துணை - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
கார் சத்தமே அதில் வந்தவர்கள் வரவை உணர்த்த, கோர்ட் சூட்டுடன் காரை விட்டு இறங்கிய மூவரின் முகமும் போன இடத்தில் வாகை சூடிய ஆதாரமாக வெற்றி புன்னகை நிறைந்திருந்தது.

பின் அவரவர் உடைமைகளை தள்ளியப்படி வீட்டிற்குள் நுழைந்தவர்களின் கண்கள் வெவ்வேறு விதமாக சம்யுக்தாவை நோக்க, கூடவே அங்கு அமர்ந்திருந்த தேவா மற்றும் அவனின் குடும்பத்தை வன்மமாக நோக்கவும் தவறவில்லை.

மூவரில் ஒருவர் தன் தந்தையாக இருப்பினும் சம்யுக்தா எந்த வித உற்சாகமும் இல்லாமல் அமைதியாகவே நின்றிருக்க, பல வருடங்கள் கழித்து தன்னை காணும் மகள் கட்டியணைத்து அன்பு மழை பொழிவாள் என்று எதிர்பார்த்த தந்தையின் மனம் தான் ஏமாற்றமடைந்து ஏக்கம் கொண்டது.

ஆயினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் மகளருகில் சென்று தன் தோளோடு அணைத்து கொண்ட சம்யுக்தாவின் தந்தையான விஷ்வநாதன் “எப்படி இருக்கடா குட்டிமா.. இந்த அப்பாவா பாக்க இப்போ தான் தோணுச்சாடா”

“எனக்கு என்னப்பா.. என் அத்தையும் அவங்க குடும்பத்தையும் பார்த்ததுல சென்னைல இருந்தத விட இங்க எடை கூடிட்டேன்னா பாத்துக்கங்க” என்று அவரின் அணைப்பபிலிருந்து விலகி தள்ளி நின்றவள் “அப்புறம் இத்தன வருஷமா நான் சொன்னத கேட்காத உங்கள பாக்க வரல..

என் அம்மா பாட்டி ஶ்ரீமா அத்தைங்க அப்புறம் என் ரகு டார்லிங்.. முக்கியமா சிங்கம் போல இருக்கிற என் ரெண்டு அத்தை மகன்கள் இவங்க பாக்க கிடைச்ச வாய்ப்பு நழுவ விட மனசு இல்ல” என்றவளின் பார்வை அவரின் உடன் வந்த மூத்த மாமனான விஜிதாவின் கணவன் குருமூர்த்தி மற்றும் அவரின் மகன் பிரசன்னா இருவரையும் பொருட்டாக கூட மதிக்கவில்லை.

இவளின் பேச்சில் தந்தைக்கு கவலையாக, மற்ற இருவருக்கும் அவளின் பேச்சு எரிச்சலை தந்திருந்தது.

பிரசன்னாவிற்கு அவள் தேவாவை உயரத்தில் பேசுவதில் ஏனோ பொறுக்கவில்லை, இருப்பினும் முகத்தை சிரித்தப்படி வைத்தவன் “ஹாய் சம்.. நீ இங்க வந்ததுல ரொம்ப ஹேப்பி” என்று அணைக்க வந்தவனை பார்வையால் தள்ளி நிறுத்திய சம்யுக்தா “தேங்க்ஸ்” என்றதோடு விலகி கொள்ள,

குருமூர்த்தியோ “இத்தன வருஷம் பிறகு நீ வந்ததும் தான் இந்த வீடும் என் மனசும் நிறைஞ்சிருக்கு.. நீ யாருக்காக வந்திருந்தா என்ன வந்ததே ரொம்ப சந்தோசம் அப்புறம் விஜிய பாத்தியாடா”
என்று முகத்தில் வேதனையை தத்தெடுத்து கொண்டவர் “நீ வந்துட்டல சீக்கிரம் உன் அத்த வங்திருவா.. எனக்கு நம்பிக்கை வந்திருச்சு”

“கண்டிப்பா.. என் வலிய போக்கி என் வாழ்க்கைய வளமாக்க அவங்க வருவாங்க” என்றவளுக்கு அவரின் பேச்சு எரிச்சலையே தந்தது.

அந்நேரம் கல்லூரி செல்ல தயாராகி வந்த ஶ்ரீநிதி “அடடே வாங்க அப்பா.. பெரிய பொண்ணு வந்ததும் சின்ன பொண்ணு தெரியல போல” என்றப்படி அவரை அணைத்துக்கொள்ள,

“அப்படிலாம் இல்லடா எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான்.. சரி விஷேசம் நெருங்கிட்டு இருக்கு.. அதுக்கான வேலை நடக்கிற மாதிரி தெரியலயே ஷாப்பிங் முடிஞ்சுதா இல்லையா”

“எங்க அப்பா.. முக்கியமான ஆசைன்மென்ட்ல மாட்டிக்கிட்டன் இன்னைக்கு சப்மிட் பண்ணிட்டு லீவ் சொல்லிடுவேன்.. அப்புறம் ஈவ்னிங் போல எல்லாரும் ஷாப்பிங் போக வேண்டி தான்” என்றவளின் முகத்தில் தமக்கை வந்ததே தங்கையவளுக்கு மிகவும் மகிழ்வை அளித்தது.

அவளின் வார்த்தை மற்றவர்களும் ஆமோதிக்க, சம்யுக்தாவோ “இல்ல மத்த வேலைய பாருங்க ஷாப்பிங் ரெண்டு கழிச்சி பாத்துக்கலாம்”

“ஏன்கா” என்றதும் பெண்ணவள் தயக்கமாக தேவாவை ஏறிட, அவள் கூறிய காரணத்தை கண்டு கொண்ட ஶ்ரீநிதி “ஓ கதை அப்படி போகுதா.. தேவா மாமாக்கு கால்ல அடிப்பட்டிருக்குன்னு தான அப்படி சொல்லுற” என்று கேட்க,

“அது தான் உண்மை” என்று உணர்ந்த தேவாவின் மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக்குள்ள, பின் மெல்ல நடந்து தன்னருகில் வந்த தேவாவை “பார்த்துடா எதுக்கு நடக்குற ஸ்ட்ரெஸ் பண்ணாத” என்று அவனுக்கு உறுதுணையாக கையை பற்றி நின்றாள்.

அதில் விஷ்வநாதன் குருமூர்த்தி பிரசன்னா இவர்களை எல்லாம் வெற்றி பார்வை பார்த்த தேவா “எனக்காக தான் சொல்லுறியா யுக்தா.. ஆனா நாள் தள்ளி போடுறது போல ஆகிடும்ல ஷாப்பிங் தான் இருக்கிறதே பெரிய பிராசஸ்.. சோ இன்னைக்கு அத ஸ்டார்ட் பண்ணி வச்சிடலாம்”

“சொன்னா கேளுடா.. எப்படியும் நீ வீட்டுல இருன்னா இருக்க மாட்ட.. உன்ன தனியா விட்டுட்டு போறது நல்லாருக்காது.. சோ ரெண்டு நாள் கழிச்சே போறது ஒன்னும் குடி முழுங்கிடாது” என்றவள் பெரியவர்களிடம் “ரெண்டு நாள் கழிச்சு ஷாப்பிங் பண்றதுல உங்களுக்கு எதுவும் பிராப்ளம் இல்ல தான” என்று கேட்டதற்கு அவர்களும் இல்லையென்ற விதமாக தலையாட்ட,

இடை புகுந்த தேவா “இன்னைக்கு தான் போறோம்.. இப்போ என்ன தாங்குற போல அங்க வந்து என்ன தாங்கிக்க மாட்டியா” என்ன என்றதை கேட்டு யாருமறியா வண்ணம் அவனை முறைத்து வைத்தவள் “அப்போ சொன்னா கேட்க மாட்ட”

“இல்லவே இல்ல” என்றதை கேட்டு கண்கள் சுருக்கி முறைத்த சம்யுக்தா “என்னவோ பண்ணி தொலை” என்று விக்கியிடம் கண்ணை காட்டிவிட்டு அவனின் கையை விடுவித்து அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றதும் தம்பியின் தோளில் கைபோட்டு விஸ்வநாத் புறம் திரும்பிய தேவா “பாத்தீங்களா மாமானாரே.. உங்க பொண்ணுக்கு என்மேல எவ்வளவு அக்கறை எனக்காக கூட பிறந்த தங்கச்சி பன்ஷன் ஷாப்பிங்கே தள்ளி வைக்குறா.. இதுல தெரியுதுல அவளுக்கு என்மேல இருக்கிற லவ்ஸ்” என்றவன் விக்கியிடம் “சரி தான ப்ரோ”

“டெஃபனிட்லி இட்ஸ் லவ் தான் ப்ரோ” என்றதை கேட்டு தலையாட்டி சிரித்து கொண்ட தேவா “நீ சொல்லு இது லவ் தான பியூட்டி”

“ஆமா ஆமா” என்று அவளும் அவனுக்கு ஒத்து ஊத, மேலும் தொடர்ந்த தேவா “பாத்தீங்களா.. என் மாமன் பொண்ணோட ப்ரெண்டே சொல்லிட்டா”

‘அடப்பாவி மாமா எங்க வந்து யார்கிட்டயா கோர்த்து விடுற.. அய்யோ சொத்துல விஷத்த வச்சிட்டாய்ங்கன்னா என்ன பண்றது’ என்று உள்ளுக்குள் மிராண்ட தேவிபிரியா “ஹீஹீ.. எனக்கு ஒரு கால் வருது நீங்க பிளான் பண்ணுங்க” என்று வராத திறன்பேசியை காதில் வைத்தப்படி பெண்ணவள் நழுவி விட,

விக்கியோ ‘இவளுக்கு வாய் நம்மகிட்ட தான் வண்டலூர் வர நீளும் போல’ என்று நினைத்தவண்ணம் சிரிப்பை மறைத்து கொள்ள,

வெளிப்படையாக புன்னகைத்த தேவாவை எரிச்சலாக கண்ட விஷ்வநாதன் “நீ ஓவரா கோட்டை கெட்டாத.. என் பொண்ணு என் தங்கச்சி மகனுக்கு தான்”

“ஆமா மாமனாரே.. நீங்க உண்மைய ஒத்துக்கிட்டீங்களே”

“ஏய் நான் சொன்னது என் தங்கச்சி மகன் பிரசன்னாக்கு தான் என் பொண்ணு.. மாப்பிள்ளை நீ என்ன பண்ணுவ தெரியாது அவ இங்கயிருந்து போகிறதுக்குள்ள அவ மனசுல இடம் பிடிச்சி.. உன்ன கட்டிகிட்டு தான் போகனும்” என்று மருமகனுக்கு கட்டளையிட,

அதில் இதயம் உடைந்தது போல் உணர்வு கொண்ட ஶ்ரீநிதியோ அத்தை மகனை வேதனையாக நோக்க,

அதன் பார்வை அர்த்தம் உணர்ந்து ஒரு நொடி தடுமாறிய பிரசன்னா ஏதோ நினைத்தவனாக “சொல்லிட்டீங்கள மாமா.. நான் பாத்துக்கிறேன் கவலைய விடுங்க” என்றதை கேட்டு பொறுக்க முடியாத ஶ்ரீநிதி “எனக்கு காலேஜ் டைமாச்சு கிளம்புறேன்” என்று விறு விறுவென்று வெளியேறி விட,

அவர்கள் பேச்சில் கிளுக்கென்று சிரித்த தேவா “டேய் ப்ரோ.. நம்ம தம்பிக்கிட்ட போகலாம்” என்றபடி விக்கியுடன் பிரசன்னா அருகில் வந்த தேவா “டேய் தம்பி.. அண்ணன் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் கேட்டுக்க.. இங்க நிக்கிற ரெண்டு மனுஷனுங்க பேச்ச நம்பாத.. அப்புறம் கடைசில காதல் படம் பரத் போல சுத்த விட்ருவாய்ங்க ஜாக்கிரதை”

“ஏய்.. அவ இங்கயிருந்து போகும் போது என் பொண்டாட்டியா என் கைய பிடிச்சுட்டு தான் போவா”

“அவ என்ன எப்படி தாங்கினா பாத்தல.. உன்ன மனுஷனா கூட மதிக்கல.. இதுக்கப்புறமுமா நம்பிகிட்டு இருக்க” என்று கிண்டலாக சிரித்தவன் ‘நீயே அண்ணன் கிட்ட தோத்து போக ஆசைப்படுற தம்பியோட ஆசைய முத்தவனா நிறைவேத்தி வைக்கிறது என் கடமைல”

“பாத்துருலாம்டா” என்று சவால் விட, அதில் தேவா தம்பியை கண்ணடித்து சிரித்து கொண்டு அங்கிருந்து விடை பெற, பின் மற்றவர்களும் கலைந்து விட்டனர்.

அவன் பேச்சில் அங்கேயே எரிச்சலாக நின்ற, விஷ்வநாதனின் தோளை தொட்டு சமாதானம் செய்த குருமூர்த்தியின் மூளையோ விலங்கமாக யோசிக்க தொடங்கியது.
***
பின் அனைவரும் விசேஷ வேலையில் பரபரப்பாகி விட, மாலை போல் ஶ்ரீமாவும் கல்லூரியை முடித்துவிட்டு விடுமுறை கூறி வந்து விட,

மொத்த குடும்பமும் ஆடைகள் எடுக்க அவரவர் காரில் ஏறிக்கொள்ள, தேவாவை கை பிடித்து தடுத்த சம்யுக்தாவோ “உன் புல்லட் சாவி கொடு” என்றதுக்கு ரகுநாத் “டார்லிங் எல்லாரும் கார்லயே போயிடலாம்.. எதுக்கு பைக்”

“இல்ல டார்லிங்.. தேவா கால் காயத்துக்கு ஹாஸ்பிட்டல் போயிட்டு செப்டிக்காம இருக்க இன்ஜ்சன் போட்டு கூட்டிட்டு வரேன்.. நீ எல்லாரையும் கூட்டிட்டு போ டார்லிங்” என்றதை கேட்டு அவரும் மகனை ஒரு மார்க்கமாக பார்த்தப்படி காரில் ஏறி கொண்டார்.

பின் ஆடவனிடம் சாவியை வாங்கி திருக்கிய சம்யுக்தா “என்னடா பாத்துட்டு இருக்க உக்காரு” என்றதை கேட்டு தன்னையே பேவெனப் பார்த்த சகோதரனை கண்ணடித்து ஏறி கொண்டவன், பிரசன்னா பக்கம் எப்படி என்பது போல் கெத்து காட்டி கொண்டான்.

இதில் ‘தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே’ என்று எண்ணிய விக்கி “நீ நடத்து ராசா நடத்து” என்று பார்வை பார்த்து திரும்பியவன், அப்போது தான் தன்னருகே இருந்த தேவிபிரியாவை கண்டு ‘இவ எப்போ என்கிட்ட வந்தா’ என்று நினைத்து நொந்துவிட்டான்.

அவனின் முக மாற்றத்தை கண்ட தேவிபிரியா “எனக்கு உன் ஃபீலிங் புரியுது விச்சுமா.. இப்போ நீ ஒரு வார்த்தை சொல்லு.. நான் புல்லட்ல உன்ன பறக்க வைக்கிறேன்” என்று கண்ணடித்தாள்.

அதில் தடுமாறியவன், அவள் தன் எண்ணத்தை கண்டு கொண்டதில் நொந்து ‘ஏற்கனவே மூளை போற போக்கே சரியில்ல இதுல இவ வேற’ என்று உள்ளுக்குள் எரிச்சலானவன் “நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.. மூடிட்டு இருந்துரு” என்றதும் அவனை பார்த்து முகத்தை சுழித்து கொண்டவள் சுற்றத்தை உணர்ந்து அமைதியாகி விட, அடுத்து கார்கள் ஒவ்வொன்றும் நகர தொடங்கியது.
***
இருவரை தவிர மத்த அனைவரும் டவுன் பக்கமிருக்கும் பெரிய ஜவுளியை அடைந்திருக்க, ரகுநாத் விஷ்வநாதன் குருமூர்த்தி இவர்கள் தொழிலில் பெரியாட்கள் என்பதால் மூவருக்குமே வரவேற்பு கூடுதலாகவே இருந்தது.

அதோடு அவர்கள் வாடிக்கையாக வரும் கடையும் இதுவே என்பதால் அவர்களுக்கு முகம் சுளிக்காமல் புன்னகைத்த வண்ணம் ஆடைகளை காட்டுவார்கள்.

முதலில் மொத்த பேரும் பட்டு பக்கம் வந்து வந்த பணியை பார்க்கலாக, ஆடவர்கள் அமர்ந்தப்படி அவர்களுக்கு உதவி புரிந்தனர்.

அனைவரும் புடவை எடுப்பதில் கண்ணாக இருக்க, தேவிபிரியாவோ எனக்கென்ன என்று அமர்ந்திருந்தாள்.

அதை கண்டு பெண்ணவள் அருகே அமர்ந்த விக்கி “நீ என்ன புடிச்சி வச்ச பிள்ளையார் போல உக்காந்துருக்க எதுவும் பாக்கலயா”

“நமக்கு இந்த பட்டுலாம் செட்டாகுது.. பங்கு வந்ததும் லெங்கங்கா பாக்கணும் இல்லன்னா வேற சாரீ பாத்தா அத எடுப்போம்.. ஆனா பட்டு சாரீ நோ”

“என்ன இப்படி சொல்லுற.. பட்டு சாரீ கட்டுற பொண்ணுங்க அழகா வடிவா இருப்பாங்க” என்று அவளை நினைத்து படம் போட்டு பார்த்து ரசனையாக கூறினான்.

ஆனால் அதை அறியாத பேதையோ “ஓ சார் பட்டு புடவை கட்டின பொண்ணுங்கள சைட் அடிச்ச எக்ஸ்பீரியன்ஷோ”

“ச்ச இது வர இல்ல.. வேணும்ன்னா நீ கட்டு உன்ன சைட் அடிக்குறேன்” என்று பட்டென்று கூறியிருந்தான்.

முதலில் புரியாமல் முறைத்தவள், பிறகு அதன் அர்த்தம் உணர்ந்து “ஏய் நீ இப்போ என்ன சொன்ன”

“கெஸ் இட்” என்று ஆடவன் கண்ணடிக்க, ஏனோ அவனின் இத்தகைய குறும்பு பெண்ணவளை மேலும் கவர்ந்திழுக்க “அப்போ சரி சைட் அடிக்க தேவையான கோளிபிகேஷன் தகுந்த மாதிரி.. நீயே செலக்ட் பண்ணி தா” என்றதில் அதிர்ந்தவன் “நானா”

“பின்ன உன் மாமானா.. செலக்ட் பண்ணு மேன்”

“எல்லாரும் என்னடி நினைப்பாங்க.. நான் மாட்டேன்”

“கட்டிக்கிற போற பொண்ணுக்கு புடவை செலக்ட் பண்றான் நினைப்பாங்க விச்சுமா” என்றதில் முறைத்தவன் “இங்க பாரு எனக்கு ஏனோ உன்கிட்ட ஜாலியா பேச புடிச்சிருக்கு.. சோ விளையாட்ட பேசுறதுக்கு கண்டமாதிரி அர்த்தமா நினைச்ச பல்ல உடைப்பேன்”

“ம்ம்.. இப்போ என்னோட பேச்ச புடிக்கலாம்.. பட் ஒருநாள் என்னையவே புடிக்கும் விச்சுமா”

“நீ திருந்தவே மாட்ட போடி” என்று ஆடவன் கடுப்புடன் எழுந்து செல்ல எத்தனிக்க,

அவனின் கையை பற்றி தடுத்தவள் “சாரி இனி எதுவும் பேசல.. உன் இஷ்டபோல என்ன சைட் மட்டும் அடிச்சிக்க.. பிளீஸ் செலக்ட் பண்ணி தா” என்று பெண்ணவளை கெஞ்சியதையும் உள்ளுக்குள் ரசித்த விக்கி ‘ச்ச இவள எந்த ரியாக்ஷன்ல பாத்தாலும், நம்ம மனசு தான் அவ பின்னாடி தறிகெட்டு ஓடுது’ என்று நினைத்து பெருமூச்சு விட்டவன், அவளின் வார்த்தைக்கினங்க புடவையை பார்க்க ஆரம்பித்தான்.
***
ஒரு ஜோடி இப்படிருக்க, இன்னொரு ஜோடியோ மருத்துவமனையில் சுற்றி கொண்டிருந்தது.

மருத்துவமனையில் இறங்கியதும் தேவா “அவங்க நமக்காக வெயிட் பண்ணுவாங்க.. சின்ன காயம் தான் எதுக்குடி இந்த அக்கபோர் பண்ற”

“செப்டிக்காயிடுச்சுன்னா கஷ்டம் டா.. ஜஸ்ட் ஒரு இஞ்செக்சன் போட்டுட்டு போயிடலாம்” என்றபடி மருத்துவர் அழைப்பதற்காக இருவரும் காத்திருக்க, அங்கு தள்ளி அருகருகே இருக்கையில் அமர்ந்தனர்.

பின் அடுத்தடுத்து பெண்ணவளிடம் தேவா கேள்வி கேட்டு, அதற்கு அவள் கூறிய பதில் முகம் சோர்ந்து விட்டான்.

- துயர் தொடரும்...
 

Author: STN - 95
Article Title: துணை - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
சம்மு அப்பா மேல கூட வருத்தத்தில் தான் இருக்கா போல.....ஆன ஏன்?????
விஜி ஓட கணவன் & பிள்ளை கிட்ட பேச கூட இல்லையே .....விஜி மேல அத்தனை பிரியம் வெச்சி இருக்கும் சம்மு?????
விசுக்கு சம்முவை பிரசன்னாக்கு கட்டி வைக்க ஆசை.....ஒரு வேலை அது குரு ஓட ஓத்தலா இருக்குமா????
அவரை நல்ல விதமா எண்ண தோணல.....

விஜி இப்படி இருக்கவும் அவர் தான் காரணமா????
விசுக்கு ரகு ஃபேமிலியை பிடிக்கலையே.....

Function function அப்படின்னு தான் சொல்றீங்க....என்ன function அப்படின்னு இன்ன வரை சொல்லவே இல்லையே ரைட்டர் 🤷🤷🤷🤷🤷.....

ஒரு family chart சொல்லி சொல்லி இருக்கலாம் முதலில்......
 

STN - 95

Member
May 5, 2026
53
43
18
சம்மு அப்பா மேல கூட வருத்தத்தில் தான் இருக்கா போல.....ஆன ஏன்?????
விஜி ஓட கணவன் & பிள்ளை கிட்ட பேச கூட இல்லையே .....விஜி மேல அத்தனை பிரியம் வெச்சி இருக்கும் சம்மு?????
விசுக்கு சம்முவை பிரசன்னாக்கு கட்டி வைக்க ஆசை.....ஒரு வேலை அது குரு ஓட ஓத்தலா இருக்குமா????
அவரை நல்ல விதமா எண்ண தோணல.....

விஜி இப்படி இருக்கவும் அவர் தான் காரணமா????
விசுக்கு ரகு ஃபேமிலியை பிடிக்கலையே.....

Function function அப்படின்னு தான் சொல்றீங்க....என்ன function அப்படின்னு இன்ன வரை சொல்லவே இல்லையே ரைட்டர் 🤷🤷🤷🤷🤷.....

ஒரு family chart சொல்லி சொல்லி இருக்கலாம் முதலில்......
Family chart pottu ithuvarai பழக்கம் illa sis.. athuvum last time la eluthinatha konjam tensionlaye mudichi sila elutha ninaicha vishyathukkuda surukkitten 🤣🤣🫣.. நன்றி அக்கா