அவர்கள் இறங்கும் வரை பரத்தின் பார்வை அவர்களை விட்டு விலகவில்லை.
உண்மையாகவே அவனுக்கு எதுவும் புரியவில்லை.ஒருபுறம் காதலில் தோற்றுவிட்டோம் என்ற வலி.
மறுபுறம் ஒரு குழந்தையின் தாயை மனதில் வைத்து காதலித்து விட்டோமே! என்ற குற்ற உணர்வு.
இரண்டுமே சேர்ந்து அவனை உள்ளுக்குள் சிதைத்துக் கொண்டிருந்தது.
'வேறொருவரின் மனைவியையா இத்தனை நாட்களா மனசுக்குள்ள வச்சிருந்தேன்?'என்ற எண்ணமே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
தலையை பலமாக உலுக்கிக் கொண்டான்.அவளைப் பற்றிய நினைவுகளையே அழித்துவிட வேண்டும் என எண்ணினான்.
ஆனால் முடியவில்லை.
இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினான்.
எப்போதும் அவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவனது கண்கள், இன்று அவளையும் அவள் கையில் இருந்த குழந்தையையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தன.
பிரியா, குழந்தையை இடுப்பில் சுமந்தபடி மெதுவாக நடந்து சென்றாள்.
அவள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போதும், பரத்தின் இதயம் இன்னும் கொஞ்சம் உடைந்து கொண்டே இருந்தது.
முற்றிலுமாக உடைந்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், உடைந்த தன் மனதை வெளிக்காட்டக்கூட முடியாத நிலை.
அப்படியே இயந்திரம் போல நடந்தவன் எப்போது அலுவலகம் வந்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
அவனது முகத்தைப் பார்த்த சசி,
"என்னடா?"என்று கேட்டான்.
"ஒன்னுமில்ல." என்று தலையை உலுக்கி கொண்டான் பரத்.
அவனது முகத்தில் இருந்த சோர்வையும், வாட்டத்தையும், வெறுமையையும் பார்த்த சசிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும், 'ரொம்ப நாளைக்குப் பிறகு காதலியை பார்த்ததால இருக்குமோ?'என்று நினைத்து அமைதியாகிவிட்டான்.
ஆனால் மதியத்திற்கு பிறகும் பரத் அதே நிலையில் இருந்தான்.
வேலையில் கவனம் இல்லை.
தேவையில்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் சசி,"என்னடா ஆச்சு?"
என்று கேட்க..
"ஒன்னும் இல்லடா. கம்முன்னு இருக்கியா. எந்த நேரமும் நோண்டிக்கிட்டே" என்று எரிச்சலுடன் பதிலளித்தான் பரத்.
அதற்குப் பிறகு சசியும் எதுவும் கேட்கவில்லை.
ஏதோ ட்ரெயினில் நடந்திருக்கலாம். இல்லையென்றால், ரொம்ப நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் மனசு குழம்பியிருக்கலாம் என்று நினைத்து அவனை அவன் போக்கில் விட்டுவிட்டான்.
மறுநாளும் வழக்கம் போல அதே ட்ரெயினில் ஏறினான் பரத்.
பிரியா அன்றும் சீக்கிரமே வந்திருந்தாள்.அவளுடன் அந்தச் சிறுவனும் இருந்தான்.
அவனைத் தூக்கிக் கொண்டு பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தாள்.
பரத்தின் மனம் மீண்டும் வலித்தது.
ஆனால் நேற்று இருந்த அதிர்ச்சி இன்று இல்லை.அதற்கு பதிலாக ஒரு கனமான வெறுமை மட்டும் அவனிடம் இருந்தது.
என்னதான் குழந்தையுடன் அவள் பேசிக் கொண்டிருந்தாலும், பரத்தின் பார்வை அவளை விட்டு விலகவில்லை.
காதலாக இல்லை.
உரிமையாக இல்லை.
ஆனால் விலகவும் முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை, அவளை மறக்க வேண்டும் என்று மனம் கூப்பாடிட்டது.
ஆனால் கண்கள் அதைக் கேட்கவில்லை. அவளைத்தான் நிமிடத்திற்கு ஒரு முறை விழியகலமால் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
இரண்டு நாட்கள் இப்படியே கடந்தன.
மூன்றாவது நாள் காலையில் தான் ஒரு விஷயத்தை கவனித்தான்.
பிரியா அடிக்கடி சுற்றிலும் பார்ப்பதை.யாராவது தன்னை கவனிக்கிறார்களா? என்று தேடுவது போல..யாரையோ எதிர்பார்ப்பது போல.. யாரையோ தவிர்ப்பது போல.
அவளது கண்கள் அடிக்கடி அவள் நிற்கும் பெட்டியை சுற்றி சுற்றி வந்தன.
சில நேரங்களில் பதட்டமாகவும் தெரிந்தது அவளது முக பாவனைகள்..
முன்பு எல்லாம் அவளை காதலாக மட்டுமே பார்த்தவன் பரத். அவளது சிரிப்பு, பேச்சு, முகம் இவைகளைத் தவிர வேறு எதையும் கவனித்ததில்லை.
ஆனால் இப்போது காதல் உடைந்த பிறகு, அவளது ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
ஏனோ அவளிடம் ஏதோ ஒன்று சரியில்லை என்று அவனின் உள் மனதிற்கு தோன்றியது.
இருந்தாலும் ,அதற்கு மேல் எதையும் எதையும் யோசிக்க விரும்பவில்லை.
அவன் மனம் இன்னும் குற்ற உணர்விலிருந்து வெளியே வரவில்லை.
ஒரு திருமணமான பெண்ணையா மனதில் பொத்தி வைத்து காதலித்தோம் என்ற எண்ணமே அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அதே நேரத்தில்...
அவளது பார்வையில் ஒளிந்திருந்த அந்த விளக்க முடியாத பயமும்... அடிக்கடி சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பதற்றமும்...பரத்தின் மனதில் ஒரு சிறிய சந்தேக விதையை விதைத்திருந்தது.
அது என்ன சந்தேகம் என்று அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தோன்ற ஆரம்பித்தது.
பரத் கடந்த சில நாட்களாக அவளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததால், அவளது ஒவ்வொரு அசைவையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
தன் எண்ணங்களில் மூழ்கியபடி நின்றிருந்த அவனது பார்வை திடீரென பிரியாவின் அருகில் வந்து நின்றவனின் மீது பதிந்தது.
உயரமாகவும், வாட்ட சாட்டமாகவும், நன்றாக உடையணிந்தும் இருந்தான் அவன்..
அவன் பெயர் விக்ரம்..
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் அவளிடம் சாதாரணமாகப் பேசுவது போலத்தான் தெரிந்தது.
அவன் முகத்திலும் புன்னகை இருந்தது.ஆனால்... பிரியாவின் முகத்தில் அப்படி இல்லை.
அவளது கண்களில் ஒரு விதமான பதற்றம் தெரிந்தது.எரிச்சல், கோபம், பயம்...என மூன்றும் மாறி மாறி வந்து போவது போல தோன்றியது அவனுக்கு.
அதைப் பார்த்த பரத்தின் மனம் மீண்டும் குழம்பியது.
'இவன் அவளோட கணவனா...?'
என்ற எண்ணம் முதலில் தோன்றியது.
ஆனால் அடுத்த நொடியே யோசித்தான்.'கழுத்தில் தாலி இல்லை.காலில் மெட்டி இல்லை.
அதற்காக திருமணம் ஆகவில்லை என்று சொல்லவும் முடியாது.
இப்போதெல்லாம் பலர் அணிவதில்லை. அப்படியென்றால்? இவன் யார்?
புதிதாக வந்த கணவனா?
இல்லை, வேறு யாராவது?'
எவ்வளவு யோசித்தாலும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒன்றும் விளங்காமல்,தலை வெடித்துவிடும் போல இருந்தது.
அவர்களிடம் இருந்து சிறிது தூரம் விலகியே நின்றிருந்தாலும், பார்வை மட்டும் அங்கேயே அவர்களைச் சுற்றி சுற்றி இருந்தது.
இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
என்ன பேசுகிறார்கள் என்பது முழுமையாகக் கேட்கவில்லை.
ஆனால் அது சாதாரண உரையாடல் போல இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
ஒரு கட்டத்தில் பிரியாவின் அருகில் நின்ற ஆணின் குரல் சற்றே உயர்ந்தது.
அவன் குரல் உயர்த்திய போது, சில வார்த்தைகள் மட்டும் பரத்தின் காதில் தெளிவாக விழுந்தன.
"பிரியா... ஒண்ணு பையன என்கிட்ட கொடு.இல்லன்னா நான் கேட்டதை பண்ணு."என்றவனின் முகத்தில் புன்னகை இருந்தது.
ஆனால் அந்த புன்னகைக்குப் பின்னால் இருந்த அழுத்தத்தை உணர முடிந்தது.
"ரெண்டுமே இல்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தா... மேற்கொண்டு நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டி வரும்.. என்னால சொல்ல முடிஞ்சது அவ்வளவுதான்."என்றான் அதே புன்னகையுடன்..
ஆனால்,பிரியா வேகமாக,
"இல்ல... முடியாது.நீ சொன்னதையும் செய்ய முடியாது."என்றாள்.. பேசும் போது அவளது குரல் நடுங்கியது.
"என் புள்ளையையும் கொடுக்க முடியாது."என்று கூறியவள், தனது தோளில் சாய்ந்து இருந்த தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்தவன் எரிச்சலாகச் சிரித்தான்."விளையாடாத பிரியா."
என்றான் மீண்டும் சிறு எரிச்சலுடன் ஆனால் முகத்தில் புன்னகை மாறாமல்,
"அப்போ நீ சின்ன பிள்ளைன்னு நினைச்சு அமைதியா விட்டுட்டுப் போனேன்" அவன் குரல் மென்மையாக இருந்தாலும், அதில் மறைமுக மிரட்டல் தெளிவாக வெளிப்பட்டது.
"இப்பவும் அதே மாதிரி அமைதியா போயிடுவேன்னு நினைக்காத." என்றான்.
பிரியா அமைதியாக நின்றாள்.
"ஒரு பக்கம் நீ சின்ன பிள்ளைன்னு யோசிச்சேன்.ஆனா அதை விட்ட முக்கியமா எனக்கு ஃபாரின்ல நல்ல ஆஃபர் வந்துச்சு. அதை விடக்கூடாதுன்னு போயிட்டேன்.இப்போ நீயும் படிச்சு முடிச்சு வேலைக்குப் போயிட்ட.
பையனும் வளர்ந்துட்டான். இனியும் உங்கள விட்டு வைக்க முடியாது..
இப்போ சொல்றேன்...ஒண்ணு பையன என்கிட்ட கொடு. இல்லன்னா நான் சொன்னதை செய்.இதுக்கு மேல திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்க மாட்டேன். கிளிப்புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டும் இருக்க மாட்டேன்
உனக்கு டைம் கொடுத்திருக்கேன்.
அவ்வளவுதான். அதுக்குள்ள யோசிச்சு நல்ல முடிவா எடு.."
"நீ என்ன எனக்கு டைம் கொடுக்கிறது?" என பிரியாவின் முகம் இறுகியது.
"இதுக்கப்புறம் வீண் பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்தனா..நான் வக்கீல் பார்க்க வேண்டி வரும். உனக்கு எப்படி வசதி?
அதுக்கப்புறம் உன் இஷ்டம்."
என்று புன்னகைத்தபடியே கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் தெளிவாக இல்லாவிட்டாலும், முக்கியமான பகுதி பரத்தின் காதில் விழுந்துவிட்டது.
'பையன கொடு...வக்கீல் பார்க்க வேண்டி வரும்... நான் சொன்னதை செய்...'
இந்த மூன்று வார்த்தைகள் மட்டும் அவனது மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
அவன் சென்ற திசையைப் பார்த்தான்.
அவன் சென்ற பின்பும் அப்படியே நின்றிருந்த பிரியாவைப் பார்த்தான்.
சில நொடிகளுக்கு முன் அவனிடம் பேசும் போது ,தைரியமாகப் பேசியவள், இப்போது முற்றிலும் உடைந்து போனவள் போல நின்றிருந்தாள். கண்களில் நீர் திரண்டு இருந்தது..
தருணை அணைத்தபடி, கண்களை இறுக மூடியிருந்தாள்.
அவளது விரல்கள் குழந்தையின் முதுகை நடுக்கத்துடன் பற்றிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்த பரத்தின் மனதில் முதல் முறையாக ஒரு புதிய கேள்வி எழுந்தது.
'இவள் சந்தோஷமா வாழ்றாளா...? இல்லை, ஏதோ ஒரு பிரச்சனையில சிக்கி தவிக்கிறாளா...?'
இதுவரை காதலுடன் மட்டுமே பார்த்திருந்த அவளை, இந்த நொடியில் முதல் முறையாக ஒரு பிரச்சனையில் சிக்கியவளாக பார்க்க ஆரம்பித்தான் பரத்.
அந்த எண்ணமே அவனது மனக்குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
விக்ரம் அங்கிருந்து நகர்ந்த பிறகும், பிரியா அப்படியே நின்றிருந்தாள்.
தோளில் சாய்ந்திருந்த தருணை இன்னும் இறுக்கமாக அணைத்தபடி நின்றவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
ஆனால் அதை வெளியே விடவும் முடியாமல், உள்ளுக்குள் அடக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பரத்தின் மனம் ஏனோ வலித்தது.
அவளிடம் சென்று,"என்னாச்சு?"
என்று கேட்க வேண்டும் போல இருந்தது.
ஆனால் அவனால் முடியவில்லை.
அவன் யார்?அவளுக்கு ?.. அவளுக்கு அவனைப் பற்றி தெரியாது... அவன் பெயர் கூட தெரியாது.
அவளை ஒரு தலையாக காதலித்தவன் தான்.அதைத் தவிர அவர்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை.
அப்படியிருக்க அவளது வாழ்க்கைக்குள் தலையிட அவனுக்கு என்ன உரிமை?இருக்கு.. அந்த எண்ணமே அவனை அமைதியாக ஒதுங்கி நிற்க வைத்தது.
ஆனால் பார்வையை மட்டும் விலக்க முடியவில்லை அவளை விட்டு.அன்றைய பயணம் முழுவதும் பிரியாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தருணை ஒரு நொடி கூட கீழே இறக்கவில்லை அவள்.
அவ்வளவு கூட்டத்திலும் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடியே நின்றிருந்தாள்.
யாரோ வந்து பறித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயம் போல.
அதைப் பார்த்த பரத்தின் மனதில் ஏதோ ஒரு சங்கடம் எழுந்தது.
சிறிது நேரம் கழித்து சுற்றி இருப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்தவள், கண்களில் வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.
அப்போது அவளது தோளில் சாய்ந்திருந்த சிறுவன் இன்னும் இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்.
"அம்மா..."என்று மெதுவாக அழைத்தான்.
"என்னடா கண்ணா?"
"நம்ம வீட்டுக்குப் போகலாம்."
என்றான்.
அடுத்த நொடியே பிரியாவின் கண்களில் மீண்டும் நீர் மின்னியது.
"ஒன்னுமில்லைடா செல்லம்."
என்று அவன் தலையை மென்மையாக வருடினாள்.
"நாம சீக்கிரம் போயிடலாம். இதோ..."என்று மெதுவாக கூறியபடி,ஏதேதோ பேசிப் பேசித் தருணை சிரிக்க வைத்தாள்.
குழந்தையும் சிரித்தான்.
ஆனால்...அவளது சிரிப்பில் உயிர்ப்பே இல்லை.
அது வெறும் உதட்டளவு சிரிப்பு என்பதை பரத் தெளிவாக உணர்ந்தான்.
அன்றைய நாள் அப்படியே கடந்தது.
ஆனால் மறுநாளும் விக்ரம் வந்தான்.
மறுநாளும் பிரியாவிடம் பேசினான்.மறுநாளும் வாக்குவாதம் நடந்தது.
இம்முறை பரத் திட்டமிட்டே அவர்களுக்கு சற்று அருகில் வந்து நின்றிருந்தான்.
தன்னையும் மீறி அவனது கால்கள் அவர்களிடம் சென்றது..அதான் உண்மை..
ஏனோ உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை அங்கே நிற்க வைத்திருந்தது. பிரியாவின் நிலை அவனை வெகுவாக பாதித்தது..
விக்ரம் ,"நான் எவ்வளவு பொறுமையா சொல்லுறேன்னு உனக்கே தெரியும்."என்றான்.
பிரியா அமைதியாக இருந்தாள்.
"எனக்கு பிள்ளை வேணும். இல்லன்னா நான் சொன்னதை நீ செய்யணும்." என்று மீண்டும் மீண்டும் அதையே கூறினான்.
"முடியாது."என்றாள் பிரியா வேகமாக அதே சமயம் அழுத்தமாக.
ஒற்றை வார்த்தை தான் ..ஆனால் அதில் உறுதி இருந்தது.
"நீ கேக்குற இரண்டுமே முடியாது" என்றாள் மீண்டும் .
விக்ரமின் முகத்தில் இருந்த புன்னகை ஒரு நொடி மங்கியது.
ஆனால் அடுத்த நொடியே மீண்டும் அதே போலியான புன்னகையை வலுக்கட்டாயமாக வரவைத்துக் கொண்டவன்.."அப்போ நான் சொன்னதுதான் செய்ய வேண்டியிருக்கும்"என்றான்.
அவளோ, கண்களாலே அவனை பஸ்பம் ஆக்கி விடுவது போல பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்..
"கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி திரும்பத் திரும்ப சொல்றேன். கேட்காம அடம் பிடிக்கிற."என்றான் பற்களை நறநறவென கடித்தபடி
"அடமா நிக்கிறது நான் இல்ல"
"கடைசில தோத்து போக போறது நீ தான்" என்றான் எள்ளலாக..
பிரியா பதில் பேசவில்லை.
"ஒன்னு பிள்ளையை என்கிட்ட கொடு.இல்ல நான் சொல்றதுக்கு சம்மதிச்சிடு.ரெண்டுமே செய்ய மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"என்றான் மீண்டும் மீண்டும்.. அவளின் அந்த அமைதி அவனை வெகுவாக சீண்டியது..
அதற்கும் பதில் இல்லை.
சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தவன்,"சரி..நா முடிவு பண்ணிட்டேன்.இதுக்கு மேல உன்கிட்ட பேசுறதுல பிரயோஜனம் இல்ல. நான் வக்கீல் பார்க்கிறேன். இனி நீயும் வக்கீல் வச்சு கோர்ட்டுல மூவ் பண்ணிக்கோ." என்றவன் அவளின் அருகில் சற்றுக் குனிந்து, "மேற்கொண்டு புள்ள எனக்குத்தான்."என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு நேராக நிமிர்ந்தான்.
அதே புன்னகையுடன்...அதே அமைதியுடன்...அவளை மிரட்டிவிட்டு எதுவும் நடக்காதது போல கீழே இறங்கி சென்று விட்டான் விக்ரம்.
அவன் சென்ற பின்னும் பரத் அங்கேயே நின்றிருந்தான்.
மனதில் ஆயிரம் கேள்விகள்.
ஒன்றுக்கும் பதில் இல்லை.
ஒருவேளை...
அவன்தான் அவளது கணவனா?
இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்களா?
தருண் அவர்களது குழந்தையா?
இப்போது குழந்தையை கேட்கிறானா?
இல்லையென்றால்...
அவளை மீண்டும் தன்னுடன் வாழ வரச் சொல்கிறானா?
அதற்கு அவள் மறுக்கிறாளா?
அதனால்தான் வக்கீல், கோர்ட் என்று பேசுகிறானா?
என்று எண்ணங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.
ஆனால், அந்த எல்லா குழப்பங்களுக்கும் நடுவே, பரத்தின் மனதில் தெளிவாக ஒரு விஷயம் மட்டும் பதிந்திருந்தது .
விக்ரம் பேசும் ஒவ்வொரு முறையும்...பிரியா பயப்படுகிறாள்.
அவன் அருகில் வந்தாலே அவளது முகம் இறுகுகிறது.
தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.
அதை அவன் இரண்டு நாட்களாக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த ஒரு விஷயம் மட்டும் அவனது மனதை ஏதோ சொல்ல முடியாத வகையில் கனமாக்கியது.
இப்போது அவளைப் பற்றிய அவனது குழப்பத்தை விட...
அவள் ஏன் இவ்வளவு பயப்படுகிறாள் என்ற கேள்விதான் அவனை அதிகமாக குடைந்தது.

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.