தோழியிடம் விரைந்தவள், அவளின் தலையை தன் மடி மீது தாங்கி கொண்டு கீழே ஊர்ந்து செல்லும் பாம்பையும் தோழியின் காலையும் கண்டவள் துடித்து “மாமா அந்த பக்கம் தான் பாம்பு வருது” என்றதும் விக்கியை, சம்யுக்தாவின் அருகேயே சாய்வாக அமர வைத்த தேவா “தேவி ரெண்டு பேரையும் பாத்துக்க வரேன்” என்று பாம்பின் அருகில் சென்றவன் நொடியில் அதனை கையில் தூக்கிருந்தான்.

அதுவும், அவன் ஒரு விவசாயி அல்லவா, அதனால் பல முறை வயலில் வரும் பாம்பை கையில் எடுத்து வேறுபக்கம் விட்டு விடுவான். அந்த அனுபவத்தை இப்போது பயன்படுத்தினான்.

அவனின் செயலில் பதறிய தேவிபிரியா “மாமா” என்று கத்த, அவனோ கண்களால் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்துவிட்டு கையில் பிடித்திருந்த பாம்பை காலச்சக்கரமிருந்த பெட்டிக்குள் விட்டு அடைத்திருந்தான்.

இருவருமே கண்களை சொருகும் நிலையில் இருந்ததால் தேவிபிரியா தன் உயிரான இருவரின் கன்னத்ததையும் தட்டியவண்ணம் துடித்து கொண்டிருக்க, அவர்கள் அருகில் விரைந்த தேவா நிலமையும் தன் வாழ்வின் முக்கியமான இருவரின் நிலை கண்டு கண்கள் கலங்கி விட, பின் உடைந்து விடுவது சரியில்லை என்று சூழ்நிலையை தனது கையில் எடுத்து கொண்டான்.

சம்யுக்தாவின் தோல்பையை கையில் எடுத்திருந்த தேவா “தேவி இப்போ நம்ம அழுகுறது நேரமில்ல.. ரெண்டு பேருக்கும் நம்ம ஃபர்ஸ்ட் ஐட் கொடுத்தா தான் அவங்க உயிர் புலைப்பாங்க.. சோ அழாம எனக்கு கோ ஆபரெட் பண்ணுமா”

“மாமா.. நான் எப்படி எனக்கு பயமா இருக்கு”

“வேற வழியில்ல உன் பேக் எடுத்து விக்கி பக்கம் போ.. சொல்லுறேன்ல போ” என்று சற்று கர்ஜிக்க, அவளோ பயத்துடனே தன்னவன் அருகில் சென்றிருக்க,

தேவாவோ “முதல துணிய அவன் காயத்துக்கு மேல கட்டு” என்று கூறிவிட்டு தன்னவளின் காலை கண்டவன், இரு முறை பாம்பு தீண்டிருப்பதை கண்டு நெஞ்சம்லாம் ரணமாக இருந்தது.

அதிலும் விஷம் அதிகம் ஏறி உயிருக்கு ஆபத்து ஆகிவிடுமோ என்று உள்ளுக்குள் மருகியப்படியே, அவளின் காயத்திற்கு மேல் விஷம் மேலே ஏறாதப்படி இறுக்கி கட்டிருந்தான்.

பின் சம்யுக்தாவின் பையிலிருந்த கத்தியை எடுத்து “தேவி கத்திய எடுத்து காயத்துக்கு மேல கீறி விட்டு.. அந்த இடத்தை சாய்வா பிடிச்சி கட்டிருந்த துணிய அவிழுத்து விடு” என்று தன்னவளுக்கு அம்முறையை செய்ய, தேவிபிரியாவோ கைகள் நடுங்கிய வண்ணம் அவன் கூறியதை செய்து முடித்தாள்.

அதன் பிறகு பையை துலவிய தேவாவோ அதிலிருந்த ஊசியை தேவியிடம் காட்டி “தேவி இதுல எதாவது பாய்சன் ப்ரேக் இஞ்செக்சன் இருக்கா” என்றதும் தான் நினைவு வந்தவளாக தன் பையிலிருந்த மருந்தை தேவாவிடம் கொடுத்தவள் “இத யூஸ் பண்ணுங்க மாமா.. நான் காட்டம்மன் கோவில் பத்தி சர்ச் பண்ணும் பாம்பு இருக்கும்ன்னு தற்காப்புக்காக வாங்கியிருந்தன்” என்றுவிட்டு, அதை போலிருந்த இன்னொரு மருந்தை விக்கிக்கு போட்ட பின் தான் பெண்ணவளால் சற்று பயம் நீங்கி மூச்சு விட முடிய, தேவாவின் நிலையும் அதுவாக தான் இருந்தது.

இவையனைத்தும் செய்யும் வேலையில் தங்கள் துணைகளின் கன்னத்தை தட்டி விழிக்க வைக்கவும் தவறவில்லை.

ஊசி உடலில் செலுத்தி சில நிமிடம் கழித்து தான் இருவருக்கும் சற்று விழிக்க முடிந்திருக்க, உடலோ சோர்வாக தான் இருந்தது.

தேவாவோ இருவரையும் பார்த்து “கொஞ்சம் நேரத்துல எங்க ரெண்டு பேரு உஷரையும் சேத்து எடுத்துடீங்கடா” என்க, அந்நிலையிலும் விக்கி தன் உயிரான இருவரையும் பார்த்து கண்ணடித்தவன் அதன் மூலம் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறியிருக்க, தேவிபிரியாவோ “ஏன்டா இப்படி பண்ணீங்க ரெண்டு பேரும்” என்றதுக்கு இருவரும் ஒன்று போல் “அவன் (அவ) எதுக்கு பண்ணினான் (பண்ணினா) எனக்கு தெரியும்” என்று கூறியிருந்தனர்.

அதில் திகைத்த தேவா “இப்போ எதுவும் கேட்க மனநிலை எனக்கு ரெண்டு பேரும் சைலண்ட் ஆகுங்க” என்றுவிட்டு தன்னவளை தன் தோளில் சாய்த்து கொள்ள, என்ன தான் பெண்ணவள் விழித்து விட்டாலும் ஏனோ அவன் உடல் தன்னவளை நினைத்து நடுங்க தான் செய்தது.

அதனை உணர்ந்த சம்யுக்தா வாயை மெல்ல அசைத்து “செத்து போயிருப்ப நினைச்சியா” என்றதுக்கு இல்லையென்று தலையாட்டியவனின் கண்கள் கலங்கி விட,

அதில் புன்னகைத்த சம்யுக்தா “ரொம்ப பயம் போல” என்றதுக்கும் ஆடவன் இல்லையென்று தலையாட்ட,

“அப்புறம் எதுக்கு சார் கண்ணு வேர்க்குது” என்றதுக்கு தெரியல என்று ஆடவன் உதடு பிதுக்கி கொண்டு திறன்பேசியில் பாடலை ஒலிக்க விட்டு காது ஒளிப்பானை, அவளின் காதில் மாட்டி தானும் மாட்டிக் கொண்டு மென்மையான காதல் பாடல்களை கேட்க, இருவருக்குமே அந்நேரம் ஒரு இதத்தை கொடுத்தது.

மறுபக்கம் தன்னவனை மடியில் ஏந்தியப்படி தோழியின் கரத்தையும் விடாமலிருந்த தேவிபிரியாவின் கண்ணீரை துடைத்துவிட்ட விக்கி “இப்போ என் காதல் நம்புறியா” என்றதை கேட்டு, அவனின் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்து ஆமென்று தலையாட்டிருக்க,

சோர்வு நிலையிலும் புன்னகைத்தவன் “அப்போ ஐ லவ் யூ இல்லையா”

“என்ன காதல் சொல்லுற நிலமைலயா வச்சிருக்க.. கொஞ்சம் கூட யோசிக்காம கை விடுற உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்னையும் தேவா மாமா பத்தி நினைச்சியா”

“இதுக்கு விளக்கம் நாளைக்கு சொல்லுறேன்” என்று வேறு கதைகளை பேசியப்படியிருக்க, விடியும் நேரத்தை உணர்ந்து புறப்பட எத்தணிக்க இருவருக்கும் சற்று தேரியிருந்ததால் நடந்தே இருவரும் வர, சம்யுக்தாவிற்கு இரு முறை பாம்பு கொத்தியதால் அவளை மட்டும் கையில் ஏந்திருந்தான் தேவேந்திரன்.

நால்வரும் முதலில் மருத்துவமனைக்கு சென்று இருவரையும் பரிசோதனை செய்துவிட்டே வீட்டிற்கு திரும்பிருந்தனர்.

சம்யுக்தாவிற்கு காயத்தால் கட்டிருந்ததால் தேவிபிரியா ஜன்னல் வழியே சென்று சத்தமில்லாமல் வாசல் கதவை திறந்துவிட்டு பெண்ணவளை ஆடவன் அறையில் விட்டு நெற்றில் இதழ் பதிக்க,

அவனை தள்ளிய சம்யுக்தா “நீ சீக்கிரம் கிளம்பு” என்க, அவள் தள்ளியதில் மனம் சுனுக்கம் கொண்டாலும் காட்டாது வெளியேறி விட, தேவிபிரியா தன்னவனை அணைத்து விடை கொடுத்து கதவையும் அடைத்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
***
மறுநாள் முழுவதும் தேவிபிரியா தோழியை குடும்பத்திற்கு தெரியாமல் கவனித்து கொள்ள, குடும்பத்தினர் கேட்டால் “அவ அன்னைக்கு நடந்த விஷயத்துல மூட் அவுட்டாயிருக்க” என்று சமாளித்து விட்டிருக்க, முக அழைப்பு மூலம் நால்வரும் பேசி கொண்டனர்.

அப்படியே அடுத்து மறுநாள் வந்து விட, தந்தை கூறிய ரெண்டு நாள் கெடு முடிகிறது என்று மாலை போல் தன்னவன் மற்றும் அவனின் குடும்பத்தை வர கூறிவிட்டு, அவர்கள் வரவும் தானும் தோழியுடன் கீழே இறங்கியிருந்தாள்.

அவர்களின் வரவில் கடுப்பான விஷ்வநாதன் “உங்கள யார் வர சொன்னா”

“நான் தான் வர சொன்னேன்ப்பா” என்று தந்தையின் எதிரே வந்தவள் “அத்தமா டார்லிங் ரெண்டு பேரும் உக்காருங்க” என்றவள் தன்னவன் கட்டிய தாலியை வெளியே தொங்கவிட்டு தேவாவின் அருகே அமர்ந்து கொள்ள, தேவிபிரியாவும் விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

இதற்கு இடையில் அவரின் சத்தத்தில் மொத்த குடும்பமும் கூடி விட, அபிராமியோ “இன்று என்ன நிகழ போகிறதோ” என்று பீதியுடன் பார்த்திருந்தார்.

சில வினாடி அமைதிக்கு பிறகு கடு கடுவென்று அமர்ந்திருந்த தந்தையிடம் “சொல்லுங்க.. நீங்க எனக்காக தான் வெயிட் பண்றீங்க தெரியும்”

“ஏற்கனவே சொன்னது தான்.. உன் கழுத்துல தொங்குற தாலிய கழட்டி வீசிட்டு என் மருமகன் பிரசன்னாவுக்கு கழுத்த நீட்டுற”

“முடியாதுன்னா”

“அடம் பண்ணாத யுக்தாமா பிரசன்னாவுக்கு என்ன குறைச்சல் நல்லவன் நல்லா படிச்சிருக்கான் நல்லா திறமையானவன் பெரிய கம்பனி ரன் பண்றான்.. பாக்க அழகா இருக்கான்.. இத விட என்ன வேணும் உன்ன கட்டிக்க தகுதி”

“என் வேந்துக்கு என்ன தகுதியில்ல”

“அவன் சாதரண விவசாயி.. அதோட என் மானத்த சிதச்சிட்டு அவன் அப்பன் தான் வேணும் ஓடி போன உன் அத்த ஒரு தரங்கெட்டவ.. அதோட என் தங்கச்சிய கொல்ல பாத்தா கொலகார குடும்பத்த சேந்தவன்.. அவனுக்கு எப்படி உன்ன கட்டிக்க தகுதியிருக்கும்” என்க,

அவர் பேசிய வார்த்தையில் முஷ்டியை மடக்கி கோவத்தை கட்டுப்படுத்திருந்த தேவாவை கண்டு,

அவனின் கையை அழுத்தம் கொடுத்தவள் “எனக்கு பிரசன்னாவ பிடிக்கல.. அப்புறம் நீங்க சொன்னீங்களே தகுதி என்ன கட்டிக்க அவனுக்கு இல்லன்னு.. உண்மை என்னன்னா அவன கட்டிக்க தான் எனக்கு தகுதியில்” என்றவளின் கூற்றின் அர்த்தம் உணராத விஷ்வநாதன்
“உனக்கு பிரசன்னா ஏன் பிடிக்கல” என்றதுக்கு அவள் கொடுத்த விளக்கத்தில் தந்தையவர் உள்ளுக்குள் வலியில் துடித்து விட்டார்.

- துயர் தொடரும்...
 

Author: STN - 95
Article Title: துணை - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அப்படி என்ன தான் டா ஆச்சி????
கீதா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களா