துணை - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
இரு பெண்களின் தொழில் வீட்டினருக்கு தெரிந்ததே என்றாலும், ஏனோ இவர்களின் தேடுதல் வேட்டை இரவும் நடக்கிறது என்று தெரிந்தால் பயந்து விட கூடாது என்ற எண்ணத்தில், அவர்கள் அதற்காக எடுக்கும் கடின முயற்சி ஒரு போதும் வீட்டியில் மூச்சு விட மாட்டார்கள்.

அவர்களுக்கு தெரிந்தால் வேலைக்கு விட மாட்டார்கள், ஆனால் தங்கள் பிடித்தத்தை கூறி பேசி மனதை மாற்றி விடலாம் அது வேற விஷயம் என்றால் தங்களின் வேலை பற்றிய கடினம் உணர்ந்து வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருக்க நேரிடும், அவர்களின் பயமே தன்னுடைய கவனம் சிதறலுக்கு காரணமாகி விடும்.

ஆதலால் ஒரு போதும் அத்தகைய பிழையை விட கூடாது என்று இரு பெண்களும் உறுதியாக, கூடவே தைரியமாக தங்களுக்கு பிடிக்த தொல்லியல் துறையில் எந்த துயரமும் பார்க்காமல் மனம் நிறைந்த பணி புரிகின்றனர்.

ஒரு வழியாக ஜன்னல் வெளிபுறம் இருந்த முதல் திண்டில் காலை வைத்து இறங்கிய தேவிபிரியா ‘கைப்புள்ள கீழ பாக்காத.. அப்புறம் எமன் எருமைல வந்து கடத்திட்டு போயிடுவான்’ என்றதுக்கு பெண்ணவளின் மனமோ ‘பயந்து சாகுற நாய்க்கு எதுக்கு இந்த மாதிரி வேலை..’

“பயமா யாருக்கு எனக்கா..” என்று நொடியில் முகத்தை மாற்றி “லைட்டா பயம் தான்.. ஆனாலும் நம்ம சாவு கல்வெட்டுல பதிச்சி கெத்தா இருக்க வேண்டாம்” என்றவளின் முணுமுணுப்பு அருகே அவளை தொடர்ந்து தாவி கொண்டிருந்த சம்யுக்தாவின் காதிலும் விழ “கல்வெட்டுல தான.. நம்ம போகிற இடத்தில சிங்கம் புலி பாம்புலாம் இருக்கும்.. அதுக்கு புட்டா போயிடு.. நாளைக்கு தலைப்பு செய்தியே தொல்லியல் துறையில் தன்னுடைய கண்டுபிடிப்புக்காக பயமே இல்லாமல் காட்டுக்குள் சென்று வீர மணமடைந்தார் தமிழச்சி தேவி பிரியான்னு நீ தான் டிரெண்டிங்கா இருப்ப.. கல்வெட்டு மட்டும் இல்ல கூடவே உனக்கு சிலையும் வச்சி வீர தமிழச்சின்னு மரியாதையா அதுல பொறிப்பாங்க” என்றவள் பேசினாலும் ஒவ்வொரு திண்டாக தாவுவதில் கண்ணாக இருந்தாள்.

அவளின் செய்தி வாசிப்பில் நெஞ்சு வலி வாரத குறையாகிய நிலையில் தேவிபிரியா ‘எங்க கீழ பாத்து விழுந்து செத்துகித்து தொலைச்சிடுவேனோ பயத்துல.. என்ன நானே மொடிவேட் பண்ண அப்படி பேசினா.. துரோகி உண்மையாவே குழி தோண்டி புதைச்சி சில வச்சிடுவா போல’ என்று உள்ளுக்குள் நினைத்தவண்ணம் தோழி பைப் வழியே சருகுவதை கண்டு ‘சர்க்கஸ்ல இருக்க வேண்டியதெல்லாம் என்கூட இருந்து உசிற வாங்குது..’ என்றபடி தானும் பைப்பிள் சருக முயற்சி செய்ய,

“என்ன நமக்கு மட்டும் வழுக்க மாட்டிக்கு” என்று நொந்து ஆமை போல் மெல்ல மெல்ல காலை வைத்து வைத்து இறங்கிவிட்டாள்.

பின் தான் செய்த சாகசத்தில் உண்டான களைப்பில் மூச்சு வாங்கியப்படி நிற்க, அவளின் தோளில் தட்டிய சம்யுக்தா “என்ன சாவகாசமா மூச்சு வாங்கிட்டு இருக்க.. நட இப்போவே வண்டி ஆன் பண்ணினா வீட்டுக்குள்ள சத்தம் கேட்கும்.. சோ கொஞ்சம் தூரம் வண்டிய தள்ளிட்டு தான் போகனும்” என்று கூறி வண்டியை தள்ளி கொண்டு நடக்க,

“இது வேறயா” என்று நொந்த தேவிபிரியாவும் தோழியின் நடைக்கு ஈடு கொடுத்து நடந்தாள்.

பின் சற்று தொலைவு தள்ளி கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை மூடி கொண்ட சம்யுக்தா வண்டியில் ஏறி தோழிக்கு கண்ணை காட்ட, பெண்ணவள் ஏறியதும் மின்னல் வேகத்தில் பறந்தாள்.
***
தங்கள் வீட்டிலிருந்து ஒருமணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு சம்யுக்தாவின் வண்டி ஓட்டும் திறனால் அரைமணி நேரத்திலே வந்தடைந்திருந்தனர்.

அது காட்டு பகுதி என்பதால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தலையில் கட்டிருந்த டார்ச்சை ஒளிரவிட்டு காட்டினுள் நடக்க தொடங்கினார்கள்.

என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும், ராத்திரி நேரம் யாருமில்லா காட்டிற்கு வருவது சற்று பயத்தை கொடுக்க தான் செய்தது.

ஆனால் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும் அதனை மறுநிமிடம் தனக்குள் அடக்கி கொண்டு எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணம் கொண்டவள் தான் சம்யுக்தா.

தேவிபிரியாவோ அவளைவிட சற்று பயந்து பெண் தான், அதுவும் இருட்டு பேய் காடு என்றால் பயமும் அதுவும் ராத்திரி நேரங்களில் இவ்விடம் செல்ல மிகுந்த பயம் இருக்கும். இது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பயம் தான்.

அத்தகைய பயம் கொள்ளும் இடத்திலும் தோழியுடன் செல்வது, அவளின் நிமிர்வு தைரியமே அவளின் பயத்திற்கு அரனாகும், அதிலும் இத்தகைய இடத்திற்கு செல்ல வேண்டுமானால் சாதரணமாக அல்ல அவ்விடத்தை கையாள வேண்டிய அனைத்து பாதுக்காப்புடன் தான் செல்வார்கள்.

நடந்தார்கள் நடந்தார்கள் நடந்து கொண்டே இருந்தார்கள்.

சம்யுக்தாவோ காதையும் கண்ணையும் தீட்டி கொண்டு நடக்க, அவளுடன் தானும் நோட்டமிட்டப்படி நடந்த தேவிபிரியா “என்னடி ஏதோ குகை இருக்கும் சொன்னாங்க.. எதையும் காணும்.. அதோட இங்க எங்கையோ காட்டம்மன் கோவில் இருக்கும் சொன்னாங்க.. அதையும் காணும்”

“பெரிய காடுடி.. அதோட இருட்டு வேற உடனே எப்படி கண்ணுல சிக்கும் தேடுவோம்” என்ற தோழியின் பேச்சில் அமைதியாகிய தேவிபிரியாவும் தன் கூர் பார்வை கொண்டு தாங்கள் தேடி வந்த குகையை தேடும் பணியை தொடர்ந்தாள்.

கால் மணிநேரம் நடந்திருப்பார்கள் அதற்குள் ஏதோ சத்தம் உணர்ந்து நடையை நிறுத்தி காதை தீட்ட, அதன் சத்தத்தை கண்டு கொண்ட தேவிபிரியா “அடியே நம்ம வந்தத தெரிஞ்சி எவனோ யானைய அவுத்து விட்டான்.. எந்த திசைல இருந்து எத்தன நம்மள வெல்கம் பண்ண வருதுன்னு தெரியல” என்று மரண பீதியை மறைத்த தேவிபிரியா “என்னடி பாத்துட்டு இருக்க.. சட்டு புட்டுன்னு ஆயத்த எடுடி பட்டர்” என்று தோழியை செயல்ப்படுத்த,

சம்யுக்தாவும் தன் தோள் பையிலிருந்த விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்த பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்தவண்ணம் “ஏன் பங்கு.. யானை எதுக்குடி ராத்திரி ரோந்து வருது”

“ஹான் உன்ன ரேப் பண்ணி குடும்பம் நடத்தி பிள்ளை பெக்க வருது கேக்குறா பாரு கேள்விய.. சீக்கிரம் எடுடி” என்று கூறி கொண்டிருக்கும் போதே நான்கு பெரிய யானை தங்களை நோக்கி வர, ஏனோ சம்யுக்தாவிற்கு கை கால்கள் உணர்விழந்தது போலாகி விட, அப்படியே அசைய மறந்து நின்றாள்.

அவளின் மாற்றம் புரியாத தேவிபிரியா “அடியே உன்ன அப்போவே டிவோர்ச் பண்ணிருக்கணும்டி.. ஆனா நட்ப காப்பாத்த நீ புதகுழில விழுந்து தியாகம் பண்ணுவேன் நம்பினா.. நீ என்ன சவகுழில தள்ளி மொத்தமா முடிச்சி விட்டுருவ போல” என்றவள்

“ஏய் என்னடி கரெண்ட் கம்பில ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிற” என்றும் பயன்பேறாததில் சூழ்நிலையை தானே கையில் எடுக்க நினைத்து தோழியின் பையை பிடுங்கி ஆயுதத்தை எடுத்து கொண்டவள் தனியாக கையாள போவதில் கண்களை மூடி இதழ் குவித்து ஊதிய கணம், இரு பெண்களையும் இரு வேறு வலிய கரங்கள் இழுத்து கொண்டது.
***

சட்டென்று யாரோ இழுத்ததில் பதறிய தேவிபிரியா நடுங்கியப்படி கண்களை மூடிக்கொள்ள,

“ரியா ஒன்னும் இல்ல ரிலக்ஸ்” என்று தன் முதுகை நீவி விட்ட கரத்தின் சொந்தக்காரன் யார் என்பதை உணர்ந்து “விச்சு..” என்றப்படி அவனின் உடையை இறுக்கி பிடித்து கொள்ள, எதிர் திசையில் கேட்ட சத்தத்தில் இருவரும் ஒரே சேர திரும்பினார்கள்.

பழையவையை நினைத்து உணர்வின்றி நின்று கொண்டிருந்த சம்யுக்தா, தன்னை யாரோ இழுத்ததில் தான் உணர்வு பெற்று நிமிர்ந்த கணம் அவளின் கன்னத்தில் இடியென அடியை இறக்கிருந்தான் தேவேந்திரன்.

அவன் அடித்த வலியை கூட பொருட்படுத்தாமல் “நீ எப்படி இங்க வந்த” என்க,

ஏனோ அவளின் முகத்தில் வலியை மறைத்து வெளியே தெரிந்த இறுக்கத்தில் ஆடவனுக்கு ஏதோ போலாகி விட,

இதழ் குவித்து ஊதி கொண்டு “அறிவிங்குறது கொஞ்சமும் இல்லையாடி உனக்கு.. இப்படி ராத்திரில காட்டுக்குள்ள வந்தியே கொஞ்சம் நாங்க வரலன்னா என்னயாகிருக்கும் உன்னோட தேவி உசுரும் சேந்து போயிருக்கும்.. உனக்கு உன்னோட வேலை பிடிக்கும் தான்.. அதுக்காக ராத்திரி வந்து உசுரு தொலைக்கணுமா.. கொஞ்சமும் யோசிச்சி பண்ண மாட்டியா.. அதான் உனக்கு மூளைன்னு ஒன்னு இருந்தா தான” என்றவனுக்கு ஏனோ கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்னும் கன்னம் கன்னமாக அறைய தான் தோன்றியது. ஆனால் பேதையவளின் உணர்வற்ற முகம் ஆடவனின் உள்ளுக்குள் உலுக்கியது.

அவன் பேச்சில் தான் நிதர்சனம் உணர்ந்த சம்யுக்தாவிற்கு தானே தோழியின் இறப்பிற்கு காரணமாகி இருப்பேனே என்று குற்றயுணர்சியாகி விட வேதனையுடன் தோழி புறம் திரும்ப, இரு பெண்களுமே பார்வையால் ஆயிரம் கதைகள் பேசி கொண்டார்கள்.

இதில் தேவிபிரியாவை அணைத்தவண்ணம் மரத்தில் மறைந்திருந்த விக்கி சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து “தேவா.. இப்போ கோபப்பட நேரம் இல்ல.. யானை பக்கத்துல வந்துருச்சு” என்றவன் பெண்ணவள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை தனது கரத்தில் மாற்றி கொண்டு “இதுல சுட்டா யானைக்கு உயிருக்கு எதுவும் ஆகாது தான”

“இல்ல ஜஸ்ட் மயங்கி விழுந்துரும்” என்றதும் எதிரேயிருந்த தேவாவிற்கு கண்ணை காட்ட, அவனும் அப்போது தான் சம்யுக்தாவின் தோள் பையிலிருந்த இன்னொரு துப்பாக்கியை கையில் எடுத்திருந்தான்.

பின் பெண்களை மரத்தின் மறைவில் விட்டு விட்டு, மறைவிலிருந்து வெளியே வந்த இரு நாயகர்களும் தங்களை நோக்கி வந்த நான்கு யானைகளில் இருவரும் இரு இரு யானைகளை குறி பார்த்து மயங்க செய்தனர்.

அதன் பின் தான் நால்வருக்கும் சற்று மூச்சு விட முடிந்தது, பின் இரு ஆடவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “நீ எப்படிடா வந்த” என்று மாற்றி மாற்றி கேள்வி எழுப்ப,

தேவிபிரியாவை ஒரு கணம் பார்த்த விக்கி “அது இவங்க நைட் இங்க வராங்கன்னு எனக்கு அவ சொல்லி தெரியும்.. நைட் டைம்ல அவளுங்க காட்டுக்கு தனியா போறது.. எனக்கு சரியா தோணல அதான் ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்” என்று தன் விளக்கத்தை கொடுக்க, அவன் என்ன கூற போகிறான் என்று ஆர்வமாக பார்த்திருந்த தேவிக்கு அவனின் பதில் மனதிற்குள் தென்றலாக வருடி சென்றது.

பின் தேவாவோ “நைட் தூக்கம் வராம பால்கனி பக்கம் ஸ்மோக் பண்ண வந்தா இதுங்க ஜன்னல் வழியா பதுங்கி பதுங்கி எங்கையோ போனத பாத்தேன்.. என்ன ஏதுன்னு தெரியல ஒரு சேப்டிக்காக ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்” என்றதை கேட்டு சம்யுக்தாவிற்கு அவள் அனுமதியின்றியே இதயத்தில் இதம் பரவியது.

இரு ஆடவர்கள் கூறி வசனம் வெவ்வேறாக இருந்தாலும் நோக்கம் என்னவோ பெண்களை காக்க வேண்டுமென்பது தான், அதிலே இரு பெண்களுக்கும் ஆடவர்கள் இருவர் மேல் மரியாதை எழுந்தது.
**
இரவு போல் உறங்கி கொண்டிருந்த விக்னேஷ்வரனுக்கு தன்னிடம் பெண்ணவள் மன்னிப்பு கேட்க வந்த வேளையில் இரவு போல் அவள் செல்லும் இடம் நினைவு வந்ததில், அதற்கு மேல் தூங்க முடியாமல் சென்று விட்டார்களா என்று பெண்கள் தங்கியிருந்த அறைக்குள் வந்தவன், அவர்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்தி கொண்டே தன் பைக்கை எடுத்து கொண்டு பறந்தான்.

இதில் தேவேந்திரன் பெண்கள் இருவரும் பதுங்கி பதுங்கி செல்வதை கண்டு “எங்க போகுதுங்க” என்றபடி பின் தொடர்ந்து சென்றவன்,

அவர்கள் காட்டிற்குள் நுழைவதை கண்டு “பைத்தியங்க ராத்திரி போய் காட்டுக்கு வருதுங்க” என்று பெண்களை திட்டியவண்ணமே அவர்களின் கண்களுக்கு சிக்காமல் மரங்கள் மறைவில் மறைந்து வந்திருக்க, விக்னேஷ்வரணும் சகோதரனின் எதிர் அவனை போலவே பதுங்கி வர, இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு கொண்டனர்.

பின் நொடியில் கேட்ட யானை சத்தத்தில் பெண்கள் முதலில் என்ன செய்கிறார்கள் என்று நோக்கியவர்கள் அவர்கள் அஞ்சாமல் தங்களை பாதுகாக்க துப்பாக்கி எடுப்பதை கண்டு, இருவரின் விழிகளும் வியப்பாக விரிந்த வேலையில் தான் தேவிபிரியாவின் பேசி கொண்டிருக்கும் போதே, அவள் உறைந்து நின்றதை கண்டு நொடியில் சூழ்நிலையை தங்கள் கையில் எடுத்து இருவரின் உயிரையும் காத்தனர்.

- துயர் தொடரும்...
 

Author: STN - 95
Article Title: துணை - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Hmm சம்மு ரெண்டு பேரையும் இப்ப கொஞ்சம் அவங்களை மதிக்கற அளவில் இருக்கா....

ஏன் அவளின் உறை நிலைக்கு காரணம் அவளோட பாஸ்ட்டா?????
 

STN - 95

Member
May 5, 2026
53
43
18
Hmm சம்மு ரெண்டு பேரையும் இப்ப கொஞ்சம் அவங்களை மதிக்கற அளவில் இருக்கா....

ஏன் அவளின் உறை நிலைக்கு காரணம் அவளோட பாஸ்ட்டா?????
அடுத்த அடுத்த எபில தெரிய வரும் அக்கா.. நன்றி 😍😍
 
  • Love
Reactions: Gowri Karthikeyan